Pages

07 April 2009

சாலமன் (என்கிற) சாமானுக்கு கடிதம்!டே த்தா பாடு.. சாமான் வணக்கன்டா!

ஒனக்குலாம் த்தா கட்தாசி எழுதறளவுக்கு என் நெலம.. இன்னா பண்றது அல்லாமே விதிடா விதி.. கட்தாசினா இன்னானு தெரிமா ஓனிக்கு.. எனக்கும் தெரியாது.. இர்ந்தாலும் இப்போ வேற வழியில்ல எயிதியே ஆவணும்.. நெரிய பட்ச்சவங்க சொல்லீட்டாங்களே..

இன்னாடா இவன் த்தா சாமான்றானேனு திங்கிங்கா! த்தா மூச்சுக்கு முன்னூறுவாட்டி ங்கோத்தா போட்டு பேசியே பயக்கப்பட்ட உன்னான்டா அப்பிடி பேஸ்னாதானே மாமா என்னிய அடியாளம் தெர்யும்.

த்தா இன்ன்ன்னாஆ மாமா..... கட்சியா மாம்பலம் ஸ்டேசனான்டா கஞ்சா அடிக்க சொல்ல போலீஸ் தொர்த்துனானு ஓட்ற டிரெயின்ல ரன்னிங்ல ஏறி எஸ்ஸானதுக்கு அப்பால இன்னா ஆன எங்கே போன ஒன்னியும் தெர்லயே மாமா!

த்தா நானும் ஒன்னோட அதே டிரெயின்ல ஏறிருந்தா நானும் ஒன்னாட்டம் காணாம பூட்டுருப்பேனே இன்னாவோ.. அல்லாங்காட்டி இன்னிக்கு இப்படி இந்துருப்பனானும் தெர்ல மாமா.. த்தா அது இன்னா டிரெயினுனு கூட ரொசனை இல்ல மாமா!

டிரெயினுனு சொல்லதான் ஞாபகம் வர்து, ஒருவாட்டி லோக்கல் டிரெயின்ல, போத சிரிஞ்சி வாங்க பைசா இல்லாத பிச்ச எடுத்துனுருந்தமே ஞாபகம்க்கீதா! அப்ப பிடில் வாசிச்சிகினு நம்மளான்டயே பிச்ச எட்த்த குருடன நாயடி பேயடி அட்ச்சியே .... நாம புச்சா பிச்ச எடுக்கறோம்னு பழய பிச்சக்காரன்லாம் சேந்துகினு நம்ம டவுசர கயட்டி ஓட வுட்டானுங்களே ஞாபகம்கீதே... இன்னா அடி மாமா அது.. எச்சத்தட்டுல அடிவாங்கினாலும் செம அடி மாமா.. பிச்ச எட்த்து துன்னாலும் நல்லா உடம்ப வள்த்து வச்சிகிறானுங்கோனு நீ சொன்னியே.. சோக்கா மர்ந்துருவனா மாமா!

டவுசருனுதம்தான் ஞாபகம் வர்து.. துரைசாமி பிரிஜ்ஜோரம் மங்காயாண்ட அதான் மாமா மப்பு மங்கம்மா.. கோட்டர்க்கே...___ காட்டுவாளே , 30ரூவா ரேட்டு பேசி மேட்லி பிரிஜ்ஜாண்ட ஒதுக்குப்புறமா ரெண்டுபேரும் ஒதுங்க சொல்ல ஏதோ ஒன்னு உன் அதுல கடிச்சிருச்சுனு டவுசரக்கூட மாட்டமா ஓடியாந்தியே.. நான் கூட போலீஸ் தொர்த்துதுனு ஓடனேனே... மாமா அசால்ட்டா வுட்ற முடிமா!


பத்து வயசில ரெண்டுபேரும் ஒன்னா சைக்கிள் டியுப்ல சாராயம் விக்க சொல்ல போலீஸ்காரன் தொர்த்த நீ மட்டும் அவனான்ட மாட்டிகினு அவன் குஞ்சாமணில பீடிய வச்சு நசுக்கினானே ஞாயபகம்கீதா!! இன்னா வலிமாமா அது.. அப்பால நான் அத புட்சுக்கினு நீ என்னுத புட்சுக்கினு தெனமும் ஒனக்கு அங்கே தேங்காண்ணை போட்டுகினுருந்தேனே... அந்த தழும்பு கூட மறையாதுருக்க சொல்ல ... நம்ம கீதா கூட ஒன்னான்டா இன்னாதிது வெள்ளையாக்கீதுனு கேட்டானு சொன்னீயே!


