02 May 2010

சுறா - இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

சில பேரு எடுத்து சொன்னா திருந்திருவாங்க!. சிலருக்கு பட்டாதான் புரியும். சில பேர் இருக்காங்க எருமைத்தோல் மாதிரி செறுப்பால அடிச்சு காரித்துப்பினாலும் திருந்தவே மாட்டாங்க! – யாருக்கு இந்த பஞ்ச் டயலாக்! விடை கடைசியில்


கதர்ர்றா!


முதலில் கதற கதற ஒரு கதை சொல்கிறேன்.
ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்கூஸ் வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம்.


பார்ர்றா!


தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த முற்போக்கு சிந்தனை நிரம்பிய கதை சுறா படத்தில் காணக்கிடைக்கிறது. விஜய்யின் மேன்மையான ஹீரோயிச நடிப்பும் அவர் பேசும் பஞ்ச் வசனங்களும் இதுவரை தமிழ்கூறும் சினிமா உலகம் கண்டிராதது. இது விஜயின் ஐம்பதாவது படமாம். 49 படங்களில் நடித்ததை விட இதில் பல மடங்கு கடுமையாக நடித்திருக்கிறார். பார்ப்பவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். விஜய் பஞ்ச் டயலாக் பேசுகிறார் . பேசுகிறார்.. பேசிக்கொண்டே இருக்கிறார்.. விட்டால் ஸ்கரீனிலிருந்து இறங்கி வந்து மடியில் அமர்ந்து பேசுவார் போலிருக்கு! பேசி முடித்ததும் கையை பின்புறம் கட்டிக்கொண்டு சுலோ மோஷனில் நடக்க.. நமக்கு இனிமா கொடுக்காமலேயே இனிமையான லூஸ் மோசன்!. டாக்டர் விஜயல்லவா! இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பார்ர்ரேன்.


வுட்ட்ட்றா!


படத்தில் இனிமையான காதல் காட்சிகள் உண்டு. தமன்னா தற்கொலைக்கு முயல்வதும் , அதை காமெடி என்ற பெயரில் விஜயும் வடிவேலுவும் தடுப்பதும்.. நமக்கே தற்கொலை செய்து செத்து செத்து விளையாட வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது. அதிலும் கண் தெரியாதவர்களை ரோட் கிராஸ் பண்ண வைக்கும் விஜயைப் பார்த்து அப்படியே காதலில் விழுந்து இடுப்பில் நிக்காத பேண்டோடு தமன்னா ஆடுகிற ஆட்டம் உங்க வீட்டு ஆட்டமல்ல எங்க வீட்டு ஆட்டமல்ல,.. உலக ஆட்டம். படம் பார்க்கும் நமக்கே நாம ஒரு வேளை பைத்தியகார கூமுட்டையோ என்று தோன்று கிறது. அதே மாதிரி கூட ஆடும் பெண்கள் கறுப்பு ஜட்டியோடு ஆடுகின்றனர். லோ பட்ஜட் படம் போலிருக்கிறது. நடன சீகாமணிகளின் நடனம் மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன்னு ராஜாயாரு ராணி ஆறுக்கு இணையாக இருக்கிறது. ஆனால் இதை பார்க்க காசு நிறைய செலவாகும்! காசுறா காசு!


அட்ட்ட்றா!


சுத்தி சுத்தி சண்டை போட்டாலும் உருட்டு கட்டையால் பொடணியில் அடித்தால் எப்பேர்பட்ட சூப்பர் மேனும் மயங்கிவிடுவான் என்பது உலக நியதி. விஜய் மண்டையில் அடித்து படுக்க வைத்து அவருக்கு ஆப்படிக்கின்றனர். இடைவேளை. மகதீரா வில்லன் மண்டைக்கு ரெண்டு சைடில் வெள்ளை சாயம் அடித்து வயதானவராக வந்தாலும் இளமையாக அழகாக இருக்கிறார். பாவம் அவர் என்ன செய்வாரு விஜய் பஞ்ச் பேச அவர் ஈ போகுமளவுக்கு பப்பரப்பாவென திறந்து கொண்டு நிற்கிறார் வாயை. விஜய் போனபின் ஏய்.. ஓய்.. என கதறுகிறார்.. வடிவேலு படம் முழுக்க வந்தாலும் வெண்ணிற ஆடையார் ஒரே காட்சியில் மொத்தமாக அள்ளுகிறார். மற்றபடி வடிவேலுவுக்கு வயசாகிருச்சு! இசை மணிசொர்மா.. பாட்டெல்லாம் படுமட்டம். ஓப்பனிங் நல்லாதான் இருக்கு பினிசிங்தான் ம்ஹூம். படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ் குமார் விஜய ஏமாத்தினாரா இல்ல இவரு அவர ஏமாத்தினாரானு தெரில..


