நடுநிசி புணர்வின் உழைப்பு
முதுகின் மையத்தில் லேசான வலி
காலைக்கடன் கழிக்கையில்
தினத்தந்தி வாசிக்கையில்
நேற்றிரவு கடித்த கோழிக்கறியும்
நேற்றைய மதிய வறுமீனும்
தீயாய் பற்றி எரிகிறது பின்னாலே
காலையில் பூப்பூவாய் இட்டிலி
சுவையறியா ஞானசூனியம்
தோசை வார்த்தால் என்ன?
கடன் அட்டைக்காரன்
காலை பத்துமணிக்கு..
சீட்டுப்பணம்
மாலை நாலு மணிக்கு..
குறித்துக்கொண்டேன்
காதோராம் லேசாய்
நரைத்த நரைக்கு
கறுப்புச்சாயம்!
முதுகுமைய வலி
இன்னும் குடைந்தபடி..
மாலைக்காட்சி மாசிலாமாணி
இடைவேளையில் பார்த்தவளுக்கு
எவ்வளவு பெரிய கொங்கைகள்?
இரவில் அவளை நினைத்தவாறே
இல்லத்தரசியோடு சவுந்தர்ய லவுகீகம்..
கோலங்கள் அரசி
ஐபிஎல் 20-20
டிவிடி - புதுப்படம்
ஒருவழியாய் ஒரு தினம் முடிகிறது
இரவு வரவேற்கிறது
இன்னும் அரைமணி நேரத்தில்
எழுதவேண்டும் ஒரு கவிதையாவது..
காத்திருக்கிறாள்
கட்டிலில் மனைவி.
கணினி கண் திறந்து
தட்டச்சுகிறேன்..
“அய்யோ அய்யோ
தமிழ் ஈழம் எரியுதே
தமிழர் இனம் அழியுதே
இரக்கமில்லா அரக்கரே
முதுகில் குத்திய துரோகிகளே...”
************
41 comments:
இந்த கவிதை மட்டுமென்ன ஸ்பெஷல். இதுவும் ஈழபிணங்களை வைத்து பிச்சை எடுக்கும் செயல்.
கவிஞர் சார்!
வணக்கம் :-)
//Anonymous said...
இந்த கவிதை மட்டுமென்ன ஸ்பெஷல். இதுவும் ஈழபிணங்களை வைத்து பிச்சை எடுக்கும் செயல்.
//
சொந்த பெயரில் பின்னூட்டம் போட மனது இல்லாத தாங்கள் இந்த கவிதையை விமர்சிக்க தகுதி உடையவரா?
என்ன சொல்ல வறீங்க? இனி தமிழ் நாட்டில் யாரும் ஈழத்தமிழர் பற்றி பேசவோ எழுததாவோ கூடாதா??
//சொந்த பெயரில் பின்னூட்டம் போட மனது இல்லாத தாங்கள் இந்த கவிதையை விமர்சிக்க தகுதி உடையவரா? //
சாதி பெயரில் பின்னூட்டம் போடும் டுபுக்குவான உமக்கென்ன தகுதி என்னை விமர்சிக்க இருக்கிறது?
நான்லீனியர் கவிதை?
:(
இதுதான் தமிழினத்தின் தனிப்பெருங்குணம்..
வாழ்த்துவோம்..
தமிழர்களை..
ஒரு சாரசரி மிடில் கிளாஸ் மாதவனின் போலி தமிழ் உணர்வினை வெளி படுத்தியிருக்கிறீர்கள்.
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
போலி ஈழபற்றாளர்களை தோலுரித்து காட்டியிருக்கிறீர்கள் அதிஷா. கவிதைக்கும் கவிதை சுட்டவரும் பொருளுக்கும் நன்றி.
இது எந்தபதிவுக்கான எதிர்வினை என்று சொன்னால் மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்க வசதியாக இருக்கும்.
கொட்டாம்பட்டி கோனாரு
இந்த கவிதை மட்டுமென்ன ஸ்பெஷல். இதுவும் ஈழபிணங்களை வைத்து பிச்சை எடுக்கும் செயல்.
ரீப்பிட்டே
நிறையப்பேர் எழுதியாச்சு தம்பி!
