19 June 2009

"சாமியார்" STRIKES BACK..!


***************

நம்ம சிஷ்யனும் பல நாளா அந்த ஆஸ்ரமத்தில் படிக்கறான் , தியானம் பண்றான் ஆனா ஞானம் மட்டும் கிடைக்கவே இல்லை.

ஒரு நாள் ரொம்ப கோபமா குருகிட்ட போனான்.

''சாமி எனக்கு ஞானம் வேணும் ''

சாமியே ஒரு நிமிஷம் ஷாக்காகிட்டாரு..

"டேய் தம்பி நிஜமாத்தான் கேக்கறீயா? ''

''ஆமா சாமி ஐ வாண்ட் ஞானம் வெரி அர்ஜென்ட்லி''

குரு தாடையை சொறிந்த படி யோசித்தார்.

''மதியம் சோறு தின்னியா ''

''தின்னேன்.. அதுக்கு என்ன இப்போ.. ஐ வான்ட் ஞானம் ''

''ஏன்டா சோறு தின்னியே... தட்ட கழுவுனியா.. போய் அதை கழுவுடா.. ''

சிஷ்யனுக்கு ஞானம் வந்தது.

*******************

குரு மிக சீரியஸாக ஞானம் குறித்துப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பின் வரிசையில் அமர்ந்திருந்த நமது சிஷ்யன் குசுகுசுவென பக்கத்தில் இருந்தவனிடம் பேசிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த குருவிற்கு அவனது குமட்டில் குத்த வேண்டும் போலிருந்தது.

''டேய் மொட்டை எழுந்திரு.. '' என்றார்

''சொல்லுங்க சாமி '' பயந்த படி எழுந்து நின்றான் சிஷ்யன்.

''ஒரு கை ஓசை எப்படி இருக்கும் ''

ஆஹா கிழவன் கவுண்டமணி மாதிரி பளீர்னு அறையப்போறான் போலிருக்கே என யோசித்த சிஷ்யன்.

''இரண்டு கை ஓசைல பாதி அளவு இருக்கும் சாமி '' என்றான்

குரு கடுப்பாகி அன்றைய வகுப்பை முடித்துவிட்டு கிளம்பினார்.

*****************

ஒரு நாள் குருநாதர் தனது பிரதான சிஷ்யனுக்கு ஞானம் கிடைத்துவிட்டதுனு அதிகாரப்பூர்வமா அறிவிச்சாரு.

பக்கத்து ஊரு குருமார்கள் பக்கத்து நாட்டு குருமார்கள்லாம் கூட இத கேட்டு ஆச்சர்யப்பட்டு , நேர்ல கிளம்பி வந்தாங்க.

குரு சொன்னாரு சாமிங்களா பாருங்க என் சிஷ்யன எனக்கே கிடைக்காத ஞான அறிவ அடைஞ்சிட்டான்.

சிஷ்யன் தனியா ஒரு ஆத்தோரம் மரத்தடில உக்காந்திருந்தான்.

இந்த வெளியூர் சாமியாருங்கள்லாம் ஒன்னா போயி .. '' தம்பிரி உனக்கு எப்படி ஞானம் வந்துச்சு '' னு கேட்டாங்க

''வந்துருச்சு ''

''சரி இப்போ எப்புடி பீல் பண்றடா செல்லம்.. ''

''அட நீங்க வேற செம மொக்கையா இருக்கு சாமி.. '' என்றான் சிஷ்யன்.

*****************

நம்ம குசும்பு புடிச்ச சிஷ்யனோட பொண்டாட்டி சாகக் கிடந்தார். மரணப்படுக்கையில் சிஷ்யனின் கைகளை பிடித்துக்கொண்டு '' அத்தான் , ஐ ல்வ் யூ '' என்றார்.

''முடியல.. '' என்றான் சிஷ்யன்.

''அத்தான் , நான் செத்துட்டா நீங்க எந்த பொண்ணையும் நினைச்சு கூட பாக்கமாட்டேனு சத்தியம் பண்ணிக்குடுங்க ''

''அவ்வ்வ்வ் பண்ணிட்டா போச்சு.. '' வருத்தத்துடன் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தார். சத்தியம் பண்ணியதும் டொக் என மண்டையை போட்டார் அவனது மனைவி.

அதற்கு பின் சில மாதங்களுக்கு கருமம் புடிச்ச சத்தியம் பண்ணிட்டோமேனு சிஷ்யன் பாக்கற பிகரையெல்லாம் சைட்டு கூட அடிக்காமல் பல்லைக்கடித்துக்கொண்டு அடக்க ஒடுக்கமாய் இருந்தான்.

