(ஏதோ ஒரு டாஸ்மாக்கில் யாருடைய சரக்கையோ கையில் வைத்துக்கொண்டு குடிக்காமல் போட்டோவிற்காக போஸ் மட்டும் கொடுக்கும் குடியென்றால் மிரண்டோடும் இரு நல்லவர்கள் - அதிஷா மற்றும் லக்கிலுக்)
தோழர் லக்கிலுக்கை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த தேவையில்லை. வலையுலகில் திமுகவின் கொ.ப.செ என்று பலராலும் அறியப்பட்ட முதியவர். திமுக எப்போதெல்லாம் மண்ணில் விழுந்து புரள்கிறதோ அப்போதெல்லாம் திமுகவின் குட்டிமீசையில் மண் ஒட்டவில்லை என மார்தட்டும் பதிவுலக டைனோசர். ஒரு வளரும் காட்டெருமை. மிகச்சிறந்த எழுத்தாளாராய் ஆகப்போகிறவர். அவரது எழுத்துக்களைப்பார்த்தே வலையுலகில் பல நண்டு சிண்டு பதிவர்களெல்லாம் எழுத வந்திருப்பதாய் பலர் அவரிடம் சொல்வதாய் அடிக்கடி சொல்லிக்கொள்பவர்.
ஞானி முதல் சாணி வரை ஒன்றையும் விடாமல் அனைத்தையும் சுவாரஸ்யம் குன்றாமல் தன் வலையில் அனுதினமும் எழுதுபவர்.
அவரது ஒரு சிறுகதை , சிறுகதை என்றால் மிக மிக சிறிய ஒரு பக்க அளவிலான ஒரு கதை இன்றைய ஆனந்த விகடனில் (6-5-2009 இதழ் - பக்கம் 26)வெளியாகியுள்ளது. அது ஒருபக்க கதையாக இருந்தாலும் ஒரு பக்கா கதையாகத்தானிருக்கிறது. நான் படித்ததுமே அப்படியே ஷாக்காயிட்டேன்.
இன்னும் அவரது பல சிறுகதைகள் , பெரிய கதைகள், நாவல்கள் , கவிதைகள் லொட்டுகள் லொசுக்குகள் என பலதும் பல பத்திரிக்கைகளில் வெளிவர அவரது இஷ்ட தெய்வமான கருணாநிதியாணந்தாவையும் அழகர் மலை ஆண்டவர் அழகிரியையும் வேண்டுகிறேன்.
விகடனில் வெளியான அவரது ஒரு பக்க கதை கீழே.. படித்து பயன் பெறுங்கள்..
ம்ஹூம். இன்னும் எத்தனை நாளைக்குதான் அடக்கிக் கொண்டிருப்பது. இனிமேல் சத்தியமாக முடியாது!’ மனோகர் தூங்கமுடியாமல் அவஸ்தைப்பட்டான். “இனிமேல் நைட்டு பத்து மணிக்கு மேலே டிவியே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களா பார்த்து அவஸ்தை ஆயிடுது”.
மனோகர் 27, கன்னி கழியாத பையன். சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கைநிறைய காசு. ஊரில் அப்பா அம்மா. வார இறுதியில் பீர். தினமும் ஒரு கிங்ஸ் பாக்கெட். இதைத்தவிர பெரிய தப்புத்தண்டா ஏதுமில்லை. கொஞ்ச நாளாகத் தான் அந்த எண்ணம் வந்தது. “கன்னி கழிஞ்சுட்டா என்ன?”
இண்டர்நெட்டை மேய்ந்தான். தூக்கம் வராத பொழுதுகளில் இணையமே துணை. இரவுகளில் இவன் பார்ப்பது பெரும்பாலும் ‘பலான’ சைட்டுகள். மேய்ந்து கொண்டேயிருந்தபோது திடீரென அந்தப் பக்கம் திறந்தது. “ஓரிரவுக்கு பெண் வேண்டுமா?”. மனோகர் அவசரம் அவசரமாக அப்பக்கத்தை ஆராய்ந்தான். ஒரு கைப்பேசித் தொடர்பு எண் அளிக்கப்பட்டிருந்தது.
“ஹலோ நான் மனோகர் பேசுறேங்க. இண்டர்நெட்டில் இந்த நம்பரை பார்த்தேன்!”
“உடனே வாங்க” என்று காதில் தேன் ஊற்றிய குரல் பெசண்ட் நகரின் ஒரு அட்ரஸை சொன்னது.
