19 September 2009

உன்னைப்போல் ஒருவன் - உட்டாலக்கடி தமிழன்
அநியாயமும் அக்கிரமும் எங்கெல்லாம் அதிகமாகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றி அதை அழிப்பேன். அதாவது சம்பவாமி யுகே யுகே! கிருஸ்ன பகவான் தெரியாம சொல்லிட்டு போயிட்டாரு ! எங்கயாச்சும் பிரச்சனை உண்டாச்சுனா அவரு வராரோ இல்லையோ சினிமா ஹீரோக்கள்லாம் கரெக்டா வந்து காப்பாத்துவாங்க! அதைதான் பல வருஷமா சூப்பர்மேன் தொடங்கி லேட்டஸ்ட் கந்தசாமிவரைக்கும் செஞ்சுகிட்டு இருக்காங்க. அதைதான் கமலும் இந்த படத்தில செய்யறாரு!

மூணு முஸ்லீம் திவிரவாதிகள் ஒரு இந்து தீவிரவாதி. மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதாச்சாரப்படி சீட்டுக்குலுக்கி போட்டுப்பார்த்து கிருஷ்ண பரமாத்மாவா மாறி துவம்சம் செய்யறாரு. அதுக்கு தீவிரவாதம்னு ஒரு காரணம். மோடி குஜராத்னு ஒரு சப்பைக்கட்டு. ஆனாலும் தீவிரவாதிங்க முஸ்லீம்தான்..! எங்கேயோ இடிக்குது.. அறிவுஜீவிங்க மெல்றதுக்கு கமலஹாசன் நல்ல நொருக்குத்தீனியா வச்சிருக்காரு.. அதை அவிங்க நொருக்குவாங்க. ?( ஐ மீன் கமலஹாசனின் இந்துத்துவா பார்வை அது இது லொட்டு லொசுக்கு நுண்ணரசியல் பிரச்சனைகள்.. நமக்கு அது அவசியமில்லை .. நாம் அறிவுஜீவியும் இல்லை )

படத்தோட கதை சப்பையான சம்பவாமி யுகே யுகேதான். ஆனா திரைக்கதை வித்தியாசம். "SAW" "PHONE BOOTH" பாணி திரைக்கதைதான் என்றாலும் தமிழுக்கு புதுசு. தமிழில் இப்போதைக்கு இது மாதிரி வித்தியாசமான திரைக்கதைகளுக்குத்தான் மவுசு என்பதை கமல் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

படம் முழுக்க கமல் ஒரு மொட்டைமாடியில் அமர்ந்திருக்கிறார். கரகர குரலில் போனில் பேசுகிறார். ( ஒரே ஆங்கில வாடை! ஹாலிவுட் மயக்கம்..) . மொட்டை மாடி ஓரமாய் நின்று கொண்டு ஊரைப்பார்க்கிறார். இவ்ளோதான் கமலின் பங்கு. ஆனால் மனுசன் நிஜமாவே ஒரு மேதை. வெறும் முகபாவனையிலும் குரலிலுமே நடித்து தள்ளுகிறார். நடக்கும் போதுதான் பைல்ஸ் வந்தது போல் இருக்கிறது மற்றபடி நடிப்பு அபாராம். அதிலும் அவரது உருவம் ஏதோ விஜய் மல்லையா வீட்டு பக்கத்துவீட்டுக்காரர் மாதிரி இருக்கு.. அவரப்போய் எப்படிங்க சாதாரண ஆளுனு நினைக்கறது.

மோகன்லால். அச்சு அசல் எர்ணாகுளத்திலிருந்து டிரான்ஸ்பர் ஆன போலீஸ்காரரை கண்முன் நிறுத்துகிறார். இயல்பான நடிப்பு. படத்தின் பல இடங்களில் கமலை மிஞ்சுகிறார்.

படத்தில் மொத்தமா இரண்டே பாத்திரங்கள்தான் மனதில் நிற்கின்றன. லட்சுமி , சந்தான பாரதி, சிவாஜி என மிகச்சிலரே தெரிந்த முகங்கள். மற்றவரெல்லாம் புதுசு. புதுமுகங்களை கொஞ்சம் நேட்டிவிட்டியோடு போட்டிருக்கலாம். பல இடங்களில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வு.. வடநாட்டு முகங்கள் தமிழ்பேசுவது கூட ஏதோ அந்நியமாக தோன்றுகிறது.

இசை ஸ்ருதிஹாசன்! பாஸ்மார்க் போடலாம். ஏ.ஆர்.ஆர் ஐப்போல முதல் படத்திலேயே சென்டம் எல்லாம் கிடையாது. ஏதோ அவரால் முடிந்தது முழுமையாய் செய்திருக்கிறார்.

வசனம் இரா.முருகன். இந்துத்துவா ஆட்களுடன் 'மோதி'ப்பார்த்திருக்கிறார்.அதன் பின்விளைவு பின்னால் தெரியும்.

