08 January 2009

சாருநிவேதிதா,அமீர்,பிரபஞ்சன் மற்றும் பலர்ஓரு ஆச்சர்யம் -அது ஒரு புத்தகவெளியீட்டுவிழா! மேடையில் பல்துறைப் பிரபலங்கள் . அரங்கு நிறைந்த கூட்டம். பலரும் அரங்கத்தை சுற்றி ஆர்வமிகுதியால் நின்று கொண்டுகூட இருந்தனர். யாருக்கும் கால்வலி கூட தெரியவில்லை போல . எனக்கு கால்கள் வலித்திருக்க வேண்டும். அதனால் அங்கே தரைமட்ட அளவில் இருந்த ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன். ஜன்னலுக்கு ஒரு புறத்தில் நான் இன்னொரு பக்கம் அவர்கள். அவர்கள் என்றால் உங்களைப்போலவே எனக்கும் அவர்கள் யார் என்று நிச்சயம் தெரியாது. ஏனோ ஒரு விசும்பலும் பேச்சும் அவர்களினூடே ஒலித்தபடியே இருந்தது.அந்த பெண் அவளருகில் இருந்த ஆடவனின் மிக அருகில் நெருக்கமாக அமர்ந்திருக்கிறாள். அவளது தலை அவனது தோளோடு ஒட்டி இருக்கிறது. இருவரது கைகளும் கோர்த்திருந்தன. அவள் கழுத்திலும் கால்விரலிலும் திருமணமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை. விரலிலும் மோதிரமில்லை. அவள் கண்களில் கண்ணீராய் இருக்கவேண்டும். அவள் அவரை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறாள் போல. அவரை பார்க்கவேண்டும் என்பது மட்டுமே அவளது குறிக்கோள். அவள் வாயிலிருந்து அடிநாதமாய் அல்லது சன்னமாய் அல்லது கிசுகிசுப்பாய் ஓலிக்கிறது அவள் குரல்.'அவரை பார்க்க முடியுமா!! ''தெரியலடா ','ஒரே ஒருவாட்டி அவரை ரொம்ப பக்கத்தில பாக்கணும்'


'டிரைப்பண்ணலாம்டா , ம்மா உன் கையெல்லாம் ஏன் சில்லுனு இருக்கு'

'தெரியலடா , முதல்தடவ இப்போதான அவரை நேர்ல பாக்கறேன் அதான் ! , நம்ம ரெண்டு பேரும் முத தடவை அது பண்ணோம்ல , அத விட .... இது எப்படி சொல்றதுனு தெரியலடா!! '


அவர் நோபல் பரிசைப்பற்றியும் இலக்கிய உலகம் குறித்தும் நிறைய பேசுகிறார். சுவிஷேச கூட்டங்களில் பேசுபவர் பேசியதையே மீண்டும் மீண்டும் பேசினாலும் அதை கவனிக்காது உணர்ச்சிமேலிட கண்ணீர் வடிக்கும் கூட்டத்தைப்போல அவளும் அவர் பேசுவதை சற்றும் கவனிக்காமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். மேடையில் அந்த பிரபலம் பேசி முடிக்கிறார் . அவருக்கு 10 அடி தூரத்தில் நின்று கொண்டு தயங்கி தயங்கி பேசலாமா வேண்டாமா என்று அந்த இருவரும் காத்திருக்கின்றனர். அவர் பலரையும் பார்க்கிறார் . எல்லாரிடமும் கைகுலுக்குகிறார். அவராகவே எல்லாரிடமும் பேசுகிறார். அவர்களது தயக்கம் நீங்குவதற்குள் கையில் அலைபேசியுடன் அரங்கை விட்டு வெளியேறுகிறார். அந்த இருவரும் அவர் பின்னால் ஓட்டநடையாய் பறக்கின்றனர். அப்பெண்ணின் கண்களில் ஆவல் தீர்ந்து கேவலாக மாறிக்கொண்டிருந்தது. அவருக்காக வெளியே ஒரு கார் காத்திருக்கின்றது. அதிலேறி அவர் பறக்கிறார். வெளியே ஜோரான மழை.********************************ஒரு அதிர்ச்சி -


அது ஒரு புத்தகவெளியீட்டு விழா. அவர் ஒரு பிரபல இயக்குனர் . மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் இரண்டு மிகப்பெரிய வெற்றியடைந்தவை. தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமானவர். தற்காலங்களில் புத்தகவெளியீட்டு விழாக்களில் இப்போதெல்லாம் அடிக்கடி அவர் பெயரும் அடிபடுகிறது. அவர் பேசத்துவங்குகிறார்.


தனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே கிடையாது என்றும் தான் இதற்கு முன் புத்தகங்கள் படித்ததே இல்லை என்றும் , அந்த எழுத்தாளரையையே அவரது தனது படத்தின் விமர்சனம் மூலமாகத்தான் தெரியும் என்றும் பேசுகிறார். தன்னை இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னால் , தன்னை அழைத்து இந்த புத்தகத்தை அந்த ஆசிரியர் கொடுத்தார் நானும் படிக்க முற்பட்டு படிக்க இயலாமல் போய்விட்டதென்றும் பெருமையாய் பேசுகிறார் . கைதட்டல் பலமாக இருக்கிறது .


இப்படிப்பட ஒருவரை விழாக்குழுவினர் எதற்காக அந்த கூட்டத்திற்கு அழைத்தனர் எனபது அவர்களுக்கே வெளிச்சம். அதே போல ஒரு எழுத்தாளரை ஒரு சினிமா பாடல் வெளியீட்டுக்கோ , திரைப்பட நூறாவது நாள் விழாவிற்கோ அழைத்து அவரும் தான் சினிமாவே பார்த்ததில்லை அப்படி பார்த்ததும் ஷகிலா திரைப்படங்கள் மட்டும்தான் , இந்த படத்தின் இயக்குனர் கூட இப்படத்தின் டிவிடியை கொடுத்து பார்க்க சொன்னார் அதைக்கூட எனது சீரிய இலக்கிய பணிக்கு நடுவில் பார்க்க இயலவில்லை , இருந்தாலும் நான் சொல்கிறேன் இந்த இயக்குனர் ஒரு சிறந்த இயக்குனர் என்று பேசினால் தமிழ்கூறும் நல்லுலகம் பொறுத்துக்கொள்ளுமா?


புத்தகவெளியீட்டுக்கு திரைப்படகலைஞர்கள் எதற்கு என்று இனியாவது நம்மவர்கள் கட்டாயம் சிந்திக்கவேண்டும்..! அப்படி அழைக்கும் போது புத்தகங்களை மதிக்கும் சிலரையாவது அது நமீதாவாய் இருந்தாலும் ஷகிலாவாய் இருந்தாலும் கட்டாயம் அழைக்கலாம் . அவனவனுக்கு அவனவன் துறைதான் பெரியது!
**************************ஒரு அருவெறுப்பு -

அது ஒரு புத்தகவெளியீட்டுவிழா , அவர் ஒரு பிரபல எழுத்தாளர் . அவர் நிறையப்படித்தவர் . வயதிலும் அறிவிலும் நல்ல அனுபவசாலி . பல புத்தகங்கள் எழுதியவர். யாருக்காக அந்த விழா நடக்கிறதோ அவரே தனது குரு அவர்தான் என்று பெருமையடைபவர். அது ஒரு வட்டமான மேசை அதில் ஒரு விருந்து நடக்கிறது . அப்பேர்ப்பட்ட ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் அந்த வட்டமான மேசையில் ஒருவருக்கும் அவரை பேசவைத்து கேட்பதில் மகிழ்ச்சியில்லை. எல்லோரும் எல்லாமும் தெரிந்தது போல பேசிக்கொண்டிருக்க அவர் மட்டும் அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

இன்னொரு பிரபல எழுத்தாளர் அவர் , அவரோ உச்சகட்ட போதையிலிருந்தார்! .சுண்டிவிரலால் தள்ளிவிட்டாலே விழுந்து விடும் போதை. அவர் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்பது கூட தெரியாமல் மிக உச்சஸ்தாயில் கத்தி கத்தி ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்தார். ஆனால் அவரால் எதையுமே முழுமையாய் பேச இயலவில்லை. பலரது நகைப்புக்கு ஆளாக நேரிட்டது அவர் செய்கைகள். நான் மிகவும் மதிக்கும் சிலரில் ஒருவர் அவர் . அவர் அங்கே கூடியிருந்த பல பிரபலங்களிலைவிடவும் விழாநாயகரைவிடவும் திறமையானவர் என்று எண்ணிவருபவன்.