“வந்துங்க... காசு”
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். ப்ளீஸ் கம் ஃபாஸ்ட்”
முதல் அனுபவம். யாரையும் ஆலோசிக்கும் மனநிலையில் இல்லை. பைக்கை எடுத்துக் கொண்டு நேராக பெசண்ட் நகருக்கு விட்டான். அவள் சொன்ன அப்பார்ட்மெண்ட் நவநாகரிகமாக இருந்தது. ‘இங்கு கூடவா கால்கேர்ள் இருப்பாள்?’
13-பி. காலிங்பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் கேட் விண்ஸ்லட் மாதிரி இருந்தாள். “வந்துங்க..” உளற ஆரம்பித்தவனின் உதடுகளை அழுத்தமாக பொத்தினாள் அவள் உதடுகளில்.
விடியும் வரை என்ன நேர்ந்தது என்றே மனோகருக்கு தெரியவில்லை. இறக்கை கட்டி வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். அவளே அவனை குலுக்கி எழுப்பினாள். “எவ்வளவு?” என்று தயக்கமாக பர்ஸை திறந்துகொண்டே கேட்டான்.
“வாரத்துக்கு ஒருத்தருக்கு இலவசம். இந்த வார இலவசம் உங்களுக்கு” பதில் சொல்லி விட்டு வாசல் வரை இழுத்து வந்து வெளியே தள்ளினாள். அவசரமாக கதவைப் பூட்டினாள்.
படிகளில் உற்சாகமாக இறங்கினான். பைக்கை ஸ்டார்ட் செய்தான். பாக்கெட்டை அனிச்சையாக தொட்டுப் பார்க்க பர்ஸ் மிஸ்ஸிங். கையில் எடுத்த பர்ஸை பெட் மீதே வைத்தது நினைவுக்கு வந்தது. ”அய்யய்யோ. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறதே? க்ரெடிட் கார்ட்ஸ் வேற”
திரும்ப அவசரமாக ஓடினான். படிக்கட்டில் ஓட அவகாசமில்லை. லிஃப்டுக்குள் நுழைந்தான். “எத்தனையாவது ப்ளோர் சார்?” லிஃப்ட் ஆபரேட்டர் விடியற்காலையிலேயே பட்டையெல்லாம் அடித்து பக்திபரவசமாக இருந்தார்.
“13க்குப் போப்பா”
...................... முடிவை இன்றைய ஆனந்த விகடனில் 15 ரூபாய் செலவழித்து காண்க.. அல்லது ஒரு ரூபாய் செலவழித்து எனக்கு போன் செய்தால் நானே சொல்கிறேன்.
அதுவரை இப்போதைக்கு ஆபீஸில் களிம்பின்றி ஆப்புகள் அடித்துக்கொண்டிருப்பதால் உங்களிடமிருந்து விடை பெறுவது.. உங்கள் அதிஷா
27 comments:
நான் இன்னும் விகடன் படிக்கல. ஆனா முடிவு இதுவா இருக்கலாம்னு ஒரு கெஸ்.
"இந்த அப்பர்ட்மெண்ட்ல மொத்தமே 12 மாடிதான் சார்."
யோவ், யாவரும் நலம் படம் மாதிரி இருக்குது, கதை
அதிஷா,
நானும் அக்கதையைப் படித்தேன். ஆனால் இது போன்ற அம்மி கொத்தல்களுக்கு லக்கி போன்ற சிற்பிகள் தேவையில்லை என்பது என் எண்ணம்.
இதைவிடச் சிறந்தவைகளைப் படைக்கும் தகுதியுள்ளவர் அவர்.
வாழ்த்துகள் லக்கி.
விரைவில் அதிஷாவின் படைப்பையும் அச்சில் எதிர்பார்க்கிறேன்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
இதென்ன கலாட்டா? :-)
அதிஷா..
உன்னை மனதார வன்மையாக கண்டிக்கிறேன். இந்தப் பதிவை லக்கிலுக்கின் அனுமதியோடு வெளியிட்டாயென்றால் அவருக்கும் என் கண்டனங்கள்.
இன்றைக்கு வந்த கதையை இன்றே வலையில் வெளியிட்டிருக்கத் தேவையில்லை. அப்படியே வெளியிட்டாலும் சின்ன சின்னதாக எழுதியிருக்கலாம், ஒரே வரியை மட்டும் விட்டு எழுதியதும், அந்த ஒரு வரியையும் பின்னூட்டத்தில் அனுமதித்ததும் தவறு.
