14 January 2009

மப்பு மன்னார் சரித்திரம்...தமிழ்வளர்க்கும் கழகம் -எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - இன்று புதிய தமிழ்ப்புத்தாண்டு

************************

மன்னாரு தண்ணியடிச்ச கதை :


இந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா அதுல பாருங்க.........


மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )


அட விசயத்துக்கு வாடா என் பொங்கி னு நீங்க திட்றது எனக்கு கேக்குது , அப்படித்தான் பாருங்க ஒருநா ( அட எழவெடுத்தவனே எத்தினி கதைலதான் ஒருநாள் ரெண்டு நாளுனு , மாத்தி சொல்லுனு மனசு தவிக்குது , ஆனா உங்க மேல இருக்கற பாசம் அத தடுக்குது ) டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் .


மன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.பாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே !! ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )மீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) .


நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .


மாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடா , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே


நேரா வாஷ்பேசினுகிட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறான் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .அது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கூலா கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு .


காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .அவ்ளோதான்.


**************************


மன்னார் கவிதைப் படலம் ;


இருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோகன் கூட அவரோட வலைப்பக்கத்த்துக்கு பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசகி சுலோ சொல்லிச்சு .


அவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 அடிச்ச மப்புதான் ) ..


மச்சி அவ வசிக்கிறா

ஆந்திரா

என் மனசில

வாசிக்கிறா

தம்புரா...


எல்லாரும் அவன கேவலமா பாத்தோம் அவன் ஓயல , அந்த பொண்ணபாத்து ரொமாண்டிக்கா லுக் விட்டுகிட்டே


அவ என் மேல வீசறா சிறு பார்வைய

என் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய


எனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே.......


மச்சிஅவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா

அவ என் மனசை சுக்குநூறா உடைச்ச உளிடா


அந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தாஅவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமா


அவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவகற்புக்கு

பங்கம் வந்தா காட்டிருவாசெருப்ப கழட்டி -

அப்படிப்பட்டவிசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....


அப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்ப வீக்கு ) பசங்க..


அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...என்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள என்னமோ பண்ணிகிட்டே போனான்....பையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )


பருத்தி உடைஞ்சா வெளிய வரும் பஞ்சு

எதுக்குமே உடையாததுடா என் நெஞ்சு

அவளுக்கு இருக்காலாம் ஆயிரம் பேரு

அவனால்லாம் மண்ணாங்கட்டி சேறு

அவ எப்பவுமே புரிஞ்சிக்கல என் காதல

நான் அவளோட இனிமே போட முடியுமா கடல....(இறுமுகிறான்... )


என் மனசு ஏறி போகுது காருல...

இனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,.....


க்க்க்க் ( இறுமுகிறான் )


அவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .எப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...


வாஷ்பேசின குத்திவிட்டா

அதோட அடைப்பு நீங்கும்

உன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன்

மனசுஎப்படி தாங்கும்......


குச்சி வச்சு குத்திவிட்டாஅடைப்பு நீங்க

உன் மனசென்ன கக்கூஸா...

பாவிப்புள்ள போகும்போது-வெடிக்க

வச்சிட்டாலே

உன்மனசபட்டாசா....


இப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....


*******************************

வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்(கலைஞர்)புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இன்று தமிழகமெங்கும் டாஸ்மாக்குகள் இயங்குகிறது . குடிப்பழக்கம் நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடாம்.


10 comments:

மணிகண்டன் said...

me the first.

தராசு said...

அதிஷா,

பொங்கல் வாழ்த்துக்கள்.

அப்புறம், மகிழுந்து சாவிக்கு ஏழுமலைன்னா, உங்களுக்கு மன்னாரா???

நல்லா வைக்கறாய்ங்கய்யா பேரு.

ரசித்தேன் அதிஷா, அதிகம் எழுதுங்கள்.

நையாண்டி நைனா said...

இதனை மக்கள் "குடி மக்கள் காப்பியம்" என்று பின்னாளில் படிப்பார்கள் என்று ஆருடம் கூறுகிறேன்.

உரைநடைப் பகுதியில் உங்களது என்றால், செய்யுள் பகுதியில் என்னுடையது இருக்குமா?

http://naiyaandinaina.blogspot.com/2008/11/blog-post_20.html

http://naiyaandinaina.blogspot.com/2008/12/blog-post_23.html

மணிகண்டன் said...

ரெண்டாவது பார்ட் ரொம்பவே ரசிச்சேன். கவிதை எல்லாம் சூப்பர். அடைப்புக்குறிக்குள்ளார எழுதறது எல்லாம் நிறுத்தனும் சார். நீங்க பெரிய எழுத்தாளர் ஆகிக்கிட்டு வரீங்க ! ஞாபகம் இருக்கட்டும்.

சென்ஷி said...