ஆனாலும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு அழகு சுந்தரி அவன் வாழ்க்கையில் குறிக்கிட்டாள். இருவரும் கன்னாபின்னாவென்று காட்டுத்தனமாய் காதலித்தனர். திருமணமும் செய்து கொண்டனர். முதலிரவு முடிந்து அடுத்த நாள் இரவு.

செத்துப்போன சிஷ்யனின் பொண்டாட்டி ஆவியாய் வந்தார். முதலிரவில் சிஷ்யனும் அவர்கள் பொண்டாட்டியும் பேசியது செய்தது என எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்தார். சிஷ்யனால் தாங்கமுடியவில்லை. அடுத்த நாள் இரவு புது மனைவி ஆசையோடு நெருங்கினால் இவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பயந்து போய் அட நீ வேற நொய்யி நொய்யினு நானே அரண்டு போய் கிடக்கேன் என்று விரட்டினான். இல்லற வாழ்க்கையில் இன்பமே இல்லாமல் பண்ணியது அந்த ஆவி.

அவனால் அந்த ஆவி டார்ச்சரால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. சரி நம்ம குருவிடம் ஒரு வழி கேட்போம் என ஆசிரமத்திற்கே வந்தான்.

''சாமி என்னால முடியல.. செத்துப்போன என் பொண்டாட்டி ஆவி செமயா டார்ச்சர் பண்ணுது.. நான் எங்க போனாலும் என்னை பாலோ பண்ணுது.. ப்ளீஸ் அந்த ஆவிகிட்டருந்து என்ன காப்பாத்துங்க , என் பொண்டாட்டியோட கூட குஜாலா இருக்க முடியல.. ''

''இன்னாடா சிஷ்யா இதுலாம் ஒரு சப்ப மேட்டரு , ஆப்டர் ஆல் இட் இஸ் ஜஸ்ட கோஸ்ட் படி.. இதுலாம் நீயே ஹேண்டில் பண்ணிக்க கூடாது.. சரி ஒன் காதக்கொண்டா ''

சிஷ்யன் காதில் ஒரு ஐடியா சொல்லி அனுப்பி விட்டார்.

அடுத்த நாள் ஆவி வந்தது.. '' டேய் புருஷா.. ''

''ஆவிங்க என்னை மன்னிச்சிருங்க.. உங்கள எதிர்த்துகிட்டு என்னால நிம்மதியா வாழவே முடியாது.. அதனால நான் என் புதுப்பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. இனிமே எந்த பொண்ணையும் மனசால கூட நினைக்க மாட்டேன்.. என்னை விட்டுருங்க. ''

''அது '' என்றது ஆவி.

''ஆனா ஒரு சின்ன கன்டிஷன்.. நான் ஒரு கேள்வி கேப்பேன் அதுக்கு நீங்க பதில் சொல்லிட்டா .. நான் சொன்னமாதிரி டைவர்ஸ்.. ஆனா பதில் சொல்லலை.. ஓடிப்போயிரணும்.. ''

''கேளுடா என் வென்று ''

''பதில் சொல்லாட்டி போயிரணும் ஓகேவா.. ''

''ஓகே ''

வீட்டிற்குள் சென்று கைநிறைய கடுகுகளை எடுத்து வந்தான்.

''ஆவிங்க இப்போ என் கைல எத்தனை கடுகு இருக்குனு சொல்லுங்க.. ''

டிங் என ஆவி எங்கோ ஓடி மறைந்தது. சிஷ்யன் புதுப்பொண்டாட்டியோடு குஜாலாக இருந்தான்.

*************

நம்ம குரு ஒரு காட்டுக்கு நடுவில் இருந்த ஒரு குட்டி குடிசையில் தனிமைல தியானம் பண்ணிகிட்டு இருந்தார். அந்த காட்டு வழியா போன ஒரு திருடன் அந்த குடிசைய பார்த்து திருட ஏதாவது கிடைக்குமானு பார்க்க உள்ளே நுழைஞ்சான். உள்ளே சாமியாரையும் அவரோட புத்தர் சிலையத் தவிர ஒன்னுமே இல்லை. திருதிருனு முழிச்சிட்டு நின்னான். தியானத்தில் இருந்த சாமியாரு முழிச்சுப் பார்த்து

''அடடா திருடன் தம்பியா வாங்க.. ரொம்ப தூரத்திலருந்து வந்துருப்பீங்க போலிருக்கே..தண்ணி சாப்பிடறீங்களா'' என்றார்

ஆஹா சாமி மென்டலா இருப்பாரோனு பயந்துட்டான்.

