28 June 2010

களவாணிரொம்ப சீரியஸான கதை. எந்த நேரத்துல எவனுக்கு குத்து விழும். எவனப்போட்டு வெட்டுவாய்ங்க , கிளைமாக்ஸுல யாரு சாவாய்ங்கனு பயந்துகிட்டே படம் பார்த்தா.. பயபுள்ளைங்க கடைசிவரைக்கும் சீரியஸான கதைய சிரிக்க சிரிக்க குடுத்துருக்காய்ங்க!

களவாணி. பருத்தி வீரன் மாதிரி படம் முழுக்க ஒரே லந்துதான். அதுவும் லந்துனா லந்து மச லந்து. பட்டுக்கோட்ட,அரசனூர்,ராணி மங்கலம்னு புது இடம்.. களவாணிப்பயலா திரியற ஹீரோ , ஸ்கூல் படிக்கற ஹீரோயின் , கிரிக்கெட் போட்டில குழந்தைங்க தொடங்கி , பார்ல தண்ணி அடிக்கறவன் வரைக்கும் வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும் கிடக்கற இரண்டு கிராமத்து ஜனங்க , லவ்வர்ஸு ரெண்டுபேருக்கும் அதனால சிக்கலு.. நடுவுல ஹீரோவோட சில்வண்டித்தனமான வேலையால லவ்வுக்கு பாதிப்பு, அதை சரி பண்ணி , ஊர சரி பண்ணி , எப்படி லவ்வுல ஜெயிக்காருன்றது மீதி ஸ்டோரி..

படம் மொத சீன் ஆரம்பிச்சா சும்மா பத்தவச்ச சரவெடி மாதிரி கிளைமாக்ஸ் வரைக்கும் படபடபடனு வெடிச்சிகிட்டே போகுது.. நடுவுல வர பாட்டுங்க மொக்கையா இருந்தாலும் பெரிய டேமேஜ் இல்ல! ஏன்னாப் பாருங்க ஒவ்வொருக்கா பாட்டு வரப்பவும் ஹீரோயின அம்புட்டு அழகா காட்டுதாய்ங்க .. கண்ணுலயே நிக்கு.. பாக்க பாக்க நமக்கும் அப்படியே பத்திக்குது. ரொம்ப இயல்பா நடிச்சிருக்கு அந்த பொண்ணு. பேரு நினவில்ல. ஆனாலும் படத்துல மொத மார்க்கு அந்த பாப்பாவுக்குதேன்.

பசங்க படத்துல நடிச்ச நம்ம மீனாட்சி.. அல்லது விமல்தான் ஹீரோ. பரட்ட தலையும் வெள்ளையும் சொள்ளையுமா தெனாவட்டா திரிஞ்சுகிட்டு , போக வர பொடிப்பிள்ளைக கிட்ட கல்யாணம் கட்டிகிறேனு சொல்லுனு மிதப்பா திரியறது.. பட்டைய லேப்புறாய்ங்க! அதுவும் கிளைமாக்ஸுல மவனே என் மச்சான் மேல எவனாச்சும் கைய வச்சீங்கனு சீர்றப்ப தியேட்டரே அதகளமாகுது..

ஹீரோ ஹீரோயினுக்குப்பறம் கஞ்சாகறுப்புதேன் படம் முழுக்க.. ரொம்ப நாளைக்கப்பறம் கஞ்சாகறுப்பு காமெடி சரியா வொர்க்அவுட் ஆகிருக்கு.. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது... அது போக வில்லனா வர புதுமுகம்.. ஹீரோவுக்கு அம்மாவ வர சரண்யா , அந்த தங்கச்சிப்பாப்பானு அப்பாவ வர இளவரசுனு எல்லா கேரக்டருமே உசுரோட அப்படியே மனசுக்குள்ளயே சுத்திக்கிட்டு கிடக்குறாய்ங்க!

ஹீரோயினுக்கு பெரியப்பாவ வர அந்த பெரியவரு நிஜமாவே கிராமத்து காரர்தான் போலருக்கு!

