06 April 2010

ஒரு... ஏதோ

ஒரு இசை(மின்னஞ்சலில் அனுப்பிய கே.ரவிஷங்கருக்கு நன்றி)

ஒரு கதை

நம்ம சாமியாருக்கு எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வெளியூர் போகலாம் என்று சிஷ்யனோடு கிளம்பிவிட்டார். ரயிலில் போவதாக முடிவாயிற்று. எப்போதும் போல வித் அவுட்தான். சிஷ்யனும் ஏறிக்கொண்டான். கடுமையான கூட்டம்.. நிற்கவும் இடமில்லை. குரு கதவோரம் அல்லது கக்கூஸோரம் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார். சிஷ்யனுக்கு கால்வலி. ஏற்கனவே இடம்பிடித்து அமர்ந்திருந்தவர்களிடம் ‘’சார் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி உக்காந்தா நானும் உக்காருவேன் . பாருங்க இவ்ளோ இடமிருக்கு’’ என்றான். போடா மயிரே என்றான் ஒரு மலையாளி. சிஷ்யனக்கு கோபம் வந்தது. நேராக குருவிடம் போய் குருவே என்னை ஒரு திட்டிட்டான் வந்து இன்னானு கேளு என்றான். குரு தன் சட்டையை மடித்துக்கொண்டு யார்ரா என் சிஷ்யன திட்டினது என்றார். நீயார்ரா மயிறு ஒன்னு வுட்டேன் என்று உட்கார்ந்திருந்த மூவர் சட்டையை மடித்தனர். குரு கட்ஷாட்டில் மீண்டும் கக்கூஸோரம் இருந்தார். கதவு வழியாக செல்லும் பாதையை பார்த்துக்கொண்டே வந்தார். மலைகள்,காடுகள் , சூரியன், வயல், பாலை கடந்து சென்றது. சிஷ்யன் விடாப்பிடியாக சண்டையிட்டுக்கொண்டிருந்தான். அவர்களும் விடாமல் போடா மயிரேவை ரிப்பீட்டுக் கொண்டிருந்தனர். குருவிடம் தாறுமாறாக புலம்பிக்கொண்டும் சலம்பிக்கொண்டும் வந்துகொண்டிருந்தான் சிஷ்யன். ரயில் தனது கடைசி ஸ்டேஷனில் நின்று விட்டது. இனி போகாது. அனைவரும் இறங்கிவிட்டனர்.. குரு அமைதியாக க்க்கூஸோரம் நின்று கொண்டிருந்தார். இறங்க சொன்னான். குரு அங்கே காலியாய் கிடந்த நாற்காலிகளை சுட்டிக்காட்டிச் சொன்னார் ‘’ அதான் இடம் காலியிகிருச்சே போய் உட்காரு! ‘’

ஒரு தத்துவம்

ஏதாவது ஒன்றின் தத்துவத்தை அதே மாதிரியான இன்னொன்றால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு கோபம்

டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டி ஒன்றில் பார்வையாளர்கள் மது அருந்தியபடியே மேட்ச் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெட்டிங் குட்டியாகவும் பெட்டி பெட்டியாகவும் பெரிய அளவிலும் நடக்கிறது. இனி என்னென்ன கருமாந்திரங்களைப் புகுத்தி இந்த ஐபிஎல் புளுத்திகள் கிரிக்கெட்டை வன்புணரபோகிறார்களோ!


ஒரு கருத்து

எனக்கு உடன்பாடில்லாத பதிவர் சங்கம் பற்றிய கூட்டத்திற்கு நான் போகாமல் இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் அந்த கூட்டத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் சுமூகமாக சங்கம் துவங்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். எது எப்படியோ பதிவர்கள் நமக்கு எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் அளந்துதான் பேசவேண்டும் என்பதை உணர்த்தியது அந்த சந்திப்பு. நன்றி உ.த அண்ணன்.

ஒரு புகைப்படம்

OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR - FRIENDSHIP

என்னுடைய சோனி எரிக்சன் சி702 போனில் சென்ற ஆண்டில் எடுத்த படம்.

ஒரு குறும்படம்


Kannamoochi
Uploaded by mathavaraj. - Full seasons and entire episodes online.

(எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்களுக்கும் பிடிக்கலாம், படத்தை இயக்கிய திருப்பூர் பதிவர் ரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள். http://ravikumartirupur.blogspot.com)


ஒரு கவிதை


உதிர்ந்தவனின் முத்தம்
மயங்கி
தொடைகளுக்குள் முடங்க
முயங்கினாள்..
வல்விரைந்தாய்
விரைந்தேன் விரைத்தேன்
வல்விழந்தாய்
இறந்தேன்

18 comments:

Ahamed irshad said...

