04 May 2011

வானம்
தெலுங்கில் வெளியான வேதம் படத்தை பார்த்துவிட்டு சில இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன். அற்புதமான திரைப்படம் அது. உங்களுக்குள் பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணிவிடக்கூடிய அருமையான திரைக்கதை! சிரிப்பு,துக்கம்,கோபம்,ஆர்வம் என படம் முழுக்க வெவ்வேறு உணர்வுகளை நம்மையும் அறியாமல் ஏற்படுத்தும்.

வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஐந்து கதைகள். ஒரு குறிப்பிட்ட சம்பவம்(கிளைமாக்ஸில்) ஐந்துகதைகளுக்குமான முடிவாக இருக்கும். இதைப்போல அந்தக்காலத்திலேயே முருகன் அருள்,பெருமாள் மகிமை,தேவியின் திருவிளையாடல் மாதிரியான படங்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷகிலா நடித்த பெரும்பாலான பிட்டுப்படங்களும் இப்படித்தான். உதாரணத்திற்கு நவகன்னிகள் என்னும் படத்தில் ஒன்பது இளம் கன்னிகளின் தனித்தனிக்கதைகள் இறுதியில் ஷகிலாவின் திருவிளையாடலோடு முடிவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆன்மிகமல்லாத பிட்டுகள் இல்லாத இதுமாதிரி படங்களில் இதுவே நான் பார்க்கும் முதல் படம். மலையாளத்தில் வெளியான கேரள கஃபே திரைப்படமும் கிட்டத்தட்ட இதே போல்தான் என்றாலும் அந்த படத்தில் எல்லா கதைகளும் தனித்து இயங்கும். வேதம் படத்தில் ஐந்து கதைகளும் தனித்தனியாக இயங்கினாலும் இறுதியில் ஆறுகள் அடையும் கடல் போல கிளைமாக்ஸ். இந்தப் படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக பிரித்தோமானால் அற்புதமான சிறுகதைகள். உயிரை உலுக்கும் சக்திமிக்க வசனங்கள் என பட்டையை கிளப்பும்.

ஒரு படத்தில் ஆயிரம் பேரை அடிக்கிற ஹீரோ அடுத்தபடத்தில் அதைவிட அதிகமாக பத்தாயிரம் பேரையாவது அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மசாலா மணம் மாறாத தெலுகு திரைப்பட உலகிலிருந்து இப்படியொரு அற்புதமான படமா என பிரமித்து போனதுண்டு! நடிக்கவே தெரியாத மஞ்சு மனோஜ், பரபர அல்லு அர்ஜூன் என இருவர் கூட்டணியில் இத்திரைப்படம் தெலுங்கில் சக்கைபோடு போட்டது.

இவ்வளவு நல்ல படம் தமிழில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொண்ட போது மிகவும் மகிழ்ந்தேன். தமிழில் சிம்பு நடிக்கப்போகிறார் என்பதை அறிந்ததுமே அந்த மகிழ்ச்சி புஸ்ஸாகி புஸ்வானமாகியது. எப்பேர்ப்பட்ட நல்ல படத்தினையும் தன் அபார திறமையால் மொக்கையாக்குகிற திறமை சிம்புவிற்கு மட்டுமே வாய்த்துள்ளது. அதிலும் இப்படத்தில் அவர் சிம்பு கிடையாது.. யங் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர். டைட்டிலிலேயே அலப்பறை பண்ணுகிறவர் படத்திலும் பண்ணாமாலா இருக்கப்போகிறார்!
வானம் படம் முழுக்க சிம்புவின் அட்டகாசம்தான். முகம் மட்டும் அளவுக்கதிகமாக உப்பலாகி.. உதடுகள் வீங்கி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். முகத்திலிருந்த மென்மையான குழந்தைத்தனம் சுத்தமாக மிஸ்ஸிங். அதுவுமில்லாமல் , தன் இயல்பிலேயே துடிப்பான துருதுரு இளைஞரான அல்லு அர்ஜூனுக்கு (தெலுங்கு பதிப்பில் நாயகன்) கட்டைக்குரல் , அல்ட்ரா மாடர்ன் பாடி லாங்குவேஜ் சிம்பு நிச்சயம் மாற்று கிடையாது. அதிலும் சிம்பு அழும் காட்சிகளில் குழந்தைகள் கூட சிரிக்கத்தொடங்கிவிடுகின்றன. அழும்போது பயபுள்ள அப்படியே அவிங்கப்பா சாடை!

