30 March 2010

அங்காடித்தெரு - யதார்த்தமான அபத்தம்சோகம் தாங்கமுடியவில்லை. கதறி அழவேண்டும் போல் இருக்கிறது. அய்யகோ! என்ன கொடுமை இது. இதற்கு மேல் தாங்காது! தமிழில் இதுவரை வெளியானதிலேயே இதுதாண்டா சூப்பர் படம். உலக சினிமாவே இங்கே பார் என் தமிழன் எப்படிப்பட்ட படம் எடுத்திருக்கிறான். இப்படி ஒரு படம் இதுவரை தமிழில் வந்ததே இல்லை. அடேங்கப்பா என்ன ஒரு உழைப்பு. என்ன நடிப்பு. இப்படி ஒரு கதைக்களம் எந்த இயக்குனராலாவது கையாள முடியுமா? கண்களில் நீர் தாரைதாரையாக வழிகிறது. உணர்வுகள் , பிம்பங்கள் , காட்சிப்படிமங்கள் . தடிமங்கள் , மற்றும் பல மண்ணாங்கட்டிகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பலே பலே! அங்காடித்தெரு! – ஒரு உணர்ச்சிகுவியலில் கண்டெடுத்த வைரம்.. ஓவ் ஓவ் ஓவ்...  (கதறி அழுகிறேன்... ஸாரி என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. தயவு செய்து தியேட்டரில் பார்த்து நீங்களும் அழவும் )____________________________________________________________________________________

மன்னிக்கவும். அ.தெரு படம் உங்களுக்கு பிடித்திருந்தால் , அதை நீங்கள் உளமாற நேசிப்பவராக இருந்தால் , உங்களுக்கான விமர்சனம் மேலே.. இதற்கு மேல் படிக்க வேண்டாம். மேலே இருக்கும் கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரவேண்டாம். இல்லை மேலும் படித்து உங்கள் மனதை புண்ணாக்கிக் கொள்ள விருப்பமிருப்பவர்களும் மற்றவர்களும் தொடரலாம்.

மேலே கண்ட விமர்சனம் உங்கள் கண்களால் படம் பார்த்து எழுதியதாக இருக்கலாம். இனி என் கண்ணால் நான் கண்ட அங்காடித்தெரு அனுபவம்.

விஜய.டீ.ராஜேந்தரை தெரியாதவர்கள் யாராவது தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? அவருடைய படத்திலிருந்து ஒருகாட்சி. அண்ணனைவிட்டு ஓடிப்போன தங்கை. வறுமை தாளாமல் ரோட்டில் சோப்பு விற்பாள். ரிக்சா ஓட்டிக்கொண்டு வரும் அண்ணன் அவளை பார்க்கிறான். அவளோ கடுமையான வறுமையில் வாடி வதங்கி வயிறு ஒட்டி ஒல்லியாய் கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தும் தலைகுனிந்து கடந்து செல்கிறாள். அவனால் அவளிடம் பேசமுடியவில்லை. கோபம் தடுக்கிறது. தன் ரிக்சாவின் கைப்பிடியை இறுகப்பற்றிக்கொள்கிறான். கேமரா அவளது தலையிலிருந்து மெல்ல கீழிறங்கி கால்களை காட்டுகிறது , கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் நடந்து செல்கிறாள். அண்ணன் ஓவென்று கதறி அழுகிறான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த தியேட்டரே கதறி அழுகிறது. அம்மா அழுகிறார் என்று சின்ன பையனான நானும் காரணம் தெரியாமல் கதறி அழுகிறேன். துலாபாரம் என்று ஒருபடம் பலருக்கும் நினைவிருக்கலாம். சமீபத்தில் வெளியான நான்கடவுள் கூட அதே ரகம்தான். அட அந்த காலத்து அரிசந்திரா நாடகங்கள் கூட இதே வகைதான். அதே அழுகாச்சி மசாலாவை ரங்கநாதன் தெருவின் ஜனசந்தடிகளுக்கு நடுவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோடும் பாத்திரங்களோடும் படமாக்கியிருக்கிறார் வசந்தபாலன்.

இதை விட மோசமான அழுகாச்சிப்படங்களும் தமிழில் உண்டு. அங்காடித்தெரு அந்த ஆயிரத்தில் ஒன்று. கிளிசேக்கள் நிரம்பி வழியும் ஒரு திரைப்படம். முதல் காட்சியிலேயே சாவு. அடுத்த அரைமணிநேரத்தில் இன்னொரு சாவு. மீண்டும் கால் மணிநேரத்தில் இன்னொரு சாவு. இப்படி படம் நெடுக ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை யாராவது சாகின்றனர். சினிமா தியேட்டரில் படம் பார்க்கிறோமா அல்லது ஆபரேஷன் தியேட்டரிலா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அத்தனை மரணங்கள். விதவிதமாய். கால் நாறி அழுகிப் போய் ஒருவர் சாகிறார், தற்கொலை செய்துகொண்டு ஒருவர் , விபத்து, விபத்துகள்... தொடர்ச்சியாக. அதிலும் ஒவ்வொரும் இறந்து போனதும் கடுமையான ஓலம். மண்டை காய்கிறது. சாவு வீட்டுக்குள் நுழைந்தது போல விடாமல் துரத்தும் மன உளைச்சல்... அடப்போங்கப்பா இதைவிட கடுமையான மரணங்களையும் அதற்கு பிறகான பிற்சேர்க்கைகளையும் சங்கதிகளையும் தமிழ்சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம்? இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா?

முக்கால்ப் படம் துணிக்கடையின் உள்ளேயே நடக்கிறது. எப்போதும் முறைத்துக் கொண்டே அலையும் சூப்பர்வைசர். கொஞ்சி குலாவித்திரியும் அப்பாவி ஏழைத் தொழிலாளர்கள். பொழுதன்னைக்கும் அவர்களை தூக்கிப்போட்டு தூர்வாரும் முதலாளி வர்க்கம். எந்த நேரத்தில் எவனை போட்டு அடித்து ரத்தம் காட்டுவார்களோ என்ற பயத்தோடே படத்தை அணுக வேண்டியிருக்கிறது. எனக்கு சத்தியமாக ரத்தம் என்றாலே அலர்ஜி. அதுவும் பெண்களை முடியை பிடித்து இழுத்துப்போட்டு மிதிமிதி என்று மிதிக்கும் வன்முறையெல்லாம்... தேர்ந்த சைக்கோக்களால் மட்டுமே ரசிக்க முடியும். என்னால் அதை பார்க்க முடியாமல் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டேன்.

யதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும். அதிலும் அந்த சூப்பர்வைஸர் காட்சிகள். டிபிகல் தமிழ்சினிமா வில்லன். பெண்களை போட்டு அடித்து துவைத்து பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர். படத்தில் இப்படி பல வில்லன்கள் முதலாளி வில்லன், போலீஸ் வில்லன் . சாமி கும்பிட்டுவிட்டு ஏழைகளை கட்டிவைத்து உதைக்கும் வில்லன்களை எம்.ஜி.ஆர் படங்களிலேயே நிறைய பார்த்தாகிவிட்டது. சேம் கிளிசே! மைகாட்! சேம் பிளட்.
துவக்கக் காட்சிகளில் சோற்றுக்கும் இருப்பிடத்துக்கும் முண்டியடித்துக் கொள்வதாய் காட்டப்படும் ஹாஸ்டல்கள் பாதி படத்திலேயே அடிதடி இல்லாமல் நெருக்கடி இல்லாமல் நார்மலாகிவிடுகிறது. படத்தின் கதைக்களத்தைவிட அதில் சொல்லப்பட்ட காதல் பிரதானமாக இருந்தாலும் அதுவும் சரியில்லை. மனதில் ஒட்டவில்லை.

படத்திற்கோ கதைக்கோ டைரக்டருக்கோ படம் எடுத்தவருக்கோ பார்ப்பவனுக்கோ வெளியே டிக்கட் கிளிப்பவருக்கோ , சமோசா விற்பவருக்கோ சம்பந்தமேயில்லாத காட்சிகள் ஒரு மணிநேரம் படத்தை நிறைத்திருக்கிறது. பாலகுமாரன் நாவல்களில் கதை போய்க்கொண்டிருக்க திடீரென மைக்கைப்பிடித்து எழுத்தாளர் அறிவுரை சொல்லுவாரே அதே பாணியில் திடீரென ஈசாப் கதைகளுக்கு இணையான கட்டணமுறை கழிப்பிட கதை வருகிறது. கழிப்பிடத்தை கழுவியன் அடர் கறுப்பாகத்தான் இருந்தான். குள்ளமான ஒருவனுடைய கல்யாணக்கதை வருகிறது. இஸ்லாமிய பெரியவர் ஒருவருடைய கதை வருகிறது. நடுவில் வயசுக்கு வந்த ஏழைத் தங்கையின் கதை வருகிறது. யூஸ்ட் டிஷர்ட் விற்பவனின் கதை எதற்கு வருகிறதென்று யாருக்குமே தெரியாது. மெகாசீரியல்களில் 52 எபிசோட்களில் மையப்பாத்திரத்தின் கதை பத்து எபிசோட்களில்தான் வரும். அதைப்போல மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அனுமானிப்பதற்குள் படத்தின் கிளைமாக்ஸ் வந்து கதறி கதறி அனைவரும் அழுகின்றனர். நமக்கு திருமதி செல்வம் சீரியலின் நாற்பது எபிசோட்களை ஒட்டுமொத்தமாக பார்த்த எஃபக்ட். ஸ்ஸ்ப்பா..

கிளைமாக்ஸ் என்று எதையாவது வைக்கவேண்டுமே.. அதற்காக கதாநாயகி காலைவெட்டி , அவரை ஏற்பாரா நாயகன் என்று கேள்வியெழுப்பும் காட்சிகளை வைத்து எல்லா படத்திலும் வரும் அதே மொக்கை கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்ஸுக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத அதிர்ச்சி மதிப்பீட்டைத் தவிர வேறேதும் தராத கிளைமாக்ஸ். படத்தில் பல இடங்களில் அதிர்ச்சிக்காக சில பின்னல்களை செருகியிருக்கிறார் இயக்குனர். ஒரு சிலதைத் தவிர வேறேதும் படத்தின் இறுதிக்காட்சியைப்போலவே ஒட்டவில்லை.

படத்தின் பிண்ணனி இசை சகிக்கவில்லை. விஜய் ஆண்டனி வார் ஆப் தி வேர்ல்ட் கிளாஸ் ஆப்தி டைட்டன்ஸ் மாதிரியான படங்களுக்கு அடிக்கும் கும்மாங்குத்தை இந்த படத்திற்கு அடித்திருக்கிறார். எரிச்சல்தான் மிச்சம். அவள் அப்படியொன்று அழகில்லை பாடலைத்தவிர மற்றது எதுவும் நினைவில்லை. ஜி.வி.பிரகாஷ் நான்கு பாட்டாம்.ம்ஹும்.
படத்தின் நாயகன், அவருடைய நண்பன், கிராமத்து குடும்பம் என பல புதிய நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் அவர் எடுக்கும் படத்தில் வரும் வில்லனைப்போலவே கண்களை உருட்டி உருட்டி நடித்திருக்கிறார். ரங்கநாதன் தெருவை அருமையாக படம் பிடித்த காமரா மேனுக்கு வாழ்த்துக்கள். அஞ்சலி கிளைமாக்ஸில் அழுகிறார். மற்றபடி ஜோதிகா லெவலுக்கு இல்லை. கற்றது தமிழ்தான் அவருடைய ஆகச்சிறந்த படம்.

படத்தின் துவக்கத்தில் நன்றி சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் என்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமாய் சரவணா தொடங்குவதற்கு சற்று முன் தொடங்கி சூப்பர் ஹிட்டாகி , பிரமாண்டமாயால் வியாபரம் சரிந்த துணிக்கடை. படம் முழுக்க சரவணாவை குறிவைத்து அடித்திருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ற படி கிளைமாக்ஸுக்கு முன்னால் தேவையே இல்லாமல் சிநேகா ஆட்டம் போடுகிறார். என்னைப்போன்ற அறிவுஜீவிக்கு சங்கரபாண்டியனுக்கும் சரவணாவுக்கும் முடிச்சுப்போட்டு பார்க்கத் தெரியவில்லை.

படத்தின் பிளஸ்கள் , சோபியாவாக வரும் அந்த கறுப்புப் பெண்ணும் ஜெமோவும். நறுக் வசனங்களால் கவர்கிறார் ஜெமோ. தெனாவெட்டு பார்வைகளாலும் உடல்மொழியாலும் சோபியா. மற்றபடி படத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்ட கவித்துவமான குறியீடுகள் அடங்கிய காட்சியமைப்புகள் உலக சினிமாவுக்கே சவால் விடக்கூடியவை. ஏனோ அந்த கருமாந்திரங்களெல்லாம் என்னைப்போன்ற உலக சினிமாவை பர்மாபஜாரில் எட்டிப்பார்க்கும் ஏகலைவன்களுக்கு தெரிவதில்லை.

படத்தின் திரைக்கதையும் இயக்கமும் காட்சியமைப்புகளும் ஜெமோவின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இணையானதாக இருக்கலாம். அல்லது சு.ராவின் புளியமரத்தின் கதையைப்போல உன்னதமான அனுபவத்தை தரலாம். என்னைப் போல் முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ரமணிச்சந்திரனையும் சுஜாதவையுமே தாண்டவில்லை என்பதே யதார்த்தம். உலக சினிமா என்று சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தில் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. நான் பார்த்த உலக சினிமாக்கள் வேறு மாதிரியானவை. அவை எமக்கு மன உளைச்சலை அளித்ததில்லை...

வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அம்மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்த முற்பட்ட வசந்த பாலனுக்கு பாராட்டுக்கள். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால் ஆவணப்படத்தை எடுத்து அதில் ஆயிரத்தெட்டு கிளிசேக்களை நுழைத்து ஸ்கிரீனிலிருந்து கைகளை விட்டு கண்களை கசக்கி அழவைக்கும் படத்தை என்னவென்று சொல்வது. தமிழ்சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் புதிதாக இருந்தாலும் மற்றதெல்லாமே பழசுதான். இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும். மன உளைச்சலை அல்ல..! காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை.
படத்தில் காட்டப்படும் மனிதர்களின் உண்மை நிலை தெரியாத மேல்தட்டு மேதாவிகள் , கதைமாந்தர்களின் வாழ்க்கையாக காட்டப்படும் கோரமான காட்சிகளைக் கண்டு மனம் குமுரலாம். சராசரி ஏழைத் தமிழ் ரசிகன் அதை பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ள மாட்டான். அவனுக்கு வாழ்க்கையின் உண்மைநிலை தெரிந்திருக்கிறது. அவன் எதற்காக சினிமா பார்க்கிறான் என்பதுஉம் அவனுக்கு தெரிந்திருக்கிறது.

இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ?

வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.

67 comments:

Nizam said...

ஜூப்பரு.
படிச்சுட்டு வரேன்.

Anonymous said...

neegna nadara athan annachikkku support panringa

மணிஜி said...

அதிஷா ஏமாற்றவில்லை!

King Viswa said...

//இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ//

:)

King Viswa said...

//இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும்//

அது என்னங்க ஓலக சினிமா?

Ahamed irshad said...

தோல்வியையே கதையாய் கொண்டு அமைந்த வெயில் பரவாயில்லை , அங்காடி அதைவிட சோகம்.என்ன கொடுமை சரவணா இது.... வசந்தபாலன் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்......

karishna said...

இந்த விமர்சனம் எனக்கு பிடிச்சு எருக்கு....வாழ்க்கைல பல பிரச்சனை.....இதுல படத்துக்கு காசு கொடுத்து வேற அழுகனுமா....

Unknown said...

நல்லாதான் எழுதியிருக்கீங்க. இருந்தாலும் படத்த பாத்துட்டு சொல்றேன்.

VISA said...

I love it!!!!

Rajeswari said...

நறுக்.

Nat Sriram said...

அக்மார்க் அதிஷா விமரிசனம்..உங்கள் perspective புரிகிறது. ஒரு பாய்ண்டுக்கு மேல் என்னால் நான் கடவுளையும் ரசிக்க (ரசிக்க என்ன? பார்க்க) முடியவில்லை. அது போல் தான், அமோரேஸ் பெர்ரோஸ் உலகப்படம் அப்டின்னாங்க. 10 தெருநாய் ரத்தம் படம் புல்லா குதறிக்கிட்டு செத்துச்சு..உவ்வே..
ஆமா, 2 மியூசிக் டைரக்டர் உள்குத்து என்ன?

அமர பாரதி said...

அப்படிப் போடு. தமிழிலும் சிக் மூவிக்கள் வர ஆரம்பித்து விட்டது.

//இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா// உண்மைதான். நம்முடைய பிரச்சினையே தலைக்கு மேல் இருக்கிறது.

//தேர்ந்த சைக்கோக்களால் மட்டுமே ரசிக்க முடியும்// இன்னொரு நான் கடவுளா?

இந்தக் கிழி கிழிச்சுட்டு இது எதுக்கு? //வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.//

லேகா said...

//தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம்//

அதிஷா,

எனக்கு தோன்றியதும் இது தான்.
விளிம்புநிலை வாழ்க்கையை நாடகத்தனம் மிஞ்சி தந்திருப்பதாய் தோன்றியது.

நல்ல விமர்சனம்

இரும்புத்திரை said...

இது முதல் நாள் வந்திருந்தா ஒத்துக்கிட்டு இருக்கலாம்.இப்போ போடுங்க.நான் உங்க டூ.

Unknown said...

மாத்தி யோசி?

Anonymous said...

அண்ணே, ஏண்ணே இந்த சுய விளம்பரம்.? எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்லி அந்த படத்த நீங்க நல்லால்லன்னு சொன்னா நிறைய பேரு படிப்பாங்கள்ள?

அப்புறம் இன்னொரு விஷயம்ணே.. கிளிசே அப்படிங்கற வார்த்தைய நீங்க அடிக்கடி யூஸ் பண்றீகளே, அத மட்டும் ஏண்ணே ஆங்கிலத்துலயே யூஸ் பண்றீக? உங்களுக்கு அந்த மாதிரி வார்த்தையெல்லாம் தெரியும்னு காம்ச்சிகரத்துக்கா? இத மாதிரி எத்தன பேர பாத்துருக்கோம்? நீங்க யூஸ் பண்ணுங்கண்ணே.. வர்ட்டா...

வேதாளன் said...

தேர்ந்தெடுத்து படங்களை விமர்சிக்கும் பொழுது.. நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த வருடம் அல்லது இந்த மாதம் அல்லது இதனுடன் வந்த மற்ற படங்களைப் பார்த்தால்.. உங்கள் முதல் பத்தியில் படம் பிடித்தவர்கள் கதறி அழுவதை விட பல மடங்கு கதறி அழுது விடுவீர்கள்.

"கச்சேரி ஆரம்பம்" என்றொரு படம்.. "தம்பிக்கு இந்த ஊரு" இன்னொரு படம். முழுப் படமும் உங்களால் அரங்கத்தில் அமர்ந்து பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான். இத்தகைய மிக கொடுமையான சூழலில் வந்த மிக நல்லப் படமாக இதை பாவிக்கலாம். இல்ல இதை விட நல்லப் படம் நான் அப்பவே பார்த்திருக்கேன் என்று வாதாடினால், ஒன்றும் செய்வதற்கில்லை. சண்டைக் காட்சிகள், குத்து வசனம் இல்லாமல் ஒரு படம் தமிழில் வருவதே பெரும் அபூர்வம்.

//முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ரமணிச்சந்திரனையும் சுஜாதவையுமே தாண்டவில்லை என்பதே யதார்த்தம் //

அவர்கள் ராணி காமிக்சின் முகமூடி மாயாவியையே தாண்டி இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவை விட OVER-EXAGGERATION ஆக இருக்கும் போல உங்க விமர்சனம்.

//மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது//

நாயகன் நாயகியை சுற்றி சுற்றியே படம் ஓட வேண்டுமா என? இது 'அங்காடித் தெரு'வை பற்றிய கதை. சரி விடுங்க.. அங்காடித் தெருவில் பிழைப்பவர்கள் பற்றிய கதை. 'லிங்-கனி' என்ற இருவருக்கான கதையாக மட்டும் ஏன் பார்க்க வேண்டும்!!

