18 July 2009

வேலுபிரபாகரனின் காதல் கதை!ஓஷோவின் ஏதோ ஒரு புத்தகத்தில்...

காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது.

*********


காமம்! இந்த ஒற்றைச்சொல்லிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஓராயிரம் பிரச்சனைகளை ஒன்றரை மணிநேரத்தில் ஒட்டுமொத்தமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் வேலு பிரபாகரன். ஒரு நல்ல உரையாடலை அல்லது விவாதத்தை முன் வைத்திருக்க வேண்டிய ஒரு ஒன்லைனரை வைத்துக்கொண்டு மூன்றாம்தர பிட்டுப்பட வெலவலில் ஒரு காவியம். இசை இளையராஜா.

நான் வயதிற்கு வந்திருந்த சமயத்தில் இந்த திரைப்படம் பூஜையின்றி தொடங்கப்பட்டிருக்கக் கூடும். ரிலீஸ் ஆவதற்குள் ஆண்டுகள் பல கடந்திருக்கின்றன. ஒரு சில நிர்வாணக்காட்சிகள் படத்தில் இருந்தமையால் படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் இருந்ததாய் பல முறை வே.பி மீடியாக்களில் கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார். அதுவும் முழுநிர்வாணம் கூட கிடையாது செமி தான். இப்படம் வெளியாக ரஜினிகாந்த் கூட உதவியதாய் கூட ஒரு வதந்தியோ செய்தியோ உண்டு. அது தவிர ஒருமுழுப்படத்தையும் எடுத்துவிட்டு அது சொல்ல வந்த கருத்தை சென்ஸாருக்குச் சொல்லவே இன்னொரு படத்தையும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கிறது. அதனால் படம் பப்படமாய் இருக்கிறது.

காமம் மறைக்கப்பட வேண்டியதா! இந்தியாவின் கலாச்சாரம் காமத்தை மூடிவைத்து அதன் மீது அதீத வெறியை ஒவ்வொரு ஆணிடமும் உருவாக்கி , வெறும் காமத்தை மட்டுமே தேடுகின்ற ஒரு மடச் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது என படத்தின் ஆரம்பத்திலேயே மைக்கைப் பிடித்து பேசத்துவங்குகிறார் வே.பி. இறுதிக்காட்சியில் இளம்பருவத்தில் இளம்வயது பாலியல் குற்றங்களையும் ஏக்கங்களையும் தவிர்க்க அரசாங்கமே அனுமதிக்கப்பட்ட மாற்று ஏற்பாடுகள் ( லைசண்ஸ் தரப்பட்ட விபச்சார விடுதிகள் ) செய்து தரவேண்டும் எனவும் முழங்குகிறார்! இது தவிர நடுவில் மீடியாக்களையும் சாடுகிறார். மீடியாக்கள் பெண்ணின் தொப்புளையும் மார்பகங்களையும் காட்டி ஆண்களின் காமத்தை தூண்டுகின்றன என்கிறார்.ஆனால் இந்த படத்தின் பெரும்பகுதிகளில் விதவிதமாய் அதையே மூன்று பெண்களை வைத்து காட்டியிருப்பது முரண்.

மற்றபடி கதை? - முன்று பெண்கள் - ஒரு ஜாதிவிட்டு ஜாதி காதல் - ஒரு கள்ளக்காதல் - ஒரு கைவிடப்பட்ட பெண்ணின் காதல் - அதை சுற்றி காமம் - பின் அனைத்தும் பலி - அனைவரும் பலி - கடைசியில் வே.பி காதல் எல்லாம் சும்மா காமம்தான் உண்மை என கருத்து சொல்லி படத்தை முடிக்கிறார்.

மேற்ச்சொன்ன கதையை ஒரு டைரக்டர் படமாக எடுக்க அந்த படத்திற்கு எதிர்ப்பு .. அவரை யாரோ கத்தியில் குத்திவிட , அதை விசாரிக்கும் போலீஸ்...ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா முடியல!

இசை இளையராஜா. நீங்கள் இளையாராஜா ரசிகராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை பார்க்க வேண்டாம் இசைராஜாவை வெறுத்துவிடும் வாய்ப்பிருக்கு! பிட்டுப்படங்களுக்கு இசையமைக்கும் ஏ.டி.ஜாயை விட அருமையான இசை. பிண்ணனி ஓஹோ!

இது தவிர வே.பி, சில்க் ஸ்மிதாவுடனான தனது காதலையும் அவரும் ஸ்மிதாவும் மணமுடித்துக்கொண்டதையும் பின் பிரிந்து போனதையும் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மை எனவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

நிர்வாணம் காட்டுகிறேன் பேர்வழி என வே.பி அக்கால கர்ணன் படங்களில் உபயோகப்படுத்திய டிரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் நாயகிகளை நீரில் நனைத்து உரித்துக் காட்டுகிறார். படத்தில் வரும் அனைத்து பெண்களும் பாலியலில் ஈடுபடுகின்றனர். நிர்பந்தத்தால். அவர்களது காமம் அல்லது காதல் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.

வே.பிரபாகரனின் முந்தைய திரைப்படங்களான கடவுள் , புரட்சிக்காரன் திரைப்படங்கள் கூட ஓரளவு அதன் சொல்லும் கருத்தை தெளிவாய் சொன்னதற்காகவாவது பார்க்கலாம். இத்திரைப்படம் சொல்ல வந்த கருத்திலிருந்து விலகி ஏதேதோவாகி சொல்லவந்த கருத்தை நேரடியாய்ச் சொல்லாமல் நீட்டி முழக்கிச் சொல்லிச்செல்கிறது.

