03 March 2010

சாமியார் சாமான் நிக்காலோ!!!
''தல தல வெளிய வா தல '' என்றழைத்தபடியே ஓடிவந்தான் சிஷ்யன். சின்னக்குடிசையிலிருந்து தலையை குனிந்தபடி வந்தார் குரு.


''என்னால தியானமே பண்ண முடில , ரொம்ப நேரம் உக்காந்தா பின்னால வலிக்குது , முதுகு குடாயுது, மூச்சு முட்டுது, தலை அரிக்குது,தூக்கம் தூக்கமா வருது, செத்து போன ஆயாலருந்து பக்கத்துவீட்டு ஜெயாவரைக்கும் எல்லாரும் மனசுக்குள்ள வந்து ஓரே டார்ச்சராருக்கு, இதுக்கு ஒரு வழி சொல்லுங்க''


''ஓ............ம்ம் இன்னா செய்றது அல்லாம் பூடும்பா'' என்றார்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தான் சிஷ்யன்.


''தல சூப்பாராகீது தல, நேத்து நல்லா சூப்பரா தியானம் பண்ணேன். திவ்யமாந்துச்சு, இன்னா அமைதி... இன்னா மேரி இந்துச்சு தெர்யுமா! தாங்க்ஸ் தல'' என்றான்


''ஓ............ம்ம் இன்னா செய்றது அல்லாம் பூடும்பா'' என்றார்..குருநாதர்


*********************************************


கொஞ்ச நாள் கழிச்சு குருவும் சிஷ்யனும் ஆத்தோரமா சாமான்கள் கழுவிக்கொண்டு இருந்தனர். தீடீர்னு ஒரு பாம்பு ஆத்துக்குள்ள விழுந்துருச்சு . உடனே குரு ஆத்துல குதிச்சு காப்பாத்தினாரு. காப்பாத்தும் போது அந்த பாம்பு அவரு கைய கடிச்சிருச்சு. ஆனாலும் அவரு மறுபடியும் வந்து சாமான் கழுவறதில மும்முரமா இருந்தாரு.


மறுபடியும் அந்த பாம்பு ஆத்துக்குள்ள விழுந்துருச்சு. மறுபடியும் குரு ஆத்துல குதிச்சு காப்பாத்தினாரு , மறுபடியும் பாம்பு அவரு கைய கொத்திருச்சு. இந்த வாட்டி இன்னும் ஷார்ப்பா கொத்திருச்சு.இதையெல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த சிஷ்யன் காண்டாகி


'' குருவே அந்த பாம்புதான் கொத்தும் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறீர்கள்'' ன்னான்

குரு , குறுகுறுனு பாத்துகிட்டே சொன்னாரு '' பாம்புக்கு கடிப்பது குணம், எனக்கு பிடிப்பது குணம்''


******************************************


குருவிற்கு சிஷ்யர்களுக்கு கற்று கொடுத்து கொடுத்து சலிப்பு வந்துவிட்டது. அதனால் ஒரு நாள் அனைவரையும் அழைத்து ''பாய்ஸ் டுடே இஸ் தி லாஸ்ட் டே, நீங்க எங்கயாவது போய் ஏதாச்சும் பண்ணி உயிர்வாழ்ந்துக்கோங்கோ!! என்னால இதுக்கு மேல முடியாது '' என்றார்,


சிஷ்யர்கள் அனைவரும் வேறு வேறு ஊர்களுக்கும் சென்று பிரான்ச் ஆஸ்ரமம் அமைத்து பிழைத்து வந்தனர்.


முன்று வருடங்கள் கழிந்தது. நம்ம சிஷ்யனுக்கு திடீரென குருவின் ஞாபகம் வந்தது, அவனது ஆஸ்ரமத்தில் சரியாக கல்லா கட்டவில்லை. அவரிடம் இன்னும் சில வித்தைகள் கற்றுக்கொள்ள பிரியப்பட்டான். குருவைத்தேடி கோயில் குளமாய் அலைந்தான். ஒரு வழியாய் பழனிமலை அடிவாரத்தில் கண்டுபிடித்தான். அவர் ஒரு பிச்சைக்காரனோடு உக்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.


''இன்னா சாமி, இங்க பிச்ச எடுத்துனுக்கிறீங்கோ.. உங்களாண்ட இன்னும் கொஞ்ச வித்த பயகலாம்னு வந்தேன்''


''அதுக்கின்னா கத்து குடுத்துட்டா போச்சு'' என்றார் குரு.


''ஆனா மூணு நாளு நான் எப்படி இக்கீறனோ அதே மேரி நீயும் இர்ந்தா கத்து குடுக்கறேன் ஓகேவா!''


அதற்கு சம்மதித்தான் சிஷ்யன்.


அன்றைய தினமே குருவின் நண்பனான பிச்சைக்காரன் இறந்து போனான்.


குருவும் சிஷ்யனும் சேர்ந்து அவனை அடக்கம் செய்தனர்.


அடக்கம் செய்த களைப்பில் குரு உறங்கிப்போனார். சிஷ்யனோ இரவெல்லாம் விழித்தபடி நாளையைப்பற்றி சிந்தித்தபடி இருந்தான்.


''இன்னிக்கி நாம பிச்ச எடுக்க வேண்டியதே இல்லபா! , பாரு செத்துப்போனவன் முந்தாநாள் கொண்டாந்த பழைய சோத்த வச்சுகினு போயிருக்கான், அத துன்னு இன்னிக்கி பொழுத போக்கிக்கலாம்', நாளைக்கு பிச்ச எத்துக்கலாம் ஓகேவா'' என்றார்.