//சாவு வீட்டுக்குள் நுழைந்தது போல விடாமல் துரத்தும் மன உளைச்சல்//

அண்ணே.. நீங்க எந்த காலக்கட்டத்தில் வாழ்றீங்க!?!

உங்களது CONCLUSIONனுடன் நான் ஒத்துப் போகிறேன் என்றாலும், நீங்கள் சொல்லுமளவிற்கு படம் மோசமில்லை என்பது என் கருத்து.

(கண்ணாடித் தொழுவத்தில் சிக்கியவர்கள்: http://3.ly/9miQ.)

Unknown said...

very good analysis...

butterfly Surya said...

இந்த பதிவில் பிடித்தது. //////////

வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.

நந்தா said...

சத்தியமாய் சொல்லுகிறேன். இதை எதிர்பார்த்தேன். பொய்க்கவில்லை.

துலாபாரத்தையும், அ.தெருவையும் ஒற்றுமைப்படுத்தும் அளவுக்கு அறிவுஜீவியான உங்களுக்கு சரவணா ஸ்டோர்சையும், சங்கரபாண்டியனையும் முடிச்சு போடத் தெரியமலிருப்பது ஆச்சர்யம்தான்.

அதீஷா உங்களது விமர்சனத்தில் பல குறைகள் உள்ளது. முதலில் நீங்கள் திரைப்படத்திற்கென்று அக மற்றும் புற வெளி அளவுகோல் வரையறைகளை வரையறை செய்து விட்டு அதற்கான பயணமாய் உங்களது விமர்சனங்களை எழுப்பவே இல்லை. நீங்கள் முதலில் காட்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை ஒவ்வொன்றையும் உங்களுக்கு பிடிக்காத விதத்தில் விமர்சனம் செய்திருக்கின்றீர்கள்.

க்ளைமாக்ஸ் காட்சி வழக்கமான அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்த சினிமா மசாலா என்று சொல்லும் நீங்கள் ஒருவேளை மாற்று சினிமா எடுக்கிறோம் என்று சொல்லுபவர்களைப் போல அதே வலியும், வேதனையும் நிறைந்த இன்னும் சோகமாய் அஞ்சலி சாவது போலவோ, பிரிந்து சொல்லாமல் எங்கேயோ போய்விடுவது போலவோ எடுத்திருந்தால், அதற்கும் நீங்கள் “படம் முழுக்க தொடரும் அந்த சோகம் க்ளைமாக்ஸிலும் தொடர்ந்து நம் உயிரை வாங்குகின்றது” என்றோ “க்ளைமாக்ஸில் பெரிய சாவாய் விழுகிறது” என்றோ எழுதி இருப்பீர்கள். ஆக எப்படி எடுத்திருந்தாலும் ஒரு வரி பஞ்ச் டயலாக்ல விமர்சனம் ரெடி.

இது வழக்கமான அரைகுறை விமர்சன மெத்தடாலஜிதான். நார்மலான காதல் காட்சிகளை எடுத்தால் இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலை வெச்சு பொழப்பு ஓட்டுவாங்களோன்னும், ரெண்டு பேரும் பிரியற மாதிரியோ, ட்ராஜடி முடிவு கதைகளையோ எடுத்தால் உணர்வுகளை விற்று வியாபாரம் செய்யும் அறிவுஜீவிக் கூட்டம்னும் எழுதற அரைகுறை விமர்சகர்கள் நம்மில் பலர் இருக்கின்றோம். (எழுதியும் இருக்கிறோம். என்னால் பேரைச் சொல்லியே சொல்ல முடியும்)

ப்டத்தில் பி.இசை, எடிட்டிங், நாடகத்தனமான பல காட்சி அமைப்புகள் என்று பல தவறுகளைச் சுட்டிகாட்டலாம். தப்பே இல்லை. ஆனால் ஒண்ணுமே இல்லை என்பது ரீதியில் எழுதுவதை என்ன சொல்ல? அதீஷா உங்களது பல்வேறு படங்களுக்கான விமர்சனங்களை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன் நான். என்ன என்ன படத்திற்கு எப்படி எப்படி எழுதுகிறீக்ள என்றளவில் எனக்கு தெரியும்.வாரணம் ஆயிரம் படத்தில் “We made Love Daddy" என்று சொன்னதை திட்டியது உட்பட உங்களது பட விமர்சனங்களை அறிவேன்.

என்னுடைய ஆச்சர்யமெல்லாம் எப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அளவுகோல்களை நிர்ணயித்துக் கொண்டு இது போன்ற படங்களை த்ராபை என்ற ரீதியில் உங்களால் எந்த வித வருத்தமும் இல்லாமல் சொல்லிச் செல்ல முடிகிறது என்பதே. சேவல் படத்துக்கு என்ன வார்த்தைகள் சொன்னீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? அளவுகோல்களை பொதுவில் வையுங்கள் நண்பரே.

http://blog.nandhaonline.com

நந்தா said...

//இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ?

வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.//

நாந்தான் இப்படி சொல்லி இருக்கிறேனே. எங்கே த்ராபை என்று சொல்ல முயன்றேன் என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு முன்பு வரை உங்களது எழுத்துக்கள் படைப்பாளியை அப்படித்தான் சொல்லுகின்றது.

//அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும். மன உளைச்சலை அல்ல..! காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை.//

தப்பா நினைச்சுக்காதீங்க அதீஷா. ஒரு வெகுஜன வாசகனாய் மட்டும்தான் நீங்கள் படைப்பை அணுகுவேன் என்று தெள்ளத் தெளிவாய் சொல்லி விட்டீர்கள். உங்களது பார்வையில் இப்படம் குப்பை, மொக்கை, சுமார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். உங்களுக்கு அதில் முழு உரிமையும் இருக்கிறது. நன்ன் உட்பட எவனும் கேட்க முடியாது.ஆனால் இந்த கட்டுரையை அதீஷாவின் தனிப்பட்ட பார்வை என்று சொல்லிக் கொள்ளலாம். லேபிளில் சொல்லி இருக்கும் சினிமா விமர்சனம் என்பதற்கான தகுதியை இக்கட்டுரை அடைந்திட வில்லை என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

http://blog.nandhaonline.com

சக்தி said...

சுறாவுக்கு ரெடியாகுங்க தல. அதுதான் யதார்த்தமா இல்லாட்டியும் பதார்த்தமா இருக்கும். நல்ல ரசனை உங்களுக்கு.- சக்தி.

Raghu said...

//காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை//

உண்மைதான்........ஒருவேளை சோக‌ப் ப‌ட‌ம் எடுத்தால்தான் சிற‌ந்த‌ இய‌க்குன‌ர் ஆக‌ முடியும்னு நினைச்சுட்டாரோ...

சீமான்கனி said...

புது மனைவியோட வந்த எங்க அண்ணனுக்கு இப்படியா காட்டுவீங்க படம்....என்ன கொடுமை அண்ணே இது....