கேமராமேனுக்கும் கலை இயக்குனருக்கும் எடிட்டிங் செய்தவருக்கும் கட்டாயம் ஒரு ஆளுயர மாலை போட வேண்டும். படம் முழுக்க ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது அத்தனையும்.

படம் குறித்து சொல்ல அதிகமில்லை. கமலுக்காகவும் திரைக்கதை அமைப்பிற்க்காகவும் அது தரும் பரபரப்பு அனுபவத்திற்காகவும் ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம். ஹிந்தியில் பார்த்திருந்தால் கட்டாம் இந்த படம் உங்களுக்கு பிடிக்காது.

மற்றபடி இந்த திரைப்படம் சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமா என்றால் கேள்விக்குறிதான். திரைப்படம் பார்த்து சமூக விளிப்புணர்வெல்லாம் வராது என்பது இங்கிருக்கும் சராசரி காமன் மேனுக்கு கட்டாயம் தெரியும். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைத்திருக்கும் தயாரிப்பாளர் கமலுக்கு.

படம் முடிந்து வெளியே வரும்போது விடையில்லாத ஒரே ஒரு கேள்விதான் எஞ்சி நிற்கிறது.

''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''

மற்றபடி - உன்னை போல் ஒருவன் - ஒரு முறை பார்க்கலாம்

55 comments:

பின்னோக்கி said...

//நடக்கும் போதுதான் பைல்ஸ் வந்தது போல் இருக்கிறது
50 வயதான ஒருவனின் உடல் உபாதைகளைக் காட்டப் போகிறார் இந்த படத்தில் என்று படித்தேன். அதானால் இருக்கலாம்

//உருவம் ஏதோ விஜய் மல்லையா வீட்டு பக்கத்துவீட்டுக்காரர் மாதிரி இருக்கு..

நீங்க சொல்றது கரெக்ட். எனக்கு விளம்பரம் பார்த்த போது அப்படித்தான் இருந்தது. மர்மயோகி கெட்டப்ப அப்படியே வெச்சுகிட்டாரு போல

MamboNo.8 said...

இந்த படத்தை இந்தியில் பார்த்தால் சகிக்காது..ஆர்.எஸ்.எஸ். கம்பேனியை சேர்ந்த எவனோ ஒரு ஜீ கதை வசனம் டைரக்சன் எல்லாம் செய்தது போல இருக்கும் அப்படி ஒரு உளரல்... ஆனாலும் உலக அறிவில்லாத படித்த இந்தியர்களுக்கும், ஆங்கில மீடியாவுக்கும் அதுவே அதிகம்.

தமிழில் கமல் எப்படி உளரப்போறாருன்னு பாத்தா 1 இந்து தீவிரவாதியை சேர்த்து தான் ஒரு செக்குலர் என அறிவிச்சிருக்கார், இதுக்கு அவர திட்டியே (உங்களுக்கு மைனசு ஓட்டு குத்தியே) முற்போக்காளரா ஆக்கிடுவாங்க.

தமிழ்நாட்டுல தீவிரவாதத்தைவிட சாதி பிரச்சனை பரவலா இருக்கு (மொத்த இந்தியாவுலையும் இதான் நெலம) நாலு ஆதிக்க சாதியை இப்படி போட்டு தள்ளரமாதிரி படம் எடுக்க முடியுமா?
அப்ப மட்டும்..... போய் புள்ள குட்டிங்கள படிக்க வக்கனுமோ?

அறிவிலி said...

//''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''//

அப்படி இல்லை. தீவிரவாதிகளை இஸ்லாமியரகளாக காண்பிக்கிறார்கள்.

Prasanna Rajan said...

//வசனம் இரா.முருகன். இந்துத்துவா ஆட்களுடன் 'மோதி'ப்பார்த்திருக்கிறார்.அதன் பின்விளைவு பின்னால் தெரியும்.//

இன்னா பாஸ். இரா.முருகன் இன்னா பண்ணுனார்? மிரட்ட எல்லாம் செய்யுறீங்க??!!

chandru / RVC said...

இங்க இயல்பில் என்ன நடக்குதோ அதை புரிஞ்சுக்கிட்டு படம் பார்த்தா தேவலை..! தசாவதாரத்துல நாகேஷ் சொல்லுவாரே.. மெக்கா பார்த்து தொழுகிற எல்லாரும் தீவிரவாதி இல்லனு. அதையும் யோசிங்க சகா. குருதிப்புனல் நக்சலைட் பத்ரி, ஹேராம் அபயங்கர், சாகேத் ராம், காப்பாற்றும் காந்தியின் மகன் - ஷாரூக். கமல் இஸ்லாமியர்களை மட்டும் தீவிரவாதிகளா கட்டமைக்கலை. அத உலகம் முழுக்க எல்லா மீடியாவும் வேற மாதிரி செஞ்சுட்டு வருது. இது A Wednesday திரைப்படத்தோட ரீமேக். Mumbai based movie. மும்பைக்கும் தீவிரவாதத்தாக்குதல்களுக்குமான தொடர்பு உலகறிந்தது. அதில் பாதிக்கப்பட்ட ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடுதான் இந்த படம். அதை தமிழ்ல ரீமேக் பண்றப்போ வேற என்ன பெரிசா மாற்றம் செய்யமுடியும்? மற்றபடி உங்க விமர்சனம் நல்லாயிருக்கு சகா.
//படத்தோட கதை சப்பையான சம்பவாமி யுகே யுகேதான். // இதுல உள்குத்து எதுவுமில்லயே? :)
இரா. முருகன் உஷாரா இருக்கறது இருக்கட்டும், நீங்க உஷாரா இருங்க :-)

