19 June 2010

ராவணன் - டன்டன் டன்டணக்கா
பக்பக்பக்பக்பக்... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... இப்படியாக ராவணன் படத்தின் ஒரு காட்சியில் அபாரமாக வசனம் பேசுகிறார் விக்ரம்.

படத்தின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு முறை காட்டுத்தனமாக யாராவது உயிரைக்கொடுத்து கத்துகிறார்கள். நமக்கு தலைவலிக்க தொடங்குகிற அமானுஷ்யபுள்ளியே அதுதான். ஐஸ்வர்யா கத்துவார், விக்ரம் கத்துவார் , ப்ரிதிவிராஜ் கத்துவார்.. பிரபு,கார்த்திக்,ப்ரியாமணி அனைவரும் அவரவர் பங்குக்கு காட்டுக்கத்தல் கத்துகிறார்கள். யாரும் கத்தாத போதெல்லாம் குண்டு வெடிக்கிறது அல்லது துப்பாக்கி. ஒலி – ரசூல் பூக்குட்டி... ஓவர்டைம் வேலை பார்த்திருப்பார் போல.. படம் முடியும் போது தலையெல்லாம் பாரமாய்..

அதிகம் மெனக்கெட்டு சமைப்பது சில நேரங்களில் நாசாமாகி வாயில் வைக்கமுடியாத அளவுக்கு , அல்லது காரித்துப்பிவிடுகிற அளவுக்கு சுவையில்லாமல் போய்விடும். ராவணன் படமும் அந்த ரகம்தான். பல ஆண்டுகளாக காடு மலை மேடெல்லாம் அலைந்து , இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையெல்லாம் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கலாம். ஏதேதோ செய்திருக்கிறார்கள் ராவணனிலும்! மணிரத்னத்தின் செப்படி வித்தைகளை டிரைலரில் ரசிக்க முடிந்த அளவுக்குக் கூட திரையில் ரசிக்க முடியவில்லை.

டினோசருக்கெல்லாம் அடிசறுக்கும் காலத்தில் மணிரத்னம் மீடியாக்களால், இந்தியாவின் அதிகபட்ச டாப் படைப்பாளியாக சித்தரிக்கப்பட்ட டைனோசர் பொம்மைதான். இந்த முறை அடி பலம். உலக சினிமாக்காரர்களெல்லாம் கதைகதை என்று ஊரெல்லாம் திரிஞ்சா.. மணிசாருக்கு கதை பிடிப்பது மிகமிக ஈஸி. வால்மீகி , வியாசரெல்லாம் எதற்கு கதை எழுதினார்களோ இல்லையோ மணிசார் சரியாக அதை பயன்படுத்தி வருகிறார். அடுத்து சிலப்பதிகாரத்தை அபிஷேக் ஐஸ்வர்யாராய் காம்பினேஷனில் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்குள் ஐஸுக்கு வயசு 50தை தாண்டிவிடும். இந்த படத்திலேயே முதிர்ச்சி தெரிகிறது. குளோசப்பில் பார்க்க 50களின் தமிழ் ஹீரோயின்களை நினைவூட்டி பயமுறுத்துகிறார்.

விக்ரம் , கந்தசாமி சூட்டிங்கிலிருந்து அப்படியே வந்திருப்பார் போல, அந்த படத்திற்காக கையில் போட்டுக்கொண்டு சூரிய டாட்டூவை கூட அழிக்கவில்லை. படம் முழுக்க மேலே சொன்ன அந்த வசனத்தை சொல்லி சொல்லி சாவடிக்கிறார். படம் முழுக்க கலர் கலராக முகத்தில் எதையாவது அப்பிக்கொண்டே அலைகிறார். இலக்கியவாதிகள் அல்லது உலகசினிமா ஆர்வலர்கள் அதற்கு ஏதாவது குறியீடுகள் வைத்திருக்கலாம். நமக்கு எரிச்சல் மட்டுமே.

