23 April 2009

இன்று பந்த் - வெற்றி! வெற்றி! வெற்றி!
வெற்றி வெற்றி வெற்றி

ஆட்டோக்கள் ஓடவில்லை

பஸ்கள் வரவேயில்லை

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தலைவா உன் பந்த் அபார வெற்றி

சன்டிவியில் திருடாதிருடி

கலைஞரில் முரட்டுக்காளை

ஆதித்யாவில் இடைவிடாத சிரிப்பு

சிரிப்பொலியின் நகைப்போ இன்னும் அடங்கவில்லை

தங்கைக்கு குழப்பம் ரஜினியா தனுசா

பக்கத்துவீட்டு அக்காவுக்கு புதுப்படம் டிவிடி

அதிலும் குழப்பம்

ஆங்கிலமா தமிழா!

அம்மாவுக்கோ குழப்பம் குழம்பு வைப்பதில்

இன்றைக்கு மட்டனா சிக்கனா மீனா? - அப்பாவுக்கு

இன்னும் தெரியவில்லை மதியம் கலைஞரில் என்ன படமென்று

புதுப்படமா பழைய படமா? - எனக்கோ

மதியம் உறங்கலாமா அல்லது புதுப்பதிவா?

ஆயிரம் குழப்பங்கள் அத்தியாவசிய குழப்பங்கள் - ஆனாலும்

மனது நிறைந்து மகிழ்ச்சியாய் இருக்கிறது

ஈழத்தமிழா உன்னால்தான் இன்று இது...

தமிழகமே நன்றி சொல்லும் உன் சாவுக்கு

சாவு சாவு மேலும் சாவு

ஐ பி எல் ஆட்டம் தொடங்கிவிடும்

அது வரைக்கும் சாவு

ஆட்டம் முடிந்ததும் சந்திப்போம்

பந்த் நடத்திவிட்டோம் வெற்றிகரமாய்

இனி உனக்கும் மகிழ்ச்சிதான்

கடைசியாய் ஒன்று

தமிழினத்தலைவர் கலைஞருக்கு

விஷ் யூ ஏ வெரி ஹேப்பி பந்த் டே

***************************

52 comments:

இராகவன் நைஜிரியா said...

இதுக்கு மேலே தமிழனை யாரும் அவமானப் படுத்த முடியாது என்ற அளவுக்கு அவமானப் படுத்திவிட்டாச்சு...

தமிழ் வாழ்க, தமிழ் தலைவர்கள் வாழ்க, அவர்கள் குடும்பத்தினர் வாழ்க, தமிழன் அனைவரும் சாக...

கோவி.கண்ணன் said...

உலகமே நாடகமேடைங்கிறதை இவங்களை வச்சித்தான் சொன்னாங்களோ

அத்திரி said...

இன்னைக்கு நடக்கும் கூத்துகளை பார்த்து........... சொல்றதுக்கு ஒன்னுமில்லை சகா.....

பிராட்வே பையன் said...

me first???

சூப்பர் ...

ஹசன் ராஜா

TBCD said...

:(

Vetri said...

நெத்தியடி... சொல்லி அடித்த அதிஷாவுக்கு வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

\\விஷ் யூ ஏ வெரி ஹேப்பி பந்த் டே\\

வருசத்துக்கு எத்த்த்தனை தடவை!!!

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
Karthikeyan G said...

:((

ராசா said...

தமிழின உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்..
தயவு செய்து "தமிழினத் தலைவர் கலைஞர்"
இந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டாம்.

Ŝ₤Ω..™ said...

தமிழினத் தலைவர் எதச்செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.. வேலைநிறுத்தம் உடன்பிறப்புக்கு தான்.. சொந்த ரத்ததுக்கு அல்ல.. அவங்க 9வது தலைமுறைக்காக‌ சம்பாதிக்க விட மாட்டீங்க போல இருக்கே..

Anonymous said...

மக்களை மகிழ்விக்க டாஸ்மார்க் கடைகள் திறந்துள்ளதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.

ஆ.சுதா said...

கலக்கலான பதவு.
உண்மை நிலையும்

Vetri said...