சிஷ்யனால் அதை முகர்ந்து கூட பார்க்க முடியவில்லை. குமட்டியது. ஒரு பருக்கை கூட தின்ன முடியவில்லை.


''இன்னாடா நீ.. நான்தான் சொன்னேன்ல உன்னால என்னாட்டம் வாயவே முடியாதுனு..'' என்று எரிச்சலுடன் கத்தினார் குரு.


''தயவு பண்ணி இன்னொருதபா வந்து வித்த சொத்தனு தொந்தர்வு பண்ணாத இன்னா, சாமியாரே சாமான் நிக்காலோ'' என்றார் குரு.
31 comments:

மணிகண்டன் said...

me the 14th

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

:) ஏன் இந்த கொலை வெறி !

அகநாழிகை said...

மூணு கதயுமே ரொம்ப தமாசுப்பா.
1. மொத கத ‘இதுவும் கடந்து போகும்‘னு ஏற்கனவே பட்ச்ச கததான்.
2. ரெண்டாது ‘கன்பூசியஸ்‘ புட்டிக்குள்ளார வுயுந்த தேள தூக்கி வுட்ட கத.
3. மூணாத சொன்ன பாரு... அது நெஜமாலுமே இதுவரிக்கும் கேக்காத புட்சான கதப்பா.
இன்னோரு தபா கேட்டாலும்... சலிக்காம எழுதியிருந்த.. நல்லாக்கீதுபா... கன்டினியூ பண்ணுப்பா...

Namma Illam said...

:)

Anonymous said...

குரு சிஷ்யன் கதை சும்மா ஷோக்காதான் கீது மாமே!!!

:)

ஜோசப் பால்ராஜ் said...

இன்னாபா,
எல்லாரும் படிச்சுட்டு மெர்சலாகுறமாதிரி கதை எழுதுற?

பரிசல்காரன் said...

நன்று.

Anonymous said...

அதிஷாவின் பிதற்றல்கள்....டாஸ்மாக் பாரிலிருந்து எழுதியதா?

புதிய அனானி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

நிகழ்காலத்தில்... said...

\\1. மொத கத ‘இதுவும் கடந்து போகும்‘னு ஏற்கனவே பட்ச்ச கததான்.
2. ரெண்டாது ‘கன்பூசியஸ்‘ புட்டிக்குள்ளார வுயுந்த தேள தூக்கி வுட்ட கத.
3. மூணாத சொன்ன பாரு... அது நெஜமாலுமே இதுவரிக்கும் கேக்காத புட்சான கதப்பா.
இன்னோரு தபா கேட்டாலும்... சலிக்காம எழுதியிருந்த.. நல்லாக்கீதுபா... கன்டினியூ பண்ணுப்பா... \\

இதேதான்பா...

தராசு said...

இன்னாவோ போ,

குரு இன்னா சாமான் எடுக்குறார்னு நீ இன்னமும் சொல்லவேயில்லையேபா!!!!

Senthil said...

eppidi ithellam?

ARV Loshan said...

ஆகாகா.. தெய்வமே.. நிசமாலுமே நீங்க சாமி.. நாங்கல்லாம் ஆசாமி..

வால்பையன் said...

ஹா ஹா ஹா

சாமியார் கதையை விட
லோக்கல் ஸ்லாங் தான் கலக்கல்

Anonymous said...

பதிவர் சந்திப்புக்கும் செல்லும் போது ஒன்று மூஞ்சி கழுவீட்டு வா ! இல்ல போட்டோக்களுக்கு போஸ் தராதே!. ஙே.....ஙே....ன்னு முழிச்சுக்கினு என்னாத்துக்கு எல்லாரையும் வெறுப்பேத்தனும்

Anonymous said...

மாமே... சும்மா சொல்லப்படாது.... ரொம்பதான் நக்கலு உனக்கு...

தமிழன்-கறுப்பி... said...

:))

இளைய கவி said...

தல கத ரொம்ப ரோசிச்சி எய்தினியா தல?

மஞ்சள் ஜட்டி said...

யோவ்..."சாமியார் !! சாமான் நிகாலோ" ன்னா வேற மாதிரி அர்த்தம்யா??

Thamira said...

டைமிங்கா ரிப்பீட்டு போட்டிருக்கியா தல..

நாமக்கல் சிபி said...

:))

சுரேகா.. said...

பார்முக்கு வந்துட்டீங்க!

பழைய மேட்சா இருந்தாலும் ஹைலைட்டா இருக்கு! :))

gulf-tamilan said...

:)))

vanila said...

idhu meel padhivu kannaa...

நல்லாகீயா? said...

சிப்பே வர்ல பா.....

Anbu said...

:-))

Raashid Ahamed said...

ரீசண்டா பேப்பர்ல டீவீ ல??? !! வந்த சாமிய பத்தி ஒண்ணுமே சொல்லலியே பா !! ஏதாவது சொல்லுங்கபா !! சொல்லலேன்னா அதிஷாவும் சீடர்ல ஒருத்தர்னு நாங்க பகிரங்கமா அறிவிக்க வேண்டி இருக்கும்.

அன்புடன் ஜிகிடானந்தா சீடன் !!

SurveySan said...

ஒன்னியும் பிரீல. ஆனா, நல்லாருக்கர மாதிரி இருந்திச்சு. எத்தையோ சொல்லப் போறீங்கன்னு நெனச்சு படிச்சுக்கினே இருந்தா, கத முடிஞ்சுபோச்சே.

Anonymous said...

சாருச் சாமி இந்தக் கதையெல்லாம் படிப்பாரா ?

ஹையா நாந்தான் 30

VELU.G said...

அருமையா இருக்குங்க

கண்டினியூ