தினேஷ் ராம் said...

ம்ம்.

chandru / RVC said...

for follow up

ஜோ/Joe said...

// உன்னை போல் ஒருவன் - ஒரு முறை பார்க்கலாம்//
நீங்கள் ஒரு முறைக்கு மேல் பார்க்கலாம் என பரிந்துரைத்த சில படங்களை சொல்ல முடியுமா? :)

Romeoboy said...

''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''


உண்மையான கருத்து .. ஆனால் அதற்கு விடைதான் தெரியவில்லை .

Anonymous said...

Loosuththanamaana vimarsanam :(
-siva-

Rose said...

எந்த படத்தை விமர்சித்தாலும் நிறைகளை விட குறைகளை அதிகம் சொல்கிறீர்களே ......உங்களுக்கு பிடித்த,உங்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்த படங்கள் தான் என்ன? .......seriously i cant கெட் u........விமர்சனங்களில் நக்கல் மட்டுமே எஞ்சி இருக்கிறது (நான் கடவுள்,உன்னை போல் ஒருவன் etc.) ......படம் பார்க்கும் பொது ஒருவித preset mind டோட போய் உட்காருவிங்களா?

முரளி said...

''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''

என்று நீங்கள் உளறுவதற்கு ரொம்ப முன்னரே கமல் பதில் சொல்லிட்டாரு. என்னாது, எங்கெ சொன்னாரா?!?
நீங்க பாத்த படத்துல தாங்க சொன்னாரு!!!!

(ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இந்து-முஸ்லீம் விளையாட்டு விளையாடப்போறீங்க?!?) - இது தான் படத்தில் கமல் சொல்லும் வசனம். தூங்கிட்டீங்க போல :)))))

தீவிரவாதி தீவிரவாதி தான். அவன் என்ன மதமாயிருந்தாலும். அவன் தீவிரவாதியா இல்லாம அவனுக்கு ஜஸ்ட் ஆயுதம் சப்ளை பண்ணுபவனாயிருந்தாலும். எல்லாவற்றிலும் நீ யார், உன் குலம் என்ன, கோத்திரம் என்ன என்று பார்க்கும் பிற்போக்குவாதியா நீங்கள்??

இருந்தாலும், வரும் ஆத்திரத்தை பொறுத்துக்கிட்டு எதாவது மிதமான பதில் சொல்லனும்னா இது தான் அது - கமலும் அதே மதத்தை சார்ந்தவர் போலத்தான் காட்டுகிறார்கள். அப்பொ அவரும் தீவிரவதியா?!?

sriram said...

ethu epadeyoo selavee illama naillla sapathikiragada dooiii

நந்தா said...

அதீஷா தொடர்ச்சியாய் உங்களது அனைத்து பதிவுகளையும், குறிப்பாய் விமர்சனங்களையும் வாசிக்கின்றவன் என்ற முறையில் ஜோ 9விளையாட்டுக்கு சொல்லியிருந்தாலும்) மற்றும் ரோஸ் அவர்களின் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள் : உங்களை சற்றே நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அதே போல் உங்களாது கடைசி வரி இன்னும் எத்தனை நாளைக்கு என்ற ஆதங்கம் வெகு நியாயமானதே. ஆனால் அக்கேள்வி எழுப்பப் பட வேண்டிய தளம் அல்லது படம் இதுவல்ல என்று நான் நினைக்கின்றேன். ஆங்கிலப் படங்களில் அமெரிக்காவை புனித பிம்பம் படுத்தும் பொருட்டும், வியட்நாமில், ஈராக்கில், கியூபாவில், ஆஃப்கானிஸ்தானில் என்று அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும், போர்களையும் நியாயப்படுத்தி சொல்லப்போனால் அதை ஒரு தியாகமாய் உருவகப்படுத்தி எத்தனை எத்த்னையோ படங்கள் வெளிவந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை எல்லாவற்றின் பிண்ணனியிலும் இருக்கும் அடிப்படை ஒன்றே ஒன்றுதான். அது இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்பதே.