அடைத்துக்கொண்ட வாஷ்பேசின் போல முதல் காட்சியிலிருந்து கதை நகரவேயில்லை. இடைவேளை கூட எந்த சலனமும் இல்லாமல் வந்து போகிறது. நடுவில் வரும் ப்ரியாமணி பிளாஷ்பேக் இதுவரை தமிழ்சினிமா உலகம் எங்கும் கண்டிராதது. கார்த்திக் காரணமேயில்லாமல் மரங்களின் மேல் தாவுவதும் , அவர் அனுமான் என்பதால் படம் முழுக்க மங்கி தொப்பி போட்டுக்கொண்டு வருவதும் , சகிக்கவில்லை. பிரபு கும்பகர்ணனாம், அதற்காக அவரை எப்போதும் சாப்பிடுவது அல்லது சாப்பாடு தருவது மாதிரியான காட்சிகள் அமைத்திருப்பது டூமச்.

படம் முழுக்க உலக சினிமா பாதிப்பு. கொரிய படங்களைப்போல பிண்ணனியில் ஸ்லோ மோசனில் இசை ஒலிக்க , பாத்திரங்கள் பொறுமையாக திரும்பி , வசனம் பேசுவதற்குள்....எரிச்சலாக இருக்கிறது. படம் முழுக்க விக்ரம் போர்வையை போர்த்திக்கொண்டு போஸ் கொடுக்கிறார். கடைசியாக பில்லாவில் அஜித் இப்படி படம் முழுக்க நடப்பதும் போஸ் கொடுப்பதுமாக நடித்த்தாக நினைவு.

ஈரம் சொட்ட சொட்ட கேமரா படம் பிடித்திருக்கிறது. நீர்வீழ்ச்சிகள் , மலைகள், காடுகள், இருட்டு எல்லாமே அழகுதான். அதிலும் இசைக்காரர் ரஹ்மான் நன்றாகவே இசையமைத்திருந்தாலும்.. பாகவதர் படம் போல ஐந்து நிமிடத்திற்கு ஏதோ பாட்டுபடுவது போலவே இருக்கிறது. ஜெயாடிவியில் எல்லா திரைப்படங்களையும் பிரித்து மேயும் சுஹாசினி இந்த படத்திற்கு வசனம். ஏலே வாலே போலே என்றால் திருநெல்வேலி பாஷையாம். மணிரத்னம் படங்கள்னாலே வசனம் பாதி கேட்காது மீதி புரியாது.. இதில் இன்னும் சுத்தம் , அதிலும் கண்ணைக்கட்டி ஐஸ்வர்யாராயை கட்டிப்போட்டுவைத்திருக்கும் போது அவர் பாரதியார் பாட்டு பாடுவதும், அதன் மீதியை காட்டுவாசி விக்ரம் பாடுவதும் அட அட அட!

அற்புதமான மேக்கிங் , ஹாலிவுட் தரம் , ஒலி ஒளி , இசை என நிறைய பிளஸ்கள. ஆனால் மைக்ரோஸ்கோப்பில் படிக்க முடிகிற கதை, எரிச்சலூட்டும் வசனங்கள் , கொஞ்சமும் வேகமில்லாத கருவாட்டு திரைக்கதை, நாடகத்தனமான காட்சி அமைப்புகள் மொத்தபடமும் ஒட்டு மொத்தமாய் ஆயிரம் பாட்டில் அமிர்தாஞ்சன் போட்டாலும் தீராத மெகா தலைவலியை மட்டுமே நமக்கு பரிசளிக்கிறது.

கிளைமாக்ஸில் சோகமாக அழுதபடி ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் பக்...பக்...பக் என்று கந்தசாமி போல மிமிக்ரி பண்ண.. கண்ணீர் வடிய விக்ரமும் பக்...பக்...பக்..

42 comments:

Karthi said...