''என்ன தம்பி நான் லூசானுதான யோசிக்கிறீங்க.. அப்படிலாம் இல்ல.. வந்துட்டீங்க ம்ம் உங்களுக்கு ஏதாவது பரிசா குடுக்கணுமே.. ''

டுமீல்னு தனது உடைகளை கழட்டி அவன் கையில் குடுத்துட்டு நிர்வாணமா நின்னாரு.

இவர இப்படி ஒரு கோலத்தில பாத்து பயந்து போய் அவரு குடுத்த துணிய வாங்கிட்டு , திருடன் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினான்.
சாமியார் நிர்வாணமா.. நிலா ஓளில தியானத்த தொடர்ந்தாரு..

''ம்ம்.. சின்ன பையன்.. பாவம்.. கொஞ்சம் வெயிட் பண்ணிருந்தா நிலாவையே குடுத்திருப்பேன்..''

26 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

நடக்கட்டும் நடக்கட்டும்

Vadielan R said...

அதிஷா பின்னிட்டிங்க தினம் ஒரு சாமி கதை பதிவு போடுங்க நல்லா இருக்குது. அதுவும் அந்த கடுகு மேட்டர் சூப்பர் சாமியோவ்

ஜானி வாக்கர் said...

Me the First !! இருங்கள் படித்து விட்டு வருகிறேன்

நையாண்டி நைனா said...

"சாமியார்" STRIKED MY BACK..!
ஒன்னுமுமே பிரியலப்பா எனக்கெல்லாம் எப்பதான் ஞானம் கெடைக்குமோ...

Unknown said...

ஓ(ஷோ)ஹோ. எல்லாமே ஜெ(ன்)ம்!

YUVA said...

hey thats really good, except the middle one. you really got some talent.

Karthikeyan G said...

என்ன சார்.. ஜென் கதைகளை அசால்டா உங்க பேர்ல போட்டுடீங்க.
:(

Rajeswari said...

ரசித்தேன்..

Beski said...

ஹி ஹி ஹி...
ஜூப்பரு.

Unknown said...

கார்த்திகேயன் ஜென்கதைகள்தான் அது. நான் எனது நடையில் மட்டுமே எழுதியிருக்கிறேன். நம் வலைப்பூவில் அடிக்கடி போடப்படுவதுதான் அது.

Thamira said...

செம்ம இண்ட்ரெஸ்டிங்கா கத சொல்லிக்கினே குரு.! கண்டினியூ பண்ணு..

Anonymous said...

having been a regular reader of urs..i must tell this..this is sema sema sema mokkai..plz...

அப்பாவி முரு said...

சென்னை தமிழில் ஜென்.

சூப்பர்.

வாழ்க அதிஷா!!

நந்தாகுமாரன் said...

ஜென் கதைகளை உட்டாலக்கடியாக உல்டா செய்து, கலக்கல் கலாட்டாவாக எழுதுகிறீர்கள் ... ஏற்கனவே சொல்லிவிட்டேன் ... மீண்டும் சொல்கிறேன் ... Man, your sense of humour is terrific ... :)

Namma Illam said...

டிபால்ட் அதிஷா பதிவு!

சென்ஷி said...

:))

நடோத்துங்கோண்ணா நடோத்துங்கோ !

last information..... said...

Super athisha.... ukanthu yosipaangaloo

புகழன் said...

\\ ''ம்ம்.. சின்ன பையன்.. பாவம்.. கொஞ்சம் வெயிட் பண்ணிருந்தா

\\

நான் வேற ஏதோன்று நினைச்சிட்டேன்.

நல்ல வேளை அடுத்த வரியிலயே என்னன்னு தெளிவா சொல்லிட்டீங்க

\\நிலாவையே குடுத்திருப்பேன்..'' \\

புகழன் said...

தொடர்ந்து எழுதுங்கள்.

Abbas said...

நல்லா இருக்கு ..:)))

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.தொடரட்டும் குரு-சிஷ்ய கதைகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அதிஷா வாழ்க

ஊர்சுற்றி said...

குட்டி குசும்பு சாமியார் அதிஷாவுக்கு வாழ்த்துக்கள்.

அப்புறம்,
நீங்க 'யானை யானை' அதான் 'ஞானம்', அதை அடைஞ்சிட்டீங்களா? இல்ல உங்களுக்கு இலவசமா யாரும் தந்தாங்களா?

Prabhu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

வால்பையன் said...

ஜென் கதைகளை உங்கள் பாணியிலேயே புத்தகமாக போடலாமா!

சிநேகிதன் அக்பர் said...

கதைகள் எல்லாம் சூப்பர்.

நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க.

http://sinekithan.blogspot.com/