இன்டர்வெல்ல ஒரு சேஸிங் , கிளைமாக்ஸுல ஒரு சேஸிங் , இரண்டுலயும் ஹீரோ ஒரு பொண்ண தூக்கிட்டுப்போறாரு.. நாடோடிகள் மாதிரியே இருந்தாலும்.. இது காமெடி சேஸிங், செம! படத்தோட மியூசிக்கு ரொம்ப சுமாரா இருந்தாலும் பிண்ணனில பட்டைய கெளப்புறாப்ல இசையமைப்பாளரு. பாட்டையும் சூதானமா போட்டிருந்தா நல்லாருந்திருக்கும். படத்தோட லொக்கேசன்லாம் ரொம்ப புதுசு. லேட்டஸ்டு கிராமத்த கண்ணுமுன்ன நிறுத்திருக்காய்ங்க! கிராமத்துல டிவி இருக்கு, துபாய் போய்ட்டு வந்து வீடுக்கட்டுற ஆளுங்க , கார் இருக்கு,யமஹால சுத்திகிட்டு பீரடிக்கிற இளந்தாரிங்க இருக்காய்ங்க, இதுமாதிரி கிராமத்தயும் கிராமத்தானையும்தான் எங்கூருப்பக்கம் நான்கூட பார்த்துருக்கேன். டைரக்டருக்கு ஒரு சபாஷு!

படத்துல ஒரு சீன்ல வெட்டுக்குத்து நடக்கு! அப்பக்கூட ரொம்ப சீரியஸா இல்லாம ஒரு துளி ரத்தம்தான் சட்டைல ஊர்றாப்ல காட்டுறாய்ங்க, நல்ல ஐடியா. படத்துல பெரிசா ஆபாச வசனம் , குத்துப்பாட்டு, சண்டை எதுவுமே இல்லாம சும்மா விறுவிறு சுர்ர்ர்ருனு ஒரு படம் குடுக்க முடியும்னு நிரூபிச்ச டைரக்டருக்கே இன்னொரு சபாஷு. புத்திசாலித்தனமா பல காட்சிகள அமைச்சதுக்கும் அவர பாராட்டியே ஆகணும்.

மனசுக்கு இதமா சிரிச்சுகிட்டே சந்தோசமா இந்த களவாணிப்பயல கட்டாயம் குடும்பத்தோட பாக்கலாம்னாலும்.. படத்துல வர ஸ்கூல் பாப்பா காதல்தான் கொஞ்சம் இடிக்கு! தயவு பண்ணி பத்தாம்ப்பு படிக்கற பிள்ளைக லவ் பண்றாப்ல படம் எடுக்காதீங்க. பாவம் நம்மூரு பிள்ளைக இப்பதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிருக்கு..

மத்தபடி களவாணிய , திருட்டு டிவிடில களவாணித்தனமா பாக்காம தியேட்டர்ல பாருங்கப்பு! படம் நெசமாவே நல்லாருக்கு.

18 comments:

முரளிகண்ணன் said...

கண்டிப்பா தேட்டர்லயே பார்த்துப் புடுவோமப்பு

VISA said...

//தயவு பண்ணி பத்தாம்ப்பு படிக்கற பிள்ளைக லவ் பண்றாப்ல படம் எடுக்காதீங்க. பாவம் நம்மூரு பிள்ளைக இப்பதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிருக்கு..
//

Athisha Touch!!!

Pot"tea" kadai said...

தமிழ் திரைல ரிலிசானவோடனே பாத்துருவோம்

manjoorraja said...

இவ்வளவு உருகி அனுபவித்து விமர்சனம் எழுதியிருக்கீங்க! அதுக்காகவாவது திருட்டு டிவிடி வாங்கி பாத்துடறோம்.!

Unknown said...

எங்கூரு காரங்க எடுத்த படம்.. நன்றி நண்பா ..

Thamira said...

Good. நல்ல படம் ஒண்ணு சிக்கியிருச்சா, கண்டிப்பா பாத்துடலாம்.

Romeoboy said...

ஏய் அப்பு இப்படி எல்லாம் சொல்லிடு நீ கம்பிய விடலாம்ன்னு நினைக்காத.. டிக்கெட் யாருலே ஸ்பொன்சர் பண்ணுவாக..

Unknown said...