@அதிஷா..
உங்கள் பார்வையை ரசித்தேன்..
விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக்.. இவர்கலெலாம் மணியின் கைப்பாவைகள் தான்.. என்ன செய்வது அவரை நம்பி வந்துவிட்டார்கள்.. அவர்கள் எல்லாம் sincere ஆக தான் நடிக்க முயன்றிருகிறார்கள்.. மணி.. திரைகதையை மெட்ராஸ் டாக்கீஸில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார் போல..

Karthi said...

@அதிஷா..
உங்கள் பார்வையை ரசித்தேன்..
விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக்.. இவர்கலெலாம் மணியின் கைப்பாவைகள் தான்.. என்ன செய்வது அவரை நம்பி வந்துவிட்டார்கள்.. அவர்கள் எல்லாம் sincere ஆக தான் நடிக்க முயன்றிருகிறார்கள்.. மணி.. திரைகதையை மெட்ராஸ் டாக்கீஸில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார் போல..

அகல்விளக்கு said...

எனக்கு இப்பவே பக் பக் பக்-னு இருக்கு....

Karthi said...

@அதிஷா..
உங்கள் பார்வையை ரசித்தேன்..
விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக்.. இவர்கலெலாம் மணியின் கைப்பாவைகள் தான்.. என்ன செய்வது அவரை நம்பி வந்துவிட்டார்கள்.. அவர்கள் எல்லாம் sincere ஆக தான் நடிக்க முயன்றிருகிறார்கள்.. மணி.. திரைகதையை மெட்ராஸ் டாக்கீஸில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார் போல..

மாதவராஜ் said...

சிரித்துக்கொண்டேதான் படித்தேன். அதிலும்,
//அடைத்துக்கொண்ட வாஷ்பேசின் போல முதல் காட்சியிலிருந்தே கதை நகரவேயில்லை. //
வெடிச்சிரிப்பை வரவ்ழைத்தது...!
விமர்சனம் பிடித்திருந்தது.

குசும்பன் said...

//பக்...பக்...பக் //

பதிவில் ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் :((

பித்தன் said...

உங்க கிட்ட புடிச்சதே ஒரு பாமரனா இருந்து விமர்சனம் செய்வதுதான், அதை விடுத்து உலக சினிமா தருகிறேன் பேர்வழின்னு சிலபேர்கள் அலப்பறை தாங்களை.

பொன்.பாரதிராஜா said...

அப்போ படம் மொக்கையா?ஒரு வாட்டி கூட பாக்க முடியாதா?

ராம்ஜி_யாஹூ said...

nice review.

I think Mani can take next film with silappadhikaram kadhai, kannaki as Aish or Kushboo.

As always Kovalan will be abishek or anil ambaani.

Thamira said...

//அதிலும் கண்ணைக்கட்டி ஐஸ்வர்யாராயை கட்டிப்போட்டுவைத்திருக்கும் போது அவர் பாரதியார் பாட்டு பாடுவதும், அதன் மீதியை காட்டுவாசி விக்ரம் பாடுவதும் அட அட அட! //

அடாடா.!

Thamira said...

ஆளாளுக்கு ஒண்ணொண்ணும் சொன்னீங்கன்னா என்ன பண்றதுன்னு தேவலை..

Karthik said...

படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கமெண்டுகிறேன்.

//மணிரத்னம் மீடியாக்களால், இந்தியாவின் அதிகபட்ச டாப் படைப்பாளியாக சித்தரிக்கப்பட்ட டைனோசர் பொம்மைதான்.

மீடியாக்காரர்கள் இவருக்கு ஏதாவது கடன்பட்டிருப்பார்களோ? தன்னைத் தானே டாப் படைப்பாளியாக சித்தரித்துக் கொள்ளும் ஆசாமி இவர் அல்ல என்று தோன்றுகிறது.

வெற்றி said...

//கிளைமாக்ஸில் சோகமாக அழுதபடி ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் பக்...பக்...பக் என்று கந்தசாமி போல மிமிக்ரி பண்ண.. கண்ணீர் வடிய விக்ரமும் பக்...பக்...பக்..//

athisha touch :)))

வெற்றி said...