:)))

ஊர்சுற்றி said...

ஹிஹிஹி....

கவித ஷோக்காகீதுபா!

வால்பையன் said...

மன்னாரு கதை ஏற்கனவே படிச்ச ஃபீலிங்

Anonymous said...

ultimate...

keep it up.

Unknown said...

// மப்பு மன்னார் சரித்திரம்...//


ஆமாம் நட்பு... உலகில் 99.9% சதவிகிதம்பேர் கால் பதித்த புண்ணிய ஸ்தலம் இது .......

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

Unknown said...

//
இந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா அதுல பாருங்க.........


மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... ) //


குறிப்படும்படி யாரையும் தாகளையே நீங்க...!!!


// டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் . //

அட, புது வருட கொண்டாட்டமா... ?


//மன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் //

வழக்கமா சரக்கு அடிக்கிற எடத்துல ரொம்ப உஷார் பார்டிங்க சொல்லுற கததான இது... இன்னும் சில தாராள பிரபுங்க கரிகிட்டா சரக்குக்கு மட்டும் பைசா எடுதிட்டு வருவாங்க ... நானும் அனுபவ பட்டிருக்கேன் மச்சி .......


//பாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே !! //

ஆமாவா .... புது பழமொழி சூப்பர் அப்பு ...... இதுக்கு ஏதாவது எண்ணிக்கை இருக்கா ?

//மீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , //

அட வா.வு.சி பார்க்கு மைதானதுலையா ??? கலக்கலான இடமாச்சே ........

// சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) .//

அட கொன்னியா ... சரக்கு அடிக்கிற மூடு இல்லையோ ?????


// நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . //

ஏன் .. சந்தைக்கு போகணுமுன்னா...?

// அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க ,//

மச்சி 5 ரூவா பிரியாணி இல்லையே ...?


//அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ). மாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடா , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே //

சில பேரு அப்படித்தான் நட்பு.. மூடிய மோந்து பார்த்துட்டே ரொம்ப தெளிவா இருபாங்கா ... எங்க கூட்டதைளையும் இப்படி ஒரு சுபெர்மேன் இருக்குது ..... இவுகளைஎல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது மச்சி......


//நேரா வாஷ்பேசினுகிட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . //


ஒருவேள நீங்க தெளிவா இல்லைன்னு நெனச்சுட்டாரோ .....

//அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறான் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . //

ச்ச... ஒடம்பே புல்லரிகுது மச்சி.. மப்புலையும் ஒரு தெளிவு ..

//அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .//


நெம்ப தப்பு பன்நீடிங்க ... இன்னும் கொஞ்சம் பேச்சு குடுதிருதீங்கன்னா ... வயத்துக்குள்ள இருக்குற மிச்சம் மீதியும் வந்திருக்கும் ... வயறு clean ஆயிருக்கும்.....

//அது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் //


விடுங்க .. விடுங்க ...இப்படியும் ஒரு வித்தியாசமான புது வருட கொண்டாடமுன்னு சரித்திரத்துல எழுதிக்கோங்க......

//அப்ப அவன் கூலா கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு //

அவரு கஷ்டம் அவருக்கு ....

// காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .அவ்ளோதான்.//

இது அடுத்தநாள் காலையில் எல்லா குடிமகன்களும் சொல்லுற பழைய டையலாக் ஆச்சே .......


// அவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 அடிச்ச மப்புதான் ) .. //

ஓஒ.. ஆமாவா....

//மச்சி அவ வசிக்கிறா

ஆந்திரா

என் மனசில

வாசிக்கிறா

தம்புரா... //

//அவ என் மேல வீசறா சிறு பார்வைய

என் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய

//

// அவ என் மேல வீசறா சிறு பார்வைய

என் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய //

//அவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவகற்புக்கு

பங்கம் வந்தா காட்டிருவாசெருப்ப கழட்டி -

அப்படிப்பட்டவிசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....//

அடா ... அடா.. அடா.... என்ன ஒரு கவுஜை ... ஐயோ .. மன்னிக்கவும் ... கவிதை ... சூப்பர் அப்பு ....//அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு... //

ஓஒ ... எதிர் கவிதையா .....? பலே .. பலே ....

//
வாஷ்பேசின குத்திவிட்டா

அதோட அடைப்பு நீங்கும்

உன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன்

மனசுஎப்படி தாங்கும்......


குச்சி வச்சு குத்திவிட்டாஅடைப்பு நீங்க

உன் மனசென்ன கக்கூஸா...

பாவிப்புள்ள போகும்போது-வெடிக்க

வச்சிட்டாலே

உன்மனசபட்டாசா.... //

சூப்பர் அப்பு ... சூப்பர் அப்பு.....

//இப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்..... //


இருந்தால் இது டூ மச்சு... அவர ரொம்ப puppy shame பன்நீடிங்க .......