பஞ்சர்ரா!


எப்படி நடித்தாலும் படம் ஹிட்டாகிடும் என்கிற ஆணவமும் அகம்பாவமும் அதிகமா இருந்தா எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டார் படமும் படுத்துரும் என்பது குசேலபடிப்பினை. இதுவும் அதே கேட்டகிரியில் அடங்கும். மக்களை மாக்கான்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் சன்பிக்சர்ஸ் மற்றும் சங்கிலிமுருகன் கூட்டணியினர்.. ஒருபக்கம் யதார்த்த வெறிபிடித்த கூட்டமொன்று ரத்தம் வழிய வழிய படமெடுத்து உயிரை வாங்குது.. இன்னொரு பக்கம் இப்படி மசாலா படமெடுக்கிறேனு கி.மு காலத்து கதையெல்லாம் எடுத்து பஞ்ச் பேசி ரத்தம் கக்க வைக்குது.. இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா!


சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ, விஜய டீயாரின் வீராசாமி உங்களுக்கு பிடிக்குமா.. இந்த படமும் உங்களுக்கு மிகமிக பிடிக்கும்.. முழுமையான காமெடி கலாட்டா!. எனக்கு பிடித்திருந்தது... ரசித்து சிரித்தேன்.


சுர்ர்ர்றா!


முதலில் சொன்ன பஞ்ச் என்னோப்போல படம் பார்த்தவர்களுக்கும் , விஜய்க்கும் சன்பிக்சர்ஸ்க்கும் சமர்ப்பணம்!சுறா - சம்பவாமி யுகே யுகே! 
51 comments:

Asir said...

இதையெல்லாம் பார்த்து கடுப்பாகி காண்டாகி ஓடினாரு.. ஓடினாரு.. ஓடினாரு தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி லெஃப் எடுத்து அடுத்த சின்ன சிக்னல் ரைட் எடுத்து ஓடினாரு

/

/


/


யாராவது பாவப்பட்ட கவிஞர் அடிவாங்கின கதைனா ரொம்ப சந்தோசமா படிப்பீங்களே.. அதுவும் ரசிச்சு ரசிச்சு.. போங்க போங்க புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க..

ஆயில்யன் said...

பத்து தாய்க்கு சமமான பாசத்தோட நீங்க படம் பாக்கல அதுதான் தப்பு அதை விட்டு படம் சரியில்ல கதை சரியில்லன்னு கதைக்கப்பிடாது :)

Anonymous said...

செல்வா .
இதுவரை எத்தனை விஜய் படம் வந்திருக்கு இதே மாதிரி. எத்தனை தடவை புலம்பியிருக்கீங்க இதே மாதிரி. ஆனா பார்க்காம விட முடியுமா...? முடியவே முடியாது. ஏன்னா... படம் பார்க்கற ரெண்டரை மணி நேரமும் மனச லேசாக்கி, கவலைய மறக்க vachchu வச்சு ரசிக்க வச்சு sandhoshappaduththaraசந்தோஷப்படுத்தர எங்க தளபதியோட திறமைதான். ஏன்யா... தெரியாமத்தான் கேட்கிறேன். தெனம் தெனம் இட்லி சாப்பிடரதால இட்லிய வெறுக்கவா செய்யறோம். ஒரே மாதிரி இருந்தா என்னய்யா தப்பு? விஜய் ஆடற ஆட்டத்துக்கே படத்த ரெண்டு வாட்டி பார்க்கனுமயா... “இல்ல... தப்பாப் புரிஞ்சிட்டேள்...நான் கலைகன்னோடுதான் பார்ப்பேன்.. நோள்ளைக் கண்ணோடுதான் பார்ப்பேன் “... அப்படின்றவங்களுக்கு இருக்கவே இருக்கு அங்காடித் தெரு, பொக்கிஷம், லொட்டு லொசுக்கு... போங்க போய் ஒப்பாரி வச்சு நல்லா.... சை... பார்த்துக்கிட்டே இருங்க படம் சூப்பர் ஹிட தான்....
செல்வா

King Viswa said...