.

butterfly Surya said...

படம் முழுக்க உலக சினிமா பாதிப்பு. //////////////

அடப்பாவி..

Raashid Ahamed said...

என்ன இது அநியாயமா இருக்கு ! உங்க அட்டகாசம் தாங்க முடியலயே ?
ஆமா பின்ன எப்புடிதான் படம் எடுக்குணும்னு நெனச்சுக்கிட்டிருக்கீங்க ?
உங்களுக்கு புடிச்சமாதிரி ஒரு படத்தை எவனாலயும் எடுக்கவே முடியாது போல இருக்கே ? ஒரு பெரிய விமர்சகரா(உங்க கோணத்துல) இல்லாம ஒரு சாதாரண குடிமகனா (ஒரு காமன் மேனா) படம் பாருங்க. இனிமே அடுத்ததா வரப்போற கும்பகர்ணன், விபீஷ்ணன், சூர்ப்பநகை, இந்த படங்களையாவது ஒரு பாசத்தோட பாருங்க !!

உடன்பிறப்பு said...

ஒரு பாமரனா பார்த்தா சுறா, சிங்கம் எல்லாம் கூட நல்லா தான் இருக்கு அது மாதிரி படங்கள் கூட ஒப்பிடும் வேண்டுமானால் ஒருவேளை ராவணன் உலகதரமாக இருக்க கூடும்

வவ்வால் said...

Maniyoda adutha attempt Seevaga sintha"mani" yam,athila than kuriyidaga solla samacharam irukkam vasanam ezhutha aal venumam, try panringala?

Padatha vida unga review nalla interestinga poguthu!

வவ்வால் said...

Maniyoda adutha attempt Seevaga sintha"mani" yam,athila than kuriyidaga solla samacharam irukkam vasanam ezhutha aal venumam, try panringala?

Padatha vida unga review nalla interestinga poguthu!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

மணிரத்னம் இனிமேல் சினிமா படம் எடுப்பதை விட்டுவிட்டு, கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடப்போவதாக வந்த செய்தி, ராவணன் படம் பார்த்தப்பிறகு தான் - அது உண்மையாக ஆகக் கூடாத என்று தோன்றுகிறது.

ராவணன் - உசுரே போகுதே, உசுரே போகுதே

SurveySan said...

/////நடுவில் வரும் ப்ரியாமணி பிளாஷ்பேக் இதுவரை தமிழ்சினிமா உலகம் எங்கும் கண்டிராதது////


;)

மொத்தத்தில், சூப்பரான விவரணை. கடைசி சீனில், ஐஸ் ஒரு தடவை பக் பக் பக் சொல்லுவாங்க, விக்ரம் திரும்ப பக் பக் பக் சொல்லுவாரு, அதுக்கு ரிப்பீட்டா இன்னொரு தபா ஐஸும் பக் பக் பக் சொல்லியிருந்தா, கைல கெடைக்கரதை எடுத்து ஸ்க்ரீன்ல விட்டிருக்கலாம், அந்த அளவு கடுப்பு வந்தது. வந்துட்டானுவ படம் புடிக்க. :(

Unknown said...

அதிஷா, உன்னை கையைக் காலைக் கட்டிப் போட்டு (கண்ணையும் சேர்த்து தான்) பத்து தடவை (பத்து தலை இருக்குல்ல) படம் பார்கக வைக்கப்போறேன்.

Ŝ₤Ω..™ said...

Thala.. ena thala ipadi kalaichitinga padatha? Naanum Raavanana 2 murai paarthuten.. (Andha kodumaya kekathinga)
Ulaga tharamana padangalai ungaluku rasika theriyala.. Enama characterization iruku idhula? (Ena nu kekathinga, Mani sir ku kuda adhu theriyadhu)
Idhu ramayanam baseda? Maoist baseda? Adhikara vargam/mudhalalithuvam Vs odukapatar ku nadakum porattama? Illa..
Simply for selfish reasons.. Mani ratnam avarkaluke velicham..