நொந்த தமிழன்....நெஞ்சை தேற்றிக்கொள்ள டாஸ்மாக் மட்டும் மூடவில்லை....

Anonymous said...

//உலகமே நாடகமேடைங்கிறதை இவங்களை வச்சித்தான் சொன்னாங்களோ //

நன்னா காமெடி பண்றேள் கோவி சாப்.

சென்ஷி said...

கலைஞர் கருணாநிதி வாழ்க வாழ்க

லூசன் said...

ஈழத்தமிழன் சாவில் அரசியல் நடத்தும் அரக்கர்களே! உங்கள் முகவரி இல்லாமல் போகும். அதற்கான காலம் தொலைவில் இல்லை. அன்பான தமிழக மக்களே! யார் யார் ஈழத்தமிழனுடன் விளையாடுகிறான் என்று பாருங்கள். அவனை தேர்தலில் புறக்கனியுங்கள்!!!

Senthil said...

:(

பொன்.பாரதிராஜா said...

மானங்கெட்டவர்கள்....

பொன்.பாரதிராஜா said...

மானங்கெட்டவர்கள்....

வினோத் கெளதம் said...

Mr.aasari
naan ungalauku konjam kalichu pathil solluren inga konjam network problem

லக்கிலுக் said...

கலக்கல் சகா

நந்தா said...

நெத்தியடி அதிஷா. கலக்கல்

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
Unknown said...

Mr.aasari
naan ungalauku konjam kalichu pathil solluren inga konjam network problem


:)))))))))))))))

Prabhu said...

ஆமா, உண்ணாவிரதத்தால் மனித நேர வீணாக்குதல தவிர என்ன சாதிச்சிருக்காங்க!

Anonymous said...

சன் டிவியில ‘திருடா திருடி’
பொருத்தமான படம்தான். கலைஞரு திருடன். அந்தம்மா திருடி.

ஈழத்தமிழன் சாவுறதுல கலைஞருக்கு ‘ஆனந்தம்’கறதால கேடிவில் அந்தப் படம்

இதை விட ஈழத்தமிழனுக்கு எப்படி அஞ்சலி செலுத்த முடியும்?

சூடு பட்ட பூனை said...

நம்மளோட தமிழ் இன உணர்வுதான் ஊருக்கே தெரியுமே. பந்தாவது போராட்டமாவது, நமக்கு எதுக்கு அதெல்லாம், எவனாவ்து நொங்கு எடுத்தா நாம நோகாம நோண்டித் திங்கலாம்.

நரேஷ் said...

நெத்தியடி பதிவு அதிஷா, கலக்கல்!!!

Unknown said...

தமிழன் பிணத்தின் மீது ஏறி நின்று ஆதாயம் தேடும் பிணந்திண்ணிகள் நாசமாய் போக...

Anonymous said...

Neengal kottiyirukkum kumralgal aanaithum Sathiya Vaarthaigal...
---Krish

Anonymous said...

Neengal kottiyirukkum kumralgal aanaithum Sathiya Vaarthaigal...
---Krish

வால்பையன் said...

அறிவே தெய்வம் said :
April 23, 2009 1:34 PM
\\விஷ் யூ ஏ வெரி ஹேப்பி பந்த் டே\\
வருசத்துக்கு எத்த்த்தனை தடவை!!! //


என்னா தெய்வமே கேள்வி இது!

அரிக்கும் போது சொறிவது தானே மனித இயல்பு!
அங்கே அரித்தால் நாம மண்டைய சொறிஞ்சிக்க வேண்டியது தான்!

Anonymous said...

ராஜினாமா டிராமா முடிஞ்சுது. உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.


அடுத்தது என்ன?

எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க.......


கடைசி நேரத்தில தாலி அறுக்காதீங்க .....

Suresh Kumar said...

தங்க தலைவர் கருணா வாழ்க யார் இறந்தா என்ன தலைவா இன்று விடுமுறை விட்டியே உன்னை பாராட்டியே ஆக வேண்டும்

தீப்பெட்டி said...

தலைவருக்கே வெளிச்சம் :-((

sathiri said...