என்ன கொடுமை சார் இது?

ஆனாலும் நல்ல தமிழ் படங்களை பார்க்கவேண்டி இருக்கும் உங்கள் ஆவல் புரிகிறது. சற்றே பொறுங்கள். கலைஞரின் பெண் சிங்கம் வெகு விரைவில் ரிலீஸ் ஆகிவிடும்.

இந்த படத்தை போலவே நீங்கள் அந்த படத்தையும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அவா.

ஜிங்காரோ ஜமீன் said...

Nall velai athisha. free ticket kidaichum thappichen. :-)

ராம்ஜி_யாஹூ said...

படத்த முழுவதும் பார்த்த உங்கள் பொறுமைக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசுங்க.

Kiruthigan said...

முடியல..
நல்லாருக்கு

Unknown said...

இப்படி போட்டு தாக்குனாலாவது பய புள்ளைங்க ஓடிப்போயிடும்னு பாத்தா கட்டவுட்டுக்கு பால் ஊத்துதுங்க....

ராசுகொமாரு.

மணிகண்டன் said...

I saw the movie yesterday and i liked it. Comedy & Action are absolutely good. Screenplay is fast as like vijay's movie.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

புதிய பரிதி said...

ஆஸ்பத்திரி செலவு எவ்வளவு பாஸ்

விக்னேஷ் காந்த் said...

கதர்ரா... சிதர்ரா... பதர்ரா.. இந்த சுறா... இவ்ளோ கேவலமா நாம பேசினாலும், கொஞ்சம்கூட சொரனையே இல்லாம சோத்ததான் திங்குறான்களா? என்கிற ரீதியில் சிரிச்சுகிட்டே பேட்டி தரானுங்க.. அரசியலுக்கு வருவேன்கிறானுங்க.. என்ன தைரியம் சார் இவங்களுக்கு?.. இந்த படத்த நீங்க கொஞ்ச நாள் பொறுத்து திருட்டு வி.சி.டி ல பார்த்துட்டு விமர்சனம் பண்ணியிருக்கலாம்.. காசு கசுமாளமா போச்சே.. பரவாயில்ல விடுங்க.. கொடுத்த காசுக்கு கருப்பு -------- பொண்ணுங்க ஆட்டத்தையாவது பாத்தீங்களே?... தங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

அப்பாவி said...

///இப்படி போட்டு தாக்குனாலாவது பய புள்ளைங்க ஓடிப்போயிடும்னு பாத்தா கட்டவுட்டுக்கு பால் ஊத்துதுங்க....///
இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால்.... இன்னைக்கு பால் ஊத்ராங்கன்ன , நேத்தே படம் காலின்னு அர்த்தம்

Unknown said...

padam sariyillaiya nan ethana thadava amarathu

shiva said...

விஜய் படத்த குட பாத்துரலாம் ..ஆனா விஜய் ரசிகர்கள் படம் ஹிட் னு போடற கடிய தான் தாங்க முடியல ... !

Unknown said...

"சுறா” is in கடல்.So he came in இளைய Navy தளபதி உடை to catch
"சுறா”.சர்தார்ஜி உடையில் சர்தார்ஜி ஐடியா!

மணிஜி said...

எலேய்..ஊரே படம் நல்லாயில்லைன்னு எழுதுது..அப்ப நீங்க?

ARV Loshan said...

அட்ரா அடரா.. கலக்கல்..

மெத்த சரி அதிஷா.. நாமளும் திருந்த மாட்டோம்.. அவங்களும் திருந்த மாட்டாங்க..