Sivanum Manium (naan manikandana sonnen) illana padam avlo thaanungo..

Aama idhula yaar nallavan yaar ketavan? Adha kandupidika oru potti vaikalam pola..

Aga motham.. Hightech Mokkai

தினேஷ் ராம் said...

ஒரே 'பக்.. பக்..' தான்: http://3.ly/2Cfa

தினேஷ் ராம் said...

ஒரே 'பக்.. பக்..' தான்: http://3.ly/2Cfa

Madumitha said...

அவ்ளோதானா...?

சுரேகா.. said...

:)

கார்த்திக்கை மரம் மரமா குதிக்கச்சொல்லி அனுமார்ன்னு நமக்கு புரியவைக்கணும்னு ஐடியா மணிக்கு இருந்தாலும், அதெல்லாம் வேணாம் பாக்குறவன் சிரிப்பான்னு சொல்லாம ஆமாம் சாமி போட்ட துணை, உதவி இயக்குநர்களை என்ன செய்யுறது?

காத்தவராயன் said...

ம‌ணிர‌த்ன‌ம் அறிவுஜீவி இய‌க்குன‌ர், இந்திய‌ சினிமாவின் அடையாள‌மாய் என்றுமே இருந்த‌தில்லை என்ப‌து ச‌த்திய‌மான‌ உண்மை.

ம‌ணியின் முத‌ல் வெற்றிப்ப‌ட‌மான‌ “மெள‌ன‌ ராக‌ம்” கூட‌ கே.பாக்கிய‌ராஜின் “அந்த‌ 7 நாட்க‌ள்” ப‌ட‌த்தின் அப்ப‌ட்ட‌மான‌ காப்பி. ஒரு க‌தாசிரிய‌ராக‌ கே.பாக்கிய‌ராஜின் கால் தூசுக்கு கூட‌ பெறாத‌ ம‌ணிர‌த்த‌ன‌த்தை சிற‌ந்த‌ ப‌டைப்பாளி என்று சில‌ர் கொண்டாடுவ‌து பேத‌மையிலும் பேத‌மை.

“என‌க்கு ச‌ர்வ‌தேச‌ த‌ர‌த்திலான‌ இசை தேவைப்ப‌ட்ட‌தால் AR.ர‌குமானுட‌ன் இனைந்தேன் ம‌ற்ற‌ப‌டி ராஜாவுட‌ன் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லை” என்று ஒருமுறை ம‌ணிர‌த்ன‌ம் உள‌றியிருந்தார், இதுவா உண்மையான‌ ந‌ட்பு? உண்மையான‌ ந‌ட்பு என்ப‌து த‌ன்னுடைய‌ வ‌ள‌ர்ச்சியிலும் ந‌ண்ப‌னையும் கைய‌னைத்து செல்வ‌துதான். ராஜாவின் த‌ர‌த்தை ப‌ற்றி “ப‌ல்ல‌வி அனுப‌ல்ல‌வி”க்கு முன்ன‌ரே ம‌ணிர‌த்ன‌ம் க‌ண்ட‌றிந்திருந்தால் ம‌ணிர‌த்ன‌த்தை ஓர் அறிவுஜீவி என்று கொண்டாலாம். இளைய‌ராஜா ம‌ட்டும் இல்லை என்றால் ம‌ணிர‌த்ன‌ம் என்றோ ஒழிந்து போயிருப்பார்.

ம‌ணிர‌த்தின் த‌னித்துவ‌ம் கூட‌ PC. ஸ்ரீ ராம் – ஆல் வ‌ந்த‌து (இருட்டுக்குள்ள‌ ப‌ட‌ம் எடுக்குற‌து).