இன்னும் சிலர் குடித்துவிட்டு மிக மரியாதைக்குறைவாய் மேற்ச்சொன்ன இருவரிடம் மட்டுமல்லாது விழாநாயகரான பிரபல எழுத்தாளரிடமும் கூட பேசியும் நடந்தும் கொண்டிருந்தனர். அதில் பலருக்கும் வயது மிகமிகக்குறைவு . அதில் சிலரிடம் விடிந்தபின் இது குறித்துக் கேட்ட போது அந்த இரவில் அதிகப்பட்ச போதையில் இருந்ததால் அப்படி பேசியிருக்கலாம் என்று கூறினர்.


***************************ஒரு செய்தி-


கனடாவைச்சேர்ந்த சில குடிகாரர்கள் ஒன்றிணைந்து குடிகார கவிஞர்கள் சங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இக்கவிஞர்கள் திங்கள்க்கிழமைதோறும் அல்பர்ட்டா மாகாணத்தின் கால்கரி நகரில் இருக்கும் ஒரு பிரபலமான பாரில் கூடி அங்கே இரவு 9-9.30 வரை கூடி கவிதைகளை பகிர்ந்து கொள்கின்றனர். அக்கவிதைகள் இது வரை எங்கும் பிரசுரமாகதவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. இச்சங்கத்தில் நீங்க உறுப்பினராக எந்த கட்டணமும் இல்லை. அதேபோல அந்த பாரில் சங்கம் உங்களுக்கு சரக்கு வாங்கித்தருவதில்லை. நமக்கு நாமே திட்டம்தானாம்.


இதுவரை பல திங்கள்கிழமைகளை வெற்றிகரமாக கடந்த அந்த சங்கத்தில் இது வரை யாருமே போதையில் அதிகமாகி சண்டை சர்ச்சைகளில் ஈடுப்பட்டதில்லையாம். அச்சங்கத்தின் உறுப்பினர் அதற்கு காரணம் அவரவர்க்கு வேண்டிய மதுவை அவரவரே வாங்கிக்கொள்வதே காரணம் என்கிறார்.


அவர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மிக வேடிக்கையாய் சொல்லப்படுபவை. மிக சுவாரசியமானவை. அதில் ஒன்று உங்களுக்காக. LIARS NOSE என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கவிதை , 2 போத்தல் ரம்மை ராவாக அடித்தபின் எழுதிய ஒன்றாம் .அந்த கவிதை மற்றும் சங்கத்திற்கான சுட்டி இங்கே
************************************
தனது பத்து புத்தகங்களை ஒரே நாளில் வெளியிட்டுள்ள சாரு நிவேதிதாவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
*************************************

26 comments:

மணிகண்டன் said...

me the first.

மணிகண்டன் said...

நான் உங்களுடைய இந்த பதிவை படிக்கவில்லை. ஆனாலும் நீங்கள் நல்ல எழுத்தாளர். இந்த போஸ்ட் அருமையான போஸ்ட். உங்கள் பணி தொடர்க.

கே.என்.சிவராமன் said...

பதிவின் வடிவமைப்பு புனைவை படிப்பது போலவே இருக்கிறது...

வாழ்த்துக்கள் அதிஷா

தோழமையுடன்
பைத்தியக்காரன்

KarthigaVasudevan said...

//புத்தகவெளியீட்டுக்கு திரைப்படகலைஞர்கள் எதற்கு என்று இனியாவது நம்மவர்கள் கட்டாயம் சிந்திக்கவேண்டும்..! அப்படி அழைக்கும் போது புத்தகங்களை மதிக்கும் சிலரையாவது அது நமீதாவாய் இருந்தாலும் ஷகிலாவாய் இருந்தாலும் கட்டாயம் அழைக்கலாம் . அவனவனுக்கு அவனவன் துறைதான் பெரியது!//

அந்த திரைப்பட இயக்குனர் மட்டும் அமீரை இருக்கலாம் என்று தெரிகிறது,மீதியெல்லாம் சரியா தெரியலை அதிஷா .ஆனாலும் யோசிக்க வைக்கும் கேள்வி தான் இது ?

anujanya said...

