19 April 2011

சமகால பிட்டுப்படங்கள் - சில சிந்தனைகள்இணையப்புரட்சி உச்சகட்டத்தினை எட்டியிருக்கும் இக்காலத்திலும் பிட்டுப்படங்களை தியேட்டருக்கே சென்று பார்ப்பவர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வரிசையாக வெளியாகும் பிட்டில்லா பிட்டுப்படங்களே அதற்கு சான்றாக நம் கண்முன்னே நிற்கின்றன. அத்தனை பிட்டுப்படங்களினையும் ஒன்றுவிடாமல் எப்பாடுபட்டாவது பார்த்துவிட்டு வெளியே வருகிற சராசரி தமிழ் ரசிகனின் முகத்தை எப்போதாவது பார்த்ததுண்டா? எதையோ இழந்த பெரும் ஏக்கப்பெருமூச்சும், சூம்பித்தொங்கிய தலையும், விரகமெறிய எதையோ தேடுகிற கண்களுமாக மெய்புல உலகின் மீதான தீராக்கோபத்தோடு அரங்கினை விட்டு வெளியேறுகிற துர்பாக்கிய நிலையை காண இயலும். என்ன காரணம். ஏனிந்த ஏக்கம். பிட்டுப்பட ரசிகர்களின் இச்சோகத்திற்கு காரணம்தான் என்ன? பிட்டுப்படங்கள் குறித்த தவறான கருத்தாக்கங்களும் அதற்குபின்னாலிருக்கிற நுண்ணரசியலும்தான் என்ன?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிட்டுப்படவுலகை ஆண்டுகொண்டிருந்த ஏடி ஜோய், ஜெய தேவன் மாதிரியான அதிசிறந்த முற்போக்கு இயக்குனர்களும், ஷகிலா,சிந்து,மரியா,ஷர்மிலி முதலான நடிப்பிற்சிறந்த முற்போக்கு நடிகையரையும் எங்கு தொலைத்தோம். படைப்பூக்கமில்லா சுரணையில்லாத பிட்டுப்படங்களின் காலம்தான் தொடங்கிவிட்டதா என்ன? என்று மெய்யுணர்வினால் எழுகிற தர்க்கரீதியிலான அக்கேள்வி ஒவ்வொரு ரசிகனின் உள்ளத்திலும் எழக்காரணம்தான் என்ன?

கடந்தவாரத்தில் வெளியான தேவதாசியின் கதை என்னும் பிட்டுப்படத்திற்குத்தான் எத்தனை அமர்க்களமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தினத்தந்தியில் வெளியான மோனிகாபேடியெனும் காரிகையின் புகைப்படம் பிட்டுப்பட ரசிகர்களின் உள்ளத்திளே புகுந்த எறும்பாக மொய்க்கத்தொடங்கியது. ஐபிஎல் தேர்தல் முதலான புறக்காரணிகளால் தமிழ்த்திரையுலகம் நிறையவே சோம்பிப்போய் கடந்து இரண்டு வாரங்களில் மாப்பிள்ளை தவிர்த்து எப்படமும் வெளியிடப்படவில்லை.

காரணம்? இப்புறக்காரணிகளால் ரசிகர்கள் யாருமே தியேட்டருக்கு வரவாய்ப்பில்லாமல் போய்விடுகிற நிலை உண்டாகியிருக்கிறது. ஆனால் கூட தொடர்ந்து வெளியாகும் இப்பிட்டில்லா பிட்டுப்படங்களுக்கு கூட்டம் அம்முவதில் ஆச்சர்யமில்லை. தேவதாசியின் கதை மட்டுமல்ல, சாந்தி அப்புறம் நித்யா, துரோகம், குற்றம் நடந்தது என்ன முதலான பல திரைப்படங்களை உதாரணமாக கூற இயலும்.

இப்போதும் மெய்நிகர் உலகில் தனக்கான மிகச்சரியான பிட்டினை தேடி அலைகிற அதிசிறந்த ரசிகனாகவே நம்மில் பலரும் உலா வருகின்றோம்.

