13 April 2009

குவாட்டருக்கு தி.மு.க சைட் டிஷ்க்கு தே.மு.தி.க!


அவன் அந்த ரயிலில் கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ரயிலில் பயணம் செய்கையில் பொதுவாகவே அவன் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே வாசிப்பதை வழக்கமாக்கியிருந்தான். அது அவனுக்கு கூடுதல் அந்தஸ்த்தை தருவதாய் எண்ணி வந்தான். அதற்கு முந்தைய நாள் அவனது நெருங்கிய தோழர் தனது இரண்டாவது புத்தகத்தை அவனுக்கு இலவசமாய் கொடுத்திருந்தார். அவன் இலவசமாய் தரப்படும் புத்தகங்களை உடனே படித்து விடுவதில்லை. அது ஏனோ இலவச புத்தகங்கள் இரவல் புத்தகங்களைப் போல அத்தனை சுவாரஸ்யமாய் அவனுக்கு இருப்பதில்லை.

கைவசம் ஆங்கிலப்புத்தகங்கள் ஏதும் எடுத்து வராததால் , தோழரின் புத்தகத்தை படிக்க முடிவு செய்தான். படித்தபின்தான் புரிந்தது நல்ல வேளை ஆங்கில புத்தகம் எடுத்துவராமல் போனோம் என!. சென்னை சென்ட்ரலில் படிக்கத்துவங்கியவன் ஜோலார்ப்பேட்டை கடக்கும் போதே அந்த இலவசபுத்தகத்தை படித்து முடித்திருந்தான். அவன் பயணித்த ரயிலைவிட மிக வேகமாக பயணிக்கிறது அந்த புத்தகம். ஜெட் வேகம்.

வாழ்க்கை வரலாறுகள் படிப்பதில் அவனுக்கு எப்போதுமே சுவாரஸ்யம் இருந்ததில்லை. ஒரு மனிதனில் வாழ்க்கை முழுக்கவே சுவாரஸ்யமாய் இருப்பதில்லை. மிகச்சிலரது வாழ்க்கையே அப்படி இருந்துவிடும்.
தோழர் இவனுக்கு தந்த அதுவும் ஒரு வாழ்க்கை வரலாறுதான். ஆனால் ஒரு மசாலாத்தனமான வாழ்க்கை வரலாறு. அந்த பிரபலத்தின் வாழ்க்கையை இதைவிட சிறப்பாய் யாராலும் சொல்லியிருக்க முடியாது. அந்த பிரபலத்தின வாழ்க்கையே மசாலாவால் எழுதப்பட்டதுதான்.
முதல் அத்தியாயத்தில் வாசகன் கழுத்தை கற்றையாய் பிடித்து உள்ளே இழுத்து கடைசி அத்தியாயம் வரை பாசக்கயிற்றால் சுறுக்கு போட்டதுபோல கட்டிப்போட்டு கடைசி வரிகளை முடித்தபின்தான் காரித்துப்பி வெளியேற்றுகிறது.

பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம், படிக்க படிக்க உற்சாகம். எங்கோ எப்போதோ கேட்ட விளம்பரத்தின் வாசகங்கள் , இதோ அதை நேரில் அனுபவிக்க ஒரு புத்தகம் என்று சொல்ல தோன்றியது அவனுக்கு . வோடோபோன் விளம்பரத்தில் உடனடி உற்சாகத்தில் பகிர்ந்து கொள்ள யாருமின்றி நடக்கும் ஒரு நிமிட பரபரப்பை அந்த புத்தகத்தை படித்துமுடித்து மூடி வைக்கும் போது தந்துவிடுகிறது. டேய் பாருங்கடா என் நண்பனின் புத்தகம், என் நண்பன் எழுதியது , இந்த புஸ்தகம் எழுதினது என் பிரண்டுடா! ரயிலின் அவசரசங்கிலியை இழுத்து மொத்த ரயிலுக்குமே சொல்லிவிட தோன்றியது அவனுக்கு.

அந்த தோழர் யுவகிருஷ்ணா! அந்த பிரபலம் விஜயகாந்த்.


****************************


எங்கோ மதுரை ரைஸ்மில்லில் மீசையை முறுக்கிக் கொண்டு முத்துப்பாண்டியாய் வலம் வந்த பத்தாம்வகுப்பு பெயிலான விஜய்ராஜை உங்களுக்குத் தெரியுமா? அவனுது பால்யத்தில் அவனாடாத ஆட்டமெல்லாம் தெரியுமா உங்களுக்கு? விளையாட்டாய் சினிமாவிற்குள் நுழைந்து..பட்ட அவமானங்களால் வானளாவ உயர்ந்து நின்ற அவரைத்தெரியுமா உங்களுக்கு? இது மண்ணில்லடா மருந்து என மண்ணை அள்ளி உடலெங்கும் பூச நீயோ நகைத்துக்கொண்டிருக்க எங்கோ தென்தமிழகத்தின் கடைக்கோடியில் ஒரு ரசிகன் அதைக்கேட்டு சிலிர்த்தகதை தெரியுமா உங்களுக்கு?