இங்கே நல்ல வேளையாய் அந்தளவுக்கு தீவிரம் இல்லா விடினும் மெல்ல மெல்ல அந்த அபாயம் பரவிக் கொண்டிருக்கின்றது. விஜயகாந்த் ப்டங்களும், மணிரத்னத்தின் ப்டங்களும் ஒன்று சேர்ந்து "வாசீம்கான்" என்றாலே ஒரு தீவிரவாதி என்ற கருத்தாக்கத்தை மெல்ல மக்களின் மனதில் உருவாக்கி இருக்கின்றது.

இந்தப்படத்தை இந்தியில் பல முறையும் , தமிழிலும் பார்த்தவன் என்ற அடிப்படையில் எனக்கு இந்த எண்ணம் இந்த படத்தில் தோன்ற வில்லை.

Cable சங்கர் said...

இல்லாமியர்களை தவிர ப்டத்தில் சொன்ன சம்பவஙக்ளில் வேறு மதத்தினராவது குண்டு வைத்திருந்தார்களா..?

யுவகிருஷ்ணா said...

//இல்லாமியர்களை தவிர ப்டத்தில் சொன்ன சம்பவஙக்ளில் வேறு மதத்தினராவது குண்டு வைத்திருந்தார்களா..?//

அண்ணே தாடி வைத்த இஸ்லாமியனெல்லாம் தீவிரவாதி என்று நம் அரசாங்கங்கள் சொல்வது மாதிரியே பேசுறீங்க.

இஸ்லாமியனை தவிர்த்து இங்கே வேறெவனுமே தீவிரவாதியாக உங்கள் கண்களுக்குப் படவில்லையா?

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

இங்கே இந்துமத தீவிரவாதம் என்று ஒன்று இருப்பதே கமல் போன்றவர்களின் கண்களுக்கு தெரிவதில்லையா?

இஸ்லாமியன் குண்டு வைத்த சம்பவங்களை மட்டுமே படத்தில் சித்தரித்தது தான் அயோக்கியத்தனம் என்று திரும்ப திரும்ப சொல்கிறோம்.

இஸ்லாமியர்கள் நம் நாட்டில் அதிகபட்சம் 20 கோடி பேர் தான். கிட்டத்தட்ட 75 கோடி இந்துக்கள் வசிக்கிறோம்.

பெட் கட்டிக்கலாமா? மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரி தீவிரவாதிகள் கணக்கெடுப்பு நடத்துவோம். இஸ்லாமியர் அதிகமா இந்து அதிகமா என்று பார்ப்போம். இந்து தீவிரவாதம் இங்கே யானை சைஸில் இருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதம் எலி சைஸ் தான். யானை பெருசா? எலி பெருசா?

எதுக்கு கமல் போன்ற முற்போக்குவாதிகள் கூட எலியை டைனோசர் மாதிரி காட்டவேண்டும்?

ஆட்டோ சங்கர் said...

முரளி தலையில குண்டு விழுந்த மாதிரி டென்சன் ஆவுராரே...ஏன்?

Thamira said...

மற்றபடி இந்த திரைப்படம் சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமா என்றால் கேள்விக்குறிதான். திரைப்படம் பார்த்து சமூக விளிப்புணர்வெல்லாம் வராது என்பது இங்கிருக்கும் சராசரி காமன் மேனுக்கு கட்டாயம் தெரியும். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைத்திருக்கும் தயாரிப்பாளர் கமலுக்கு.//

மூன்று வரிகளும் ஒரு பாராவில் வரக்கூடியதா லூசு? இரண்டாவது வரியில் விளிப்புணர்வு வராது என்ற விளி'ப்புணர்வு காமன் மேனுக்கு இருக்குன்னு சொல்லிவிட்டு முதல் வரியில் உண்டாக்குமா என்பது கேள்விக்குறிதானாமா? முதலில் விளி'ப்புணர்வு வர்றதுக்கு இந்தப்படத்தில் என்ன இருக்குது அப்படி? நல்லா எழுதறேப்பு.!

Anonymous said...

//''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''//

உலகையே அச்சுறுத்தி வரும் இஸ்லாமிய தீவிரவாதிகள், தீவிரவாதத்தை கைவிடும் வரை.

நந்தா said...

//மற்றபடி இந்த திரைப்படம் சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமா என்றால் கேள்விக்குறிதான். திரைப்படம் பார்த்து சமூக விளிப்புணர்வெல்லாம் வராது என்பது இங்கிருக்கும் சராசரி காமன் மேனுக்கு கட்டாயம் தெரியும். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைத்திருக்கும் தயாரிப்பாளர் கமலுக்கு.//

அதீஷா இந்த வரிகள் குறித்தும் எழுத வேண்டும் என்றிருந்தேன். மேலோட்டமாய் பார்க்கும் போது நல்லா எழுதி இருக்காரு இல்லை என்ற எண்ணம் ஒருவருக்கு இதைப் படித்தவுடன் வந்தாலும், கருத்தியலில் இந்த வரிகள் ஒன்றுமே இல்லாதவை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. குறைந்த செலவில் ப்டம் எடுத்து வருவாய் ஈட்ட வேண்டும், அதற்கு கொஞ்சமேனும் நல்ல படம் எடுக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் நினைப்பது தவறா என்ன?

