15 June 2009

டி20 உலகக்கோப்பை - இந்திய அணியும் தோல்விகளும்




ஒரு வழியாக இந்தியாவின் டி20 உலகக்கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. இங்கிலாந்துக்கெதிரான நேற்றையப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது நமது அணி. ரசிகர்கள் பலரும் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து கொண்டும் நகத்தைக்கடித்து கொண்டும் அரைத்தூக்கத்தை அடக்கிக்கொண்டும் நேற்றைய போட்டியை பார்த்திருந்தால் நிச்சயம் வருத்தமாய் இருந்திருக்கும். பலருக்கும் அப்படித்தான் இருந்தது.

மிக முக்கியமான இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் யுவராஜ் சிங் மிக திமிராய் இங்கிலாந்தை தோற்கடிப்போம் எனப் பேசியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நேற்று ஆடியதைப் பார்த்த போது அவர்களது ஆட்டத்திறமையை இந்திய அணியினர் தவறாக கணித்தனரோ என்றே என்னத்தோன்றுகிறது. வெ.இ அணிக்கெதிரான ஆட்டத்திலும் இதுவே நடந்தது என்பது கண்கூடாகத் தெரிந்தது.

இந்த ஆட்டத்தின் தோல்விக்கான காரணங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

* மிக மோசமான பீல்டிங் ( கடைசி ஓவரில் யுவராஜ்சிங் விட்ட நான்கே அதற்கு சாட்சி )

*இக்காட்டான சூழலில் தேவையில்லாத ரன்களை வாரி வழங்கியது .

*14 எக்ஸ்ட்ராஸ் .

*இர்பான் பதான் மற்றும் ஓஜாவுக்கு பதிலாக ரவீந்தர ஜடேஜாவையும் ஆர்பி சிங்கையும் பயன்படுத்தியது. ஒரு மிக முக்கியமான போட்டியில் ஒரு புதுமுக ஆட்டக்காரரை பயன்படுத்துவது மிகப்பெரியத் தவறு. இர்பான் பதான் இத்தொடரில் சுமாராக பந்து வீசீனாலும் பேட்டில்கில் ஓரளவு பிராகாசித்து வந்தார்.

*ஆட்டத்தின் பதினைந்தாவது ஓவரை நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த ஆர்.பி.சிங்கிற்கு பதிலாக இஷாந்தை உபயோகித்ததும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த ஓவரில் மஸ்கரனாஸ் பதினைந்து ரன்கள் விளாசியது.

*ரவீந்தர ஜடேஜாவை மூன்றாவதாக களமிறக்கியது . அவருக்கு பதிலாக ஓரளவு ஃபார்மில் உள்ள தோனியோ அல்லது யுவராஜோ இறங்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். அல்லது அடித்து ஆட வேண்டி அனுப்பியிருந்தால் யூசுப் பதானை அனுப்பியிருக்கலாம். வாழ்வா சாவா போராட்டமான ஒரு போட்டியில் தனது சிறந்த வீரர்களை இறக்கி போராடிப்பார்த்திருக்க வேண்டும்.



இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இந்திய அணியின் மெத்தனமான ஆட்டமே தோல்விக்கு மிகம்முக்கிய காரணம்.

மேற்ச்சொன்னதெல்லாம் அந்த முக்கிய ஆட்டத்தில் தோற்றதற்கான காரணங்களே. அது தவிர இந்த தொடரில் தோற்றதற்கான காரணங்கள்

*ஐபிஎல் ஆட்டத்தொடரின் அளவுக்கதிகமான கிரிக்கெட் போட்டிகளால் நமது வீரர்கள் சோர்ந்து போயிருந்தனர்.

*அணிக்குள் நடந்ததாக சொல்லப்படும் சேவாக்-தோணி இடையிலான மோதல் , அணியை இரண்டாக பிரித்துவிட்டதாக தெரிகிறது.

*மிக முக்கியமான பந்துவீச்சாளராக கருதிய , காயத்திலிருந்து குணமடைந்த ஜாகீர்கான் ஒரு போட்டியில் கூட பிரகாசிக்காது போனது மிகப்பெரிய சறுக்கல்.

*வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இங்கிலாந்து பிட்சுகளில் நமது ப.வீக்கள் யாருமே சரியாக பந்து வீசாதது.

*வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனமான பவுன்சர்களை சரியாக வீசி திணறடித்தது.

*வலுவான பேட்டிங் வரிசையாக கருதப்படும் இந்திய அணியின் பேட்டிங் , இந்த தொடரில் மிக மோசமாக தெரிந்தது. கம்பீர்,ரெய்னா,யுவராஜ்,தோனி,யூசூப் பதான் என யாருமே சோபிக்கத்தவறியதே மிகப்பெரிய இழப்பு.

*சென்ற முறை இந்திய அணியிடமிருந்த துடிப்பும் வேகமும் இந்த முறை மிஸ்ஸிங். ( போன முறை புதியவர்களாய் இருந்த பலரும் இம்முறை நட்சத்திரங்களாகிப்போனது காரணமாய் இருக்கலாம் , அதிலும் கோடீஸ்வர நட்சத்திரங்களாய் ஆகிப்போனது.)

