24 December 2010

மன்மதன் அம்புகடந்த இருபது ஆண்டுகளில் கமல் நடித்த மிகச்சிறந்த குப்பைகளில் ஆகச்சிறந்த குப்பை மன்மதன் அம்பு. பெரிய கப்பலை காட்டுகிறார்கள்.. பிறகு கமலை காட்டுகிறார்கள்.. கப்பல்... கமல்.. இதற்கு நடுநடுவே காமெடி மாதிரி கமலே எழுதிய வசனங்களை பேச சில நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கமலே எழுதிய தத்துவார்த்தமான வசனங்கள், ஒருவரிகூட புரியாத கமலின் கவிதைபாடல் கமலுக்கு மட்டுமே புரிந்து சிரிப்பு மூட்டக்கூடிய காமெடி வசனகாட்சிகள்.. கமலே கரகர குரலில் பாடி ஆடும் பாடல்கள்... ஆவ்வ் தூக்கம் வரவைக்கும் கமலின் திரைக்கதை.. வேறென்ன வேண்டும் ஒரு ஆகச்சிறந்த மொக்கைப்படத்திற்கு! எல்லாமே ஒருங்கிணைந்து மன்மதன் அம்பாய் நம் கண்களையும் காதுகளையும் பதம்பார்க்கிறது. எங்கேயும் கமல் எதிலும் கமல்.. படம் தொடங்கி சில நிமிடங்களில் நாம் பார்ப்பது கமல்படமா டிஆர் படமா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது.

இந்துமுண்ணனி, இந்துமத விரோத பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால் கமல்-த்ரிஷா டூயட் கவிதை பாட்டை கட் செய்துவிட்டனர். ஆனாலும் நம்மூர் அறிவுஜீவிகளின் வாய்க்கு மசால் பொரிகடலை கிடைத்தது மாதிரி படத்தில் சூப்பர் சர்ச்சைகள் நிறைய உண்டு. அதில் இரண்டுமட்டும்.. எக்ஸ்ளூசிவ்லி ஃபார் சர்ச்சை விரும்பிகள்.

* ஈழத்தமிழர் ஒருவரை முழுமையான காமெடி பீஸாக.. ‘’த்ரிஷாவின் காலடி செருப்பாக கூட இருக்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறுவதாக வசனங்கள் வருகிறது..

* தசாவதாரம்,உன்னைபோல் ஒருவன் படங்களை தொடர்ந்து இப்படத்திலும் கமல், லஷ்கர் ஈ தொய்பா குறித்து பேசுகிறார். தலையில் குல்லாப்போட்ட தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார்.

படத்தின் கதைதான் மிகப்பெரிய லெட்டவுன்!. உயிருக்குயிராய் காதலிக்கும் காதலியை வேவு பார்க்க காதலனே ஒரு கனவானை ஏற்பாடுசெய்ய அந்த கனவானை காதலி காதலித்துவிட காதலியோடு காதலன் சேர்கிறானா கனவான் சேர்கிறாரா என்பதே கதை. ரொம்ப ஈஸியா சொல்லனும்னா.. மின்சாரகனவு படம் மாதிரி! கிளைமாக்ஸும் அதே மாதிரி! அதிலும் படத்தின் முதல் ஒரு மணிநேரம் உங்கள் பொறுமையை சோதித்து பைத்தியம் பிடிக்க செய்துவிடும்.

த்ரிஷாவுக்கு வயசாகிவிட்டது. பல இடங்களில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வருகிறார்.. பார்க்க பையன் போலிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ரிடையர்ட் ஆகி தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட நேரிடலாம். சங்கீதா அவரைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார். மாதவன்தான் படத்தின் உண்மையான ஹீரோ.. படம் முழுக்க கமல் கமலாகவே வந்து போவதால்.. அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.. ஓரிரு இடங்களில் நடிக்கிறார், மற்றபடி பல நேரங்களில் நடப்பதே நடிப்பு.