//ஏதாவது ஒன்றின் தத்துவத்தை அதே மாதிரியான இன்னொன்றால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்//


அதாவது முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்னு சொல்ல வர்றீங்க...

என்னே ஒரு கண்டுபிடிப்பு..

எறும்பு said...

//(மின்னஞ்சலில் அனுப்பிய கே.ரவிஷங்கருக்கு நன்றி)//

அண்ணே அப்படியே அந்த maila எனக்கு forward பண்ணுங்க..

அகல்விளக்கு said...

வாவ்...

அருமையான இசை....

பகிர்வுக்கு நன்றி...

Uma said...

//OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR - FRIENDSHIP// Good One :)

தினேஷ் ராம் said...

:-)

goinchami said...

நல்ல பதிவு நன்றி பத்ரி

VISA said...

//கிரிக்கெட்டை வன்புணரபோகிறார்களோ!

//

Good one

Gurusamy Thangavel said...

அருமையான குறும்படம், பகிர்ந்தமைக்கு நன்றி அதிஷா. இப்படம் தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. படம் பார்க்கும்போது, நான்கு வயதான என் மகன் அமுதனுடன் என் தந்தையும் இதுபோல் விளையாடுவதாக கற்பனை செய்துகொண்டேன். இதேபோல் என் மகன் பிறப்பதற்கு முன்பு (!) ஒருமுறை ஒரு தாத்தாவும், பேரனும் தெருவில் டென்னிஸ் விளையாடியதைப் பார்த்தபோதும் இதே எண்ணம் தோன்றியது. குறும்படம் உச்சகட்ட காட்சியை அடைந்தவுடன் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என மனது படபடத்தது; அங்காடித் தெரு படத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை.

Sivakumar said...

//OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR - FRIENDSHIP//

Arumai.

Kurumpadam pagirvukku nandri.

Siva

பனித்துளி சங்கர் said...

////////உதிர்ந்தவனின் முத்தம்
மயங்கி
தொடைகளுக்குள் முடங்க
முயங்கினாள்..
வல்விரைந்தாய்
விரைந்தேன் விரைத்தேன்
வல்விழந்தாய்
இறந்தேன்////////////


மிகவும் அருமை !

"உழவன்" "Uzhavan" said...

கதை சூப்பரு :-)

பாலா அறம்வளர்த்தான் said...

இளையராஜாவின் 'Live in Italy' நிகழ்ச்சியில் மிகச்சில வாத்தியக் கருவிகளுடன் வாசிக்கப் பட்டது. இதனுடைய ஒரிஜினல் ஒலித்தகடு மயிலாப்பூரின் 'Shanthi Tailors' கடையில் மட்டுமே கிடைத்து வந்தது - இப்பொழுது மற்ற கடைகளிலும் கிடைக்கக் கூடும்.

இந்த நிகழ்ச்சியில் சின்மயி பாடிய 'என்னுள்ளில் ஏதோ', மற்றொரு பாடகி பாடிய ஹிந்தி பாடல் - சுநேயோ யசோதா மையா, ராஜாவின் 3 notes piece, கொன்னக்கோல் போல ராஜாவின் தாள குறிப்புகள் - அதில் இத்தாலிய ஆடியன்ஸையும் கலந்து கொள்ள வைத்த தாள sequence என்று பல விஷயங்கள் பிரமிக்க வைக்கும்.

CrazyBugger said...

No bad words abt IPL

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

இளமுருகன் said...

எல்லாம் சரி,அது ஏன் மலையாளி?

மணிகண்டன் said...

***
டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டி ஒன்றில் பார்வையாளர்கள் மது அருந்தியபடியே மேட்ச் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெட்டிங் குட்டியாகவும் பெட்டி பெட்டியாகவும் பெரிய அளவிலும் நடக்கிறது. இனி என்னென்ன கருமாந்திரங்களைப் புகுத்தி இந்த ஐபிஎல் புளுத்திகள் கிரிக்கெட்டை வன்புணரபோகிறார்களோ!
**

ஏன் உமக்கு ஒரு கட்டிங் கொடுக்கலியா ? :)-

அய்யனார் said...

எங்க தலைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னீங்களா..?

Anonymous said...

What a brilliant piece of music.
if only he had not mixed western and karnatic in violin,if only he had avoided his voice,if only he avoided the dham,dham,dham in hummings,it would be more great.Hmm,isai gnani will not accept criticism,neither he wil do self analysis.