மாம்பலம் ஐயரான்ட ஒருவாட்டி அசால்ட்டு பண்ணியே மாமா!


ஒன்ன சாலமா சாலமா னு கூப்பிட புடிக்காத சாமா சாமா னு கூப்ட்டுகினு இருக்க சொல்ல ஏரியாவாண்ட அல்லாரும் ஒன்ன ஐயருனு நினைச்சிகினு.. ஒரு குடுமி ஒன்னான்ட வந்து ஒரு நா.... ''ஐயரா இருந்துண்டு இப்படி இருக்கியே சண்டாளா நன்னா இருப்பியா'' னு ஒன்னான்ட டகில் வுட நீ அவன நடு ரோட்ல வுட்டு வூடு கட்டி பொயந்தியே.. அப்பால சாமா வே சாமான் ஆகி ஏரிய பூரா சாமான் வூடு சாமான் வண்டி சாமான் ஆட்டோனு அல்லா சாமானும் ஒனக்கு சாமான் சாமான் ஆச்சே ஞாபகம் கீதா..

மாமா நம்ம கீதா ஞாபகங்கீதா.. இன்னா மாமா நீ எப்படி மறப்ப.. மாம்பலம் ஹைரோடான்ட கணபதி பிளாட்ஸ்ல தொழில் பண்ணிகினு இருக்க சொல்ல ஒனக்கொண்டி ஃப்ரீயா போய் வருவீயே.. அதுகூட ஒன் மேல லவ்வு லவ்வுனு சொல்லிகினு என்னான்ட கூட ஃப்ரீயா வருமே.. அத போலீஸ் இட்டிகினுப் பூட்டானுங்கோ மாமா.. அப்பால அது திரும்பி வர சொல்ல கந்தலாயி மூஞ்செல்லாம் கீய்ஞ்சி போய் கேவ்லாமாகி என்னான்ட வந்து பாக்கு வாங்க பத்து ரூவா கேட்டு பிச்ச எடுத்துகினுருந்துச்சு..


டிநகர் பஸ் ஸ்டான்டு பக்கம் நம்ம ராக்கி இல்ல அதான்டா நம்ம டிநகரு மாமாபையன் அவனான்டா சேந்துகினு பத்துக்கும் இருபதுக்கும் போய்க்கினுக்கீது.. என்ன பாக்க சொல்லலாம் அழும் உன்ன கண்ணாலம் கட்டிக்கினு பத்து புள்ள பெத்துக்கினு ஜீடா வாயணும்னு கனா கண்டுகினுருந்தேனு..இன்னா மேறி கண்ணீர் வுட்டு கதறுது தெரிமா மாமா...

எனக்கே செம பீலிங்க்ஸா பூட்ச்சு அப்பால அதாண்ட போக சொல்லலாம் 20 ரூவா கேட்டாலும் கூட 20ஆ போட்டு 40 ஆக்குடுப்பேன்.. நான் இன்னா தியாகியா அதுக்கு வாழ்க்க குடுக்க.. டிப்ஸ்தான் குடுக்க முடியும்.

மாமா ஒன்ன கட்சியா தாம்பரம் பக்கம் அம்பிகாவோட பாத்தேனு நம்ம ஏழுமல அதான்பா நம்ம பஞ்சர்கட ஏழுமல, ரெண்டு வர்ஷம் முன்னால சொன்னான். இன்னா மாமா என் லவ்வர காணலனு நானும் அஞ்சு வர்ஷமா தேடினு இக்கிறேன். நீ அலேக்கா தூக்கிக்கினு எஸ்ஸாய்ட்டீயே.. எங்கிருந்தாலும் வாய்க மாமா வாய்க.. புள்ளக்குட்டிலாம் பெத்துகினுருப்பே இந்நேரம்.. த்தா.. எத்தினி வாட்டி அவள .. விடு மாமா.. பயசெல்லாம் சொன்னா உன் லைப்பு வீணாப்பூடும்..

