23 November 2009

பழசிராஜாவின்ட விமர்சனம்!


என்ன கண்ணுகளே சுகம்தன்னே! போன வாரத்தில நானும் நம்மோட கூட்டுகாரரும் சேர்ந்துட்டு ஒரு நல்ல படம் காண வேண்டி முடிவாயிடுச்சு. ஆனா ஏது படம்னு முடிவாயி இல்ல. அப்போ தான அந்த ஐடியா வந்துச்சு. பின்னாடி அந்தாளும் நானும் சேர்ந்துட்டு தமிழ்ல வந்துருக்கிற பழசிராஜா படம் காணலாம்னு முடிவு செய்தோம். பழசிராஜா! மலையாளக் கூட்டுகாரன்கள் ஒரு பாடு கஷ்டப்பட்டு எடுத்தபடம் . பட்ஜெட் முப்பது கோடி!. நம்மோட ஊரில வீரபாண்டிய கட்டபொம்மன்னு ஒரு ஆளு இருந்தாங்கல்ல அவரப் போல பழசிராஜா வெள்ளக்கார தொரமார எதிர்த்த ஒரு ராஜா. அந்த ஆளுட கதைய எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி , ஹரிஹரன் டைரக்ட் சேய்திருக்காங்க.

படத்தோட கத எப்போதும் போல நம்மோட நாட்டுக்கு வந்த வெள்ளக்கார தொர மார நம்மோட ஆளு ஒருத்தர் அடிச்சு விரட்ட டிரை செய்து பின்னாடி தோத்துப்போய் மரணமாகறதுதான். லேட்டஸ்டு டெக்னோலஜியும் ரசூல் பூக்குட்டியோட சவுண்டும் இளையராஜாவோட மியூசிக்கும் படத்தில ஒன்னாங்கிளாஸா உண்டு. கதயும் தெரக்கதயும் ஆவ்வ்வ்வ்வ் என்ட குருவாயூரப்பா! ஒரு பாடு மூனரை மணி நேர படம். லாஸ்டில ஹீரோ மரிச்சுருவாருன்னு அறிஞ்சாலும் அத வளிச்சு வளிச்சு ஆவ்வ்வ்வ்வ் ஒரு பாடு தல வேதனைதான் வளி(லி)ச்சு.

நம்மட நாட்டுக்கார கமல் இந்த படத்திட ஸ்டார்ட்டிங்கில் வாய்ஸ் கொடுத்துருக்கு. பழசிராஜாவோட சரத்குமார் நடிச்சிருக்கு. நம்மோட குட்டி கனிகாவும் உண்டு. அந்த பெண்ணு பாடுற ஒரு பாட்டு ‘’காலப்பாணி’’ , இல்ல... இல்ல... சிறச்சால படத்துல வர செம்பூவே பாட்டு போல உண்டாகி இருந்தாச்சு. பேக்ரவுண்ட் மியூசிக்கில் ராஜாசார் தன்ன ராஜா. அடிபொலி!. படத்தில் சுமனும் உண்டு. ஜெயன் உண்டு. எல்லார் மண்டயிலயும் வல்லிய ஒரு குடுமி உண்டு!. எல்லாருட நடிப்பும் நல்லா இருந்தாச்சு. படத்திட எங்க பார்த்தாலும் ஹீரோயிசம்! பஞ்ச் டயலாக்!, வீரவசனம்! அத்தனையும் வேஸ்ட்.

ஜெயமோகன் டயலோக் எழுதிருக்கு. டிரான்சுலேசன் மாத்ரம் சேய்திருந்தாலும் இந்த விமர்சனத்தினப்போல மலையாளமும் அல்லாத்த தமிழும் இல்லாத்த தழையாளத்தில் வசனம் எழுதிட்டுண்டு. இத்தனை பேசியாச்சு , மம்முட்டி.. இன்னொரு அடிபொலி! சூப்பர் ஆக்டர்!.