மேவி... said...

naan vera madiri la yethir parthen ..ungalukkum (ungalukke) pidikkavillaiyaa..raittu

ஷர்புதீன் said...

:) innumaa nambureenga vijaya....!!!

கார்க்கிபவா said...

செல்வாவுக்கு ஒரு ரிப்பீட்டேய்

அதிஷா, ஃபோட்டோ சூப்பர். எங்க இருந்து கிடைக்குதுங்க உங்களுக்கு மட்டும்?

VISA said...

:)

Sanjai Gandhi said...

//ஆனாலும் நல்ல தமிழ் படங்களை பார்க்கவேண்டி இருக்கும் உங்கள் ஆவல் புரிகிறது. சற்றே பொறுங்கள். கலைஞரின் பெண் சிங்கம் வெகு விரைவில் ரிலீஸ் ஆகிவிடும். - கிங் விஷ்வா //

கொய்யால... இவ்ளோ பெரிய பதிவையும் 3 வரிகள்ல தூக்கி சாப்ட்டுட்டாருய்யா மனுஷன் :))

பா.ராஜாராம் said...

:-)

tharuthalai said...

ஆட்டோட நெலமை பரவாயில்லை.பலி கொடுக்கத்தான் கூட்டிட்டு போறாங்கன்னு அதுக்கு தெரியாது.என்னோட குட்டீஸ்களுக்காக இந்த நாசமா போன படத்துக்கு இன்னிக்கு மனசு நெறஞ்ச பீதியோடபோறேன்.எனக்கு ஏதும் ஆகாமலிருக்க இதை படிக்கும் யாவரும் வேண்டிக்கொள்ளா விட்டால் எனக்கு ஏற்பட்ட இதே நிலைமை உங்களுக்கும் நேரலாம்.

தமிழ்நதி said...

பயங்கர குசும்பு உங்களுக்கு:) நல்ல நகைச்சுவையோடு எழுதியிருக்கிறீர்கள். கல்யாணமான ஆரம்பத்துல இப்டித்தான் இருக்கும்போல:)

Thamira said...

செமத்தியான விமர்சனம். ரசித்துச் சிரித்தேன்.!

Raashid Ahamed said...

அய்யோ இந்த அதிஷாவ தட்டிக்கேக்க யாருமே இல்லையா ?
எங்க தலைவன் தங்க தலைவன் தானை தலைவன் விஜயோட அடுத்த படங்களான “திமிங்கிலம்”, ”ஆக்டோபஸ்” வெளிய வரட்டும் !! அத பார்த்ததும் அதிர்ச்சில விமர்சனம் எழுதறத விட்டுட்டு துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடுறீரா இல்லையான்னு பாக்குறேன். !!

A Simple Man said...
This comment has been removed by the author.
Romeoboy said...

விடுங்க பாஸ் அடுத்து விருதகிரி வருது இந்த கொடுமைய அதுல சரிகடிடடலாம்.

Goinchami said...

நல்ல பதிவு நன்றி பத்ரி

வெற்றி said...

சாட்டையடி பதிவு

Unknown said...

என் பசங்க (5 வயசு சின்னதும் 13 வயசு பெரிசும்) பண்ண டார்சர் தாங்க முடியாம அந்த படத்துக்குப் போனேன் அதி...இதுல என்ன கொடுமைன்னா அதுக்கு முந்தினா நாள்தான் காரைக்குடி போய் திரும்பி வந்த பஸ்ல வேட்டைகாரன் படம் பார்த்தேன் (ப்ரைவேட் பஸ்ஸுக்கும் சன் டீவிக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்குமோ சென்னை டூ காரைக்குடி போகும்போதும் வேட்டைக்காரன் படம் தான்) முதல் சீட்ல இடம் எஸ்கேப் ஆக முடியல...இப்படி இரண்டு நாளுக்குள்ள் ரெண்டு தடவை வேட்டைக்காரன் பாத்து நொந்து போன என்னை இவங்க அதன் தொடர்ச்சியா சுறாவை பாக்க வச்சு கிட்டத்தட்ட எங்க திரும்பினாலும் விஜய் நிக்கற மாதிரியே தெரியுது. கொடுமை என்னன்னா பசங்களுக்கு படம் பிடிச்சுது. சூ மந்திரகாளின்னு பாடிட்டு திரியறாங்க. பசங்க ப்யூச்சர நினைச்சா பயமா தான் இருக்கு...

good review athisha.. படம் பார்த்த கொடுமை இந்த விமர்சனம் வாசிச்சு சரியாச்சு

Uma said...

