Pages

30 April 2009

ஆனந்த விகடனில் லக்கிலுக்கு!



(ஏதோ ஒரு டாஸ்மாக்கில் யாருடைய சரக்கையோ கையில் வைத்துக்கொண்டு குடிக்காமல் போட்டோவிற்காக போஸ் மட்டும் கொடுக்கும் குடியென்றால் மிரண்டோடும் இரு நல்லவர்கள் - அதிஷா மற்றும் லக்கிலுக்)


தோழர் லக்கிலுக்கை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த தேவையில்லை. வலையுலகில் திமுகவின் கொ.ப.செ என்று பலராலும் அறியப்பட்ட முதியவர். திமுக எப்போதெல்லாம் மண்ணில் விழுந்து புரள்கிறதோ அப்போதெல்லாம் திமுகவின் குட்டிமீசையில் மண் ஒட்டவில்லை என மார்தட்டும் பதிவுலக டைனோசர். ஒரு வளரும் காட்டெருமை. மிகச்சிறந்த எழுத்தாளாராய் ஆகப்போகிறவர். அவரது எழுத்துக்களைப்பார்த்தே வலையுலகில் பல நண்டு சிண்டு பதிவர்களெல்லாம் எழுத வந்திருப்பதாய் பலர் அவரிடம் சொல்வதாய் அடிக்கடி சொல்லிக்கொள்பவர்.

ஞானி முதல் சாணி வரை ஒன்றையும் விடாமல் அனைத்தையும் சுவாரஸ்யம் குன்றாமல் தன் வலையில் அனுதினமும் எழுதுபவர்.

அவரது ஒரு சிறுகதை , சிறுகதை என்றால் மிக மிக சிறிய ஒரு பக்க அளவிலான ஒரு கதை இன்றைய ஆனந்த விகடனில் (6-5-2009 இதழ் - பக்கம் 26)வெளியாகியுள்ளது. அது ஒருபக்க கதையாக இருந்தாலும் ஒரு பக்கா கதையாகத்தானிருக்கிறது. நான் படித்ததுமே அப்படியே ஷாக்காயிட்டேன்.

இன்னும் அவரது பல சிறுகதைகள் , பெரிய கதைகள், நாவல்கள் , கவிதைகள் லொட்டுகள் லொசுக்குகள் என பலதும் பல பத்திரிக்கைகளில் வெளிவர அவரது இஷ்ட தெய்வமான கருணாநிதியாணந்தாவையும் அழகர் மலை ஆண்டவர் அழகிரியையும் வேண்டுகிறேன்.

விகடனில் வெளியான அவரது ஒரு பக்க கதை கீழே.. படித்து பயன் பெறுங்கள்..

ம்ஹூம். இன்னும் எத்தனை நாளைக்குதான் அடக்கிக் கொண்டிருப்பது. இனிமேல் சத்தியமாக முடியாது!’ மனோகர் தூங்கமுடியாமல் அவஸ்தைப்பட்டான். “இனிமேல் நைட்டு பத்து மணிக்கு மேலே டிவியே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களா பார்த்து அவஸ்தை ஆயிடுது”.

மனோகர் 27, கன்னி கழியாத பையன். சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கைநிறைய காசு. ஊரில் அப்பா அம்மா. வார இறுதியில் பீர். தினமும் ஒரு கிங்ஸ் பாக்கெட். இதைத்தவிர பெரிய தப்புத்தண்டா ஏதுமில்லை. கொஞ்ச நாளாகத் தான் அந்த எண்ணம் வந்தது. “கன்னி கழிஞ்சுட்டா என்ன?”

இண்டர்நெட்டை மேய்ந்தான். தூக்கம் வராத பொழுதுகளில் இணையமே துணை. இரவுகளில் இவன் பார்ப்பது பெரும்பாலும் ‘பலான’ சைட்டுகள். மேய்ந்து கொண்டேயிருந்தபோது திடீரென அந்தப் பக்கம் திறந்தது. “ஓரிரவுக்கு பெண் வேண்டுமா?”. மனோகர் அவசரம் அவசரமாக அப்பக்கத்தை ஆராய்ந்தான். ஒரு கைப்பேசித் தொடர்பு எண் அளிக்கப்பட்டிருந்தது.

“ஹலோ நான் மனோகர் பேசுறேங்க. இண்டர்நெட்டில் இந்த நம்பரை பார்த்தேன்!”

“உடனே வாங்க” என்று காதில் தேன் ஊற்றிய குரல் பெசண்ட் நகரின் ஒரு அட்ரஸை சொன்னது.

“வந்துங்க... காசு”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். ப்ளீஸ் கம் ஃபாஸ்ட்”

முதல் அனுபவம். யாரையும் ஆலோசிக்கும் மனநிலையில் இல்லை. பைக்கை எடுத்துக் கொண்டு நேராக பெசண்ட் நகருக்கு விட்டான். அவள் சொன்ன அப்பார்ட்மெண்ட் நவநாகரிகமாக இருந்தது. ‘இங்கு கூடவா கால்கேர்ள் இருப்பாள்?’

13-பி. காலிங்பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் கேட் விண்ஸ்லட் மாதிரி இருந்தாள். “வந்துங்க..” உளற ஆரம்பித்தவனின் உதடுகளை அழுத்தமாக பொத்தினாள் அவள் உதடுகளில்.

விடியும் வரை என்ன நேர்ந்தது என்றே மனோகருக்கு தெரியவில்லை. இறக்கை கட்டி வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். அவளே அவனை குலுக்கி எழுப்பினாள். “எவ்வளவு?” என்று தயக்கமாக பர்ஸை திறந்துகொண்டே கேட்டான்.

“வாரத்துக்கு ஒருத்தருக்கு இலவசம். இந்த வார இலவசம் உங்களுக்கு” பதில் சொல்லி விட்டு வாசல் வரை இழுத்து வந்து வெளியே தள்ளினாள். அவசரமாக கதவைப் பூட்டினாள்.

படிகளில் உற்சாகமாக இறங்கினான். பைக்கை ஸ்டார்ட் செய்தான். பாக்கெட்டை அனிச்சையாக தொட்டுப் பார்க்க பர்ஸ் மிஸ்ஸிங். கையில் எடுத்த பர்ஸை பெட் மீதே வைத்தது நினைவுக்கு வந்தது. ”அய்யய்யோ. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறதே? க்ரெடிட் கார்ட்ஸ் வேற”

திரும்ப அவசரமாக ஓடினான். படிக்கட்டில் ஓட அவகாசமில்லை. லிஃப்டுக்குள் நுழைந்தான். “எத்தனையாவது ப்ளோர் சார்?” லிஃப்ட் ஆபரேட்டர் விடியற்காலையிலேயே பட்டையெல்லாம் அடித்து பக்திபரவசமாக இருந்தார்.

“13க்குப் போப்பா”

...................... முடிவை இன்றைய ஆனந்த விகடனில் 15 ரூபாய் செலவழித்து காண்க.. அல்லது ஒரு ரூபாய் செலவழித்து எனக்கு போன் செய்தால் நானே சொல்கிறேன்.

அதுவரை இப்போதைக்கு ஆபீஸில் களிம்பின்றி ஆப்புகள் அடித்துக்கொண்டிருப்பதால் உங்களிடமிருந்து விடை பெறுவது.. உங்கள் அதிஷா