படம் முழுக்க சில பாடல்களை பாடுகிறார். ஓடுகிறார். ஏனோதானோவென நடித்திருக்கிறார்! விண்ணைத்தாண்டிவருவாயாவே பரவாவல்ல பாஸ்! (சென்னை முழுக்க சிம்பு தனக்குத்தானே எஸ்டிஆர் யங் சூப்பர் ஸ்டார் என போஸ்டர் அடித்து அலும்பு வேறு செய்திருக்கிறார்! அவருக்கு போட்டியாக பரத்தும் தன் சொந்தகாசில் போஸ்டர் அடித்திருப்பது வரலாற்றில் ஆவணப்படுத்தபடவேண்டிய செய்தி)

அனுஷ்கா ஒருவாரம்தான் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல! தெலுங்குபடத்தின் காட்சிகளையே டப் செய்து உபயோகித்துள்ளனர். கொஞ்சமும் தமிழுக்கு ஒட்டவேயில்லை. தமிழுக்கேற்றபடி கொஞ்சம் மாற்றியிருக்கலாம். அதிலும் அந்த விபச்சார விடுதி பாடலுக்கான பாடல்வரிகள் சகிக்கவில்லை ரகம்.

சின்னதளபதி என்று தன்னை அடைமொழியிட்டு அழைத்துக்கொள்ளுகிற பரத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பாவம் அவர் கேரக்டரை வேண்டுமென்றே திட்டமிட்டு டம்மி பண்ணிருக்கிறார்கள். அவரும் அதற்கேற்ப முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஜடம் போல நடித்திருப்பது பெருமைக்கு பெருமை சேர்க்கிறது. இவர்கள் மூவரும் படம் முழுக்க
நம்மை பாடாய் படுத்த படத்தில் பிரகாஷ் ராஜும் சரண்யாவும் ஆறுதல் அளிக்கின்றனர்.

இசை யுவன்ஷங்கர் ராஜாவாம்.. எவன்டி உன்னை பெத்தான் மற்றும் ஒப்பனிங் பாடல் (என்ன எழவு பாடறாய்ங்கன்னே புரியல்ல) இரண்டுமே இரைச்சல். காது வலி. அந்த பாடல்களை காட்சிப்படுத்திய விதம் கண்வலி. படத்தில் டைட்டில் போடும் போது ஒரு பாடல் ஒலிக்கிறது. டைட்டில் முடிந்த மறுவிநாடி இன்னொரு பாடல் தொடங்குகிறது. தமிழ்சினிமாவின் கடைக்கோடி தொழிலாளிகூட இப்படி ஒரு தவறை செய்யமாட்டான்! சிம்புவின் யோசனையாக இருக்கலாம்!

இப்படம் பேசுகிற அரசியலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். அதிலும் இஸ்லாமியர்களை இவ்வளவு இணக்கமாகம் மனிதநேயத்துடனும் அண்மைக்கால தமிழ்சினிமா காட்டியதில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டு. தீவிரவாதிகள் என்கிறவர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்திய படி சுற்றிக்கொண்டிருப்பதில்லை, அது நமக்குள்ளே இருப்பது.. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது. அரசாக இருந்தாலும் அப்பாவி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தினால் அதுவும் தீவிரவாத அரசுதான் என்று ஆணித்தரமாக ஒரு செய்தியை சொல்லுகிறது இப்படம்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, அரவாணிகள், கொத்தடிமைகள்,விபச்சாரிகள்,சேரி பையன்கள் என இப்படத்தின் இயக்குனர் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரமுமே மிக முக்கியமானவை. சில வசனங்கள் மிக மிக வலிமையானவை. விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக பேசக்கூடியவை.

அவ்வளவு அருமையான கவித்துவமான வேதம் ஏன் வானமாக மாறியபோது பிடிக்காமல் போனது என்பதை யோசிக்கிறேன். சிம்புவின் ஹீரோயிசம், தப்புந்தவறுமான நடிகர் தேர்வு! கொஞ்சமும் எடுபடாத இசை. ஒற்றை ஹீரோவுக்காக திரைக்கதையில் செய்த மாற்றங்கள். இதற்கெல்லாம் மேல் தெலுங்கில் படமெடுத்த இயக்குனருக்கு தமிழ் தெரியாதென நினைக்கிறேன்! மற்றபடி வானம் பார்த்து கடுப்பாவதை விட வேதம் பார்த்து சிலிர்க்கலாம்.

