15 September 2009

ஈரம் - தண்ணில கண்டம்!மழைக்காலத்தில் பார்க்கும் அனைவருமே அழகாக தெரிவதாய் உணர்ந்திருக்கிறேன். எல்லோர் முகத்திலும் மென்மை தெரியும். அல்லது முகத்தில் தண்ணீரால் கழுவியது போலவே இருக்கும். அதை எப்போதும் ரசிப்பேன். ஏன்னா நம்ம முகம் அந்த டயத்திலதான் கொஞ்சமாச்சும் அழகாத்தெரியும். அதே போலத்தான் காதலும் மழைக்காலங்களில் இன்னும் அழகாகிவிடும். காதல் எத்தனை முறை பார்த்தாலும் அழகுதான். காதலியோடு கொட்டும் மழையில் நனைந்த படி கட்டியணைத்து முத்தமிட்டிருக்கிறீர்களா! வாய்ப்பு கிடைத்தவன் கடவுளை பார்த்திருப்பான்!.

ஷங்கர் படம்னாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவரு டைரக்சன் பண்ற படம்னு இல்லாம தயாரிக்கற படங்கள் மேலயும் அப்படித்தான் மிதமிஞ்சிய ஆர்வம் தொத்திக்குது. காதல்ல தொடங்கி 23ர்டு புலிகேசி, வெயில்,கல்லூரி இதோ இப்போ ஈரம். பேரு ஈரம்னு வச்சிட்டு டிரெய்லரும் மழையும் இருட்டுமா காட்டினதால என்ன கதையா இருக்கும்னு ஆர்வம் இன்னும் பத்திகிச்சு.

தமிழ்ப்படமே பாக்கறதில்லைங்கற என்னோட சுடுகாட்டு சபதத்த சிகரட் லைட்டர்ல எரிச்சிட்டு எவ்ளோ செலவானாலும் பராவல்ல சத்யம்லதான் ஈரம் பாக்கறதுனு முடிவு பண்ணோம் சங்கத்துல. என்னோட சொத்த முழுசா வித்த பணத்தையும் செலவழிச்சு டிக்கட் வாங்க வேண்டி இருந்துச்சு. ஒரு டிக்கட் 120ரூ. பாப்கார்ன் பெப்சி 100ரூ. தண்ணி பாட்டில் 20ரூ. கொஞ்சம் கூட மனசுல ஈரமே இல்லைங்க தியேட்டர்காரனுக்கு. இவ்ளோ செலவளிச்சு படம் பாக்க போனா இன்டர்வெல்ல தம்மடிக்க டிரைப்பண்ணோம்னு அடிக்கலாம் வரானுங்க! நாகரீகம் இல்லாதவனுங்க! காசு குடுத்து என்னங்க பிரயோசனம் சும்மா சீட்டு மேல கால போட்டுகிட்டு தம்மடிச்சுகிட்டே படம் பாக்கற சுகமே தனி. டிநகர் கிருஷ்ணவேனில 20ரூவாய்க்கு பால்கனி டிக்கட். 5ரூவாக்கு தேங்கா உருண்டை. சுகமே தனி.ம்ம் சத்யம்னு பேர் வச்சுகிட்டு கொள்ளையடிக்கிறானுங்க!

அது கிடக்கட்டும். ஏழைங்க பிரச்சனை. 200ரூவா செலவழிச்சாலும் குடுத்தான் பாருங்க டிக்கட்டு. சூப்பர் டிக்கட்டுங்க எனக்கு பக்கத்து சீட்ல அய்யோ அய்யோ! இரண்டு பேரு அய்யோ அய்யோ! அது பத்தி தனி பதிவா போட்டுக்கறேன். இப்போ !

