24 June 2010
வெள்ளிங்கிரி - 3
புழு,பூச்சி,அட்டை,டைனோசர் கொசு ஒன்றுவிடாமல் கடிக்க வாய்ப்பிருக்கிற மலை வெள்ளிங்கிரி. அதனால் இரவில் மலையேறுபவர்கள் டார்ச் லைட்டை கையில் பிடித்தபடி ஏறுவார்கள். நகரங்களிலிருந்து வரும் எங்களைப்போன்றவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்கிற இருமாப்பு! ஆணவம்! அதனால் இருட்டிலேயே அநாயாசமாக நடப்போம். கையில் கம்பு கூட வைத்துக்கொள்வதில்லை. கம்பு வைத்துக்கொள்ள ஆசை பட்டாலும் காசிருக்காது. அதனால் மலையேறும் போதே யாருக்காவது கம்பு தேவைப்பட்டால் மரங்களிலிருந்து வாகான ஒரு கிளையை உடைத்துக்கொள்வோம்.
மரத்தில் கம்பு உடைப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. பச்சை மரத்திலிருக்கும் கிளை அவ்வளவு சுலபமாக உடைந்து கையோடு குபுக் என வந்துவிடாது. மலையேறும் போது அரிவாள் கத்தியெல்லாம் வைத்துக்கொள்ளவும் முடியாது. வைத்துக்கொண்டாலும் தவறில்லை. நாங்கள் கையால்தான் உடைப்போம். அதனால் பொறுமையாக ஒரளவு வெளிச்சமான பகுதியில் எங்கு வளைத்தால் உடையுமோ அங்கே உடைக்க வேண்டும். அல்லது கிளையை லேசாக அதன் அடிமட்டத்தில் உடைத்து , அதன் கீழ் முனையைப் பிடித்து நாலு சுழற்று சுழற்றினாலும் கிளை கையோடு வந்துவிடும்.
நீங்கள் கம்பு உடைக்க மரத்தை உலுக்கும்போது தேனீக்கள் கூட்டை கலைத்துவிடும் அபாயம் உண்டு. அல்லது வவ்வால்கள் கூட்டமாய் படையெடுத்து உங்கள் மீது தாறுமாறாக மோதிவிட நேரிடலாம். பூச்சிகள் அல்லது அட்டைகள் சட்டையில் அமர்ந்து கொள்ளலாம். நிற்குமிடத்திற்கு கீழேயிருக்கும் ராட்சத எறும்புகள் காலில் ஏறி விடவும் வாய்ப்புள்ளது. அதனால் பொறுமை மிக முக்கியம். நண்பர்கள் சீக்கிரன்டா போலான்டா என்று உங்களை உசுப்பேற்றுவார்கள். அவசரமில்லாமல் எருமை போல் இருப்பதே நல்லது. உங்களுக்கு அத்தனை லாவகமோ திறமையோ இல்லையென்று நினைத்தால் பத்து ரூபாய்க்கு மலையடிவாரத்திலேயே நல்ல வழுவழு கம்புகள் அடிபாகம் மழுங்கடித்து தரப்படும், அதை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் காசு கொடுத்து கம்பு வாங்குவதை விடவும் கையால் ஒடிப்பதில்தான் கிக் அதிகம்.
முதல் மலையிலிருக்கும் சோடாக்கடையில் மற்றவர்கள் தம்மடிக்க, நானும் கமலும் இரண்டாவது மலை ஏறத்தொடங்கிவிட்டோம். கையில் டார்ச் இல்லை. கும்மிருட்டு. முதல்மலை ஓரளவு வெளிச்சமாக இருந்தாலும் , இரண்டாவது மலையில் மரங்களின் அடர்த்தி தாறுமாறாக இருக்கும். பாதையும் கூட மண் பாதைதான். பார்த்துப் பார்த்து அடிஅடியாய் இடித்தபடி இருவர் மட்டும் கையில் சிகரட்டோடு நடக்கத்தொடங்கினோம். ஓரிடத்தில் கமல் மாம்ஸ் நில்லு என்றான்.