16 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இன்னும் படம் பார்க்க வில்லை , என்னென்றால் , எங்க ஊருல தியேட்டர் இல்ல பாஸ் , ஊருல என்ன , எங்க நாட்டுலையே தியேட்டர் இல்ல , இந்தியா வந்தாதான் தியேட்டர்க்கு போய் படம் பார்க்க முடியும் . . . இல்லன்ன நெட் ல நல்ல பிரிண்ட் வர வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதான் . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///Comment moderation has been enabled. All comments must be approved by the blog author. ///

ohh my god , இங்க இது வேற இருக்கா ? இதை கவனிக்காம கமெண்ட் போட்டுடேனே . . அப்போ என்னோட சபதம்? அட ச்சா இப்படி ஆகி போச்சே . .

///ஏன் கமெண்ட் மொடேரசியன் ? ( why comment moderation? )

http://rockzsrajesh.blogspot.com/2011/03/why-comment-moderation.html ////

Jeyamaran said...

Anushkaga padam pakkalam nanbaaaa

DR said...

உங்களுக்கு தெலுகு தெரியுமா அதிஷா? எனக்கு தெரியாததினால இதை பார்த்து தான் ஆகணும் .

இராஜ ப்ரியன் said...

//சிம்பு அழும் காட்சிகளில் குழந்தைகள் கூட சிரிக்கத்தொடங்கிவிடுகின்றன. அழும்போது பயபுள்ள அப்படியே அவிங்கப்பா சாடை!//

சூப்பரு.......

Anonymous said...

அதி, உங்கள் பதிவுகள் எப்பொழுதும் எனக்கு பிடிக்கும் ! சட்டப்படி குற்றம் விமர்சனம் படித்து நான் சிரித்த சுவடு மறைவதற்குள் இப்படி ஒரு விமர்சனம்!
படம் நான் இன்னும் பார்க்கவில்லை ....ஆனால் வேதம் பார்த்து விட்டேன் ! வேதம் கண்டிப்பாக நல்ல படம் தான் ! ஆனால் அதையும் இதையும் COMPARE பண்ணுவது சரியல்ல என்றே நினைக்கிறேன் ! வேதம் பார்த்த பொழுது கிராஷ் படம் எனக்கு நினைவுக்கு வந்த போதிலும் வேதத்தை ரசித்தேன் ! வானம் படத்தின் மீது அதனால் எதிர்பார்ப்பு உள்ளது !பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை என்பது ஏன் கருத்து ...வயதானவர்களுக்கு பொதுவாக சிம்பு யுவன் காம்பினஷன் பிடிப்பதில்லை ! வானம் தீம் பாடலும் ,நோ மனி , எவண்டி போன்ற பாடல்கள் பிடித்தன ! தமிழில் நல்ல நடிகர் தேர்வு இல்லா விட்டால் கூட மக்கள் பார்த்து முடிவு செய்வது நல்லது என்று எண்ணுகிறேன் ! சிம்புவின் நல்ல முயற்சிக்கு நிறை குறை இரண்டையும் கலந்து ஆரோக்கியமாக இவ்விமர்சனம் அமைந்திருக்கலாம் என்பது என் எண்ணம் ! நன்றி ! - Bloorockz

Fayaz said...

//இப்படம் பேசுகிற அரசியலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். அதிலும் இஸ்லாமியர்களை இவ்வளவு இணக்கமாகம் மனிதநேயத்துடனும் அண்மைக்கால தமிழ்சினிமா காட்டியதில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டு//
I apriciate too athisha, it's true that the Indian cinema never show islamic in a such human beings. this movie's shown it alright!!! But still I thought, you watch in cinema there are good human beings of Muslims and Hindus, but when it comes to terrorists It is Muslims always, who do this Terrorism!! do you think, that in India, which is 90% Hindu country,you find terrorism only from Muslims without help from Hindus? hav u never seen Hindu fundamedalists, and traitors from hindus?so All you try to say world, that there are only good hindus, but Muslims can be terrorists or good Human beings? did you get my point Athisha? I think so

Unknown said...