வசனங்கள் அனைத்தும் லைவ் ரெக்கார்டிங். கமல் இந்த லைவ் ரெக்கார்டிங் தண்டத்தை விட்டுத்தொலைப்பது நல்லது. பாதி வசனங்கள் புரிவதில்லை. வசனங்கள் புரியாமல் போனதற்கு இன்னொரு காரணம் 50%க்கும் மேற்பட்ட வசனங்கள் ஆங்கிலத்தில்.. ஆங்கிலப்பட பாணியில் வாட் இஸ் திஸ்.. ஏ ஃபார் ஆப்பிள் என ஏதேதோ பேச நமக்கென்ன எப்போதும் போல ஙே! கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.ரவிக்குமார் என்று டிக்கெட் கிழிக்குமிடத்தில் பேசிக்கொண்டனர். அவருக்கும் இந்தபடத்திற்கும் என்ன சம்பந்தம்!

இந்த படத்தினை மேடையில் நான்கே நான்கு திரைச்சீலைகளை வைத்துக்கொண்டு ஏழு கதாபாத்திரங்களோடு மேடை நாடகமாகவே போட்டுவிடலாம். இதற்கு ஏன் குரூஸ் கப்பல்,ரோம்,வெனிஸ்...?

அண்மையில் பார்த்த விருதகிரி கொடுத்த கொண்டாட்ட மனநிலையை குலைத்துவிட்டது இந்த மன்மதன் அம்பு.

34 comments:

Rajaraman said...

\\அண்மையில் பார்த்த விருதகிரி கொடுத்த கொண்டாட்ட மனநிலையை குலைத்துவிட்டது இந்த மன்மதன் அம்பு.//

சூப்பர்.. பக்கபக்கமாக சொல்ல வேண்டியதை நட்ஷேல்லாக ரெண்டே வரியில் பளிச்சென அடித்தது.

Prasanna Rajan said...

ஆக மொத்தம் மன்மதன் அம்பு - நெளிஞ்சு போன சொம்பு...

DR said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க ?

Unknown said...

நீங்க ர சனி ரசிகரா?வி.காந்த் ரசிகருமா?அதை கொண்டாட்டம் ன்னுட்டு இதை?செல்லாது.நீங்கல்லாம் படமே பாக்காத,தியேடருல தூங்கிட்டு,விமர்சனம் எய்தரவங்க.நான் நம்பமாட்டேன்.நெஞ்சில பால வார்த்தீங்க.

Ganesan said...

அண்மையில் பார்த்த விருதகிரி கொடுத்த கொண்டாட்ட மனநிலையை குலைத்துவிட்டது இந்த மன்மதன் அம்பு.

இதெல்லாம் தேவையா கமல்?

butterfly Surya said...

நீயும் இலக்கியவாதியாயிட்ட..

வாழ்த்துகள்.

மணிஜி said...

போடா..ரசனை கெட்ட ஜென்மம்:-)))

அகநாழிகை said...

//த்ரிஷாவுக்கு வயசாகிவிட்டது. பல இடங்களில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வருகிறார்.. பார்க்க பையன் போலிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ரிடையர்ட் ஆகி தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட நேரிடலாம். சங்கீதா அவரைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்.//

என்ன ஒரு கூர்ந்த அவதானிப்பு ! எனக்கும் இதுதான் தோன்றியது.

//பாதி வசனங்கள் புரிவதில்லை. வசனங்கள் புரியாமல் போனதற்கு இன்னொரு காரணம் 50%க்கும் மேற்பட்ட வசனங்கள் ஆங்கிலத்தில்.. //

//இந்த படத்தினை மேடையில் நான்கே நான்கு திரைச்சீலைகளை வைத்துக்கொண்டு ஏழு கதாபாத்திரங்களோடு மேடை நாடகமாகவே போட்டுவிடலாம். இதற்கு ஏன் குரூஸ் கப்பல்,ரோம்,வெனிஸ்...?//

//ஈழத்தமிழர் ஒருவரை முழுமையான காமெடி பீஸாக.. ‘’த்ரிஷாவின் காலடி செருப்பாக கூட இருக்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறுவதாக வசனங்கள் வருகிறது.. //

இதே.. இதே.. இதேதான் எனக்கும் தோன்றியது.