த‌மிழில் ம‌ணிர‌த்ன‌த்தின் க‌டைசி வெற்றிப்ப‌ட‌மான‌ அலைபாயுதேவின் க‌தைகூட‌ ம‌ணிர‌த்ன‌த்தின் சொந்த‌க்க‌தையில்லை. ப‌ழ‌ம்பெரும் க‌தாசிரிய‌ர் R.செல்வ‌ராஜிட‌ம் இருந்து வாங்கி த‌ன‌து பெய‌ரையும் அதில் ஒட்டிக்கொண்டார். அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் அலைபாயுதேவின் இந்திப்ப‌திப்பில் க‌தை: ம‌ணிர‌த்ன‌ம் என்று த‌ன‌து பெய‌ரை ம‌ட்டும் போட்டுக்கொண்டார்.ஒரு ப‌டைப்பாளிக்கு உரிய‌ குறைந்த‌ப‌ட்ச‌ நேர்மை கூட‌ இல்லாத‌வ‌ரை இந்திய‌ சினிமாவின் ச‌ர்வேதேச‌ முக‌ம் எனக்கொண்டாடுவ‌து அப‌த்த‌திலும் அப‌த்த‌ம்.

Kalee J said...

உண்மையான விமர்சனம்...
விக்ரமுக்கே பக் பக் பக்..... தாங்க முடியலே..
அபிஷேக்-கை நினைச்சா...பக் பக் பக்...... பாலிவுட் ரொம்ப பாவம்...

Cartoonist Chella said...

Nanbare! Mudhalil, indha padathirkku Resul Pookutty Sound Design seiyavillai! Adhai seidhavar Tapas Nayak! Karithukottavendum yendru mudivu eduthapin andha vishayathai patrri muzhuthai therindhu kollum!
Piragu Vikram indha padathil asathiyirukkirar! Idhu marukka mudiyadha unmai.. Kaatil yaaro thannai kadathi ponnal yendha jeevanum vayai moodi irukadhu.. Neengalo naanoo aanalum kathi koopadu poduvom,, Sariya! Kaatu jaathi manidhargal nenjil dhairiyamum, veeramum kondavargal.. Adhilum edharkkum anjathe Veeraiyan kadhapaathiram garjipadhu ungalukku kathalaaga therinthadhu vedikkai! Kattil singam puli paarthu valarntha kootam kiliyo kuyil kuralo kondirikka maatar! Ramayanam kadhaiyai oralavu ippodhaiyai makkal rasikum vannam kondu vandha mani sirrin muyarchi yengalai pondra ilaya vattangalukku oor puthunarchi! Viyapu! muzhu neela dialogue pesaamal edhayum elithai bayamillamal irukkum veeraiyanukku Bak! Bak! yendra dialogue arumai thaan! Ungalaiye naan bayamuruthinaal neengal yenna seiveer theriyuma , "Yaarai nambi naan poranthaen.. Pongada ponga!" yendra padalai paduveer!! Its all the cinema... Azhagan, Rasigan, Mazhalai, Veeran, Kobamoondavan, Anban, RAAVANAN! Arumaiyana padaippu.. Unmaiyil Mani siroda best illa indha padam avalothaan! Now you can apply more Headache balm!! :-)

மங்குனி அமைச்சர் said...

அவுகள்லாம் பெரிய அறிவு ஜீவிகலாம்
கர்...கர்...கர்...கர்...

Umesh said...

nice review !

Read mine here!
Expecting ur feedback!

Raavanan-Ten heads but no brain!

http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.html

Anonymous said...

அய்யா இதைதான் பல ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். மணிரத்னத்தை திட்டும் ஒரே ஆள் நான்தான் என்று பல நூறாண்டுகளாக ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். அய்யா என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? மணிரத்தினம் வீட்டின் வெளியில் நிர்வாண போராட்டம் நடத்தலாம் என்று இருக்கிறேன். அதற்க்கு அதிகம் செலவாகும். நிர்வாணம் என்றால் சுமாவா, பெரியாரே நிர்வாணமாக ரஷ்யாவில் நின்றார்.அய்யா இதைதான் பல ஐநூறு ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். அதற்க்கு அதிகம் செலவாகும்.நேற்று வீட்டில் செம வறுமை, நேராக டீக்கடை சென்று ஒரு அப்சொலுட் வோட்கா தொடை நனைய சாந்தி அடித்தேன். அய்யா இதைதான் பல ஆயிரம் ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். ராவன் ஹிந்தியில் கிழித்து தோரணம் கட்டிவிட்டாகள் அய்யா, இதை என்னவென்று சொல்வது.