IMAGE ARENA said...

தமிழ் சினிமாவில மீண்டும் ஒரு அத்தி பூத்திருக்கு

Unknown said...

முதலில் வாழ்த்துக்களைப் பிடியுங்கள்... இந்த படத்திற்கான உங்களின் விமர்சனப் பார்வை புதிது !!! அருமையான வார்த்தைகள் கொண்டு தேர்ந்தெடுத்து கொடுக்கப் பட்ட "பரிசு" இது. கிடைக்கப் போகும் திரை விருதுகளையும் தாண்டி திரு. வசந்தபாலன் சேமிக்க வேண்டிய "பொக்கிஷம்" இது.

23-C said...

thelivaana vimarsanam...this is a good movie but not the best!!!

பித்தன் said...

உங்கள மாதிரி விசிலடிச்சான் குருவிகளுக்கேல்லாம் சுறா எறான்னு ஏதாவது அட்டு படம் பிடிக்கும் போல. படத்த நெற்றிக் கண்ணிலேயே பார்த்தீர்களோ.....!

வெட்டிப்பயல் said...

இந்த விமர்சனம் எனக்கு பிடித்திருக்கிறது :)

Pappu_Appu_Sahana said...

Dear Sir,

Absolutely correct. The reason behind going to movie is to forget our sorrows and enjoy that three hours. This film is good for those people who donot know the pain of making money for survival.THANKS BOSS . i also waste my 80 rupees in RAKKI CINEMAS, AMBATTHUR.For Anjali i compromise that.OK anyhow Hatsoff to Vasanthabalan for taking such a nice real life in the frame.

YOURS
S.SAKUL HAMEED

இராஜ ப்ரியன் said...

ஐயா....... ஐயா....... நீங்க ஒரு .........................

Karikalan said...

Excellent review. I had to leave the theater after the intermission. I wondered if the movie got better after the intermission, but it does not look like I missed much.

Thanks

butterfly Surya said...

அதிஷா, என் பின்னூட்டத்தை காணவில்லையே..??

VISA said...

"I love this review"

(Why my previous comment was not published.)

Unknown said...

அதெல்லாம் நம்மளமாதிரி சின்னபசங்க பார்க்கற படமில்ல அதிஷா :))

கார்க்கிபவா said...

அதிஷா, இன்னும் படம் பார்க்கல. ஆனா விமர்சனம் அருமை... சொல்ல அவ்ந்த கருத்துக்களை ஏத்துக்க வைக்கிறீங்க...

VISA said...

// உங்கள மாதிரி விசிலடிச்சான் குருவிகளுக்கேல்லாம் சுறா எறான்னு ஏதாவது அட்டு படம் பிடிக்கும் போல. படத்த நெற்றிக் கண்ணிலேயே பார்த்தீர்களோ.....!
//

எனக்கு சுறா புடிக்கும். சுறா வெற்றி அடைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஏனென்றால் ஹீரோ வர்ஷிப் படங்கள் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. நான் விசிலடிச்சான் குஞ்சு தான் அதே நேரம் வித்தியாசமான கதைக்களம் என்று சொல்லிக்கொண்டு வ்.பாலன் காட்டியிருப்பது இது தான்.

"ஒரு காக்கா ஒரு புழுவை கொத்தி தின்கிறது. புழு துடிக்கவே இல்லை. தப்பிகவும் நினைக்கவில்லை. காக்கா கொடூரமாய் அதன் சதையை கிழித்து பிய்த்து மிதித்து துப்பி காறி துப்பி அதை மண்ணோடு பிரட்டி அதன் ரோமத்தை கிழித்து தின்பதை இரண்டரை மணி நேரம் காட்டினால் யாருக்கும் மனது கனமாகும். அது தான் சிறந்த சினிமா என்றால் அந்த புழுவுக்காக வாதாடும் கூட்டம் நாங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
BDSM மூவீஸ் பாத்திருக்கீங்களா?

எனக்கு பிடித்த படங்களை பட்டியலிடுகிறேன் சாம்பிள் தான் பாருங்கள்

பட்ஜெட் பத்மநாபன்
பருத்தி வீரன்
கில்லி
காதல்
சேது
16 வயதினிலே

அதே நேரம் எல்லோரும் போற்றிய சந்திரமுகி குப்பை என்று சொல்வேன்.


நல்ல கருவ நல்லா எடுக்கலேன்னாலும் நல்ல படமுன்னு சொல்றவன் நான் இல்ல.

☀நான் ஆதவன்☀ said...

80 ரூவா போச்சே... 80 ரூவா போச்சேன்னு புலம்பிட்டு கடைசியில
//வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம். // ன்னு சொன்னது ஏனோ?

சார்ஜாவுல இறங்குச்சுன்னா 400 ரூவா கொடுத்து பார்க்கிறேன். இல்லைன்னா ஆன்லைன் தான் :)

rajasundararajan said...

உங்கள் ரசனையை, புரிதலை, எண்ணங்களை உள்ளபடியே சொல்லியுள்ளதைக் கண்டு பாராட்டுகிறேன். சங்கடப் படவும் செய்கிறேன். சிலர் இந்தப் படத்தை முதலாளி Vs தொழிலாளிகள் கோணத்தில் பார்த்துக்கெட்டு, அப்படி எடுத்திருக்கலாம் இப்படி எடுத்திருக்கலாம் என்று பாட்டி காலத்திலேயே கைவிட்டுக் கழிந்த யோசனைகளைக் கூறி வருவதுபோல் அல்லாமல், நீங்கள் தாத்தா (எம்.ஜி.ஆர்) காலத்திலேயே காட்டப்பட்டு நைந்த கூறியதுகூறல் இவை இவை என்று காட்டி இருக்கிறீர்கள். உங்கள் ரசனைக்குப் பொருத்தமான accountability-ஆக அவற்றைக் கணக்குவைக்கலாம்.

முதலாளிகள் மட்டுமல்ல தொழிலாளிகளும் ஏன் நாம் எல்லாருமே கூட வியாபாரத்தனமான தள்ளுமுள்ளுகள் ஊடே தாக்குப்பிடிக்கப் போராடுகிற senselessness-ஐ இந்தப் படம் வெளிச்சம்போடவில்லையா? இல்லை என்றால் உங்களையும் உணரச் செய்யவேண்டிய அளவுக்கு வசந்தபாலன் போன்றோர் தம் vision-ஐத் தீட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

//என்னைப் போல் முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ் ரசிகர்கள்//, //இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா?//

என்ன தம்பி இது?

நான் உதயம் தியேட்டரில் 40 ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு நுழைகையில் எனக்கு முன் ஒருவர் 10 ரூபாய் டிக்கெட்டைக் கிழிக்கக் கொடுத்துக் கொண்டிருந்தார். 'அடடா 10 ரூபாய் டிக்கெட் இருந்ததா!' என்று மனசுக்குள் ஓர் ஏக்கம் தலைகாட்ட அரங்குக்குள் நுழைந்தேன்.