‘என்னடா?’
‘இருடா , ஏதோ சத்தம் கேட்குது’
எனக்கு அடிவயிற்றில் உருளை உருளத்தொடங்கிவிட்டது. எனக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை. ஆனால் அவனோ ஏதோ உருமுவது மாதிரி இருக்கு என்றான். இப்போது எனக்கும் கூட ஏதோ உருமுவது மாதிரிதான் இருந்தது. உருமாத மாதிரியும் இருந்தது. சப்தம் இரண்டுங்கெட்டானாக இருந்தாலும் பயம் உறுதியாக இருந்தது. முன்னால் ஒரு அடி எடுத்துவைக்கவும் தைரியமில்லை. பின்னால் நடக்கவும் பயம். கமல் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். என்ன நினைத்தானோ திபுதிபுவென பின்னோக்கி ஓடத்தொடங்கினான்.. நானும்.. திபுதிபுதிபுதிபு..
ஒடத்தொடங்கிய கால்கள் சோடாக்கடைக்கு அருகிலிருக்கும் வெள்ளைப்பிள்ளையார் காலடியில்தான் நின்றது. வெள்ளைப்பிள்ளையார் எப்போதும் போல விபூதி கொட்டி வெள்ளையாக காட்சியளித்தார். முதல் மலை ஏறுபவர்கள் ஏறிமுடித்ததும் வெள்ளை பிள்ளையார் கோவிலில் கையளவு விபூதி வாங்கி நெற்றியில் , உடலில் பூசிக்கொண்டு நடக்க வேண்டும் என்பார் மாமா. அதற்கு அறிவியல் ரீதியான காரணமும் சொல்லுவார். விபூதியை உடலில் பூசிக்கொண்டால் பூச்சிகள் நம்மை கடிக்காதாம்.. எனக்கு பல முறை கடித்திருக்கிறது. அந்த விபூதி சித்தனாதன் விபூதி போல மாவு மாதிரி இருக்கும். சாம்பல் குறைவாகவும் சுண்ணாம்பு அதிகமாகவும் கலந்ததாக இருக்கலாம். யாரும் நாங்கள் சொன்னதை நம்பவில்லை. ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அதுவும் இரவில் எந்த விலங்கும் பாதைக்கு அருகில் கூட வராதாம்.
அடர்த்தியான காடுகள் அடங்கியது முதல் மலை. ஏறத்துவங்கும்போதே வியர்வையில் வெளியாடை உள்ளாடையெல்லாம் நனைந்து போகும். ஏனோ கடுமையான வெப்பத்தை உணர முடியும். படிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு செட்டு படிகளும் யாராவது கவுண்டர்கள்,செட்டியார்கள்,பிள்ளைமார்,நாயக்கர்கள் உபயத்தில் என்று ஏதாவது ஒரு படியில் கல்வெட்டியிருப்பார்கள். ராஜகவுண்டர்,சின்னய்யா கவுண்டர்,முத்துராமகவண்டர்,சொக்கலிங்க செட்டியார் என சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளும் காணப்படும்.. இந்த பெயர்களுக்குப் பின்னால் பெருங்கதைகள் பல உண்டு.. அது பின்னால்...
வெள்ளிங்கிரி மலையில் பெண்கள் ஏறக்கூடாது என்பது ஐதீகமாம். என்ன கருமாந்திரமோ.. எனக்குத்தெரிந்த அம்மாக்களும்,பாட்டிகளும் மட்டும் பகல் நேரத்தில் முதல் மலை மாத்திரம் ஏறுவார்கள் , பிள்ளையார் கோவிலில் பூஜை முடித்துவிட்டு திரும்பி விடுவர். அடிவாரத்திற்கு வந்தபின் உடன் வந்திருக்கும் பெண்களிடம் முதல் மலை ஏறின கதையை நாள்முழுக்க சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
வெள்ளிங்கிரி மலையில் மட்டுமல்ல , அடிவாரத்தை ஒட்டியும் பல நூறு ஏக்கர்களுக்கு அடர்த்தி மிக அதிகமான காடுகள்தான். கொஞ்சமும் கேப் விடமால் நாலாபக்கமும் பசுமை. சுற்றிச்சுற்றி மூலிகைகள். எங்கும் சின்னசின்ன காட்டுவிலங்குகள். முதலில் அங்கே இயேசு வந்தார் , பாதி காடு காலி! பின் சிவபெருமான் வந்தார் மீதி காடும் காலி!