நம்மட கமல் மருதநாயகம் படம் எடுக்கான் ஒரு பாடு கஷ்டப்பட்டு! பின்ன ட்ரோப் செய்து , பின்ன மர்மயோகி ஸ்டார்ட் செய்து, பின்ன ட்ரோப் செய்து , பழசிராஜாவின காணும்போது அதானு மைன்ட்ல வந்தாச்சு. நம்மட காலத்தில் சரித்ர படம் எடுக்கானெங்கில் நிறைய பட்ஜெட் வேண்டிட்டு உண்டு. இல்லாட்டி போனா பழசிராஜாவினப்போல தூர்தர்ஷன் டைப் நாடகம் ஆகிடும்.
கமல் பொறுமையாயிருந்து தேவையான நிதி திரட்டிவிட்டு மருதநாயகத்தை எடுக்கலாம். நல்ல சினிமாவிற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். மற்றபடி மலையாளத்தில் பழசிராஜா ஒரு வித்தியாசமான முயற்சி , வரலாற்றோடு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும் ஆந்திராவிற்கு அல்லுரி சீதாராம ராஜீவைப்போல , தமிழகத்திற்கு கட்டபொம்மன் மருது சகோதரர்களைப் போல கேரளத்தின் தேசபக்திக்கு ஒரு ஹீரோவாக இந்த பழசிராஜா முன்னிறுத்தப்பட்டுள்ளார். இன்னும் நேர்த்தியாக விறுவிறுப்பாக கதை சொல்லியிருந்தால் பழசிராஜா மெய்சிலிர்க்க வைத்திருப்பார். ஏனோ வழவழ கொழகொழ காட்சிகளும் புரியாத தமிழ் மொழிபெயர்ப்பு வசனங்களும் பகல் காட்சி பார்ப்பவரையே மெய்மறந்து தூங்க வைக்கின்றன. படத்தின் மலையாள பதிப்பில் நான்கு மணிநேரம் ஓடுகிறதாம் , நல்ல வேளையாக தமிழில் மூன்றரை மணிநேரம்தான்.

முன்னூறு கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுத்திருந்தால் மெல்ஜிப்சனின் பிரேவ் ஹார்ட் போல வந்திருக்கும். முப்பது கோடிக்கு டிரைலர் மட்டுமே மிரட்டலாக வந்துள்ளது. பிரேவ் ஹார்ட் இருந்தால் ஒரு முறை கஷ்டப்பட்டு பார்க்கலாம்!

10 comments:

நையாண்டி நைனா said...

நிங்கள் விமர்சனம் படிச்சே யான் பேடிச்சு போயி....

Unknown said...

ஹம்ம்.. படத்த ரெண்டு தடவ பாக்கலாம் நா உங்க விமர்சனத்தையே ரெண்டு தடவ படிச்சேன்...

முரளிகண்ணன் said...

\\நிங்கள் விமர்சனம் படிச்சே யான் பேடிச்சு போயி....\\

எந்தா நானும் தான்

Prakash said...

யோவ் என்ன எழவு பாஷைல எழுதியிருக்க? . நாசமா போச்சு படிச்ச பத்து நிமிஷம்.

Sure said...

Good Try,

sweet said...

COMPARE TO KAMAL, SURYA CAN DO, ANY BODY WILL ACCEPT THIS

M.S.R. கோபிநாத் said...

அய்யே..உங்க மலையாளம் ஒருபாடு என்னை கஷ்டப்படுத்தி..பின்னே நோக்கான்..

Unknown said...

//ஜெயன் உண்டு. எல்லார் மண்டயிலயும் வல்லிய ஒரு குடுமி உண்டு!//

ஓ...சேட்டா!ஏது இத்தர விதூஷம்?சூப்பரானு.


ஏய்... சேட்டா!ஞான்,எண்ட பாரியாள்,மகன் ஈ சித்திரத்த கண்டு களிச்சு.இச்சித்திரம் புது மாதிரியல்ல.எண்ட மகனுக்கு வல்ல சந்தோஷம்.இது மாதிரிகண்டிட்டில்லா.
அதான் நோக்கு.அது ஜெட்டிக்ஸ் பாத்து பாத்துநொந்து போயானு.


ஞானும் ஒத்த ரெய்வூ எழுதிய்ரிக்கான்.. காணோ சேட்டா?

selvangood said...

எண்ட சேட்டா ,
நிங்களோட விமர்சனம் சுகம்.

கார்க்கிபவா said...

பகல் காட்சி கண்டோ? மலையாள படமோ? பிட் உண்டோ?