ஒரு திரைப்ப்டத்தின் நோக்கம் என்ன? மக்களை திருத்த நினைப்பதா? பொழுது போக்கா? ஓவரா மேசேஜ் சொல்லி சாகடிக்குறானுங்கடா என்று பதிவர்கள் பலரே சமுதாயத்தை மாற்றுகிறோ என்று நினைத்து படம் எடுத்தவர்களை நக்கலடித்து எழுதிய விமர்சனங்கள் எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

இங்கே மேசேஜை சொல்லியும் சொல்லாமல் பார்வையாளன் போக்கில் விட்டு அவனை யோசிக்க வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியும் ஒரு பார்வையாளான் திருந்த வில்லை என்றால் அது படத்தின் குற்றமா?

சரி மேசேஜே வேணாம். ஜஸ்ட் ஒரு பொழுது போக்கு படமாய்தான் இதை எடுக்கிறேன் என்ற எண்ணத்தில் கூட கமல் இதை எடுத்திருக்கலாம். அதுவும் ஒரு குற்றமா என்ன?

இவ்வளவு விரிவாய் இந்த மூன்று வரிகளை வைத்து நான் சொல்ல காரணம் என்னுடைய போன பின்னூட்டத்தில் உங்கள் முன் நான் வைத்த வேண்டுகோளே.

Indian said...

யுவகிரிஷ்ணா... 2004 க்குப் பிறகு உள்ளே போய்விட்டீரா? இன்னும் பாபர் மசூதி, குஜராத் கலவரம் என்று உதாரணம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர். இன்று இந்த நிமிடம் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் பொது உலகில் எங்கோ ஒரு மூலையில் இஸ்லாமிய தீவிரவாதத்தால் எத்தனை பேர் பாதிக்கபடுகிறார்கள் என்று தெரியுமா? வாழ்வில் இது ஒரு அன்றாட நிகழ்வாகி விட்டது. இந்து தீவிரவாதிகளுக்கு எல்லாம் அவ்வளவு சாமர்த்தியம் பத்தாது ஐயா. யானையாம்... எலியாம்... எதுயா யானை? எதுயா எலி? இன்று உலகமே எனக்கு கீழ் என்று மார்தட்டும் அமெரிக்கா கூட யாரை பார்த்துயா பயந்து கொண்டிருக்கிறான்? இந்து திவிரவாதியா உலகம் பூரா போய் குண்டு வைத்துக்கொண்டிருக்கிறான்? ஒரே ஒரு நிமிடம் கூட சிந்திக்க நேரம் இல்லாமலா இருக்கிறீர்கள்? இந்துக்களை எதிர்த்து பேசினால் மத சார்பற்றவர் ஒரு மாயை உருவாக்கி வைத்துக்கொண்டு இதுபோல் பேசிக்கொண்டு பல பேர் திரிகிறீர்கள். BJP யுடம் கூட்டணி வைத்தால் மதவாதி. Muslim league உடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை காவலர்கள்.

sakthi said...

சார் நீங்க சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும் ௧௯௪௭ பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை ௨௪% இன்று ௧% மீதி எங்க. வங்களத்தில் ௩௦% இருந்தாங்க இப்ப ௭% . அவங்க எங்க. சொல்லுங்க அல்லா சப்பிட்டுடற இல்லை . இன்னமும் காஷ்மிர் போன்ற இடத்தில் கோவில் உடைப்புகள் நடந்துட்டு தன இருக்கு. எது மாதிரி நாட்டுல எவளவோ இருக்கு. படத்துல
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக கட்றாங்கன்னு சொல்றிங்க .
அல்லா பெயரை சொல்லி எமாத்தரவனும் இருக்கான் . அதே அல்லா பெயரை சொல்லி நல்லது பன்றவனும் இருக்கன். ஆனா இந்து மதத்துல வந்து நீ புனித பேர் எடுனு சொல்லல புனித பேருன்னு தீவிரவாதிகலை வளர்க்கவும் இல்லை .

மணிகண்டன் said...

****
அநியாயமும் அக்கிரமும் எங்கெல்லாம் அதிகமாகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றி அதை அழிப்பேன். அதாவது சம்பவாமி யுகே யுகே! கிருஸ்ன பகவான் தெரியாம சொல்லிட்டு போயிட்டாரு ! எங்கயாச்சும் பிரச்சனை உண்டாச்சுனா அவரு வராரோ இல்லையோ சினிமா ஹீரோக்கள்லாம் கரெக்டா வந்து காப்பாத்துவாங்க! அதைதான் பல வருஷமா சூப்பர்மேன் தொடங்கி லேட்டஸ்ட் கந்தசாமிவரைக்கும் செஞ்சுகிட்டு இருக்காங்க. அதைதான் கமலும் இந்த படத்தில செய்யறாரு!
****

சோ ?