;))
அடுத்த கட்ட பரபப்புக்கு அலைகிறவர்கள் என்பதை அடிக்கடி நிரூபிக்கிற ஆளுங்கதானே நாம..
அதிஷா என் கண்ணே, இன்பகதையில் எனக்கு பதிலாக வேறு யாரோ வருகிறார்கள். அதை தவிர, இது போன்று கவிதைகள் எழுதி என்னை கொல்கிறாய் !
இப்படிக்கு உன் அன்பு சாருமதி.
நல்லா இருக்கு அதிஷா. எந்தவொரு பிரச்சனைக்கும் இந்த கவிதையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தலீவா ஈழம்னா டமாஸ் இல்ல.
பின்னாடி எரியுதா கண்ணு.கீரிம் தடவு.
ஓழுங்கா எதன பிகர் கத எளத வேண்டியடுதானே.
(ஒரு சாரசரி மிடில் கிளாஸ் மாதவனின் போலி தமிழ் உணர்வினை வெளி படுத்தியிருக்கிறீர்கள்.)
I agree above
James Rajendran / Coimbatore
வாழ்த்துக்கள் அதிஷா, நன்றாக வருகிறது கவிதை. keep it up
சாட்டை அடி கவிதை
பொறி பறக்குது வார்த்தைகளில்
மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீர்கள் அதிஷா..!
”அதிஷா”க்
கவிஞர் சார்!
வணக்கம் :-)
To watch eelam song eelam news arikaikal visit www.tamilseithekal.blogspot.com plese let your friends know about this site plese join this site and help us to improve
awsome, best wishes.
touching poem, good
/* இந்த கவிதை மட்டுமென்ன ஸ்பெஷல். இதுவும் ஈழபிணங்களை வைத்து பிச்சை எடுக்கும் செயல். */
வேறு தலைப்பு வைத்திருக்கலாம்.
ஆனால் கவிதை The best..
நீங்கள் இரவுணவு 8 மணிக்குப் பிறகும் காலைக்கடன் 'காலையில்' (6-8) கழிக்கும் பட்சத்தில் உங்கள கவிதையில் பிழை உள்ளது...
:)))
இந்தக் கவிதை நான் என்ற தன்மையில் எழுதப்பட்டிருந்தாலும் அதை யாரும் அதிஷா என்று எடுத்துக் கொள்ளப்போவதில்லை. நீங்களும் பொதுவான ஒரு தமிழனின் இரட்டை வேடமென்றே எழுதியிருக்க கூடும். ஆனாலும் இந்த கவிதை நீங்கள் நினைக்கும் தமிழினின் இரட்டைவேடத்தை வாசிப்பவருக்கு அவரது உணர்வில் குத்தும் வலிமையை கொண்டிருக்கவில்லை. படிப்போர் எல்லோரும் நாம் சரிதான், மற்ற தமிழர்கள் சரியில்லை என்ற சுயதிருப்தியை மட்டும் இந்த கவிதை தரக்கூடும்.
உண்மையில் படிப்பவனின் இதயத்தை உலுக்க வேண்டுமென்றால் இந்த கவிதை உண்மையில் அதிஷாவின் வாழ்க்கையிலிருந்தே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஈழம் எரிந்து கொண்டிருக்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன், என்ன செய்தேனென மற்றவர்கள் பார்க்க விரும்பினேன், எனது வரம்புகள், நான் அவ்வளவு மோசமானவனில்லை என்ற சுய பச்சாதாபம் இப்படி தன்னை சுற்றியிருக்கும் பொய்யான நல்லெண்ண உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியிருந்தால் இந்தக் கவிதையின் நோக்கம் நிறைவேறியிருக்கும்.
எழுதப்பட்ட இந்தக் கவிதையில் கூட அவனது இருமுரண்கள் பளீரென தெரிகிறது.இப்படி அப்பட்டமாக யாரும் நடந்து கொள்ள மாட்டார்கள். அல்லது அந்த இரு துருவங்களின் இடைவெளி பல பாதுகாப்பான வாதங்களால் நிரப்ப்பபட்டிருக்கும். அந்த வாதங்களை சற்று வலியுடன் தோண்டி எடுத்தாலும் இந்த கவிதை வேறு மாதிரி வந்திருக்கும்.