உங்களிற்கு ஒருநாள் லீவு தந்து படம்வேறை காட்டியிருக்காங்க சந்தோசப்படுவியளா.. இதைவிட தமிழனிற்கு என்னவேணும்????

Sanjai Gandhi said...

//சன்டிவியில் திருடாதிருடி

கலைஞரில் முரட்டுக்காளை
//
அய்ய.. வெவரம் புரியாத புள்ளையா கீரியேபா வினோத்து..

சன் டிவியில சிம்பு நடித்த புதுப் படம் ஒன்னு.. ( சரவணா என்ரு நினைக்கிறேன்)

கலைஞர்ல சிறப்புத் திறைப் படம் ”வெள்ளித்திரை”

:)

Sanjai Gandhi said...

//உனக்கு தேவ ஹிட்டு என்ன வேனாலும் எழுது..//

இதுக்கு எவ்ளோ வருது துட்டு?

Sanjai Gandhi said...

//ஈழத்தமிழன் சாவுறதுல கலைஞருக்கு ‘ஆனந்தம்’கறதால கேடிவில் அந்தப் படம்//

அட.. நீங்க மனசெல்லாம் பாக்கலையா?

சன், கலைஞர், கே டிவி எல்லாத்துலையும் 4 மணிக்கு சிறப்புத் தெரை படங்கள் ஓடிச்சே. ஆற்க்காட்டார் புண்ணியத்துல 4 மணிக்குத் தான் கரண்டு வந்திச்சி. திரும்பவும் 5 மணிக்கு பூடிச்சி. அப்பாலிக்கா 8 மணிக்குத் தான் கரண்டு வந்திச்சி. எந்த படத்தையும் முழுசா பாக்கல.. பந்த் வேஸ்டா போச்சே..:(

narsim said...

சொல்றதுக்கு ஒன்னுமில்லை.

eelavan said...

hey where is my comment,ohh friendiku kuththum enru sensor o?where is speech freedom

வெண்பூ said...

எல்லார் மனசுல இருக்குறதையும் தெளிவா சொல்லிட்டீங்க அதிஷா.. இதோ, ஏறத்தாழ ஒரு மாசம் கழிச்சி பதிவுகளை படிச்சி பின்னூட்டம் போடுறனே, பந்த்னாலதான் இது சாத்தியமாச்சி.. :(

Anonymous said...

Anonymous said :April 23, 2009 7:25 PM
ராஜினாமா டிராமா முடிஞ்சுது. உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.


அடுத்தது என்ன?

எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க.......


கடைசி நேரத்தில தாலி அறுக்காதீங்க .....

ayya onna vittutteenga "MNITHA SANGILI"

ONRU MATTUM SOLLIKOLLA AASAI.

INTHA THERTHALIL D.M.K., CONGRESS, V.S. (Viduthalai chiruthai) oru seettum jaikkapporathillai athu mattum nichayam.

Thamira said...

:-((

Anonymous said...

ஆசாரியும் லக்கிலுக்கும் எங்கே போனாலும் பக்கத்துல பக்கத்துலயே போறாங்களே.....

என்ன நடக்குது .....

Kanchani said...

Athisha,

Excellent kavithai pa front page la. Comments also very nice. I can't take my eyes away from ur website. Keep up the good work.

ஊர்சுற்றி said...

எல்லோரும் அடுத்து தந்தி கொடுக்கறதுக்கு தயாரா இருங்கோஓஓஓ!!!

இப்படியெல்லாம் பண்ணி, கலைஞர் மிச்ச மீதி இருக்குற 'மரியாதை(!)'யையும் இழந்துகொண்டிருக்கிறார்.

- என்னது, மரியாதை விஜயகாந்த் கிடடே இருக்குதா??!!!

ஸனு செல்லம் said...

என்ன சார் கொடுமையிது!!!நீங்க என்ன சொன்னாலும் இவங்க திருந்த மாட்டாங்க...

Raju said...

Me the 50 th...

SurveySan said...

pottuth thaakkitteenga! juper!

James said...

Dear Friend,

I agree to all your Words ,

the all poltical Leaders is Selfish and useless fellows

james Rajendran / Coimbatore