அவர் நாராயண சாமி நாயுடு! விஜயராஜ்! ரைஸ்மில்!சினிமா!விஜயகாந்த்! ராதிகா!கிசுகிசு! கேப்டன்! அரசியல்! தேமுதிக தலைவர்! கோயம்பேடு திருமண மண்டபம்! கூட்டணி அலப்பறை! அவரது வருங்காலம்! இப்படிப்பயணிக்கிறது யுவகிருஷ்ணா என்கிற கிருஷ்ணகுமார் என்கிற லக்கிலுக்குவின் விஜயகாந்த் புத்தகம்.

அட்டகாசமான எழுத்து ! நக்கல்! கிண்டல்! டெரர்! துள்ளல்! இளமை கொப்பளிக்க இப்படி ஒரு புத்தகம் கிழக்குப் பதிப்பகதிற்கே புதிதாய் இருக்கலாம். கிழக்கின் மற்ற வாழ்க்கை வரலாற்று புத்தகங்களிலிலுருந்து தனித்து நிற்கிறது.


பேரரசு படங்களில் வருமே நாலு காமெடி ,மூன்று ரொமான்ஸ்,ஐந்து சண்டை,ஆறு பாட்டு, நடுவில் அதிலிருந்து சற்றும் விலகாத கதை! , அப்படி ஒரு மசாலாவை அரைத்து எழுதப்பட்ட நூலாகவே இது இருக்கிறது. விஜயகாந்த் என்னும் மசாலா நாயகனின் வாழ்க்கைப்பக்கங்கள் மசாலா இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா! புத்தகம் முழுக்க கோடி ராமகிருஷ்ணா ஸ்டைல் மசாலா! ஆந்திரா ஊறுகாய் போன்ற சுறுசுறு விரு விரு புத்தகம்.


******************************

இது மாம்பழ சீசன்,பரீட்சை சீசன்,ஐபிஎல்,ஈழம் சீசன்(!) மாதிரி இதோ இப்போது தேர்தல் சீசன் . கில்லிமாதிரி வெளியிட்டிருகிறார்கள் சீசன் பார்த்து. அவனது கணிப்புப்படி குறைந்தது 15000 காப்பிகளாவது விற்கும் வாய்ப்பிருக்கிறது . சொல்ல இயலாது தேமுதிகவே மொத்தமாய் பல ஆயிரம் காப்பிகள் வாங்கி தொண்டர்களுக்கு மானிய விலையில் தரும் வாய்ப்பும் இருக்கிறது.

புத்தகம் முழுக்க அத்தியாயத்திற்கு அத்தியாயம் விஜயகாந்த் வேட்டிசட்டையோடு வந்து கும்பிடு போடுவது நெருடல். விஜயகாந்தின் பார்த்திராத படங்கள் போட்டிருக்கலாம். இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

புத்தகத்தின் பல இடங்கள் தேமுதிக பதிப்பகத்தின் புத்தகம் வாசிக்கிறோமோ என்கிற எண்ணமே வருகிறது. அதுவும் வியாபார யுக்தியாக இருக்கலாம்.

மிதமிஞ்சிய புகழ்ச்சி புத்தகம் நெடுகிலும். விஜயகாந்தே நாணிக்கோணி கதவிடுக்கில் ஓளிந்து கொண்டுவிடுவார். தேமுதிகவின் வெறிபிடித்த கடைநிலைத்தொண்டன் எழுதினால் எப்படி எழுதுவானோ அப்படி ஒரு புகழ்ச்சி. சொல்லப்போனால் புத்தகம் அப்படிப்பட்ட வாசகர்களை குறிவைத்து எழுதப்பட்டதாக இருக்கலாம். யார் கண்டா!

சொல்ல இயலாது தேமுதிகவின் கொ.ப.செவாக லக்கிலுக்கை நியமிக்கும் வாய்ப்பு உதயசூரிய பிரகாசமாய் இருக்கிறது.

திமுகவின் மிகப்பெரிய தொண்டரான லக்கிலுக்கிடம் இருந்து, இப்படி ஒரு புத்தகமா என முதலில் அதிர்ச்சியாய் இருந்தது. அதுவும் அந்த எழுத்து நடை, அடப்பாவி ஒரு நாளும் கலைஞரைக்கூட இப்படி புகழ்ந்ததில்லையே நீ என்று கேட்கத்தோன்றியது.