ஆட்டம் முடிந்ததும் தோனி அளித்த பேட்டியில் இந்திய அணியின் இத்தோல்விக்கு தானே பொறுப்பேற்று இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாய் தெரிவித்தார். அது தவிர இந்திய அணியின் மோசமான பேட்டிங்கையும் வெகுவாக சாடியிருந்தார். இதுவரை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் மகேந்திரசிங் தோனியே அனைவரையும் கவர்ந்த மற்றும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்.அதனால் இந்த சரிவு நிரந்தரமானதல்ல என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்.

இனி வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவிற்கு நமக்கு அறிவோ அதிகாரமோ கிடையாது எனவே.. இனியாவது கிரிக்கெட்டில் உள் அரசியல் தேவையில்லாத பிரச்சனைகள் , சரியான அணித்தேர்வு , துடிப்பான ஆட்டம் என சென்ற முறை கோப்பையைக்கைப்பற்றிய அணியைப்போல இந்திய அணி ஆக வேண்டும் என்பதே அனைவரது ஆவலும்.

22 comments:

Anonymous said...

இந்த பதிவு குத்து குத்துவென்று குத்தும் உள்குத்து என்னவென்று யாராவது எடுத்தியம்புங்கள். சீழ்த்தலை சாத்தனார் மாதிரி என் தலையை நானே குத்தி கிழித்து கொண்டு சாகிறேன்.

ஜெகதீசன் said...

சூப்பர் பதிவு!
சிறப்பான பதிவு!
கலக்கலான பதிவு!
அருமையான அலசல்!!!

ஜெகதீசன் said...

//
சரியான அணித்தேர்வு , துடிப்பான ஆட்டம் என சென்ற முறை கோப்பையைக்கைப்பற்றிய அணியைப்போல இந்திய அணி ஆக வேண்டும் என்பதே அனைவரது ஆவலும்.
//
இதுவே இந்தியர் அனைவருடைய ஆவலும்!!
இத்தாலி, சிரீலங்கா தவிர வேறு எந்த நாட்டுடன் ஆடினாலும் இந்தியா வெல்லவேண்டும்.

ஜெய் ஹோ!!!

வந்தியத்தேவன் said...

இந்திய தோல்விக்கு நீங்கள் கூறிய காரணங்கள் அனைத்தும் சரி ஜஸ்ட் 3 ஓட்டங்களால் முக்கிய போட்டியில் தோல்வி என்பது ஜீரணிக்கமுடியாதது. ஜடேஜா 35 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். ரி20 போட்டிகளில் பத்து பந்து வீணாக்குவது என்பது பிழையான விடயம். சென்ற முறை சாம்பியன் இம்முறை அரையிறுதிக்கே செல்லவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

ஐபிஎல்லில் இந்திய வீரர்கள் சோர்ந்துவிட்டார்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது காரணம் ஐபிஎல்லில் கலக்கிய டில்ஷான், டீ வில்லியர்ஸ், கலீஸ், ஸ்மித் பிராவோ என பல வெளிநாட்டு வீரர்கள் ஐசிசி ரி20 போட்டிகளில் கலக்குகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஐபிஎல்லில் விளையாடியதுதான் தங்கள் வெற்றிக்கு காரணம் எனக்கூடச் சொன்னார்கள்.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவர்களின் அகந்தையும் தோணியின் தவறான தலைமைத்துவமும் தான்.

கார்க்கி said...

/ஓரளவு ஃபார்மில் உள்ள தோனி//

என்னைப் பொறுத்தவ்ரை நீங்கள் சொன்னது சரி. ஆனால் மேலே சொன்னது :((((..

மேலும் அஞ்சு பவுலர்களுடன் விளையாடியது. ஏற்க்னவே யுவி, ரைனா, ரோஹித் போன்ற ஆல் ரவுண்டர்கள் இருக்கும் போது அஞ்சு பவுலர்கள் எதுக்கு?

பிரவின் குமார் said...

சிறப்பான விமர்சனம்..!
நன்றாக அலசி ஆராய்ந்து விளக்கியுள்ளீர்கள்...!
பாராட்டுகள்..!

அக்னி பார்வை said...

///சென்ற முறை இந்திய அணியிடமிருந்த துடிப்பும் வேகமும் இந்த முறை மிஸ்ஸிங். ( போன முறை புதியவர்களாய் இருந்த பலரும் இம்முறை நட்சத்திரங்களாகிப்போனது காரணமாய் இருக்கலாம் , அதிலும் கோடீஸ்வர நட்சத்திரங்களாய் ஆகிப்போனது.)

சோலி முடிஞ்சி போச்

வந்தியத்தேவன் said...