ஓ! நான் கூட ஏதோ ஸ்பீல்பர்க் ரீமேக்னு நினைச்சிட்டேன்! அப்ப ஜாஸ் படத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்கிறீங்க! ;)

அன்பரசு said...

உங்க நெலம புரியுது தலைவரே! இருந்தாலும் எப்படி இவ்வளவு நுணுக்கமா படத்த பாத்து விமர்சனம் பண்ணியிருக்கீங்க? விஜய் படத்தைலாம் இவ்வளவு டீடெய்லா விமர்சனம் எழுதாதீங்க பாஸ், பலதரப்பட்ட மக்கள் உங்க பதிவ படிக்க வர்ராங்க, அவங்க ஹெல்த்துக்கு ஒன்ணு கெடக்க ஒண்ணு ஆயிடக் கூடாது இல்லையா?

விமர்சனத்தப் படிக்கிறதுக்கே பின்னாடி புடுங்குற மாதிரி இருக்கே, படம் பாத்தவங்க கெதி? என்னத்த சொல்ரது? திட்டித் திட்டி நமக்கே அலுத்துப் போச்சு, நம்ம டாக்டர் தம்பி அப்பிடியும் மாறுவதாகத் தெரியல. இது பத்தாதுன்னு அந்தத் தறு'தல' வேற அத விட மோசமா படம் பன்ணுது. இவனுங்களுக்குள்ள எதுலதான் போட்டின்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?

uthira said...

ena ipadi solliteenga intha mathiri suppperrrrrrrrrrraaaaaaaaaaa vimarsanum ezhuthanumna intha mathiri vijay nadicha thane mudiyum

சில பேரு எடுத்து சொன்னா திருந்திருவாங்க!. சிலருக்கு பட்டாதான் புரியும். சில பேர் இருக்காங்க எருமைத்தோல் மாதிரி செறுப்பால அடிச்சு காரித்துப்பினாலும் திருந்தவே மாட்டாங்க! – யாருக்கு இந்த பஞ்ச் டயலாக்! விடை கடைசியில்

சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ, விஜய டீயாரின் வீராசாமி உங்களுக்கு பிடிக்குமா.. இந்த படமும் உங்களுக்கு மிகமிக பிடிக்கும்.. முழுமையான காமெடி கலாட்டா!. எனக்கு பிடித்திருந்தது... ரசித்து சிரித்தேன்.

சுர்ர்ர்றா!
முதலில் சொன்ன பஞ்ச் என்னோப்போல படம் பார்த்தவர்களுக்கும் , விஜய்க்கும் சன்பிக்சர்ஸ்க்கும் சமர்ப்பணம்!

kalakiteenga ponga

idhe vimarsanathe copy paste sench புதியதலைமுறை le potingana nalla irukum ana antha book le cinema pathi ellam poda mateengalo?

விஜய் ரசிகன் said...

தென்னகத்து மார்லன் பிராண்டோவே !! தமிழ் சிங்கமே !! எங்கள் தங்கமே !! திரையுலக திருவிளக்கே !! எங்கள் குல குத்துவிளக்கே !! ஐயகோ !! என் இரத்தம் கொதிக்கிறது. உடனடியாக ஒரு ஆஸ்கார் லெவல் படத்தில் நடித்து இந்த அதிஷாவின் கொட்டத்தை அடக்கு !!!
இவண்- அகில உலக விஜய் ரசிகர் மன்ற தலைவன் !!

இம்பார் said...

இந்த சுறா கடிச்சதுல தப்பித்தோம் பிழைத்தோம் என்று திறையறங்கிலிருந்து வெளியே வந்தேன்....
சொந்த செலவிலேயே செவிணை வச்சுக்க ஆசைற்றவுக்க அவசிய பாக்க வேண்டிய படம் தன் இத்த சுறா.