//படத்தின் பிளஸ்கள் , சோபியாவாக வரும் அந்த கறுப்புப் பெண்ணும் ஜெமோவும்.//

நீங்கள் அப்படி ஒன்றும் விவரம் தெரியாதவராகத் தெரியவில்லை. பாலகுமாரனை விமர்சித்து இருப்பது சூப்பர்! (ஜெயகாந்தன் கூட அப்படித்தானே, கதைக்களம் வேறுபட்டாலும்?).

வசந்தபாலன் பிழைத்துப் போகட்டுமே?

திங்கள் சத்யா said...

//யதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும்//

-ஆஹா! அற்புதமான வார்த்தைகள்.

யுவகிருஷ்ணா said...

ஆஹா... உங்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லையா தோழர்? எனக்கும்தான். வாட் எ கோ இன்சிடென்ஸ்?

என் கருத்துகளை பதிவாக எழுதியிருக்கிறேன். படித்து பார்த்துவிட்டு, ஓட்டு போட்டுவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

http://www.luckylookonline.com/2010/03/blog-post_31.html

Anonymous said...

அல்லோ... இதெல்லாம்ம்ம்ம்.... ரொம்ப்ப்ப்ப்ப ஓவரு!

Unknown said...

பாடகசாலை என்றொரு படமும் அங்காடித்தெருவோடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. புதுமுகங்கள் பலர் நடிக்க வித்தியாசமான கதைகளத்துடன் வெளியாகியுள்ள அருமையான படம். நல்ல முயற்சி நிச்சயம் ஒருமுறையாவது பார்த்து அந்த இளம் இயக்குனரை உற்சாகப்படுத்த வேண்டும்.

manjoorraja said...

படம் சூப்பரா இருக்குன்னு விமர்சனம் வந்தாலும் அந்த விமர்சனம் சூப்பர் என பின்னூட்டம்.

நல்லா இல்லேன்னு விமர்சனம் வந்தாலும். அதற்கும் பாராட்டு விமர்சனங்கள்.

இதில் எது உண்மையென புரியவே இல்லை.

arivuindia said...

ஆதிஷா,
உங்கள் விமர்சனத்தின் மூலம் உங்களைபற்றி, சில இடங்களில் நீங்கள் உலக சினிமாவெல்லாம் பார்க்கும் வேவரமானவற்போல் காட்டிக்கொல்கிரீர், துலாபாரம் மற்றும் எ.தெரு ஒப்பீடு. அனால் சங்கரபாண்டியன், சரவணா ஸ்டோர்ஸ் தெரியாது என்கிறீர், முதல் பெஞ்சில் விசிலடிப்பென்னும் எனக்கெல்லாம் அதுக்கும் மேல ஒன்னும் தெரியாது அப்டீனும் சொல்றீங்க. அனால் படத்தின் உள்ள குறைகளை மட்டும் பற்றிய ஒரு நல்ல விமர்சனம்.
-Arivu

Thamira said...

போடா லூசு.. :-)

kk said...

"அவை எமக்கு மன உளைச்சலை அளித்ததில்லை..."

The movie & the director have succeeded though the movie is not what you expected.

பித்தன் said...

உங்களைப்போல உள்ளவர்களுக்கு எப்படிதான் இந்தப்படம் பிடிக்கும். வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகளின் உணர்வுகளை பிரதிபளிக்கும் படங்களை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.உங்களைப்பற்றியே தெரியாத நீங்களேல்லாம் விமர்சனம் வேறு செய்கிறீர்கள். உங்களுடைய வளர்ப்பு முறை அப்படி என்ன பன்றது.

deesuresh said...

அந்தக் கடையில் வேலை பார்த்தவர்களோடே படம் பார்த்த எனக்கு யதார்த்தமான படம் என்றே தோன்றுகிறது..!! தங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கு வேறு விதமாகத் தெரிகிறது போலும்..!!

பூபேஷ் பாலன் said...

பொதுவாகவே மனித மனம் துன்பியலை வெறுக்கத்தான் செய்கிறது. அவ்வகையில் பார்த்தால் இந்த படத்தில் வரும் இறுதிக் காட்சி படத்தின் ஒட்டுமொத்த தன்மையையும் மாற்றிவிடுகிறது. நாயகனும் நாயகியும் கடையில் இருந்து துரத்தப்பட்டவுடன் படத்தை முடித்து இருக்கலாம். அதன் பிறகு ரசிகனுக்கு அதிர்ச்சி கொடுக்க வைக்கப்பட்டிருக்கும் லாரி விபத்து படத்தின் ஒட்டுமொத்த அழகியலையும் கெடுத்து படத்தை துன்பியல் படமாக மாற்றி விடுவதால் படத்தின் நோக்கம் அமுங்கி போய் விடுகிறது. நாயகனின் முதல் காதல் முறிவதற்க்கான காரணமாக காண்பிக்கப்படும் காட்சி மட்டமான ரசனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. இந்த இரு காட்சிகளையும் தவிர்த்து பார்த்தால் இந்த படம் நிச்சயமாக ஒரு வாழ்க்கை பதிவுதான். படத்தின் போக்குக்கு தொடர்பு இல்லாமல் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாகவே உள்ளன.

Anonymous said...

‘‘அங்காடித் தெரு’ படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பேசினார்கள். பேச ஆரம்பித்ததும் அழத் தொடங்கிவிட்டார்கள். எங்களது அத்தனை துயரங்களையும் அப்படியே படம் பிடித்தது போல் அந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்களாம். படம் ரிலீஸானதும் லேபர் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் எங்கள் கடைக்கு வந்து சோதனை நடத்தினார்கள்.

ராஜா

Anonymous said...

‘‘அங்காடித் தெரு’ படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பேசினார்கள். பேச ஆரம்பித்ததும் அழத் தொடங்கிவிட்டார்கள். எங்களது அத்தனை துயரங்களையும் அப்படியே படம் பிடித்தது போல் அந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்களாம். படம் ரிலீஸானதும் லேபர் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் எங்கள் கடைக்கு வந்து சோதனை நடத்தினார்கள்.

Sanjai Gandhi said...

நிஜமாவே மகாக் கேவலமான படம் இது.. விக்ரமன், பாலா வரிசையில் இன்னொரு இம்சை.. இவரெல்லாம் இன்னொரு படம் எடுத்தால் தமிழ் சினிமாவை பேரரசுவால் கூட காப்பாற்ற முடியாது.. :(

//ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. //

கூகுள் பஸ்ல நானும் இத தான் சொன்னேன்.. இன்னொருத்தருக்கும் இதே பீலிங் தான் வந்துச்சாம் :)

பின்னோக்கி said...

படம் பார்க்கவில்லை என்றாலும், நீங்கள் சொன்னதில், சில விஷயங்கள் சரி என்றே படுகிறது. வழக்கம் போல தைரியமான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள். இப்படத்தை ரசிப்பவர்களை குறைகூறாமல், உங்களின் விமர்சனமாகவே எழுதியிருப்பது நல்லது.