அப்படிப்பட்ட ரசிகனின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ததா இத்திரைப்படங்கள். இல்லை என்பதே பெரும்பாலானவர்ளின் பதிலாக இருந்துவிடுகிறது. ஆம் என்று சொல்லுபவர்களுக்கு பிட்டுப்படங்கள் குறித்த ரசனையோ இலக்கியரீதியிலான பார்வையோ உள்ளொளி தரிசனமோ இருப்பதில்லை என்பதும் திண்ணம். ‘படத்தின் இறுதிவரை பாருங்கள் இன்பம் நிச்சயம்’ என்றெல்லாம் தினத்தந்தியில் கட்டங்கட்டி காசுகொடுத்து விளம்பரம் செய்த போதாவது நம் மக்கள் அதையுணர்ந்து தப்பித்திருக்கலாம். ஆனால் பிட்டுப்படங்களின் மீதான தீராவெறியும் ஒரு நல்லபிட்டுக் கிடைக்காத என்கிற ஏக்கமும் இவர்களை ஐபிஎல்லினையும் தேர்தலினையும் புறக்கணித்து இப்படங்களை காணசெய்திருக்கிறது. கண்டபின் நோக செய்திருக்கிறது. இது யாருடைய குற்றம். இதுமட்டுமல்ல இதற்கு முன்பு வெளியான அனேக பிட்டுப்படங்களின் நிலையும் இதுவே.

அண்மைக்காலங்களிலே வெளியான படங்களில் துரோகம் என்னும் படம் ஓரளவு நம்மை கவர்ந்தாலும், அதிலே பிட்டுகளின் எண்ணிக்கையை குறைத்ததோடு படம் எதை நோக்கியும் பயணிக்காமல் கட்டவிழ்த்த கழுதையைபோல நகர்ந்தது பெருங்குறை. ஆனால் பழைய திரைப்படங்களோ கதை எதை நோக்கிப்பயணித்தாலும் அதன் இறுதி இலக்கானது பிட்டெனும் ஒன்றை முன்னுறுத்தியே நகருவதை கண்டிருக்கிறோம். அதிலும் ஷகிலா நடித்திருந்தால் படத்தில் இரண்டு பிட்டாவது உறுதி என்கிற மனோதைரியத்தினை அளித்த படங்கள் அவை. பிட்டே இல்லாத படங்களாக இருந்தாலும் தியேட்டர் அதிபர்களின் கருணையினாலே அவை நிகழ்ந்தேறுவதையும் கண்டிருக்கிறோம். நாயகனும் நாயகியும் சந்தித்தாலே அடுத்த காட்சியில் பிட்டு நிச்சயம் என்கிற அந்நம்பிக்கையை கொடுத்ததுதான் எது? ஆனால் இன்றோ இருவருமே ஓன்றாக கட்டிலில் புரண்டாலும் காதுகடித்தாலும்.. பிட்டென்ற ஒன்று வராது என நம்பத்தொடங்கியிருக்கிறான் மெய்நிகர் ரசிகன்.

இதில் யாருக்குமே மாற்று அபிப்பிராயமோ அப்பிரதிகள் மீதான விமர்சனமோ இருக்காதென நம்பலாம். ஷகிலாவின் பெரும்பாலான படங்கள் அனைத்துமே பாலியல் தொடர்பான சிக்கல்களை முன்னிறுத்துபவை. அவை ஒவ்வொரு இளைஞனின் நாடித்துடிப்பையும் அறிந்து உருவாக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்றவை. ஆனால் இன்று வெளியாகிற படங்களோ அதிவேக பணம் எனும் முதலீட்டிய ஒற்றை மதிப்பீட்டினையே குறியாக வைத்துக்கொண்டு இயங்குகின்றன.

பிட்டுப்படம் பார்க்கிற ஆவலோடு தியேட்டருக்கு வருகிற ரசிகனை ஏமாற்றி அவனுக்கு எதையுமே காட்டாமல் ஏமாற்றும் போக்கு தொடர்கிறது. இது பொதுவெளியில் இயங்குகிற சராசரி ரசிகனையும் அவனுடைய கலாப்பூர்வமான பார்வையையும் சிதைத்து அவனை பிட்டுகளே அறிந்திடாத சுரணையற்றவனாக மாற்றிவிடுகிற நிலையும் உருவாக காரணமாக இருக்கலாம். இதற்கான மாற்றுவழிகளை சிந்தித்து அழிந்துவரும் பிட்டுப்பட ரசனையையும் பாலியல் விழைவூக்க ரசனையையும் மேம்படுத்தும் படங்களையும் பணமெனும் ஒற்றை குறிக்கோளைவிடுத்து அனுதினமும் எடுத்திட சமகால இயக்குனர்கள் பிரக்ஞையோடு முன்வரவேண்டும். அல்லது அக்கால ஷகிலா படங்களை மறுபிரதியாக்கமோ அல்லது மறுதிரையாக்கமோ செய்யலாம்.