மணிகண்டன் said...

***
ஒன்று என்கிற விகிதாச்சாரப்படி சீட்டுக்குலுக்கி போட்டுப்பார்த்து கிருஷ்ண பரமாத்மாவா மாறி துவம்சம் செய்யறாரு. அதுக்கு தீவிரவாதம்னு ஒரு காரணம். மோடி குஜராத்னு ஒரு சப்பைக்கட்டு. ஆனாலும் தீவிரவாதிங்க முஸ்லீம்தான்..! எங்கேயோ இடிக்குது.. அறிவுஜீவிங்க மெல்றதுக்கு கமலஹாசன் நல்ல நொருக்குத்தீனியா வச்சிருக்காரு.. அதை அவிங்க நொருக்குவாங்க. ?( ஐ மீன் கமலஹாசனின் இந்துத்துவா பார்வை அது இது லொட்டு லொசுக்கு நுண்ணரசியல் பிரச்சனைகள்.. நமக்கு அது அவசியமில்லை .. நாம் அறிவுஜீவியும் இல்லை )
***

அப்புறம் எதுக்கு இவ்வளவு பெரிய பத்தி ?

நல்லதந்தி said...

//இந்து திவிரவாதியா உலகம் பூரா போய் குண்டு வைத்துக்கொண்டிருக்கிறான்? ஒரே ஒரு நிமிடம் கூட சிந்திக்க நேரம் இல்லாமலா இருக்கிறீர்கள்? இந்துக்களை எதிர்த்து பேசினால் மத சார்பற்றவர் ஒரு மாயை உருவாக்கி வைத்துக்கொண்டு இதுபோல் பேசிக்கொண்டு பல பேர் திரிகிறீர்கள். BJP யுடம் கூட்டணி வைத்தால் மதவாதி. Muslim league உடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை காவலர்கள்.//

சரியான வார்த்தை. ஒரு வேளை இந்துத் தீவிரவாதி என்று வைத்துக் கொண்டால் எங்கள் விடுதலைப் புலிகளை, கமல் சொல்கிறார் என்று, இம்மாதிரி ஆட்களே அதற்கும் சண்டைக்கு வரலாம்.

என் நடை பாதையில்(ராம்) said...

எனக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளை விட, அவர்களை வளர்த்து இந்துக்களுக்கு எதிராக திசை திருப்பும் மேற்க்கத்திய நாடுகளைத்தான் குற்றம் சொல்ல தோனுகிறது...

என் நடை பாதையில்(ராம்) said...

//*BJP யுடம் கூட்டணி வைத்தால் மதவாதி. Muslim league உடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை காவலர்கள்.*//

சரியா சொன்னீங்க indian.....

என் நடை பாதையில்(ராம்) said...

//*இஸ்லாமியனை தவிர்த்து இங்கே வேறெவனுமே தீவிரவாதியாக உங்கள் கண்களுக்குப் படவில்லையா?

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?*//

என்னங்க யுவ கிரிஷ்ணா சொல்றீங்க... இந்துக்களால் கொல்லப்படுவது நம் நாட்டிற்குள் மட்டும் தான். வெளிநாடுகளில் யாரும் இந்துக்களைக்கண்டு பயப்படுவது இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் உலக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனரே...

kabeer said...

அனானி,இந்தியன்னு ஆளாளுக்கு உள்ள நொழஞ்சு அரிப்ப தீத்தாச்சு.ஏண்டா எங்க தாலிய அறுத்தது பத்தாதா? இன்னுமா வெறி அடங்கல.எந்த நாட்லடா இந்துக்களுக்கு எதுரா அக்கிரமம் நடக்குது? நீங்க தீவிரவாதியா உருவெடுக்க அவசியமே ஏதும் இல்லாமலேயே rss பஜ்ரங்தல்னு முப்பதுக்கும் மேல தீவிரவாத இயக்கம் இங்க இருக்கு.ஏண்டா இடிச்சது மசூதிய,கொன்னது முஸ்லீம்கள.
ஆனா தடை என்னவோ இஸ்லாமிய இயக்கங்கள் மேலதான.உங்க rss மேல போட்ட மசுர நக்குன தடை ஆறே மாசத்துல மன்னாபோச்சே.
தெஹல்கா நார அடிச்சும் இன்னும் உங்களுக்கு புத்தி வரலயாடா? தேச பக்திய
குத்தகைக்கு எடுத்துருக்காரு.இவரு இந்தியனாம். அப்ப நாங்கலாம் என்ன ஆப்பிரிக்கனா?

Anonymous said...

ok jalra

Anonymous said...

ok jalra

Vijayakumar Subburaj said...

நல்ல படம்தான்.

இரு இடங்களில் மட்டுமே பெரும்பாலான கதை நகர்வதால் இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்திருக்கலாம்.