- தொடரும்
முந்தைய இரண்டு பாகங்கள்
பாகம் - 1
பாகம் - 2
படம் உதவி - karthicks.net
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
நல்ல இருக்கு
ஒருமுறை போயிருக்கிறேன்.ஏறும் போது நன்றாக இருந்தது.ஆனால் இறங்கும்போதுதான் மிகக்கடினமாக இருந்தது.
நன்றாக உள்ளது.
ஒருமுறை சென்றிருக்கிறேன்.ஏறும் பொழுது நன்றாக இருந்தது,ஆனால் இறங்கும்போது மிக கடினமாக இருந்தது.
// இப்போது எனக்கும் கூட ஏதோ உருமுவது மாதிரிதான் இருந்தது. உருமாத மாதிரியும் இருந்தது. சப்தம் இரண்டுங்கெட்டானாக இருந்தாலும் பயம் உறுதியாக இருந்தது. //
இதுதான் உங்க ஸ்பெஷல்... அந்த விவரிப்பு... சூப்பர்...
இரசித்துப் படிக்கும் தொடர். தொடருங்கள் அதிஷா
பத்து வருடங்களுக்கு முன்னர் ஏறியது!
மீண்டும் கண் முன் நிழலாடுது!
நாங்கள் விருதுநகர் அருகில் உள்ள மகாலிங்கம் மழைக்கு இது போல நண்பர்கள் குழுவுடன் செல்வதுண்டு....
நடு இரவில் 15 கிலோமீட்டர் ஆள் இல்லா காட்டுக்குள் அடிவாரம் நோக்கி நடக்க வேண்டும். போகும் பொது பல வெறி நாய்களும் ...சிங்க முக குரங்குகளும்... புலி, நரி போன்ற .மிருகங்களும் வரும்... புலி போன்றவை எல்லாம் இப்பொழுது பார்க்க முடியாது...ஏனெனில் மக்கள் நடமாட்டம் அதிகமானதால் அவை ஊரை (காட்டை )காலி செய்து கொண்டு போய்விட்டன.. மலை ஏறும் அனுபவம் என்பது ஒரு மகத்தான அனுபவம்... இளமை இருக்கும் போதே பயன்படுதிக்கொள்ளவேண்டும் . இல்லை என்றால் மலை ஏறுவது கனவில் மட்டும் தான் சாத்தியம்.
நன்றி
வெள்ளியன்கிரிக்கு, ஒரே ஒரு முறை சென்று இருக்கேன்... பயணகளைப்பால் ஏற்பட்ட கோபத்தில், இதுவே கடைசி முறை இனி இங்கே வரவே கூடாது என்று நினைத்திருந்தேன்... ஆனால், சுவாரசியமான உங்கள் தொடரை படிக்கும் போது, சமயம் கிடைக்கும் போது மீண்டும் ஒரு முறை சென்று வரவேண்டும் என்று தோன்றுகிறது... கீப் இட் அப் அதிஷா...