பதிவை ரசித்தேன் அதிஷா. எழுதிய பாணி அட்டகாசம். நாயகன் சாரு (அவருக்கு இப்படியெல்லாம் கூட ரசிக/ரசிகையர்களா!) இயக்குனர் அமீரா? :( ; நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் ஒருவர் பிரபஞ்சன் என்றால்கூட மிக வேதனையான விதயம். எனக்குப் பிடித்த எழுத்தாளர் அவர் :(.

Our Motto: "Drinking by committee; poetry by choice;" no I mean "poetry by committee; Drinking by choice;" என்ற அட்டகாச குறிக்கோள். அந்தக் கவிதையும் 'கலக்கல்'.

உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் அதிஷா.

அனுஜன்யா

Ganesan said...

அவளது தலை அவனது தோளோடு ஒட்டி இருக்கிறது. இருவரது கைகளும் கோர்த்திருந்தன. அவள் கழுத்திலும் கால்விரலிலும் திருமணமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவள் கண்களில் கண்ணீராய் இருக்கவேண்டும். அவள் அவரை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறாள் போல.

'தெரியலடா , முதல்தடவ இப்போதான அவரை நேர்ல பாக்கறேன் அதான் ! , நம்ம ரெண்டு பேரும் முத தடவை அது பண்ணோம்ல , அத விட .... இது எப்படி சொல்றதுனு தெரியலடா!! '

வாவ் , பின்னிட்டிங்க அதிஷா. சத்தியமா எனக்கு பாராட்ட வார்த்தை வரவில்லை.ஓன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.வலையுலக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்துள்ளார்.

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹம்ம்ம் கலிகாலம்....

//நானும் படிக்க முற்பட்டு படிக்க இயலாமல் போய்விட்டதென்றும் பெருமையாய் பேசுகிறார் . கைதட்டல் பலமாக இருக்கிறது //


என்ன *** அந்த இயக்குனரை அழைத்தார்கள். முன்பு மலேசியாவிலும் இப்படிதான் ஒரு கவிஞ்ரை அழைத்து சூடு போட்டுக் கொண்டார்கள்...

//ஓரு ஆச்சர்யம் -

ஒரு அதிர்ச்சி -

ஒரு அருவெறுப்பு -//

மச்சி கொஞ்சம் கவனிக்கவும்....

Cable சங்கர் said...

இதுக்குத்தான் ஜோதியில ஐக்கியமாகணூம்கிறது.

பரிசல்காரன் said...

பதிவின் எழுத்திலும் அடக்கத்திலும் மிக நல்ல மாறுதல். அந்த கேனத்தனமான நட்பு****க்காகவும் இதைச் சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன்.

அதிஷா...

உங்கள் பயணம் அடுத்த தளத்தை நோக்கி நகர்கிறது. தொடருங்கள். வாழ்த்துகள்.

தராசு said...

இந்த விழாவைப்பற்றி ஒரு வித்தியாசமான தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால், எழுதிய விதம் இருக்கிறதே, அதிஷா, அசத்திவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள். இதே நடையில் அதிகம் எழுதுங்கள். மிகவும் ரசித்தோம்.

வினோத் கெளதம் said...

அமீர் வேறு ஒரு தளத்தில் இயங்க கூடிய படைப்பாளி.
அதனால் கூட அவரை அழைத்திருக்கலாம்.
இவரை சார்ந்து நடக்கூடிய ஒரு விழாவிற்கு அவர் மதிக்கும் வேறு தளத்தில் இயங்க கூடிய நபரை அழைக்க கூடாத என்ன.
அவரும் எனக்கு படிக்க இயலவில்லை என்று தானே சொன்னார்.
ஆஹா ஓஹோ என்று தெரியதததை தெரிந்தது போல் காட்டி கொல்லவில்லையே.

ilavanji said...