இந்தியாவில், போலிஸ் ஏதாவது பிரச்சினை என்றால் ஐஐடியை அழைப்பார்களா என்று தெரியவில்லை. :)

war room என்பதை முதன் முதலாக தமிழ் படத்தில் பார்க்கிறேன். Bourne trilogy படங்களில் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கமல் முஸ்லிமா, இந்துவா என்று அறிவதில் மோகன்லால் குறியாக இருக்கிறார்; கமலும் அதை மறைப்பதில் குறியாக இருக்கிறார். :)

கமல் ஏன் குண்டு இல்லாத பைகளை வேறு வேறு இடங்களில் வைக்கிறார் என்பது மட்டும் கடைசி வரை விளங்கவில்லை. :)

வெடிகுண்டு வெங்கட் said...

கொடுமையான, அதே சமயம் நடுநிலைமையான விமர்சனம்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்

சி.வேல் said...

Basha படத்தில் ரஜினி முஸ்லீம் பேரில் தாதாயிசம் செய்வார், மாணிக்கம் பெயரில் திருந்தி வாழ்வார்.எல்லாரும் கை தட்டி ரசித்தோம், ஆனா?
கமல் பாவம் சார், அன்புசெய்வது பற்றி படம் எடுத்தால் (அன்பே சிவம்) எவனும் பார்க்கரது இல்லை, சமுக நிலைப்பற்றிய படம் எடுத்தால், பார்ப்பான் என்பது, போங்க சார் , புள்ளைங்களையாவது , என் நாடு என் மதம் என் ஜாதின்னு இல்லாம மனித நேயத்தோட வளருங்க
எல்லாரும் மதத்திவீரவாதத்தை பேசாம விட்டாலே போதும்,நாடு திருந்திடும் ச்சே உலகம் திருந்திடும்

Una Thana Rasigar Manra "Vurupi"nar said...

Padatha parthoma ponoma ellama enna periya aaraichi vendi erukku?

Una Thana elutheerukka vimarsanam padichuparuppa.. pinni pedaleduthurkar. athulayum UPO padam parka pona kadhai thaan vuyaramana velicham(highlight)! Avaru kunidla kuchiya vittu kodanchirukanuga ...
:-)

ராஜரத்தினம் said...

//''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''//
இன்னும் எத்தனை நாளைக்கு இதுபோன்று போலி மதசார்பின்மை பேச போகிறார்கள்? இந்தியா என்றால் எப்படி பொட்டுவைத்து சேலை கட்டிய பெண்களை காட்டுகிறார்களோ? இந்தியாவில் பொட்டுவைக்காத பெண்களே இல்லையா?அது போலத்தான்.

ராஜரத்தினம் said...

//இஸ்லாமியர்கள் நம் நாட்டில் அதிகபட்சம் 20 கோடி பேர் தான். கிட்டத்தட்ட 75 கோடி இந்துக்கள் வசிக்கிறோம்.//

அட பாவி! 82கோடி 75 கோடியானதே உன்னைபோன்ற இந்து மதத்தை காட்டிகொடுத்தும், கூட்டிகொடுத்தும் இருக்கும், இருக்கின்ற மாமாக்களினால்தான்.

butterfly Surya said...

அதிஷா, நீ எழுதிய நாடோடிகள் விமர்சனம் அருமையாக இருந்தது.

Mahesh said...

அவிங்க என்னதான் சொல்ல வராங்கங்கறது இருக்கட்டும்... நீங்க என்னதான் சொல்ல வறீங்க?

கிருஸ்ன பகவான் மாதிரி (கமல் அப்பிடி சொன்னாரா படத்துல?) பண்றது தப்பா சரியா? 'விளி'ப்புணர்வு குடுக்காத படமெல்லாம் படமில்லைன்னா கோலிவுட்டை இழுத்து மூடி திண்டுக்கல் பூட்டுதான் போடணும். என்னமோ போங்க ஒண்ணும் புரியல. இன்னமும் பாப்ரி, குசராத், மும்பை, கோவை... எல்லாம் மறந்து 'மரத்'தமிழனாவே இருப்போம்.

Sanjai Gandhi said...

குட்.. ஹிந்தியில் பார்த்துவிட்டதால் அவ்வளவாய் ஸ்வாரஸ்யம் இல்லை.. ஆனாலும் நல்ல பொழுதுபோக்குப் படமாக பார்க்கலாம்.

//'இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''
//
நீங்க தீவிரவாதிகளுக்கு மத அடையாளங்கள் தருவதை நிறுத்தும் வரை. மததீவிரவாதிகள் தங்கள் மதத்தின் மீது தீவிர பற்று கொண்டு அதை மட்டுமே ஆதரிப்பார்களே ஒழிய , பிற மதத்தவரை கொல்ல மாட்டார்கள். அதனால் குண்டு வைக்கும் கோழை பொறம்போக்குகளுக்கு மதசாயம் பூச வேண்டியதில்லை. எந்த மதமாக இருப்பினும். பார்ப்பணர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்காக அவர்கள் சார்ந்திருக்கும் இந்து மதத்தை ஒட்டுமொத்தமாக குறை சொல்வதும், குண்டு வைக்கும் கபோதிகள் எதாவது ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் அந்த மதத்தையே குறை சொல்வதும் ஒன்று தான்.