மாமா ஒனக்கு நியூஸ் வந்துச்சா இல்லியானு தெர்ல, ஆயா பூட்ச்சு மாமா.. எந்த ஆயானு மட்டும் கேட்றாதடா பாடு.. மூணு வேளை ஒனக்கு சோறு போட்டு வயத்துச்சே அதே அம்மாதான்டா.. அத பாக்க கூட வர்லியே மாமா. அப்பிடி இன்னா பூ..ஆட்ற வேல மாமா ஒனக்கு. ஆயா செத்தாக்கூட வரமாட்டியா.. ஆறு வயசில அநாதியா நானும் நீயும் ஏதோ ட்ரெயின்ல பிச்ச எடுக்க புட்ச்சினு போக சொல்ல எஸ்ஸாயி மாம்பலம் வந்து எறங்க சொல்ல ஆரு மாமா நமக்கு சோறு போட்டது ஆயாதான அது செத்தப்ப கூட வரலியே மாமா.. வுடு மாமா இன்னாதாருந்தாலும் அது நம்மள கஞ்சாவும் சாராயமும் விக்க வச்சுகினுதான சோறு போட்டுச்சு..அல்லாங்காட்டி போட்டுருக்குமா!

இப்போ இன்னாத்துக்கு எழுத படிக்க தெரியாத ரெண்டாங்கிளாஸ் பெயிலான ஒனக்கு கட்தாசினு கேக்கறீயா.. நீ கட்ச்சியா மாம்பலம் டேசன்ல கஞ்சா அடிக்க சொல்ல போலீஸ் தொர்த்துதுனு.... எஸ்ஸாக சொல்ல ஒருத்தன தள்ளி வுட்டுகினு டிரெயின்ல ஏர்னீயா.... அவன் தண்டவாளத்துல வுயிந்து செத்துட்டான் மாமா.. நான் போலீஸாண்ட மாட்டிகினேன்.. கொலை கேஸூ போட்டு பத்து வருஷம் உள்ள வச்சுட்டாணுங்கோ தே...பசங்க. நீ போயி இன்னியோட பதினஞ்சு வருஷமாச்சு மாமா..என் அம்பிகா இத்திகினு பூட்ட! அதுகண்டி பருவால்ல ஆனா பத்து வர்ஷம் உள்ள உட்டு அட்ச்சானுங்களே ... அத்த ஒன்னால திருப்பி தரமுடிமா மாமா!

என்னிக்காவது ஒன்னகண்டி பாத்தேன் த்தா சாமான் ஒன் உசிரு என் கைலதான் மாமா போகும்.. த்தா டே பத்து வர்ஷம்டா... அன்னிக்கு நாம மாட்டினுருந்தா கூட மூணு மாசம்தான்..


என்னிக்கும் என் கண்ல மட்டும் மாட்டிராத மாமா.. என்னால ஒன்ன கொல்ல கூட முடியாது... உம் மேல அவ்ளோ அபெக்சன் வச்சிகிறேன்.. ஆனா போதைல இர்ந்தா கொன்னுருவேன்..!
அவ்ளோதான் சாமா.
முத்து..


*************************************************

என்னை முத்தய்யாவாக ( முத்தய்யாவா முத்தைய்யாவா என்ன பேரோ ) அருமை அண்ணன் சாலமனுக்கு (யார் பெத்த புள்ளையோ!) கடிதமெழுத அழைத்த பதிவுலக ரித்திஷ் திமுகவின் பிரச்சார பீரங்கி நண்பர் லக்கிலுக்குவிற்கே இந்தப்பதிவு சமர்ப்பணம். மாதவராஜ் அண்ணன் என்ன நினைத்துக்கொண்டு இந்த தொடர் விளையாட்டை ஆரம்பித்தாரோ தெரியவில்லை அது அங்கே சுற்றி இங்கே சுற்றி என்னிடம் வந்துவிட்டது.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து எழுத ஒருவரை அழைக்கவேண்டுமாம். ஏன் ஒருவரை அழைக்கவேண்டும். பிரேக் தி ரூல்ஸ் .... அதனால் நான் ஐவரை அழைக்கிறேன். 1.முரளிக்கண்ணன் 2.பரிசல்காரன் 3.வால்பையன் 4. கார்க்கி 5.தாமிரா . தொடர்ந்து எழுதுபவர்கள் மேலும் ஐவரையோ ஐம்பது பேரையோ அழைத்து என்சாய் பண்ணுங்கோ!