சிகரங்கள் ஒன்றாய் சிந்திக்கும் என்பது இதுதானோ?

Mohan said...

உங்களுக்கு விருதகிரி பிடித்ததால், மன்மதன் அம்பு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Unknown said...

தலைவரே நீங்க விஜயகாந்த் ரசிகரா?

விக்னேஷ்வரி said...

முதல் வரியே படம் பார்க்கும் ஆவலைக் கொன்று விட்டது. இப்போ நான் என்ன பண்ண, இந்த வீக்கெண்ட் போறதா வேண்டாமா...

Unknown said...

.
சாய்ச்சுப்புட்டீங்களே தலை!

ராம்ஜி_யாஹூ said...

Sarvesh said...

.
சாய்ச்சுப்புட்டீங்களே தலை!

wow nice post, nice comment

Rajan said...

//ஒருவரிகூட புரியாத கமலின் கவிதைபாடல் //

அத கூட ஏத்துக்கலாம்! அதப் படிக்க... இல்ல... அடச்ச பேச ய்ய்யோ! அந்த வாய்ஸுக்கு திரிசாவப் போட்டத தான் சீரணிக்க முடியல! வக்காளி மாடுலேசன் காட்றாளாம்! கைல மாட்டுனா அவ்ளோதான்!

Rajan said...

//தலையில் குல்லாப்போட்ட தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார்.
//

காந்தி சொன்ன டையலாக் ஏதானும் உட்டுருப்பாரே

Rajan said...

//த்ரிஷாவுக்கு வயசாகிவிட்டது.//


இந்த வயசுக்கு கொஞ்சம் உப்பலா ஒடம்பு போட்டா கும்முனு இருக்கும்! எக்ஸாம்பில் அவங்கம்மா!

Rajan said...

//பல இடங்களில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வருகிறார்//

கப்பல் கவுந்துட்டா துணி நனஞ்சுடகூடாதுல்ல! அதுக்குதான் பாப்பா முன்னேற்பாடா இருக்குது

Rajan said...

//பார்க்க பையன் போலிருக்கிறது.//

பாக்க தானே

Rajan said...

//ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ரிடையர்ட் ஆகி தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட நேரிடலாம்//

அதுக்குள்ள சாரு அங்க இங்க பிச்சை எடுத்தாவது எதானும் கம்பெனி ஆரம்பிச்சு தொலிலதிபராகிடணும்!

Rajan said...

//கே.எஸ்.ரவிக்குமார் என்று டிக்கெட் கிழிக்குமிடத்தில் பேசிக்கொண்டனர். அவருக்கும் இந்தபடத்திற்கும் என்ன சம்பந்தம்!// இதுல மீனாவ ,கனிகாவயெல்லாம் போட முடியலையேன்னு வருத்தமாம்! (படத்துல தான் சொல்றேன்)

Prabu M said...

தேவையில்லாமல் தனக்கு வருமா வராதா என்று எதையுமே கவலைப்படாமல் அடுத்தவன் காசில் எக்ஸ்பெரிமண்ட் என்கிற பெயரில் எதையோ செய்துவிட்டு விஜய் டிவியை வைத்து சூப்பர் ஹிட் என்றும் பெயர் வாங்கிவிடும் வித்தை கமலை நீண்ட நாட்களுக்குக் காப்பாற்றிவிடாது..... அர்ஜுனர் வில்லாக இந்த அம்பைச் சரியாகக் குறிவைத்து குப்பைத்தொட்டியில் எய்திருக்கிறீர்கள்..... இதுவே முதன்முறை உங்கள் வலைப்பூவிற்கு வருவது....... வாழ்த்துக்கள் நண்பா... :)
எக்ஸெலண்ட் .....

satheskanna said...