அதிஷா,

// ஒரு அருவெறுப்பு - //

குடிக்கும் இடத்தில் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் சரியென நினைக்கிறேன். அப்படித்தான் இருப்பார்கள் என எண்ணி ( ஒரு தனிப்பட்ட விருந்தில் )குடித்தவர்களது நடவடிக்கைகளை இப்படி ஒழுக்கசீலனாக மாறி புறம்சொல்லும் வகையில் கிசுகிசு பாணியில் எழுதியிருப்பதுதான் மிக அருவருப்பானதாக இருக்கிறது! :(

ஒரு எழுத்தாளர் குடித்துவிட்டு எப்படி
எப்படி நடந்துகொள்கிறார் என்று ஆராய்ந்து மற்றவர்களுக்கு சொல்லத்தான் அங்கு சென்றீர்களா?! அப்படியெனில் உங்களையல்ல.. உங்களை அழைத்தவரைத்தான் நொந்துகொள்ள வேண்டும். இதுல வெள்ளைக்கார குடிகாரனுங்க எப்படி நடந்துக்கறானுங்கன்னு ஒரு சாட்சி வேற! இதைக்கூடவா ஒருத்தன் வெள்ளைக்காரனைக்கண்டு கத்துக்கனும்? தன்னிலை மறந்து மட்டையாகிக்கிடக்கும் குடிகாரனது மரியாதை என்பது அங்கு அவன் காப்பாற்றிக் கொள்வதல்ல. அந்த நிலையில் அந்த குடிகாரரை நாம் எந்த வகையில் மரியாதையாக நடத்தினோம் என்பதில் இருக்கிறது குடியின் மீதும் அழைத்தவரை மதித்து வந்த அவரது நம்பிக்கையின் மீதும் நாம் காப்பாற்றும் நாகரீகத்தை!

காலையில் கம்பங்கொல்லையில் சர்வசுதந்திரமாக அமர்ட்ந்திருப்பவரிடம் சென்று கடவுளுக்கு அபிஷேகம் செய்வது எம்புட்டு சிறப்பென்று விளக்குவதும், மாலையில் கோவிலில் பக்தியைத் தேடுபவனிடம் சென்று காலையில் கொல்லையில் எம்புட்டு எப்படி அருவருப்பாக போனான் என புலம்புவதும் தமிழர் ரத்தத்திலேயெ ஊறிவிட்ட மேட்டரு போல!

அந்தந்த இடத்துல அந்தந்த வேலைய பாருங்க பாஸு.. குடிக்கவென்றே கூடிய இடத்தில் ஒழுக்கத்துக்கான வருத்தங்களுக்கு என்ன வேலை? உங்களுக்கு எழுத மேட்டருன்னு அடுந்தவங்க அந்தரங்களை உங்களது புனிததராசில் அளந்து ஆளுக்கு அரைக்கிலோன்னு தயவு செய்து விநியோகிக்காதீங்க..

அப்பறம்...

// நம்ம ரெண்டு பேரும் முத தடவை அது பண்ணோம்ல , அத விட .... //
// அப்பெண்ணின் கண்களில் ஆவல் தீர்ந்து கேவலாக மாறிக்கொண்டிருந்தது. //

படிக்க குஜாலா இருக்கு :)

இப்படி ஒரு சாமியாரு ரேஞ்சுக்கு புனிதபிம்பப்படுத்தறவங்க கண்டிப்பா அவரது வாசகராக இருக்க முடியாதுங்கறது என் எண்ணம். அவரு உடைச்செறியாத புனிதங்களா?! இப்ப அவருக்கே தொண்டரடிப்பொடிகளாக மாறி பிம்ப கட்டுமானமா? நடத்துங்க! :) இதுக்கு பதிலா அவர் வைச்ச கருத்துக்கு எதிர்கருத்து வைச்சு ( இல்லைன்னு மட்டும் சரணாகதி ரிக்கார்டு போட்டுராதீங்க.. ) சண்டை போட்டுப்பாருங்க.. உங்க புரிதலுக்கு இருக்கும் ஆர்வத்தைக்கண்டு கண்டிப்பா மனுசன் சந்தோசப்படுவாரு :) நாம் ரசிகர்களாக இருக்கும் ( ரசிகர் வேறு.. ரசனை வேறு.. ) நமக்குப் பிடித்த நபர்களை இப்படியும் கூட பெருமைப்படுத்தலாம்.

Anonymous said...

:)

எதுவும் புரியலை..

வெண்பூ said...

நல்ல நடை அதிஷா.. அருமையாக வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்.

Prosaic said...