இது தவிர இத்திரைப்படம் ஆணின் பார்வையிலேயே அதிலும் வேலுபிரபாகரனின் பார்வையில் காமமின்றி காதலில்லை. காதலே பொய் , காமமே மெய் என வேதாந்தம் சொல்லி முடிக்கிறது.

உடல்அரசியல் குறித்த டின்டோ பிராஸின் படங்கள் சொல்லும் அதே செய்தியை நம்மூர் லோக்கல் மசாலா சேர்த்து மண் வாசனையோடு சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் வே.பி. ஆனால் பேசாப்பொருளைப் பேசதுணிந்ததற்காக அவரைப் பாராட்டலாம்.

மற்றபடி படம்? - பிட்டுப் பார்க்காதே என்கிற அறிவுரையும் நாலேமுக்கால் பிட்டும்..

13 comments:

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

குப்பத்து ராசா said...

//இப்படம் வெளியாக ரஜினிகாந்த் கூட உதவியதாய் கூட ஒரு வதந்தியோ செய்தியோ உண்டு//

இது வதந்தி அல்ல முற்றிலும் உண்மை வே. பி. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

Unknown said...

அதிஷா,

விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க.
பாராட்டுக்கள்.வேலுவின் நோக்கம்
தெரிகிறது.பாடுபட்டு எடுத்தேன் ஆனால் “பிட்” ஆகிவிட்டது.

வேலு பிரபாகரன் லாலு பிரபாகரன் ஆகி விட்டார்.

//நான் வயதிற்கு வந்திருந்த சமயத்தில் இந்த திரைப்படம் பூஜையின்றி தொடங்கப்பட்டிருக்கக் கூடும்//

சூப்பர்.

”யாரோக்கு யாரோ ஸ்டெப்னி” யை
நல்ல படமா?

குப்பன்.யாஹூ said...

is there any website to watch this film. Going to Theatre is boring

பித்தன் said...

xcelant review.

Suresh Kumar said...

உடல்அரசியல் குறித்த டின்டோ பிராஸின் படங்கள் சொல்லும் அதே செய்தியை நம்மூர் லோக்கல் மசாலா சேர்த்து மண் வாசனையோடு சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் வே.பி. ஆனால் பேசாப்பொருளைப் பேசதுணிந்ததற்காக அவரைப் பாராட்டலாம்.///////////////////

அப்போ படம் தோற்று போச்சா ? .........................

Unknown said...

அப்ப....! இன்னிக்கு போய் பார்த்துட்டு சொல்றேன்..

பரிசல்காரன் said...

இந்தப் படத்துக்கு முதல் விமர்சனம் போட்டு சரித்திரத்தில் இடம் பெற்ற அதிஷா வாழ்க!

ஊர்சுற்றி said...

முன்னெச்சரிக்கைக்கு நன்றி.

சில வருடங்களுக்கு முன்பே இந்த படம் பற்றி பயங்கர அறிமுகங்களைக் கொடுக்கும்போதே நினைத்தேன். இந்த மாதிரிதான் ஏதாவது இருக்கும் என்று.

பட் இந்த வரிகள் எனக்குப் பிடிச்சிருக்கு.

//காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது. //

மணிகண்டன் said...

Nice Review man ! neenga yentha theatrela paatheenga ? yenna seat ? intha comment yeppa varum ?

ரமேஷ் கார்த்திகேயன் said...

ஒரு அவசர உதவி

என் சகோதரன் இரண்டாம் ஆண்டு பொறியியல் Counseling [Lateral Entry Counseling 2009] கலந்து கொள்ள கலை 5.30 மணிக்கு காரைக்குடி சென்றான் . அழகப்பா செட்டியார் கல்லூரியில் வைத்து[http://www.accet.net/] நடை பெறுகின்றது . காலி இடங்களின் எண்ணிக்கை தினமும் வெளியிடப்படும் என்று சொல்லி இருந்தார்கள் . அனால் இன்று 8.00 மணி கௌன்சிலின்க் 8.15 மணிக்கு தான் காலி இடம் அட்டவனை வெளியிடப்பட்டது . தினமும் இன்டர்நெட் -இல் வெளியிடப்படும் என்று தினமலர் பேப்பரில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள் . அனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை . உதவிக்கு என்று ஒரு போன் நம்பர் கொடுத்திருந்தார்கள் அது out off order .

எந்த கல்லூரிகளில் எத்தனை காலி இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளாமல் எப்படி கல்லூரிகளை தெரிவு செய்வது . கண்துடைப்பு போன்றே இருகின்றன அந்த கல்லூரியின் நடவடிக்கைகள் . அண்ணா யுனிவெர்சிட்டி என்ன செய்கிறது .15,000 மாணவர்கள் இரண்டாம் ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர் . ஆனால் அந்த கல்லூரி அதனை மதித்தார் போல் தெரியவில்லை
அந்த கல்லூரியின் மீது என்ன நவடிக்கை எடுக்கலாம் . அதற்க்கு சட்ட படி என்ன செய்ய வேண்டும்

Unknown said...

appo nalla bit padam nu sollunga.
Nice comments

shiva4tamil said...

ஏங்க இந்த வேலு சார்க்கு வேற வேலை இல்லையா..?