// எப்பேர்ப்பட்ட நல்ல படத்தினையும் தன் அபார திறமையால் மொக்கையாக்குகிற திறமை சிம்புவிற்கு மட்டுமே வாய்த்துள்ளது. //

நல்லா சொன்னிங்க.எனக்கும் பார்க்கணும் என்ற ஆசை இருந்தது.ஆனால் சிம்பு என்றதும் விடு ஜூட்.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

சேம் ப்ளட்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

King Viswa said...

//வயதானவர்களுக்கு பொதுவாக சிம்பு யுவன் காம்பினஷன் பிடிப்பதில்லை !//

அப்போ எங்க அண்ணன் அதிஷா யூத் இல்லையா? ஐயகோ,

என்ன வாழ்க்கைடா இது?


கிங் விஸ்வா

லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

Anonymous said...

மக்களே ,நேற்று இந்த படத்தை பார்த்தேன் ! ஏற்கனேவே தெலுகுவில் இந்த படத்தை பார்த்து சிலிர்தவர்களில் நானும் ஒருவன் ! ஆனால் அதிஷாவின் மொக்கை விமர்சனம் போல படம் இல்லை ! படம் நன்றாகவே வந்திருக்கிறது ! சந்தானத்தின் காமடி தெலுகுவை விட இந்த படத்துக்கு ஒரு பிளஸ் !நல்ல படம் ...உங்கள் கண்களின் ஓரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறையாவது கண்ணீர் எட்டி பார்க்கும் ! நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் ! அதிஷாவின் விமர்சனத்தை நண்பர்களிடம் படம் பார்க்குமுன் சொல்லி படம் முடிந்தவுடன் அடி வாங்கினேன் :) விகடன் விமர்சனம் நடுநிலையுடன் நன்றாக இருந்தது ! அதிஷா ....இந்த பதிவு வருமா ???!!-Bloorockz Ravi

ரகசிய சிநேகிதி said...

:) ...முற்றிலும் உண்மை அதிஷா..

வில்லனின் விநோதங்கள் said...

சிம்புவினாலேயே படம் சிறந்த படமாகியிருக்கிறது வானம் திரைபடம்.

சிம்புவின் திறம் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த 10 படங்களில் வானம் படம் நிச்சயம் இடம்பெறும்.

சிம்பு ஆல்வேஸ் க்ரேட்............

வில்லனின் விநோதங்கள் said...

சங்கீத மேகம் பாடல் வந்த போது அந்த பாடல் துவக்கத்தில் வந்த ட்ரம்ஸ் சவுண்டை கேட்டு என்ன இரைச்சலா பாட்டு போட்டிருக்காங்க என்று புலம்பிய பெருசுகளையும் நான் அறிவேன் என்பதால் எவண்டி உன்னை பெத்தான் பாடல் சிலருக்கு பிடிக்காமல்போனதன் காரணம் அதை தூற்றும் காரணம் தலைமுறை இடைவெளியின் பிம்பம் மட்டுமே.

எவ்ண்டி உன்னை பெத்தான் பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது.

யுவன் சிம்பு கூட்டணி மீண்டும் தத்தமது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறது வானம் திரைப்பட பாடல்களில்.......

Raashid Ahamed said...

வீணா வம்பிழுக்கிறீங்க !! இப்புடியா மூஞ்சில அடிச்சது மாதிரி அழக வர்ணிக்கிறது?. அகில உலக சிம்பு ரசிகர் மன்றம் சார்பா உங்களுக்கு கண்டனம் வரும். எங்க சிம்புவுக்கு கூடிய சீக்கிரம் டாக்டர் பட்டம் கிடைக்க போகுது அப்புறம் வச்சிகிறேன். அடுத்து எங்க சிம்பு நடிச்சி வரப்போற மேகம், நிலா, இந்த படத்தையெல்லாம் பாத்து மூக்குல விரல வக்க போறீங்க.

Anonymous said...

இது ஏதோ கொஞ்சம் நடுநிலைமை தவறிய விமர்சனம் போல தோன்றுகிறது. சிம்பு , நீங்கள் சொன்ன அளவுக்கு மோசமாக தோன்ற வில்லை. எனக்கு தெலுங்கில் பார்க்கும் எண்ணம் இல்லை, ஏனென்றால் எனக்கு தெலுங்கு தெரியாது. என்னை பொறுத்தவரை தமிழில் வானம் எனக்கு திருப்தியான படம்.

கூகுள் அக்கவுன்ட் ல் பின்னூட்டம் இடலாம் என்றால் அரபியில் எதோ கேட்கிறது. ஆகையால், அனானி.

Jagadesh