///குடிக்கவென்றே கூடிய இடத்தில் ஒழுக்கத்துக்கான வருத்தங்களுக்கு என்ன வேலை? உங்களுக்கு எழுத மேட்டருன்னு அடுந்தவங்க அந்தரங்களை உங்களது புனிததராசில் அளந்து ஆளுக்கு அரைக்கிலோன்னு தயவு செய்து விநியோகிக்காதீங்க..///


எதுய்யா அந்தரங்கம்? உன் வீட்டுல உக்காந்து நீ மட்டும் சரக்கடிச்சா அது அந்தரங்கம், உனக்கு அதிகம் அறிமுகமில்லாத மனிதர்களுடனும் நீ உக்காந்து சரக்கடிச்சா அது பொது! பத்து பேரு கூடி இருப்பது வெறுமனே மூக்குமுட்ட குடிச்சிட்டு வாந்தி எடுக்குறதுக்கு இல்லே, குடி தரும் சந்தோஷத்தினூடே நிதானத்துடன் கலந்துரையாடத்தான்... இந்த குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவங்களுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு பேசுற ஆளுங்களுக்கு தான் மரியாதையே தரக்கூடாது.

வால்பையன் said...

வித்தியாசமான எழுத்துபாணி!

எப்படி யோசிக்கிறிங்க கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்!

சென்ஷி said...

பைத்தியக்காரன் சொன்னது போல பதிவில் புனைவு வாசனை வீசுகிறது.. கிசுகிசுக்களை கூட இயல்பாய் தந்திருக்கிற பாணி எழுத்தை அழகூட்டுகிறது.

மத்தபடி இளவஞ்சி சொன்னதுல சில கருத்துகளோடு ஒத்துப்போகின்றேன். இப்ப குடிக்க போன இடத்துல இதையெல்லாம் நோட் செஞ்சு பதிவு போட்டா அடுத்த தடவை மீட்டிங் வந்தா உங்ககூட குடிக்க நானே யோசிக்க ஆரம்பிச்சுடுவேன். :-))

வழக்கமா இல்லாத ஏதோ ஒண்ணு இந்த பதிவுல வித்தியாசப்பட்டு நிக்குது. எதுவாயிருந்தாலும் என்னோட வாழ்த்துக்கள் :-)))

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷியோட கமன்டுக்கு ரிப்பீட்டு..!

தமிழன்-கறுப்பி... said...

இன்னும் எழுதலாம் அதிஷா நீங்க...

வாழ்த்துக்கள்..!

Udhayakumar said...

The way you have written this post is good. But the content?

Dr.Rudhran said...

very well written. best wishes

Unknown said...

First two part. Very good adhisha... keep it up.

Third one, I could accept Ilavanjis karuthu.

Anonymous said...

That's not Amir. Its actually Director/Actor Sasikumar!!

Anonymous said...

Superb!
Keep it up!!
Ab

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//எதுய்யா அந்தரங்கம்? உன் வீட்டுல உக்காந்து நீ மட்டும் சரக்கடிச்சா அது அந்தரங்கம், உனக்கு அதிகம் அறிமுகமில்லாத மனிதர்களுடனும் நீ உக்காந்து சரக்கடிச்சா அது பொது! பத்து பேரு கூடி இருப்பது வெறுமனே மூக்குமுட்ட குடிச்சிட்டு வாந்தி எடுக்குறதுக்கு இல்லே, குடி தரும் சந்தோஷத்தினூடே நிதானத்துடன் கலந்துரையாடத்தான்... இந்த குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவங்களுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு பேசுற ஆளுங்களுக்கு தான் மரியாதையே தரக்கூடாது.//


வழி மொழிகிறேன் !

Anonymous said...

ஒரு ஆச்சர்யம் -

முண்ணனி பத்து ப்ளாக்கர்களின் பட்டியலில் இடம் பெற்ற அதிஷாவா இப்படி???!!!!!

ஒரு அதிர்ச்சி -

எமினெம் பாடலின் தமிழாக்க பாடலை சாருவின் பதிவில் தரவேற்ற உதவிய உயர்ந்த உள்ளம் கொண்ட அதிஷாவா இப்படி????

ஒரு அருவெறுப்பு -

குமுதம் பதலக்கூர் ஸ்ரீனிவாசலு எழுதும் ஒரு நடிகனின் கதை பாணியில் அருமையான நடையில் அசத்தியிருக்கிறீர்கள் அதிஷா.

ஒரு செய்தி -

அதிஷா என்றொரு நண்பன் - எழுத்தாளன் இருந்தான்.....