புக்கு வாங்கட்டுமே சார்? வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு ஒரு வாரம் கழிச்சு கதையைப் போட்டிருக்கலாமே?
எனிவே.
வாழ்த்துகள் லக்கி!
//நானும் அக்கதையைப் படித்தேன். ஆனால் இது போன்ற அம்மி கொத்தல்களுக்கு லக்கி போன்ற சிற்பிகள் தேவையில்லை என்பது என் எண்ணம்.//
அண்ணாச்சி.. அப்படிப் பார்த்தா நாங்க எப்பவுமே லைம்லைட்டுக்கு வர முடியாது. அம்மிதான் சிற்பங்களை விட அதிகம் விக்குது!
//விரைவில் அதிஷாவின் படைப்பையும் அச்சில் எதிர்பார்க்கிறேன்.//
நான் அதை பார்க்கிறேன்!
@பரிசல்
//அந்த ஒரு வரியையும் பின்னூட்டத்தில் அனுமதித்ததும் தவறு.//
அட நான் சொன்னது கரெக்டா?
யோவ்..ஒரு பீரு வாங்கிக் கொடுத்ததுக்க்கே இந்த அலும்பா..?
வாழ்த்துக்கள் லக்கி...
வாசித்தேன்.. ஆ.வி வாசிக்கக் கிடைக்காது.. முடிவை இப்போதே அறியனும்னு ஆவலா இருக்கு.. கொஞ்சம் மெய்லி விடுங்களேன்.. ;)
அதிஷா நாங்க எல்லாம் விகடனும் வாங்கி படிக்க முடியாது
ஒரு ரூபா கொடுத்து பேசவும் முடியாது (ISD)
அதனால நீங்களே சொல்லிடுங்க முடிவ........
//நானும் அக்கதையைப் படித்தேன். ஆனால் இது போன்ற அம்மி கொத்தல்களுக்கு லக்கி//
வடகரை வேலன் உங்கள் கருத்தை ஆட்சேபிக்கிறேன்.
என்றோ மு.மேத்தா சொன்னதை எல்லோரும் பிடித்துகொண்டு
விட்டார்கள்.
இதற்கும் (ஒரு பக்க கதை எழுத)skill வேண்டும்.கடைசி திருப்பத்திற்க்கு(வித்தியாசமான) மூளையை கசக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து “அம்மி” மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்யப்படுகிற்து.
அம்மியில் அரைத்தசட்னி,துவையல் டேஸ்ட் தனி.அம்மியில் “நச் நச்” என்று கர்ரசாரமாக எதையாவது நசுக்கும் போதே ஒரு வித பசி எடுக்கும்.எவ்வளவு வீடு மாற்றினாலும் அம்மியை பெண்கள் கூடவே எடுத்துச் செல்வார்கள்.
சரியாகக் கொத்தினால்தான் அம்மியும் சரியாக இருக்கும்.
லக்கி லுக் ஒரு விதத்தில் சிற்பிதான்.
அவருக்கு எப்பொழுதும் “உளியின் ஓசை”தான் காதில் தேன்.
வாழ்த்துக்கள் லக்கி.
வாழ்த்திய தோழர்களுக்கு நன்றி!
//நானும் அக்கதையைப் படித்தேன். ஆனால் இது போன்ற அம்மி கொத்தல்களுக்கு லக்கி போன்ற சிற்பிகள் தேவையில்லை என்பது என் எண்ணம்.//
வடகரை அண்ணாச்சி!
சிற்பிகளும் பொழைப்புக்கு அம்மி குத்த வேண்டியிருக்கிறது. நான் அம்மி குத்துபவன், அவ்வப்போது சிற்பங்களை உருவாக்க முயற்சிக்கிறேன்.
பரிசல்!
ஒரே ஒரு பக்கத்துக்காக நண்பர்கள் எல்லாரையும் புக் வாங்கச் சொல்லுவது பாசிஸம் :-)
ரவிசங்கர் சார்!
லக்கி லுக்
ஒரு விதத்தில்
சிற்பிதான்.
அவருக்கு
எப்பொழுதும்
“உளியின் ஓசை”
காதில் தேன்.
இப்படி சொல்லியிருந்தால் அது கவிதை ஆகியிருக்கும்.
காஅலி ஆறுமணிக்கு என் தமிபி எழுப்பி, இந்த யுவகிருஷ்ணா லக்கிலுக்கா இல்ல வேற யாரவது என்று விகடனை காட்டி கேட்டான்.. முடிவை படித்ததும் நம்ம் லக்கி தான் என்றேன்...