அதிஷா உங்கள் இதயத்தை உண்மையில் உலுக்கும் விசயங்களை உங்கள் பார்வையிலேயே எழுது முயலுங்களேன், மற்றவர்களுக்காக நாம் எழுத வேண்டுமா என்ன?
வினவு

கவிதையை மிகவும் ரசித்தேன்.

அற்புதமான, இயல்பை மீறாத கற்பனை
வாழ்த்துக்கள்
இப்படி
ஒரு
வாக்கியத்தை
மடக்கி
மடக்கி
எழுதி ....
ஒருத்தன்
தமிழினத்தை
பேக்
அடித்தான் ...
தலைவன்
வழியில்
தொண்டன்
ஆச்சர்யகுறி .....!!!
- என் கவிதை எப்படி இருக்கு
கவிதை நன்றாக இருக்கிறது அதிஷா. இன்னும் fine tune பண்ணியிருக்கலாம்
நிறைய இப்படி எழுதீட்டாங்க தல
அதிஷா
தப்புங்க ரொம்ப தப்பு. வினவு சொன்னது போல பெரும்பாலான தமிழ் மக்களின் நிலை இது தான். எல்லோரும் வீதியில் இறங்கி போராடினதான் நம் ஈழ தமிழரை காப்பாற்ற முடியும் என்றால் எதற்காக ஒரு அரசாங்கம், அதற்கு ஒரு தலைவர் சொல்லி நம்ம முதல்வர் இன்னும் இன்னும் எத்தனையோ அரசியல் தலைவர்கள். மக்களின் எழுச்சி தான் இவங்களை எல்லாம் மாற்றும் என்றால் இவர்கள் நம்மளால தேர்ந்தெடுக்க பட்ட தலைவர்களே அல்ல. நம்மக்கு நல்ல ஒரு மற்று தலைமையை உருவாக்க நேரமும் இல்லை. விரைந்து செயல் பட வேண்டிய தருணம் இது.
மக்களில் முக்கால் பாகம் பேர் ஈழ தமிழரை ஒரு தீவிரவாதியாய் தான் பார்கிறார்கள். இவங்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய நம் தலைவர்களும் ஊடகங்களும் தவறான் ஒரு பாதைக்கு மக்களை இட்டு செல்கின்றன. ஒவ்வொரு தமிழனக்கும் உள்மனது எரிந்து கொண்டு தான் இருக்கிறது. என்ன செய்யறது தெரியாம. மக்களை திரட்டி போராட எந்த தலைவரும் தயாராய் இல்லை எல்லாரும் இதை அவர்களின் அரசியல் சுயலாப விடயமா தான் பார்கிறார்கள். மத்தியில் செல்வாக்கு உள்ள தமிழ் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குறைந்த பட்சம் இப்போவாவது ஒற்றுமையாய் ஈழ தமிழர்க்கு குரல் கொடுக்கணும் அப்ப தான் நம்ம மேதகு இந்திய தலைமை அதை செவிமேடுக்கும்
-:(
பதிவர் சந்திப்பு ஏதும் இல்லையா..? பலபேர்களின் அறிமுகம் பின்னுட்டமளவிலேயே உள்ளது. ஆவலுடன் இருக்கிறேன். மாநிலம் தழுவிய சந்திப்பாக இருந்தால் மிக அருமை.
அந்த பல மிடில் கிளாஸ் மாதவன்களின் மனநிலையிலேயே இருக்கும் இன்னுமொருவன் நான்.
வேறென்ன சொல்ல?
கவிதையை கொஞ்சம் கூட
வித்தியாசமாக எழுதியிருக்கலாமோ? என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி
டைப் நிறையப் படித்தாகிவிட்டது.
//லவுகீகம்..//
சம்போகம் என்று வரவேண்டும்.
எவன் செத்தா என்ன ...
எந்த இனம் அழிந்தா என்ன ???
ஐயோ .. கருணாநிதிய திட்டுறாங்களே ...
உடன்பிறப்புக்களை கேவலமாய் பாக்குறாங்களே ...
Post a Comment