ஈரம் படம்? படத்தோட கதை என்னமோ ராசாத்தி வரும் நாள். மைடியர்லிசா மாதிரி சப்பை பேய்ப்படக்கதைதான். ஏன் எல்லா பேய்ப்படத்திலயும் பொண்ணுங்களே பேயா வராங்க! ஜகன் மோகினிலருந்து லேட்டஸ்டா வந்த யாவரும் நலம் வரைக்கும். ம்ம் இதுக்கு பின்னால இருக்கற ஆணாதிக்க நுண் அரசியல்லாம் நமக்கெதுக்கு!. நாம படத்தபத்தி பேசுவோம். பேய்ப்படத்தில வராமாதிரியே ஒரு பெரிய வீடு. கெட்ட வாட்ச் மேன். கெட்ட பக்கத்துவ்வீட்டுக்காரி. காமக்கொடூர பக்கத்துவீட்டுக்காரன். சைக்கோவா ஒரு புருஷன். நல்ல காதலன். பாவப்பட்ட பழிவாங்கும் பேய்! எல்லாருக்கும் தண்ணில கண்டம்! இதையெல்லாம் வச்சு சுத்தி சுத்தி வித்தியாசமா ஏற்கனவே பல கதைகள் பண்ணிருந்தாலும் இது புதுசா இருக்கு!

அதற்கான காரணம் படத்தின் மேக்கிங். படம் முழுக்க கார்கல மேகம் சூழ காட்சிகள் நகருது. எல்லா காட்சியுமே ஈரமான பிண்ணனியோட சுத்துது. தண்ணி சொட்டுற மாதிரி நிறைய அருமையான வீடியோக்கள் பாத்திருப்போம். அதேமாதிரி அருமையா தண்ணிய படம் முழுக்க தெளிச்சு விட்டிருக்காங்க. நமக்கு கூட பேண்ட் லைட்டா ஈரமானமாதிரி பீலிங்ஸ் வருது. மேல் பக்கமில்ல கால்பக்கம். அதான் இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றி.
கேமரா மேன் கண்ணுல தண்ணிய ஊத்திகிட்டு படம் எடுத்துருப்பார் போல! குளிர்ச்சியான பிண்ணனி! இசை யாருனு தெரியல ஒரு சோக மெலடி அப்படியே உருக்கி மனச கரைக்குது. இனிமேதான் டவுன்லோட் பண்ணிகேட்கணும். பிண்ணனி இசை அடங்கொன்னியா அப்படியே இங்கிலீஸ் படரேஞ்சு! ( கவனிக்கவும் ஒன்லி ரேஞசுதான் .. நோ காப்பிபையிங்).

படத்துல ரெண்டு ஹீரோ ஒருத்தரு கொஞ்சம் சிவப்பு விஷாலாட்டம் அழகா இருக்காரு. மிருகம் படத்துல காட்டுத்தனமா நடிச்சவரு இதில சாஃப்டா போலீஸா வராரு. குட். நந்தா ஒரு நல்ல நடிகர். இன்னும் யூஸ் பண்ணிருக்காலம். இல்ல இன்னும் அவர் வேற மாதிரி நடிச்சிருக்கலாம். ஹீரோயின் சிந்துமேனன் பாத்திரத்த சரியா புரிஞ்சுகிட்டு வெளக்கிருக்கார். ஹீரோயின் பக்கத்துவீட்டுப்பொண்ணா ஒரு குட்டி பெரிய பொண்ணு வருது. கண்ணுல செம ஸ்பார்க்.. சூப்பரா நடிச்சிருக்கு. முகம் சுமார்தான்.

மொத்தமா ஒரு நல்ல ஜாலியான பயங்கரமான அட்வெஞ்சரான படகு சவாரி பண்ண உணர்வு வருது படம் பார்க்கும் போது. அதுக்கு மேல என்ன வேணும் படம் ஓடிரும். மொத்தமா பாக்கும் போது ஏதோ இங்கிலீஸ் படத்த ரெண்டாவது வாட்டி பாக்கற மாதிரி இருந்தாலும் தமிழுக்கு புதுசு மாதிரிதான் தெரியுது.!

படத்தோட பெரிய குறை! ஒன்றரை மணிநேரத்துல சொல்லிறக்கூடிய கதைய எதுக்கு தேவையில்லாம இரண்டரை மணிநேரம் ஒட்டறாங்கனு தெரியல. இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒருமணிநேரம் கொட்டாவி!

மத்தபடி ஈரம் – வெரி நைஸ்! ஒன் டைம் மஸ்து வாட்ச்


***********

அந்த பக்கத்து சீட்டு மேட்டர்... விரைவில்

15 comments:

பிரபாகர் said...

அக்கம் பக்கத்து மேட்டருக்காக அலையாம காத்திருக்கோம்....(அ நானவுக்கு அ நா...)