தீவிரவாதியை தீவிரவாதியாய் மட்டுமே பாருங்க. அவன் பெயரை வைத்து மட்டும் மதசாயம் பூச வேண்டாம்.

Unknown said...

when compared to terrorist it is clear that most of the muslims are terrorist or made terrorist or supporting terrorist. I am not saying Hindu community doesn't have, but the percentage is more in muslims... some body has gone for a bet, i am sure he will lose as most of the terrorist are from muslim community only as they have been brain washed by so many organisation.

If they keep bomb in your house then you will come to know the reality.

sweet said...

அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்...
நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்

- நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்

Anonymous said...

கபீர் சாத்தான் வேதம் ஓதுகிறது. கேட்டால் குரான் என்கிறாது. நம்புவோமாக.

Anonymous said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

Unknown said...

பண்றத தானேயா காட்டுறாங்க....காஷ்மீர் பத்தி படம் எடுத்துட்டு...தீவிரவாதி பேர் வாசிம் கான்னு வைக்காம வேங்கடபதி ராஜுண்ணா வைப்பாங்க....
நாட்டுல நடக்கறதுல முக்கால்வாசி பாகிஸ்தான் தீவிரவாதிகள் பண்றது...அதத்தான் காட்டுறாங்க படத்துல....
//இதுபோல் பேசிக்கொண்டு பல பேர் திரிகிறீர்கள். BJP யுடம் கூட்டணி வைத்தால் மதவாதி. Muslim league உடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை காவலர்கள். //
வழிமொழிகிறேன்....
பா.ஜ.க வில் கூட முஸ்லிம் உறுப்பினர்கள் உண்டு..ஆனால் முஸ்லிம் லீக் கட்சி முஸ்லிம்களுக்கு மட்டும்தான்...அவங்களோட கூட்டு வெச்சா மதசார்பு இல்லை .....பா.ஜ.கவோட கொட்டு வெச்சா அது மதவெறி கட்சி....வாழ்க உங்கள் போலி மதச்சார்பின்மை...

Anonymous said...

''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''//

ungalukku antha matham patri puriyavillai.

மாதவன் said...

திரைப்படத்தை பொழுதுபோக்கு கண்ணோட்டத்தோடு பார்ப்பது தான் நமக்கும் நல்லது நம் சமுதாயத்துக்கும் நல்லது.
கண்டிப்பாக கமல் லாப நோக்கத்தோடு தான் எடுத்திருப்பார். போதனை செய்வதற்காக அல்ல.

samundi said...

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html

Unknown said...

///''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''///

Islamiyargal theeviravathathai vidum varai.....

பீர் | Peer said...

//Cable Sankar said :
September 19, 2009 4:23 PM
இல்லாமியர்களை தவிர ப்டத்தில் சொன்ன சம்பவஙக்ளில் வேறு மதத்தினராவது குண்டு வைத்திருந்தார்களா..? //

அன்பின் சங்கர்,

நீங்கள் இயக்கப்போகிற படத்தில் கூட இஸ்லாமியர்கள்தான் இப்படித்தான் இருக்கப் போகிறார்களா?
அல்லது அப்படி (இருப்பவர்களை மட்டும்) காட்டினால் தான் கை தட்டலும் காசும் பார்க்க முடியும் என்பது உங்கள் திரைத்துறையின் மூட நம்பிக்கையா?

இறக்குவானை நிர்ஷன் said...

அதிஷா,
வித்தியாசமான பாணியிலான கண்ணோட்டம் உங்களுடையது.

//ஆனால் மனுசன் நிஜமாவே ஒரு மேதை. வெறும் முகபாவனையிலும் குரலிலுமே நடித்து தள்ளுகிறார்.//

சில இளம் கதாநாயகர்களின் அளவுக்கதிகமான நடிப்பு எரிச்சலூட்டம். கமலின் பக்குவமான,கதையோட்டத்துக்குத் தேவையான நடிப்பு அவரையே உதாரணமாகக் காட்டுகிறது.

M.S.R. கோபிநாத் said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.

முருகன் said...

இட் இச் புல்ல் ஷிட் விமர்சனம்.

ஊர்சுற்றி said...

அண்ணாத்த,
நானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)

Anonymous said...

உன்னைப்போல் ஒருவன் ஒரு கற்பனைப் படம். பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. நமது கருணாநிதி அவர்களை கிருஷ்ணராகவும், ஸ்டாலின் அவர்களை அர்ஜுனனாகவும் சித்தரித்து தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுக் காட்சியளிக்கின்றன. இதுவும் கற்பனையே. பின்னதைச் சகித்துக்கொள்ளும் நாம் உன்னைப் போல் உருவனையும் சகித்துகொள்ளலாமே!