ஒவ்வொரு படத்தின் கடைசி காட்சிவரைக்கும் காத்திருந்து இதோ இப்போது பிட்டு வந்துவிடும், அதோ அப்போது பிட்டுவந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பினோடு காத்திருக்கும் ரசிகர்களின் கண்கள்தான் எவ்வளவு மகத்துவமானவை. அவனை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பாவச்செயல். ஒவ்வொரு காட்சியிலும் மொக்கை ஃபிகர் வந்தாலும்.. பல்லு போன ஆயாவந்தாலும் ஒரு பிட்டுவராதா என்று எதிர்பார்க்கிற துர்பாக்கிய நிலையில் இன்றைய ரசிகன் இருக்கிறான். பாலுக்காக அழுகிற கன்றுக்குட்டிக்கு காளை மாட்டில் பால்குடி என உத்தரவிடுவது எவ்வளவு வன்கொடுமையானது. அதைப்போல இன்றைய ரசிகன் பிட்டுக்காக அலைகிற நிலையுள்ளது. இதனை தடுத்திட உடனடியாக தமிழ் கூறும் பிட்டுத்திரையுலகம் கூர்ந்து கவனித்து , சரியான திட்டங்களோடு முன்வராவிட்டால் , பிட்டென்றால் என்னவென்றே தெரியாத மரபுக்குணங்கொண்ட ஒரு சந்ததியை உருவாகிவிடக்கூடிய  சாத்தியக்கூறுகள் அதிகமாய் தெரிகின்றன.

22 comments:

மணிகண்டன் said...

me the first.

கானகம் said...

சமகால பிட்டு ரசிகன் உங்களை வாழ்த்துவான். உங்களின் கூர் நோக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது..

:-)))

Anonymous said...

//பாலுக்காக அழுகிற கன்றுக்குட்டிக்கு காளை மாட்டில் பால்குடி என உத்தரவிடுவது எவ்வளவு வன்கொடுமையானது.//

உரத்த சிந்தனை. ஆழமான பதிவு. தொடர வாழ்த்துக்கள். நன்றி!

Anonymous said...

ha ha super

Rathnavel Natarajan said...

அதிஷா.
ஏன் உங்களுக்கு எழுதுவதற்கு விஷயங்களே இல்லையா? என்ன ஆயிற்று உங்களுக்கு?

Anonymous said...

Looks like you are trying to parody Jeyamohan's style of writing. I liked your post for review of சட்டப்படி குற்றம். This post is rather disappointing.

CS. Mohan Kumar said...

படு பயங்கர இலக்கிய கட்டுரையாள்ள இருக்கு :))

தறுதலை said...

புட்டுக்கு மண் சுமந்தவன் சிவன்.
பிட்டுக்கு கண் சிவந்தவன் இவன்.

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப் '2011)

Unknown said...

அயல்நாட்டு காமப்படைப்புக்களை கண்டு அவை போல் நாம் மண்ணில் படைப்புகள் வரும் நாள் எந்நாள்? என ஏங்கும் கலா ரசிகனின் ஆத்திரம் ..உங்கள் பதிவில் தெரிகிறது..

******ஷ.ம.சி.ரே. இலக்கிய பேரவை ******

பெம்மு குட்டி said...

உரத்த சிந்தனை. ஆழமான பதிவு. தொடர வாழ்த்துக்கள். நன்றி!


I THINK YOU HAVE A BIG IMPACT FROM LUCKYLOOK

ராம்ஜி_யாஹூ said...

இன்றும் இணைய கபேக்களில் பிட்டுப் படங்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.
அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரே மாபெரும் வேறுபாடு,
ஐந்து நிமிட பிட்டுக் காட்சிக்காக ஐம்பது நிமிட மொக்கைப் படத்தை பார்க்க வேண்டாம்.
நமக்குத் தேர்வு செய்யும் வாய்ப்பு, வசதி எல்லாம்.

Giri Ramasubramanian said...

ராம்ஜி ஆஊ (ஹீ ஹீ ஹீ) ட்விட்டில் சொன்னது போல் சில விஷயங்களை நீங்கள் இருட்டடிப்பு செய்திருந்தாலும்....

இந்தக்கட்டுரை இலக்கியத் தரம் வாய்ந்த ஒன்று. பகடிக்கு உயர் உதாரணம் இது. நன்றி!

என் லைஃப்டைம் புக்மார்க் லிஸ்டில்....

Muthukumara Rajan said...

என்ன ஒரு ஆராய்ச்சி ..
இவ்வளவு அருமையான ஆய்வு கட்டுரையை படித்து பல நாள் ஆகிறது .