பிரபாகர்.

பித்தனின் வாக்கு said...

kutti ponna yappa athu saranya mohan, romba eram akiyittinkala, ok ok eppa CD varum. wait pannaram. engala mudinhthathu oru Rs.15 than.

Anbu said...

இசை-தமன் அண்ணா..அருமையான விமர்சனம்

மல்லிகை மன்னன் said...

இந்த படத்தின் இசையமைப்பாளர் பெயர் தமன். S

இவர் வேறு யாரும் அல்ல. ஷங்கரின் "Boys" படத்தில் டிரம்ஸ் வாசிப்பாரே அந்த குண்டு பையன் தான். மல்கோவா ஆண்டின்னு காம கதையும் அழுத்துவார். இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.

இப்படத்தின் இயக்குனர் அறிவழகனும் ஷங்கரின் உதவி இயக்குனரே.

ஈரம், தமிழில் அற்புதமான ஒரு த்ரில்லெர் படம்.

நையாண்டி நைனா said...

paarpom.

DHANS said...

music sai

boys padathula matter kathai eluthuvaaru illa avarthaan.

paatu nalla iruku, ithu avarukku 4th padam

2 telugula 2 tamila (sinthanai sei avar music thaan)

பித்தன் said...

good review....

Unknown said...

பார்த்துடுவோம் குருவே...

தியேட்டருக்கு போனா ஸ்கிரீனை பார்க்க வேண்டியதுதான......எதுக்கு இதெல்லாம்...ம்?

Anonymous said...

//நமக்கு கூட பேண்ட் லைட்டா ஈரமானமாதிரி பீலிங்ஸ் வருது. மேல் பக்கமில்ல கால்பக்கம்//

kusumbu thane... :)

Anonymous said...

அதிஷா அவர்களே, அழகர் மலை படத்தின் விமர்சணம் இன்னும் வரவில்லை. அடுத்த பதிவில் போடவும்.

துபாய் ராஜா said...

நல்லதொரு நடுநிலையான விமர்சனம்.

Unknown said...

////படத்தோட பெரிய குறை! ஒன்றரை மணிநேரத்துல சொல்லிறக்கூடிய கதைய எதுக்கு தேவையில்லாம இரண்டரை மணிநேரம் ஒட்டறாங்கனு தெரியல. இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒருமணிநேரம் கொட்டாவி!////

அதிஷா…….

90 நிமிடங்களின் படத்தை முடித்து விட்டு என்ன இந்திய பார்வையாளன் வீட்டுக்கு சென்று என்ன பண்ணப்போறான் என்றுதான்…. 150 நிமிடங்களுக்கு அதிகமாக இந்திய படங்கள் திரைக்கதையை கொண்டுள்ளன. ஆக, இதற்கு சினிமா கலைஞர்கள் மட்டும் காரணமல்ல பார்வையாளர்களாகிய நாங்களும் தான். (அண்மையில் 3.15 மணித்தியாலங்கள் நீண்டுடுடுடுடுடுடுடு சென்ற படத்துக்கு சென்று கடுப்பாகிப் போனேன். ஆனால், அந்த மியவ் மியவ் நல்லாயிருந்திச்சு)

சில்க் சதிஷ் said...

"நமக்கு கூட பேண்ட் லைட்டா ஈரமானமாதிரி பீலிங்ஸ் வருது. மேல் பக்கமில்ல கால்பக்கம்"


அருமை

ஊர்சுற்றி said...

இந்த போலி ... ச்ச.. போளி மேட்டரை சென்னை வந்ததில் இருந்து கவனிச்சிட்டு வர்றேன். நாளுக்கு நாள் இதன் சுவையும் வடிவமும் புதிய பரிமாணங்கள் எடுத்து வருகின்றன.

அடையாறில் இருந்தபோது சாப்பிட்ட போளியும் சரி இப்போது வேளச்சேரியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சாப்பிடும் போளியும் சரி - தனி சுவைதான்.

நடக்கட்டும் அதிஷா நடக்கட்டும்!

கணேஷ் said...

//அந்த பக்கத்து சீட்டு மேட்டர்... விரைவில் //

எப்போது?

ஜொள்ளுடன்,
கணேஷ்