கதையில் முன் நவினத்துவத்தையும், பின் நவினத்துவத்தையும் இணைத்து, ஒரு குவார்ட்டர் லஸ்ட்டயும் ஒரு பேக்கட் விறுவிறுப்பயும் கலந்து சூப்பரக கிக்கை ஏற்றி கொன்னுட்டாரு போங்க.....
ரவிஷங்கருக்கே கவிதை எழுதச் சொல்லிக் கொடுக்கும் லக்கிலுக்கின் ஆதிக்க மனோபாவத்தை கன்மையாக வண்டிக்கிறேன்.
வளரும் காட்டெருமைகளுக்கு வாழ்த்துக்கள்.
லக்கி சார்..... நல்லா இருக்கு.அச்சா கள்ள ஓட்டு போடறீங்களே..
உங்கள மாதிரி நானும் கள்ள ஓட்டு போடறேன்.
“ஒரு பாட்டில் பியருக்காக அதிஷாவை சோரம் போக வைத்து அவர் கதையை
நான் சுட்டதாக(கொத்தியதாக)மொட்ட பசங்கள் பின்னூட்ட கதை விடுகிறார்கள்.
தோட்டத்து மம்மியின் அடிவருடிகள் போல் அவர் சொல்வதை கொத்திக்கொண்டு வரும் அல்சேஷ்ன் அல்லக்கைகள் அல்ல நான்.சுயமாக எழுதியது.அம்மியைப் பற்றி ஒன்றும் தெரியாத ஈஜிப்ஷியன் மம்மிகள் இவர்கள்.
இது அம்மி கொத்தல் அல்ல அம்பிகளுக்குச்சொல்லிக்கொள்கிறேன்.”
இது எப்படி இருக்கு?
//உங்கள மாதிரி நானும் கள்ள ஓட்டு போடறேன்.//
உங்க கள்ளஓட்டும் அபாரம் :-)
பரிசல்!
எப்பவும் ரவிசாரை நோண்டிக்கிட்டே இருக்கீங்களே? என்னா மேட்டரு? :-)))
லக்கியைப்பற்றியை முன்குறிப்புகளை மிகவும் ரசித்தேன்.. ஞானி முதல் சாஅணி வரை.. ஹாஹாஹ்ஹா..
(லக்கி அல்ரெடி எழுத்தாளர். அவரின் ஒரு பக்க கதை வெளியானது இப்படி பதிவு போட்டு கொண்டாடும் அளவில் ஸ்பெஷல் ஒன்றுமில்லையே)
வாழ்த்துக்கள் லக்கிலூக் , அதிஷா.
விகடனில் வந்தாச்சு, அடுத்து வெள்ளி திரையில் எப்போது லக்கி.
இப்போவே இளைய இளைய தளபதி லக்கிலூக் மாநில ரசிகர் மன்றம் தொடங்கி விட்டோம்.
குப்பன்_யாஹூ
(vikatan Rs.15 aa, too much, i thought still it is 10)
அது ஒன்னுமில , பதின்மூன்றாம் எண் கொண்ட தளமே அந்த அப்பார்டுமன்டில் இருக்காது. பக்க எண் இருபத்தி ஆறில் கதை வந்திருக்கிறது. இந்தாள் தொல்லை வலையுலகத்தில் தாங்கவில்லை என்று விகடனை எடுத்தால் , நேரம் டா சாமி :D
Parisal unga comment romba otta odasal. yintha kathaikku 15 selavu panna venuma?
Ada, kadhaiye puriyillaiye. 12 floor thaan erukuna, nadanthathu ellam kanava? koncham puriyum padiya kadhai yeluthupa.
this is my ever first comment in blog in last one year.
X
USA.
//ஆதிமூலகிருஷ்ணன் said
//(லக்கி அல்ரெடி எழுத்தாளர். அவரின் ஒரு பக்க கதை வெளியானது இப்படி பதிவு போட்டு கொண்டாடும் அளவில் ஸ்பெஷல் ஒன்றுமில்லையே)//
வழிமொழிகிறேன். :)
மிஸ்டர் எக்ஸ்!
தயவுசெய்து இனிமேல் எந்த கதையையும் படித்து விடாதீர்கள் :-)
மற்றபடி அது ஒரு மொக்கையிலும் மொக்கை கதை என்பது உண்மைதான்.
In searching for sites related to web hosting and specifically comparison hosting linux plan web, your site came up.
rH3uYcBX
Post a Comment