வாழ்க நீ
வளர்க உங்கள் பொது தொண்டு

Anonymous said...

//Looks like you are trying to parody Jeyamohan's style of writing. I liked your post for review of சட்டப்படி குற்றம். This post is rather disappointing. //

இந்த இரண்டு வரிகள் இல்லாததால் இப்படிச் சொல்கிறாரோ? :))

சிறு வயதில் பிட்டுபடம் பார்ப்பவர்களின் மன நிலையைப் பற்றி குரு சத்யாவிடம் விவாதித்தேன். இந்திய ஞான மரபில் தாந்த்ரிகத்தின் தாக்கத்தை விளக்கிய சத்யா, மனித மனத்தின் இயல்பான ஆன்மிகத்தின் மீதான ஈர்ப்பே பிட்டுபடம் பார்ப்பவர்களின் மனநிலைக்கான காரணம் என்றார்.

Anonymous said...

super thatuthalai!!!

Enzooy said...

Yeppaa Yennaa Oru karuthu..aazhama pathivu..thalaivaaa yenn verra yentha DVDum kidaikalaiyaa ungaluuku? http://www.theroticmovies.com/ poi parrunga neriyaa irukku

Raashid Ahamed said...

அதிஷா எந்த காலத்துல இருக்கீங்க இன்னமும் பிட்டுபடம் கிட்டுபடம்ன்னு சொல்லிகிட்டு. மக்கள் ரொம்ப அட்வான்சா போய்கிட்டிருக்கும் இப்ப பிரபலம் என்ன தெரியுமா scandal ல்னு சொல்ல படும் திருட்டுதனமா எடுக்குற வீடியோக்கள் தான் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் பிரபலம். இதில் பள்ளி மாணவி, குடும்ப பெண் என பல பெண்களை எடுத்து நெட்டில் விடுவதற்காகவே ஒரு கும்பல் கேமரா மொபைலோடு அலைகிறது. எப்புடி இருந்த தமிழ் நாடு இப்படி ஆயிடிச்சு தெரியுமா. நீங்க சொல்ற பிட்டு எல்லாம் படிக்காத கிராமத்து, குப்பத்து ஆள்களுக்கு தான் பொருந்தும்.

Anonymous said...

தமிழில் தற்போது இலக்கிய தரம் வாய்ந்த திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டது. இதுவே கேரளாவில் நிலைமை எப்படி உள்ளது? அங்கு குடும்பத்தினர் அனைவரும் இதுபோன்ற படங்கள் பார்க்கின்றனர்; விவாதிக்கின்றர். இதைப்பற்றி நமது தோழர் அதிஷா மட்டுமே பேசுகிறார், எழுதுகிறார். என்ன கொடுமை சார்....

வேதாளம் said...

நீங்கள் சொன்ன மெய்நிகர் நகரில் சமகால பிட்டுகளின் ஆதிக்கம் குறைந்ததால்தான் என்னவோ பின் நவீனத்துவ ரஞ்சிதாக்களின் வரவோ.?

நித்யன் said...

ப்ரிய அதிஷா,

திண்டுக்கல் அபிராமி, திருச்சி கெயிட்டி உள்ளிட்ட திரையரங்குகளின் இருட்டை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

பகடியில் நீங்கள் பட்டையைக் கிளப்புவதை மீண்டும் நிறுவியிருக்கிறீர்...

அன்பு நித்யன்

Anonymous said...

//Anonymous said...
//Looks like you are trying to parody Jeyamohan's style of writing. I liked your post for review of சட்டப்படி குற்றம். This post is rather disappointing. //

இந்த இரண்டு வரிகள் இல்லாததால் இப்படிச் சொல்கிறாரோ? :))

சிறு வயதில் பிட்டுபடம் பார்ப்பவர்களின் மன நிலையைப் பற்றி குரு சத்யாவிடம் விவாதித்தேன். இந்திய ஞான மரபில் தாந்த்ரிகத்தின் தாக்கத்தை விளக்கிய சத்யா, மனித மனத்தின் இயல்பான ஆன்மிகத்தின் மீதான ஈர்ப்பே பிட்டுபடம் பார்ப்பவர்களின் மனநிலைக்கான காரணம் என்றார்.
//
நீங்கள் குறிப்பிட்ட வரிகளை ரசித்தேன். அது இல்லாமலே இந்த போஸ்ட்-இல் ஜெமோ வாடை அடித்தது.
So the Athisha touch was missing.

Anonymous said...

naan nenchen nee solta(pathivu pannitaa) paaa