04 November 2009

பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன?
நர்சிம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். தொடர் பதிவுகள் என்றாலே கொஞ்சம் அலர்ஜியான சமாச்சாரமாகத்தான் இருக்கும்! நர்சிம் மாதிரி மிகப்பெரிய ஆள் அழைக்கும் போது மறுக்க முடியாதே! அதனால் அவரை கலாய்ப்பது போல


பிடித்த பத்து - தினமும் அடிக்கும் கிங்ஸ் ஒரு பாக்கட்டில் இருக்கும் பத்து சிகரட்களும்
பிடிக்காத பத்து - அந்த பத்து சிகரட்களையும் பிடிப்பது பிடிக்காது...


என இரண்டு வரியில் பதிவை போட்டுவிட எண்ணியிருந்தேன்! இருந்தாலும் என்னை நானே எனக்கு பிடித்தவர்களை தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும் போல் இருந்தது..அதனால் இது!

1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : ஜெயலலிதா (ஈழத்தாய பிடிக்காம இருக்குமா!)

பிடிக்காதவர் : கலைஞர் (தமிழ்துரோகியாமே!)2.எழுத்தாளர்

பிடித்தவர் : ராஜேஷ்குமார் ( எங்கூர்காரரு.. அதுவும் எங்க ஏரியா.. என்னையும் வாசிக்க வச்ச முதல் எழுத்தாளர்! )

பிடிக்காதவர் : சாரு ( புதிர்!)


3.பதிவர்

பிடித்தவர் : மணிகண்டன்

பிடிக்காதவர் : கே.ரவிஷங்கர் ( ஸ்ஸ்ப்பா விமர்சனத்தை நினைச்சாலே கதிகலங்குதப்பா!)


4.இயக்குனர்

பிடித்தவர் : ஏ.டி.ஜாய் ( ஷகிலாவை பிட்டுப்படங்களில் அறிமுகம் செய்த மகான்!)

பிடிக்காதவர் : ஜெய்.தே.வன் ( சமீப காலமாக எந்த பிட்டுப்படங்களும் எடுக்காததால் )


5.நடிகர்

பிடித்தவர் : விஜய் ( ஓகே ஓகே ஓகே கூல் டவுன் சிரிக்காதீங்கப்பா!)

பிடிக்காதவர் : அஜித் ( ஓகே ஓகே நோ டென்சன்!)6.நடிகை


பிடித்தவர் : அன்றும் இன்றும் என்றும் மஞ்சுளா


பிடிக்காதவர் : திரிஷா ( மொக்கை ஃபிகர் )7.இசையமைப்பாளர்


பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்

பிடிக்காதவர் : யுவன்ஷங்கர்ராஜா8.அரசு அதிகாரி

பிடித்தவர் : வெ.இறையன்பு

பிடிக்காதவர் : (பாஸ்)


9.விளையாட்டு வீரர்

பிடித்தவர் : திருநாவுக்கரசு குமரன் ( மறந்தீட்டீங்களோ.. )

பிடிக்காதவர் : அப்ரிதி


10.தொழிலதிபர்கள்

பிடித்தவர் : மல்லையா ( வாராவாரம் படியளக்குற தெய்வமாச்சே!)

பிடிக்காதவர் : அவரேதான்! ( குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு! - அப்பாடா!

பதிவு கடைசில கருத்து சொல்லியாச்சு !)


மேலே இருக்கும் படத்துக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு என யோசிப்பவரா நீங்கள்!

உடனடியாக என் அழைப்பை ஏற்று தொடர்பதிவை தொடரவும்..

நானும் நாலு பேர கூப்பிட்டு இந்த கொலைவெறிப் பணியை தொடர வேண்டும் என்பதனால்!

1.ஜ்யோவ்ராம் சுந்தர்

2.சுகுணா திவாகர்

3.ஆழியுரான்

4.முரளிக்கண்ணன்

5.பொட்டீக்கடை

15 comments:

gulf-tamilan said...

//திருநாவுக்கரசு குமரன் //
யாருங்க இவரு?? கொஞ்சம் சொல்லுங்க!!

கே.ரவிஷங்கர் said...