Anonymous said...

விமர்சனம் ஓரளவு ஏற்கக்கூடியதாக இருக்கிறது.
படத்தின் சில கட்டங்கள் உங்களுக்கு ஏன் எதற்கு என்று புரியாத இடத்தில் அதை விட்டு செல்லுதலே நல்லது. தனக்கு விளங்காததால் அதனை பிறிதொரு கருத்துப்பட வியாபிப்பது முட்டாள்த்தனம்.
முக்கியமாக படத்தில் வரும் மலசலகூடம் கழுவும் வாலிபன், பழைய துணிகளை தூய்மையாக்கி 10 ரூபாவிற்கு விற்கும் வாலிபன்...இவையெல்லாம், ஒன்றுமே இல்லை என்று நாம் எண்ணும் விடயங்களை வைத்தும் உழைக்கலாம் என்பதற்காக போடப்பட்டிருக்கலாம். வேலை பல எம் கண்முன்னால் இருக்கின்றது. அது என்ன என்று தெரியாமல்த்தான் வேறெங்கெல்லாமோ வேலை தேடி அலைகின்றோம் என்பதை சொல்வதற்காக சொல்லப்பட்டிருக்கலாம்.

சில விடயங்கள் ஏன் எதற்கு என்று சொல்லாமலே புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். அப்பம் என்றால் புட்டித்தான் காட்டவேண்டும் என்று நிற்கின்றீர்கள். விமர்சிப்பவன் நடுநிலமையிலிருந்து விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து தன் திறமையையையோ அதிபுத்திசாலித்தனத்தையோ காட்டும் தளமாக விமர்சிக்கும் இடத்தை எண்ணக்கூடாது.

​செல்​லையா முத்துசாமி said...
This comment has been removed by the author.
​செல்​லையா முத்துசாமி said...

குறிப்பிடத்தக்க விமர்சனம்.

சில இடங்களில் மட்டும் முரண்படுகிறேன். மன உளைச்சலைத் தருவதும் நல்லபடம்தான். உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் எத்தகையதென தெளிவாகக் குறிப்பிட்டால் ஒருவேளை சரியாக இருக்கலாம். மேலும், திரைப்படம் என்பது மகிழ்ச்சிப் படுத்துவதற்கானது என்பதை மசாலா பட இயக்குனர்களும் சொல்லிவருகிறார்கள். உங்கள் விமர்சனத்தை ஒட்டி விரைவில் நானும் ஒரு விமர்சம் எழுதுகிறேன்.

தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கான எந்தவொரு தகுதியும் இப்படத்துக்கு இல்லை என்பதை ஏற்கிறேன்.

புருனோ Bruno said...

இந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் !!

Anonymous said...

naan unga vimarsanathai starting la irunthe padikkaravan...mothella ellam vimarsanam pannum pothu kurai solvinga...ippo kurai solrathukkagave vimarsanam pandringannu nenaikkiren...

unga vimarsanathila migaippaduthappatta climax appadingarathu thavira vera ethaiyum yethukka mudiyathu...ungalukku padam paarkka sogama irukku appadingarathukkaga naduvila rendu kuthu paattu, fight ellam vekka mudiyathu...kastapada character pathi sollumpothu kastapadara maathiri than solla mudiyum....

YUVA said...

in your blog, please mention about how you scale the quality of movies. summa vayku vantha padi pesa kudatha..

Manivannan said...

// அஞ்சலி கிளைமாக்ஸில் அழுகிறார். மற்றபடி ஜோதிகா லெவலுக்கு இல்லை //

ஜோதிகா மாதிரி நடித்து இருந்தா ஜோதிகா மாதிரி இருக்குனு சொல்ல போற...

// படத்தின் துவக்கத்தில் நன்றி சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் என்று வருகிறது. //

உங்களுக்கு ஒன்று தெரியுமா? உதவி செய்தவருக்கு நன்றி சொல்லுவதுதான் மனித நேயம் ... அங்காடி தெருவில் உள்ள ஜவுளிக்கடையை கருவாக கொண்ட கதையை படமாக எடுக்கிறோம் என்றால் துணிக்கடையில் எடுத்தால் தான் இயல்பாக இருக்கும் அத விட்டுட்டு டாஸ் மர்க்குலையா எடுக்க முடியும்.. அப்படி துணிகடையில எடுக்க வாய்ப்பளிதவருக்கு நன்றி சொன்னா தப்பா... சொல்லலேனா "நன்றி கூட சொல்லலேன்னு" நீயே குத்தம் சொல்லி எழுதியிருப்ப

// அதற்கேற்ற படி கிளைமாக்ஸுக்கு முன்னால் தேவையே இல்லாமல் சிநேகா ஆட்டம் போடுகிறார் //

துணிக்கடை விளம்பரம்னாவே ரொம்ப பாப்புலர் சிநேக விளம்பரம்தான் அததான் இயக்குனரும் யோசிச்சு இருக்காருன்னு நினைக்குறேன்

// உலக சினிமா என்று சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தில் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. நான் பார்த்த உலக சினிமாக்கள் வேறு மாதிரியானவை. //

நீயல்லாம் அந்த மாதிரியான உலக சினிமா பார்குறவன், இந்த படம் பர்த்தா எப்படி ?

// தமிழ்சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் புதிதாக இருந்தாலும் மற்றதெல்லாமே பழசுதான். இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்! //

நீ ஓசில பினாயிலா கொடுத்தா கூட குடிசிருவ

// 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும் //

டாஸ் மார்க்கக் போயிருந்தாலும் நிச்சயம் இதெல்லாம் கிடைத்திருக்கும்

// காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை //

அப்ப எல்லாத்துக்கும் பிடிச்ச 'காதல்' படம் என்ன கிளிமாக்ஸ்சாம்? அங்க காசு கொடுத்து என்ன வாங்குனீங்க! புளியோதரையும் தயிர் சாதத்தையுமா வாங்குனீங்க!

// படத்தில் காட்டப்படும் மனிதர்களின் உண்மை நிலை தெரியாத மேல்தட்டு மேதாவிகள் //

ஆமா இவரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் சொல்ல வந்துட்டாரு.மேல்தட்டு மேதாவிகளாக இருந்திருந்தால் இது மாதிரி சமுதாயத்துல பின்தங்கி இருக்கிறவர்களை பற்றி படம் எடுக்கணுமுன்னு அவசியமே இல்லை...


// கதைமாந்தர்களின் வாழ்க்கையாக காட்டப்படும் கோரமான காட்சிகளைக் கண்டு மனம் குமுரலாம். சராசரி ஏழைத் தமிழ் ரசிகன் அதை பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ள மாட்டான் //

மனிதனின் மனக்குமுரல்கள்தான் சில புரச்சிகரமான நல்ல செயல்கள் செய்ய முற்பட்டு இருக்கிறது என்பதை வரலாறு சொல்கிறது அமைச்சரே!

// வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம் //

நீ சொன்னதிலேயே ஒரே ஒரு உண்மைனா அது இதுதான்...


என்னுடைய கருத்து!

அளவுக்கு மீறிய சோகம் ஆனால் அவை அனைத்தும் நம்மால் மறுக்க முடியாதது உண்மை......

மற்றபடி கமர்சியல் சினிமாக்களை(வேட்டைக்காரன், அசல்) இதனோடு ஒப்பிட்டு நல்ல தரமான படத்தை கெடுத்துவிடாதீர்கள்!

Manivannan said...

நல்ல விமர்சனம்..ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பலே பலே ஓவ் ஓவ் ஓவ் சூப்பர்

மன்னிக்கவும்.இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் , அதை நீங்கள் உளமாற நேசிப்பவராக இருந்தால் , உங்களுக்கான விமர்சனம் மேலே.. இதற்கு மேல் படிக்க வேண்டாம்...
_______________________________________________________________________________________________

// பாலகுமாரன் நாவல்களில் கதை போய்க்கொண்டிருக்க திடீரென மைக்கைப்பிடித்து எழுத்தாளர் அறிவுரை சொல்லுவாரே அதே பாணியில் திடீரென ஈசாப் கதைகளுக்கு இணையான கட்டணமுறை கழிப்பிட கதை வருகிறது. கழிப்பிடத்தை கழுவியன் அடர் கறுப்பாகத்தான் இருந்தான். குள்ளமான ஒருவனுடைய கல்யாணக்கதை வருகிறது. இஸ்லாமிய பெரியவர் ஒருவருடைய கதை வருகிறது. நடுவில் வயசுக்கு வந்த ஏழைத் தங்கையின் கதை வருகிறது. யூஸ்ட் டிஷர்ட் விற்பவனின் கதை எதற்கு வருகிறதென்று யாருக்குமே தெரியாது. //

நண்பரே! இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறீரே படத்துக்கு என்ன பேர் என்று உங்களுக்கு தெரியுமா? "அங்காடி தெரு"...அந்த தெருவில் நடக்க கூடிய விஷயங்களைத்தான் காட்ட முடியும் அதவிட்டுட்டு
மென்பொருள் வேலையவா காட்ட முடியும்?

// முக்கால்ப் படம் துணிக்கடையின் உள்ளேயே நடக்கிறது //

அந்த தெருவில் உள்ள மிகப்பெரிய தொழில் ஸ்தாபனமமான ஜவளிக்கடையை மையக்கதையாக எடுத்துள்ளார் இயக்குனர்..

// அதைப்போல மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அனுமானிப்பதற்குள் படத்தின் கிளைமாக்ஸ் வந்து கதறி கதறி அனைவரும் அழுகின்றனர்.//

அதுதான் திறமையான இயக்குனரின் வெற்றி...நீங்களே எல்லாத்தையும் அனுமானித்துவிட்டல் அப்புறம் எதற்கு படம் பார்க்க வண்டும்..
நாம் சொல்லவந்ததை உணர்வு பூர்வமாக ரசிகர்களை உணர வைக்க வேண்டும்..அடிதடி காட்சி ஓடிகொண்டிருக்கும் போது யாரேனும் சிரித்தால்
இயக்குனர் தோற்று விட்டார் என்றே அர்த்தம்..

// மெகாசீரியல்களில் 52 எபிசோட்களில் மையப்பாத்திரத்தின் கதை பத்து எபிசோட்களில்தான் வரும்.
நமக்கு திருமதி செல்வம் சீரியலின் நாற்பது எபிசோட்களை ஒட்டுமொத்தமாக பார்த்த எஃபக்ட். ஸ்ஸ்ப்பா //

சீரியல் பாக்குறவனெல்லாம் சினிமா பார்த்த இப்படிதான் இருக்கும்.. நீயெல்லாம் சீரியல் பார்க்கத்தான் லாயிக்கு....

// கிளைமாக்ஸ் என்று எதையாவது வைக்கவேண்டுமே.. அதற்காக கதாநாயகி காலைவெட்டி , அவரை ஏற்பாரா நாயகன் என்று கேள்வியெழுப்பும் காட்சிகளை வைத்து எல்லா படத்திலும் வரும் அதே மொக்கை கிளைமாக்ஸ் //

@நந்தா
// க்ளைமாக்ஸ் காட்சி வழக்கமான அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்த சினிமா மசாலா என்று சொல்லும் நீங்கள் ஒருவேளை மாற்று சினிமா எடுக்கிறோம் என்று சொல்லுபவர்களைப் போல அதே வலியும், வேதனையும் நிறைந்த இன்னும் சோகமாய் அஞ்சலி சாவது போலவோ, பிரிந்து சொல்லாமல் எங்கேயோ போய்விடுவது போலவோ எடுத்திருந்தால், அதற்கும் நீங்கள் “படம் முழுக்க தொடரும் அந்த சோகம் க்ளைமாக்ஸிலும் தொடர்ந்து நம் உயிரை வாங்குகின்றது” என்றோ “க்ளைமாக்ஸில் பெரிய சாவாய் விழுகிறது” என்றோ எழுதி இருப்பீர்கள். ஆக எப்படி எடுத்திருந்தாலும் ஒரு வரி பஞ்ச் டயலாக்ல விமர்சனம் ரெடி //

சரியாக சொன்னீர்கள் நந்தா ...குறை சொல்லி விளம்பரம் தேடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் எப்படி எடுத்தாலும் நீ குறைதான் சொல்ல போற
நீதான் மேதாவியாச்சே அதுல குறை இதுல குறைன்னு சொல்லுற நீயே ஒரு கிளைமாக்ஸ் சொல்லு அது எப்படி இருக்குனு பார்க்கலாம்...

bhuvana said...

hi...athisha...it's too bad... neenga nagaisuvai virumpi... athan yettrukolla virumba villai

இரவிசங்கரின் said...

-----------------------------
யதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும்
---------------------------
நறுக் விமர்சனம்

C(A RUL)es...... said...

I find a little Sujathaism in your letters.... Yet you should be crisper and precise....

Amuthan said...

Finally found a review close what I felt, I was having a tough time to convince people that it is a sick movie taken in the name of showing reality. Now I can send this link to reflect my view. As you rightly said it is better to watch some vijay and ajith action movies, it wont be as damaging to our mood as these kind of movies. Good one. Don't worry about views against this review. I also dont understand why will some one spend time and money to watch more sadness. [Not used to typing in tamil]

Anonymous said...

Usually I used to enjoy athisha's reviews .I think this is a little wrong review for this film. I understand this film was full tragedy and not a feel good film. But we need to accept a truth that our views about the labours. Usually when I go to saravana stores i used to be irritated about the workers due to their ignorant attitude . After I saw this movie my views were changed. definitely it is not a feel good movie . But sometime we need to know about other common people whom we live with and their worries.