அதிஷா அண்ணே நேற்றைய மேட்சில் தீபா படுகோன் ( டோணி யுவராஜின் முன்னாள் காதலி) பவிலியனில் இருந்தார். இதனால் கூட இந்திய வீரர்களின் கவனம் சிதறியிருக்கலாம். தீபிகா படுகோனை வர்ணனையாளர்கள் தங்கள் கலரிக்கு கூப்பிட்டு பேட்டி எடுத்தது டூ டூ மச். கிரிக்கெட் தெரிந்தவர்களிடம் பேட்டி எடுக்கலாம் சும்மா நடிகைகளை அதிலும் வட நாட்டு நடிகைகளை பேட்டி எடுத்தல் வர்ணனையாளராக அழைத்தல்( மந்திரா பேடி) போன்றவற்றால் கிரிக்கெட்டின் மதிப்பு கெடுகின்றது. ஐசிசி இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருப்பதுதான் இதற்கான காரணம்.

Karthikeyan G said...

மிக சரியாக சொல்லி உள்ளீர்கள்.

உலகின் மிக சிறந்த ஆல்ரௌண்டர் ராபின்சிங்கை விளையாட விடாததும் தோல்விக்கான காரணமாக இருக்குமோ.. :-)

ஜெகதீசன் said...

//
உலகின் மிக சிறந்த ஆல்ரௌண்டர் ராபின்சிங்கை விளையாட விடாததும் தோல்விக்கான காரணமாக இருக்குமோ.. :-)
//
கவாஸ்கர் விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமோ?
:P

மணிகண்டன் said...

இந்திய அணி தோல்விக்கான காரணம் தோல்வி அடைஞ்சது தான் ! இதுக்கு ஒரு பெரிய போஸ்ட்மார்ட்டம் வேற.

லக்கிலுக் said...

தோழர்!

கண்ணெல்லாம் எரிகிறது. நாசமா போன பயலுவ எந்த எரிச்சலுக்கு எந்த ஜஸ்டிஃபிகேஷனும் கொடுக்கலையே என்பதால் வயிறும் எரிகிறது :-(

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இதெல்லாம் திட்டம் போட்டு செய்யும் வேலை தலைவா

Anbu said...

நல்ல பதிவு அண்ணா..

ஜெகதீசன் said...

ஏதோ என்னால் முடிந்த காரியமாக இந்தப் பதிவுக்கு தமிழ்மணத்தில் தம்ஸ் அப் ஓட்டு போட்டுவிட்டேன்...

Raja said...

நிச்சயம் எனக்கு இது சந்தோஷத்தையே தருகிறது. எனக்கு தோணி மேல் என்றுமே நம்பிக்கை கிடையாது. (அவர் நன்றாக ஆடி வெகு நாட்கள் ஆகிறது) அவர் பெற்ற வெற்றிகள் கூட குழு ஆட்டத்தினால்தான். இதையும் மீறி எனக்கு BCCI, ICLஐ அங்கீகரிக்காத காரணத்தால் நான் IPLஐ பற்றி ஒரு செய்தி கூட படித்ததில்லை. இதற்காகவே இந்த தோல்வி எனக்கு சந்தோஷம்.

புருனோ Bruno said...

பிற ஆட்டக்காரர்களின் திறமையால பெற்ற வெற்றியை சிறிதளவே பங்களித்த அணித்தலைவரே முழுவதும் சொந்தம் கொண்டாடும் அபத்தம் இனியாவது குறையுமா

மயாதி said...

ஏமாற்றமே மிச்சம்....

வால்பையன் said...

விடுங்க பாஸ் அடுத்த தடவை ஒழுங்கா கோல் போடுவாங்க!

கலையரசன் said...

அப்பா! தூக்கம் தப்பித்தது!
ஒக்காந்து லாஸ்டா ஒப்பாரி
வைக்காம.. முன்னாடியே
வெளிய வந்தானுங்ளே..
அது வரைக்கும் மகிழ்ச்சி!!

ஊர்சுற்றி said...

//இனியாவது கிரிக்கெட்டில் உள் அரசியல் தேவையில்லாத பிரச்சனைகள் , சரியான அணித்தேர்வு , துடிப்பான ஆட்டம் என சென்ற முறை கோப்பையைக்கைப்பற்றிய அணியைப்போல இந்திய அணி ஆக வேண்டும் என்பதே அனைவரது ஆவலும்.//

சத்தியமா எனக்கு இல்லீங்கோ.... ஒருவழியா தோத்துட்டாங்க. ஒண்ணுரெண்டு மேட்ச் ஜெயிச்சா இங்க பக்கத்துல இருக்கிறவங்க கொடுக்கிற அலப்பறை இருக்கே... தாங்க முடியலப்பா. இனிமே கொஞ்ச நாளைக்கு எதுவும் பேசாம இருப்பாங்க.

தமிழ்நெஞ்சம் said...


இந்திய கிரிக்கெட் டீம்க்கு இவங்க கேப்டன் ஆ இருந்தா எப்படி இருக்கும்? தோனி யை காலி செஞ்சுட்டு இவங்களை கேப்டன் ஆக்கிட்டா என்ன?

There was an error in this gadget