கலைஞர் செய்யாத தில்லாலங்கடி லீலைகளா! வேலைகளா! அவரடிக்காத பல்ட்டியா! டாக்டர். விஜயை விட பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு பல்ட்டி அடிக்கும் வல்லமை பெற்ற ஒரே தமிழர்த்தலைவர் டாக்டர் கலைஞரல்லவா! நாளை தமிழ்ப்புத்தாண்டாம்!
அவர் பல்ட்டி அடித்தால் டெல்லிவரை பாய்வார். அவரது வலையுல உடன்பிறப்பு அப்படித்தானே இருப்பார். தேமுதிகவரை பாய்ந்திருக்கிறார். பிரியாணிக்கு திமுக லெக்பீசுக்கு தேமுதிக.

அதேபோல விஜயகாந்த் வரலாறு என துவங்கியபின் அதில் கலைஞர் மீதான விமர்சனஙளை ஏனோ பட்டுக்குஞ்சத்தில் சும்மானச்சுக்கும் அடித்து சொல்லியிருப்பது நெருடல். அரசியல் பகுதி முழுக்க அநியாயத்திற்கு நுண்ணரசியல். ஜெ மீது மட்டும் என்னதான் கோபமோ! ம்ம்

யுவகிருஷ்ணாவின் முந்தைய புத்தகம்(விளம்பர உலகம்) வேண்டுமானால் யுவகிருஷ்ணாவினுடையதாக இருக்கலாம். எனக்கு பிடிக்கவும் இல்லை. அதனாலேயே அதற்கு விமர்சனமும் எழுதவில்லை.

இந்த நூல் நிச்சயமாக கட்டாயமாக உறுதியாக இலச்சிமலை ஆத்தா சத்தியமாக அக்மார்க் ஐ எஸ் ஓ 9001 சான்றிதழ் பெற்ற லக்கிலுக் புத்தகம்.

லக்கியைப்பார்த்தால் அவனுக்கு பொறாமையாக இருக்கிறதாம். வயிறு எரிகிறதாம். நேரில் பார்க்கும் போது லக்கிலுக் அவனுக்கு ஜோடா வாங்கித் தருவார் என நம்புவோம்.


*******************

144 பக்கங்களோடு கிழக்குப்பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை வெறும் 70 ரூபாய் மட்டுமே. (பி.கு - சாருநிவேதிதா மாதிரியே தோழர் யுவகிருஷ்ணாவும் பாவப்பட்ட பரம ஏ........ழை .. )

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கிக்கோங்க..

உங்கள் அருகாமையில் உள்ள புத்தகக்கடைகளிலும், தேமுதிகவின் பிரச்சாரக்கூட்டங்களிலும் , மற்றும் ரயில் நிலையங்களிலும் கிடைக்கிறதாம்.

*******************
லக்கிலுக்கின் விஜயகாந்த் - டுபுரித்தனமான வாழ்க்கை வரலாறு... செம ஹாட்டு மச்சி

21 comments:

கே.ரவிஷங்கர் said...

உங்க நடை நல்லா இருக்கு.படிக்க வேண்டும் இரவல் வாங்கி.(?)

நம்ம கதை முடிவு படிச்சீங்களா?

பரிசல்காரன் பதிவில்
(முத்தையாவிற்க்கு ஒரு கடிதம்)
ரெண்டு பின்னூட்டம் நீங்கள் போட்டதா?

அதை கிளிக் செய்து இங்கு வர முயற்ச்சித்தேன்.ஆனால் “Profile Not Available” என்று வருகிறது.

கருவிப் பட்டை கிழே தெரிகிறது ஏன்?

narsim said...

வாழ்த்துக்கள் லக்கி.

நல்லா எழுதியிருக்கீங்க அதிஷா.

லக்கிலுக் said...

யோவ் இன்னாய்யா நடக்குது. எப்பவுமே லுக்கேலக்கு பதிவுக்கு பக்கத்துலேயே தமிழ்மணத்துலே உம்ம பதிவும் இடம் பிடிக்குது. கமெண்ட்சும் ஒண்ணா ரிலீஸ் ஆவுது. நாங்கள்லாம் இந்த வேடிக்கைய பாத்துக்கினு தான் கீறோம்.

போலி லக்கி

லக்கிலுக் said...

மேற்கண்ட கொமெண்டினை போட்ட போலி ஒரிஜினல் தான் என்று பச்சைமலை ஆத்தா மீது சத்தியம் செய்து சொல்கிறேன்.

இருபதிவுகளையும் எப்படியோ தமிழ்மணத்தில் கஷ்டப்பட்டு இணைத்த முகம் தெரியாத தோழருக்கு நன்றியும் சொல்கிறேன்.

ஒரிஜினல் லக்கி

சென்ஷி said...

முன்னாடி யாரோ சொன்னாங்க.. லக்கியோட அடுத்த வாரிசு அதிஷாதான்னு.