இந்த ”மெட்ராஸ் ஐ” பத்துக்குப் பத்து
பதிவுலகில் எங்கும் பரவி இருப்பதால் நானும் போட்டுவிட்டேன். என்னைக் கூப்பிட்டவர்கள் சஷி தரூர் மற்றும் கரீன கபூர்.

http://raviaditya.blogspot.com/

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//பிடிக்காதவர் : அப்ரிதி//

போன வரிக்கு இந்த வரி க்ளூதானே

ஆதிமூலகிருஷ்ணன் said...

குட் பாய்.!

கிறுக்கன் said...

பிடித்தவர் நான்
பிடிக்காதவர் அதிஷா.....எல்லோருக்கும்

சும்மா அதிருதா....

போயா ஒன்னும் புரியல

vanila said...

சொன்ன வுடனேயே.. சிங்கம் புறப்பட்டுருச்சே... இத இத இதத்தான்.. எதிர் பாத்தோம்.. வலையுலக வயுக்கைப்புயல்.. (எல்லா தளபதி டைட்டில்'ம் புக் ஆயிடுச்சும்மா சாரி..) வாழ்க.. தொடரட்டும் உங்கள் கொலைப்பணி..

vanila said...

பிடிச்ச நடிகர் பீமன் ரகு' ன்னுல்ல இருக்கணும்.. ஏதோ ரசாயனக் கோளாறு.. வேற ... பிடித்த தியேட்டர் : ராம் (இருக்கா இப்பவும் பகல் காட்சி) / ஜோதி,
பிடித்த வாகனம் : போகும் பொது பைக்.. யாரவது தேடி வர்றாங்கன்னா .. " ஆட்டோ / சுமோ ".

Anonymous said...

பிடிச்ச நடிகர் பீமன் ரகு' ன்னுல்ல இருக்கணும்.. ஏதோ ரசாயனக் கோளாறு.. வேற ... பிடித்த தியேட்டர் : ராம் (இருக்கா இப்பவும் பகல் காட்சி) / ஜோதி,
பிடித்த வாகனம் : போகும் பொது பைக்.. யாரவது தேடி வர்றாங்கன்னா .. " ஆட்டோ / சுமோ ".

பீர் | Peer said...

அதிஷா, இந்த பதில்களுக்கு காப்பிரைட் இல்லையே?

கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுக்குமே த்ரிஷாவை பிடிக்கவில்லையே... அதையே சொல்லி நானும் ஜீப்புல ஏறிக்கறேன்.

(உங்க ஏரியா, யூரியா போடாத நிலம் மாதிரி வறண்டு கெடக்கு. இடையிடையே எதாவது எழுதிப்போடுங்க அதிஷா)

Cable Sankar said...

திரிஷா ஒரு மொக்கை பிகர் தான் அதிஷா..

மணிகண்டன் said...

திரு குமரன்ன்னு எழுதினா மக்களுக்கு ஞாபகம் வரும் :)-

Jawahar said...

பிடிச்சதும், பிடிச்சதிலே பிடிக்காததும் ன்னு ஆரம்பிச்சப்பவே இந்தாள் வித்யாசமானவன்னு நினைச்சேன். ஏமாத்தல்லை. ரொம்ப ரசிச்சது பிடிக்காத அரசு அதிகாரியும், மல்லையா பத்தின காமென்ட்டும்.

திரிஷாவை மொக்கை பிகர்ன்னு சொன்னதுலே கொஞ்சம் வருத்தம்.

http://kgjawarlal.wordpress.com

மோகன் said...

///
பிடித்தவர் : அன்றும் இன்றும் என்றும் மஞ்சுளா//////////////

இன்றுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..................

பட்டிக்காட்டான்.. said...

//.. வெ.இறையன்பு ..//

எனக்கும் பிடித்தவர், அநேகமா நீங்க ஒருத்தர் தான் இவர சொல்லி இருக்கீங்கன்னு நினைக்கறேன்..

vanila said...

நானும் என்னவோ பிட்டு' ல வர்ற யாரோ' ன்னு நெனச்சிட்டேன்... ஏன் ஜி.. தினமலர் புகழ் மஞ்சு வா.. நடத்துங்க.. நடத்துங்க..
ந. ந. ந. ந. நா.... நா. நா. நா..... ந. ந. ந. நாஆ....