நண்பர் அதிஷா அவர்களே உங்களுக்கு வில்லு ,சுறா , விருத்தகிரி போன்ற படங்கள் பிடித்துருக்கும் ஏன்னென்றால் உங்கள் ரசனை அப்படிப்பட்டது . விமர்சனம் என்ற பேரில் மற்றவர்களை இம்சிக்க வேண்டாம் . மன்மதன் அம்பு கமலுக்கு இன்னுமோர் சூப்பர் ஹிட் .

Anonymous said...

this is too much

Unknown said...

எனக்கு மன்மதன்அம்பு பிடிக்கத்தான் செய்யுது... :/ வழக்கமான கதைதான் எனினும், திரைக்கதை புதுசே.

VISA said...

த்தா இது தெரியாம நாளைக்கு நைட் ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணி வச்சிருக்கேன். த்தா படம் எனக்கு புடிக்கலைன்னு வை அப்புறம் இருக்கு மாமே...

இந்த பின்னூட்டத்தை ஒரு குவார்ட்டரின் கும்மாளத்தில் எழுதுகிறேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

venkki said...

விமர்சனம் என்பது உங்களுக்கு ஒரு எட்டாத கனியாக இருக்கிறது என்பதை இந்த மன்மதன் அம்பு விமர்சனம் பறை சாற்றுகிறது. தொடருங்கள்!

Raashid Ahamed said...

அவ்வளவு தான் தமிழ் சினிமா காலி !! கதை ஸ்டாக் தீர்ந்துடிச்சி, நல்ல நடிகர்கள் இல்லை, நல்ல டைரக்டர்கள் இல்லை. நல்ல படம் எடுக்க தெரியலை. அதிலும் குறிப்பா விமர்சன வித்தகர், வலைப்பதிவு வம்பர், எங்கள் அதிஷாவுக்கு புடிச்ச மாதிரி ஒரு படமெடுக்க யாருக்குமே தெரியல !! நீங்களே ஒரு படமெடுத்தால் அதுக்கும் இப்படித்தான் விமர்சனம் எழுதுவிங்களா ?

Anonymous said...

This is the worst blog I had come across. This is the first time I saw review in your blog and from this I found the quality of your blog and also you. u ppl r unfit to write blog and you don't even have basic sense of judging which is good or worse. To watch Kamal movie, one should have atleast basic knowledge, which is missing in u.

Anonymous said...

it is nice review!

-nishan

sujatha said...

The review clearly shows that you are biased and you have a bad taste. It clearly shows that your stomach is burning as the film is good and nice to watch with entire family. Anyway you have failed in your attempt as the movie is already declared a blockbuster. Better luck next time

மேடேஸ்வரன் said...

எக்கச்சக்கமாக எதிர்பார்த்ததால் படம் ஏகத்துக்கும் ஏமாற்றமளிக்கிறது... உங்கள் விமர்சனம் சரியே...

vanangamudi said...

Hi All

check the tamil kavithai & photo after seeing the மன்மதன் அம்பு movie athttp://tamil.vvonline.in/kavithai/kavithai3.html

regards
vanangamudi

shri Prajna said...

U r simply waste

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நீங்கள் சொல்கின்ற அளவிற்கு மோசமான படம் இல்லை என்று தோன்றுகிறது.வேட்டைக்காரன் சுறா விருதை கிரி கு இது தேவலாம்.படத்தில் பல காட்சிகள் வெட்டுப்பட்டதால் இறுதியில் தொடர்பற்று இருக்கின்றது.
வயசு அதிகமானது திரிஷாவிற்கா அல்லது உங்கள் கண்களுக்கா என்று தெரியவில்லை எனக்கு திரிஷா குளிர்ச்சியாகவே தெரிகின்றார்