இந்த பதிவு அதை நல்லா பிரதிபலிக்குது ;-)

சென்ஷி said...

// narsim said...

வாழ்த்துக்கள் லக்கி.

நல்லா எழுதியிருக்கீங்க அதிஷா./

ரிப்பீட்டே ;-)

pappu said...

அட, அவர விட அவர் புத்தகத்தை பத்தி நீங்க நல்லா போட்டிருக்கீங்களே. அப்படியே கமிஷன் வாங்கிருங்க!

அக்னி பார்வை said...

//முன்னாடி யாரோ சொன்னாங்க.. லக்கியோட அடுத்த வாரிசு அதிஷாதான்னு.

இந்த பதிவு அதை நல்லா பிரதிபலிக்குது ;-) ///

அய்யையோ வரிசு அரசியல் வாரிசு அரசியல்

அறிவிலி said...

வெறுஞ் ஜோடா போதுமா??????

மணிகண்டன் said...

ஒரு புக் பார்சல் அனுப்புங்க சார். விமர்சனம் அருமை.

Peer said...

//தேமுதிகவின் கொ.ப.செவாக லக்கிலுக்கை நியமிக்கும் வாய்ப்பு உதயசூரிய பிரகாசமாய் இருக்கிறது//

லக்கிலுக் விஜயகாந்துக்கு குடுத்த இன்ட்ரொ படிச்சப்பவே எனக்கு சந்தேகம் அதிஷா,

shabi said...

னீங்க அவரோட கொ.ப.செ.வா கொஞ்ச்ம் ஓவரா தெரியல

நாமக்கல் ரமேஷ் said...

விஜயகாந்த்துக்கே தெரியாத பல விஷயங்களை எழுதி உள்ளாராம்.

விஜயகாந்தே புத்தகம் படித்துதான் த்ன்னை பற்றி தெரிந்து கொண்டாராம்.

ஸுப்பர் அப்பு.

VIKNESHWARAN said...

:)

//(பி.கு - சாருநிவேதிதா மாதிரியே தோழர் யுவகிருஷ்ணாவும் பாவப்பட்ட பரம ஏ........ழை .. )//

என்னையும் சேர்த்துக்க மச்சி...

RAHAWAJ said...

என்ன கொடுமை சார் இது, அதிஷா சூப்பருங்கோ

தண்டோரா said...

அடுத்த புத்தகம் "வெடிவேலை"பத்தியா?"மரியாதையா" வாங்கிடறேன் (அந்த "மஞ்ச ஜட்டி"மேட்டர் பத்தி எதாவது இருக்கா?)

தண்டோரா said...

அந்த "மஞ்ச ஜட்டி"மேட்டர் பத்தி எதாவது இருக்கா?

தமிழ்நெஞ்சம் said...

இந்த டைடில் எல்லாம் சூப்பரா வைக்கிறீங்க பாஸ்
♫ குவாட்டருக்கு திமுக.. சைட் டிஷுக்கு தேமுதிக..

எப்படி இதெல்லாம் லக்கியாரின் டியூசனா?
இல்லை நீங்க அவருக்கு சொல்லிகொடுப்பீங்களா?

தமிழ்நெஞ்சம் said...

பெங்களூரில் எங்கே கிடைக்கும்னு சொல்லுங்க - வாங்கிடுறேன்


//லக்கிலுக்கின் விஜயகாந்த் - டுபுரித்தனமான வாழ்க்கை வரலாறு... செம ஹாட்டு மச்சி

தமிழ்நெஞ்சம் said...

ஆவ்வ்வ்...

//இருபதிவுகளையும் எப்படியோ தமிழ்மணத்தில் கஷ்டப்பட்டு இணைத்த முகம் தெரியாத தோழருக்கு நன்றியும் சொல்கிறேன்.

ஒரிஜினல் லக்கி

தமிழ்நெஞ்சம் said...

படிக்கனும்னு ஆர்வத்தை தூண்டுது -இந்த வரிகள்

//கறுப்பு என்று ஒதுக்க நினைத்தது திரையுலகம். தி.மு.க., அ.தி.மு.க., தவிர்த்து இன்னொரு சக்தி சாத்தியமில்லை என்று அவநம்பிக்கை அளித்தது அரசியல் வட்டம். ஆகட்டும் பார்க்கலாம் என்று அடியெடுத்து வைத்தார். இன்று இரண்டிலும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அங்கே, கேப்டன். இங்கே கறுப்பு எம்.ஜி.ஆர்.

போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே எட்டு சதவீத வாக்குகளை தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெற்றபோது, அரசியல் உலகம் நிமிர்ந்து பார்த்தது.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி 2009 நாடாளுமன்றத் தேர்தல் வரை விஜயகாந்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம்.