//மொத்தம் பதினாறே ஷாட் ஆனால் அது எடுத்து முடிக்கும் முன் வாயில் நுரைதள்ளி விட்டது... சினிமாவோ விளம்பரபடமோ தனி நபர் திறமை அல்ல...அது ஒரு கூட்டு முயற்சி... ஆனால் ஒரு திரைப்படம் படம் சரியில்லை என்று எழுதுவது உங்கள் எண்ணம்... ஆனால் ஒரு கலைஞனை விமர்சனம் செய்கின்றேன் என்று சொல்லி குத்தி கிழிப்பது எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.....//

மேலே உள்ளது நண்பர் ஜாக்கி சேகர் இன்று எழுதியது. ஒரு படம் நன்றாக இருப்பின் அதன் குறைகளோடு நிறைகளையும் பாராட்டுவது மிக அவசியம். பகிர்தலுக்கு நன்றி

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இப்படி பத்தாம்ப்பு, பதிணெண்னாப்பு புள்ளைகள காதலிக்குற மாதிரி காட்டி காட்டியே இப்ப ஒரு புள்ள பள்ளிக்கூடத்துல கொழந்தைய பெத்துப்போட்டுருக்கு,

இந்த சினிமாக்காரக எப்பதான் திருந்தப் போறாகளோ!.

விமர்சனம் சூப்பர்!.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இவ்வளவு உருகி அனுபவித்து விமர்சனம் எழுதியிருக்கீங்க! அதுக்காகவாவது திருட்டு டிவிடி வாங்கி பாத்துடறோம்.!

இப்படியெல்லாம் வெளிப்படையா பேசுனா போலிஸ் வருமப்பு!

- ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

சுவாசிகா said...

////தயவு பண்ணி பத்தாம்ப்பு படிக்கற பிள்ளைக லவ் பண்றாப்ல படம் எடுக்காதீங்க. பாவம் நம்மூரு பிள்ளைக இப்பதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிருக்கு..
//

நச்!!

//மத்தபடி களவாணிய , திருட்டு டிவிடில களவாணித்தனமா பாக்காம தியேட்டர்ல பாருங்கப்பு! //

நச்சோ நச்!!


அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Raashid Ahamed said...

எலே மக்கா !! அதிஷாவுக்கு புடிச்ச மாதிரி ஒருநல்ல படம் எடுத்துட்டாங்கப்பா !! அவசியம் பாத்துடுங்கப்பா !! அது எப்புடி ? அழகான தமிழ் பேருல படம் எடுத்தா புடிக்கறதுல்ல ? உதாரணம்:அங்காடி தெரு, ராவணன், சுறா, இந்த மாதிரி பேருவச்சா தான் புடிக்குமா ? களவாணி !! சரி அடுத்து வரப்போற கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி படங்களையும் நல்லா இருக்குன்னு சொல்லிடுவீங்களோ ?

vimal said...

Nice review :)

மயூ மனோ (Mayoo Mano) said...

//படத்துல வர ஸ்கூல் பாப்பா காதல்தான் கொஞ்சம் இடிக்கு! தயவு பண்ணி பத்தாம்ப்பு படிக்கற பிள்ளைக லவ் பண்றாப்ல படம் எடுக்காதீங்க. பாவம் நம்மூரு பிள்ளைக இப்பதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிருக்கு..//

ஒண்ணாங் கிளாஸ் பிள்ளையள் காதல் பண்ணியே படம் வந்திட்டு..! அதுக்கு இது பரவாயில்லை..! படம் பிடிக்கும் என்று தோன்றுது.! பார்ப்போம்!

Unknown said...

//மத்தபடி களவாணிய , திருட்டு டிவிடில களவாணித்தனமா பாக்காம தியேட்டர்ல பாருங்கப்பு! படம் நெசமாவே நல்லாருக்கு. //

இந்த காலத்தில் யாருங்க தியேட்டரில் போய்..?

Sanjai Gandhi said...

அட.. நல்லாருக்குன்னு நம்மாளே சொல்லிட்டாரா.. நாளைக்கு பார்த்துடுவோம்லே.

Kite said...

இந்த படம் விகடன் விமர்சனத்தில் 46மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது. நான் இந்த ஞாயிறு பார்ப்பதற்கு முன்பதிவு செய்திருக்கிறேன். ஆனால் சென்னையில் சிறிய திரையரங்குகள் உட்பட அனைத்திலும் ஒரு காட்சி மட்டுமே ஓடுகிறது.

vasan said...

@அதிஷா,
எப்ப‌டி மாடுலேஷ‌னை, ஏரியாவுக்கு, ஏரியா ச‌ரியா செட்ப‌ண்ணிக்கிறீங்க‌?