ஏன் அய்யா ஒரு எழுத்தாளன் ரோட்டோரம் ரம் அடிப்பது தவறா? சொல்லுங்கள். இதை தவறு என்று பிரான்சில் சொன்னால் ரோடில் ரத்த ஆறு ஒடுமையா ரத்த ஆறு ஓடும். தெரியாமல் தான் கேட்கிறேன், ரஜினி வைப்பது போல் என்னால் ஆயிரம் ரூபாய் டிப்ஸ் வைக்க முடியாது. இது ஒரு எழுத்தாளனின் தலைவிதி. அய்யா இதைதான் பல பத்தாயிரம் ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன்.

விஜய் மகேந்திரன் said...

தமிழ்பேசும் ஹிந்தி படங்களை இனிமேலாவது மணிரத்னம் எடுக்காமல் இருக்கட்டும்,அல்லது ராம் கோபால் வர்மா மாதிரி முழுக்க ஹிந்தி படங்கள் எடுத்துக்கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டால் இன்னும் நல்லது,தமிழும் பிழைக்கும் தமிழனும் பிழைப்பான்.


தமிழ் வசனம் எழுத நல்ல வசனகர்த்தாக்கள் இருக்கும் சுழலில் சுகாசினியை பயன் படுத்தி மொக்கை அடித்திருக்கிறார் மணி ரத்னம்.

Unknown said...

படம் நல்லாயில்லை...இது படம் பாத்த
என் பையனின் கமெண்ட்

தெருப்பாடகன் said...

படத்தைப் பார்க்கச் சொல்கிறீரா அல்லது இல்லையா? நீர் சொல்வதைப் பார்த்தால் தியேட்டருக்கு தலை வலி மாத்திரை கொண்டு செல்ல வேண்டும் போலிருக்கே?

தெருப்பாடகன் said...

படத்தைப் பார்க்கச் சொல்கிறீரா அல்லது இல்லையா? நீர் சொல்வதைப் பார்த்தால் தியேட்டருக்கு தலை வலி மாத்திரை கொண்டு செல்ல வேண்டும் போலிருக்கே?

Ra.Velusamy said...

Nice... padamalla, ungal vemarsanam.

vasan said...

@அதிஷா,
உங்க‌ளின் ராவண‌ன் விம‌ர்ச‌ன‌ம், விம‌ரிசை, வித்தியாச‌ம்,
ம‌ணிர‌த்தின‌ம் + சுகாசினியின் சாய‌ம் க‌லைத்துவிட்டீர்க‌ள்,
பாவ‌ம் உல‌க அழ‌கியை கிழ‌வியான‌பின்பும், திற‌ந்த‌ முற்ற‌மாய்
திரிய‌விட்ட‌த‌ற்கு ச‌ரியான‌ அங்க‌த‌ விம‌ர்ச‌ன‌ம், அருமையே அருமை,
அறிவுஜீவிக‌ளின் ஒளிவ‌ட்ட‌ம், பின்னால் சுற்றாம‌ல்,
த‌லையையே சுற்றிய‌ வினை.

Gowtham said...

entha tamilanukum ramarai pudikathu pa kanna,,,,,,,,,,engaluku pudicathu ravanan,,,,,,,,ok va

Gowtham said...

press meet la kasu vankiyum thpa poduringale ,,,,,,yppa ulaga maga nadipu da sami ,,,,,,,,,if u true man u publish this ,,,,,,,,,,,parpom