25 February 2010

வாழ்த்துக்கள்


சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிறந்தநாளில் , யாருமில்லா தனி அறையில் வாழ்த்த ஆளின்றி , கனத்த மனத்தோடு தனிமையில் இருந்திருக்கிறேன். நண்பர்கள் அதிகமில்லாமல் சென்னையின் இருண்ட மேன்சன்களில் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை வாழ்த்துக்களே இல்லாமல் கடந்திருக்கிறேன்.எத்தனையோ தீபாவலிகளும் பொங்கலும் பிறந்தநாளும் வெறுமையாய் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் நம்மை வாழ்த்த யாருமே இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன். அது போன்ற சமயங்களில் யாரவது போனில் அழைத்துப்பேசும் போது வாழ்த்து சொல்லத்தான் அழைக்கின்றனர் என்று போனை எடுத்தால் வேறு ஏதாவது செய்தியாக இருக்கும். மனவருத்ததோடு அதையும் கடந்து சென்றிருக்கிறேன்.

இதோ ஆண்டுகள் இரண்டு கடந்துவிட்டது. என்னை சுற்றியிருந்த சூழல் மொத்தமாய் மாறியிருக்கிறது. இப்போது எல்லாமே தலைகீழ். ஒற்றை அழைப்புக்காகவும் வாழ்த்துக்காகவும் ஏங்கியவனின் வாழ்க்கை புரட்டிப்போட்டது போலிருக்கிறது. பிப்ரவரி 18 2010 எனது திருமணம். 500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் , தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் , டுவிட்டரில் , வலைப்பதிவுகளிலில் , பின்னூட்டங்களில், நேரிலும் பலர் என வாழ்த்துக்களாலும் அளவில்லா அன்பாலும் பலரும் திக்குமுக்காட செய்தனர். இதில் பலரும் முகம் அறியாத நண்பர்கள். ஒரு கட்டத்தில் என்னால் போனில் அழைத்து வாழ்த்துபவர்களிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் அனைவருக்கும் சொல்லிவைத்தாற்போல நன்றிங்க , ரொம்ப நன்றிங்க என்பதைத்தவிர வேறெதையும் சொல்ல முடியவில்லை.வேறெதையும் சொல்லவும் முடியவில்லை. என்னால் அனைவரையும் நேரில் அழைக்க முடியாவிட்டாலும் அழைக்காமலே பல நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சியளித்தது.

அதை இணையத்தை தவிர வேறெதுவும் சாத்தியமாக்கவில்லை. அப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிய இணையத்துக்கும் கூகிளுக்கும் முதல் நன்றி. நேரில் வந்து வாழ்த்திய திருப்பூர் கோவை சென்னை ஈரோடு வலைப்பதிவர்களுக்கு நன்றிகள். திருமண நாள் படங்களை அன்றைக்கே வலைப்பதிவில் ஏற்றி திருமணத்திற்கு வரமுடியாது போனவர்களுக்கு உதவிய பதிவர் கோவை ஷர்புதீனுக்கு நன்றி. (படங்கள் இங்கே )


மற்றபடி மின்னஞ்சல் , குறுஞ்செய்தி , டுவிட்டர் ,பேஸ்புக் , சாட் என எல்லா இடங்களிலும் என்னை மனதார வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

நிஜமாகவே என்ன சொல்வதென்று தெரியவில்லை. நன்றிங்க ரொம்ப நன்றிங்க


சென்னையிலும் பிற ஊர்களிலும் பல நண்பர்கள் திருமணத்திற்கு வருவதாக 100% வாக்களித்துவிட்டு வராமல் ஏமாற்றியிருந்தாலும் அவர்களுடைய சூழ்நிலையை உணர்கிறேன். பரவாயில்லை. ஊரில் உட்கார்ந்து கொண்டே வாழ்த்திய அந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல...


********

26 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் நன்றிகளுக்கு நன்றிகள் :)

வால்பையன் said...

//ரில் உட்கார்ந்து கொண்டே வாழ்த்திய அந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல...//

அவுங்களும் வாழ்த்தியிருக்காங்கல்ல, பார்சல் சாப்பாடு அனுப்பியிருக்கலாமே!

சி. கருணாகரசு said...

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

நமக்குன்னு ஒரு உயிர் எங்கியோ பொறந்து வளராமலா இருக்குமுன்னு சொல்வாங்க!

இப்போ என்னன்னா..... நமக்கே நமக்கான அந்த ஒரு உயிரோடு, இன்னொரு பெரிய கூட்டமே அன்பாலே நம்மைக் கட்டிப்போட்டதென்னவோ நெசம்.

சரி சரி. சென்னையிலே ஒரு வரவேற்பு வச்சுருங்க. தோ.... கிளம்பி வந்துடுவோம்.

Dr.Rudhran said...

i would like to host a dinner for you and your wife

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..

♠புதுவை சிவா♠ said...

பெரிய கூட்டமே வ(அ)ம்பாலே நம்மைக் கட்டிப்போட்டதென்னவோ நெசம்.

வாழ்த்துக்கள் அதிஷா

* சுந்தரராஜன் * said...

Dr.Rudhran said...
//i would like to host a dinner for you and your wife//

me too !

ROMEO said...

வாழ்த்துக்கள் :)

PPattian : புபட்டியன் said...

டோராவும் புஜ்ஜியும் போல, செட்ரிக்கும் ஜென்னும் போல, பும்பாவும் பும்பலுவும் போல என்றென்றும் சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வாழ்த்துக்கள்..

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் அதிஷா!

Nataraj said...

அதிஷா. .உங்கள் முதல் பாரா மிக உண்மை/கொடுமை. நானும் உணர்ந்திற்கிறேன்.
உங்களின் முகம் தெரியாத நண்பனாய் ட்விட்டரில் வாழ்தியவனில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. ஜமாயுங்கள் திருமண வாழ்க்கையில்!

vanila said...

வாழ்த்துக்கள் அதிஷா.. சென்னை வரும்பொழுது சந்திப்போம்..

ரிஷி said...

புது மாப்பிள்ளை'கு வாழ்த்துக்கள் :)

MSV Muthu said...

Congratulations Athisha! Have a very happy married life!

Anonymous said...

அன்பு அண்ணன் அதிஷா உங்களை வாழ்த்தியதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் ........
அன்புடன்
நெல்லைமஸ்தான்
9942334490.

Chinnaminer said...

வாழ்த்துக்கள்...

பேநா மூடி said...

வாழ்த்துக்கள் சகா

பாபு said...

வாழ்த்துக்கள்

காவேரி கணேஷ் said...

அன்பு வாழ்த்துக்கள் அதி.

Guru said...

வாழ்த்துக்கள் அதிஷா

லேகா said...

வாழ்த்துக்கள் அதிஷா :-)

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள் அதிஷா.

அரவிந்தன் said...

பெங்களுருக்கு வந்து இரண்டு நாள் நம்ம வீட்ல தங்கிவிட்டு போங்க..

நேரத்து வீட்டுக்கு போய்டுங்க.

வீட்டு வேலைகளை நீங்க சரிசமமா பகிர்ந்து கொண்டு செய்யுங்கள்.அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

NIZAMUDEEN said...

வாழ்த்துகிறேன், அதிஷா + திருமதி அதிஷா!

Babaji M P said...

Happy Married Life Adhisha !