//முதலில் அங்கே இயேசு வந்தார் , பாதி காடு காலி! பின் சிவபெருமான் வந்தார் மீதி காடும் காலி!//
வழி மொழிகிறேன்... :-(
இப்போது கூட, ஒரு Golf Course and Real Estate Company வருதுனு விகடன்-ல ஒரு விளம்பரம் பார்த்தேன்... எல்லாத்தையும் அழித்து கோவையையும் நாசம் பண்ணிட்டு தான் விடுவாங்க போல... :-(
நிறைய விவரங்களோடு ஒரு நல்ல பயணக்கட்டுரை... நன்றி கார்த்திக். :-)
முந்தைய பின்னூட்டம் இடம் மாறி வந்துள்ளது... தவறுக்கு :-(
Keep on going. Nice.
//முதலில் அங்கே இயேசு வந்தார் , பாதி காடு காலி! பின் சிவபெருமான் வந்தார் மீதி காடும் காலி!
//
காட்டை இருவருக்கும் பட்டா போட்டு கொடுத்தவங்களை முதலில் கொல்லனும்:((
தொலைக்காட்சி நெடுந்தொடர் போல், இழுவையோ இழுவை...
மூன்றாவது பகுதியிலும், முன்பு சொன்னதையே சொல்லியிருக்கிறீர்கள்.
முதலிரண்டில் இருந்த சுவாரசியம் போயே போச்சு!
படு மொக்கைப் பதிவு!
வெள்ளியங்கிரி அனுபவம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது அதிஷா..
நான் பலமுறை சென்றிருக்கிறேன். மிருகங்கள் ஏதும் பார்த்ததில்லை.
அடிவாரம் சிவபெருமான் வரைக்கும் அடிக்கடி போய் வந்த அனுபவம்(!) மட்டும் இருக்கு குருவே...
மலை ஏறனும் ஒரு தடவையாவது..
டார்ச் கொண்டு வர்ரேன்..போய் வரலாமா..?
//முதலில் அங்கே இயேசு வந்தார் , பாதி காடு காலி! பின் சிவபெருமான் வந்தார் மீதி காடும் காலி!
//
யூ மீன் காருண்யா பல்கலைக்கழகம் & ஜக்கி வாசுதேவ் ஆசரமம்????
:))))))
எம்.எம்.அப்துல்லா
Hello Adhisha,
Its good to read about coimbatore from your posts. Are you from cbe? If so, please write more about the city and its surroundings.. It would be a treat to get to know our city again. I wonder what this 'tamil maanadu' is doing for coimbatore! I guess its mostly going to be cosmetic works. if you can, please tell us about that too.
Sinna
இமய மலையில கூட ஏறிடலாம். பனிக்குழி ஒண்ணு தான் ஆபத்து. ஆனா எறும்பு, பாம்புன்னு ஊர்வன, வவ்வால், டிராகுலான்னு பறப்பன, சிங்கம் சிறுத்தைன்னு நடப்பன இதையெல்லாம் தாண்டி போயிருக்கீங்கன்ன என்ன தைரியம் ? போய் சேர்ற வரைக்கும் வயித்துக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருண்டு கிட்டே இருந்திருக்குமே ? அப்போ ஓடுற பாம்ப மிதிக்கிற வயசு போயிருப்பீங்க ? இப்போ போவீங்களா ? பொண்டாட்டி முகம் கண்ணுக்குள்ளே நின்னு நின்னு தடுக்குமே ?
மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.
இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா
மலை, காடுன்னாலே என்ககும் உசுரு தான். 1500 கி.மீ.க்கு மேலே பைக்கிலேயே கர்நாடகக் காடுகளைச் சுத்தியிருக்கோம்னா பாருங்களேன். ஆனால் கடைசி முறையா முதுமலைக்குப் போய் நடுநடுங்கித் திரும்பிவந்தேன். உங்க தொடரப் படிக்கிறப்ப சீக்கிரம நம்ம இடத்துக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்துடுச்சோன்னு தோணுது...
ஈரோட்டில் இருந்து எழுதும் பாலாசிக்குப் பிறகு வியந்த நடை. ஒரே மூச்சில் நான்கையும் முடித்து விட்டேன்.
ஏற வேண்டிய படிக்கட்டுக்கு வாழ்த்துகள்.
Post a Comment