இம்பார்

chinnathambi said...

""""""தெனம் தெனம் இட்லி சாப்பிடரதால இட்லிய வெறுக்கவா செய்யறோம். ஒரே மாதிரி இருந்தா என்னய்யா தப்பு? விஜய் ஆடற ஆட்டத்துக்கே படத்த ரெண்டு வாட்டி பார்க்கனுமயா..."""""""""


அவ்வ்வ்வ்

இவனுகள திருதத முடியாது.""""""""


"""அத பார்த்ததும் அதிர்ச்சில விமர்சனம் எழுதறத விட்டுட்டு துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடுறீரா இல்லையான்னு பாக்குறேன். """""''
ஏன் இந்த கொலைவெறி.


""""" இந்த வாரம் முத்ல் இடத்தில் சுறா"" எண்ற் இனிய செய்தியை உஙகள் சன் தொலைக்காட்சி டாப் 10 ல் கண்டு களியுஙகள்..

எப்புடி

Naresh said...

Man u made me laugh good post,

vinthaimanithan said...

//விடுங்க பாஸ் அடுத்து விருதகிரி வருது இந்த கொடுமைய அதுல சரிகடிடடலாம்//
ஆத்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈ....

A Simple Man said...

இரத்ததானப் பின்னூட்டத்தை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி.

Prithviraj said...

Oru vishayam enakku puriayala.. Vijay padathula vera enna edir paakureenga... Ivar enna Kamal haasana illa rajinikaantha... vijay padamna ippadi thaan irukkum... Idhula kodumayaana vishyam enna naa.. ivar arasiala vararudhaan.. 2.5 manineramae ivara paaka mudiala engirundu 5 varusham paaka mudiyum...

Unknown said...

padam pudikalena vutula oorama ukkara vendiyathu thane....unga Time pass aganumnu Poittu Vijay ah kutham Sonna entha vithathula..Niyam Post panna punniyavangale....Entha Sireee :p

Manion said...

// Uma, ஓ! நான் கூட ஏதோ ஸ்பீல்பர்க் ரீமேக்னு நினைச்சிட்டேன்! அப்ப ஜாஸ் படத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்கிறீங்க! ;) //

எப்படி! முடியல!

genius said...

ஹா ஹா ஹா, உங்கள எல்லாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு ... நான் கடைசியா பார்த்த விஜய் படம் 'அழகிய தமிழ் மகன்'... ;)

ஊர்சுற்றி said...

எப்பா ராசா..... !!!
அப்புடியே நெசம். இதுவரைக்குத் தியேட்டருக்குப் போயி பார்த்த படத்துலயே, அதிகமா சத்தம்போட்டு, விசிலடிச்சி என்ஜாய் பண்ணினது இந்த படத்தைப் பார்த்துதான்! :)))))))

Unknown said...

இது எனக்கு புடிச்சிருக்கு,...

geetha said...

romil thaniyaha iruntha pothu intha mulu neeelllaa pathuvum pinootamum en kangal ulle sellumbadi vayvittu sirithen kattayamaha indre padam paarthe theeruvathu endra uyariya kolhai ullen ....................pls yaarum yennai thadukka vendaam.yen mudivukku naane kaaranam.
sarithirathil en peyar idam perum...................nambikkaiyudan.............

geetha said...

romil thaniyaha iruntha pothu intha mulu neeelllaa pathuvum pinootamum en kangal ulle sellumbadi vayvittu sirithen kattayamaha indre padam paarthe theeruvathu endra uyariya kolhai ullen ....................pls yaarum yennai thadukka vendaam.yen mudivukku naane kaaranam.
sarithirathil en peyar idam perum...................nambikkaiyudan.............

geetha said...

roomil thaniyaaha iruntha pothu intha mulu neeelllaa pathuvum pinootamum.......... en kangal ulle sellumbadi vayvittu sirithen kattayamaha indre padam paarthe theeruvathu endra uyariya kolhaiyudan ullen ....................pls yaarum yennai thadukka vendaam.yen mudivukku naane kaaranam.
sarithirathil en peyar idam perum...................nambikkaiyudan.............