08 September 2011

எழுத்தாளர் ஜெயலலிதா

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர் புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!

ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ் புகழ் கிங்விஸ்வா).
கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர், எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின் உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.

பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில் விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான் இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்! எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன் எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள் சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர.. அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல் மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம் என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே எழுதியிருக்கிறார்.

இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர் கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான புனைவாகவே இது இருக்கிறது.

தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.

30 comments:

குடிமகன் said...

ஆச்சரியமான தகவல் தான்!!

Anonymous said...

sivaji-sandhiya- jaya =auto biography

Ashwin-WIN said...

கலைஞர் ஜெயலலிதா வாழ்க. ஜே உம் நாவல் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமான விடயம். அருமையான பகிர்வு தோழரே..

அ.சிதம்பரம் said...

I have not heard this NEWS before!!! Anazing!!!

கோவி.கண்ணன் said...

ராதிகாக் கூட எழுதி இருக்காங்க, தொடர்கதை தலைப்பு 'காதலுக்காக ஜோதி போராடுகிறாள்'

ஹரன்பிரசன்னா said...

Good post.

வெளங்காதவன்™ said...

நல்ல பதிவு!

Pamaran said...

நீ படிச்சா அந்த நாவலை மத்தவங்க கிட்ட பகிர உனக்கு மனசு வரல, நீ எப்படி மத்தவங்க கிட்ட எதிர்பார்க்கலாம்.

ILA (a) இளா said...

இன்னனுமா கெடைக்கலை? ரெண்டு நாளாச்சே.

இசைப்பிரியன் said...

May be you can scan and post on esnips ?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் அதிஷா.

அ.வெற்றிவேல் said...

நான் இன்னும் படிக்கலை.. ஆனாலும் இது ரொம்ப ஒவர் பாஸ். அது சும்மா கிடந்த ஒரு முன்னாள் நடிகையை எம் ஜி ஆருக்கு முன்னால் கொண்டு நிறுத்த சோ முன்னிருந்து நடத்திய ஒரு நிகழ்வு..சோ தான் அவரை அழைத்து சிந்தனைச் செல்வி என்று பட்டம் கொடுத்து எழுதச் செய்து .. இது ஒரு அரசியல் காய் நகர்த்தல்.. ஒரு சின்ன உதாரனம் சொல்கிறேன்.. உண்மையிலெயே எழுத ஆரம்பித்தவர்கள் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் எழுதிக் கொண்டே இருப்பார்கள் மனதளவிலும் கூட ..அப்படி ஒன்றும் எழுதியதாக இல்லை.இந்த முன்னாள் நடிகை எங்கு பேசினால்லும் எழுதி வைத்துக் கொண்டு பேசுகிறார் அதுவும் அடுத்தவர் எழுதுவதை.. இவரைப் போய் எழுத்தாளர் என்று..

அ.வெற்றிவேல் said...

நாவலுக்கு அடுத்ததாக தன் சுயசரிதை ஆரம்பித்து சோபன்பாபுவிற்கும் தன்க்கும் உள்ள உறவு குறித்து வெளிப்படையாக எழுத ஆரம்பித்த அடுத்த வாரம் அத்தொடரை அன்றைய முதல்வர் பாதியில்யே நிறுத்தச் சொல்லி அதிமுகவின் கொ.ப.செ வாக பதவி கொடுத்ததையும் எழுதி இருக்கலாம்..

Unknown said...

தாய் இதழில் கூட ஒரு தொடர்கதை எழுதி இருக்கிறாரே. என் சிறு வயதில் படித்து இருக்கிறேன். பெயர் ஞாபகம் இல்லை

Unknown said...
This comment has been removed by the author.
சீனிவாசன் said...

ஆச்சரியமாய் உள்ளது

peter said...

Thanks for sharing

ஆர். அபிலாஷ் said...

சில பக்கங்கள் ஸ்கான் பண்ணி போடுங்க அதிஷா, குறிப்பா அந்த உணர்ச்சிகரமான பக்கங்கள்!

VELU.G said...

நல்ல தகவல் யாராவது ஆவண செய்யுங்கோ

Raashid Ahamed said...

இது எங்கள் அம்மா தங்கத்தாரகையே தானா ? நம்பவே முடியவில்லை !! இனி எங்கள் அம்மாவைக்கூட நாங்கள் கலைஞி என்று அழைக்கலாமே!! இதே ஆண்பாலில் அழைக்கப்படும் வேற ஒருத்தர் ஆயிரம் கதை எழுதினாலும் எங்க அம்மா 1 எழுதினது 1000 எழுதின மாதிரி. நல்ல வேளை எங்கள் அம்மா அரசியல்ல கவனம் செலுத்திட்டாங்க. இல்லேன்னா எங்கம்மா ஒரு முன்னணி எழுத்தாளினியா,படைப்பளினியா, கலைஞியா வந்திருப்பாங்க

Anonymous said...

If she continued as a writer atleast Tailadu might have been saved;
Now since she has become to politics the tamil literature has been saved; Thanks to god
Suppamani

அம்பாளடியாள் said...

அம்மா ஒரு எழுத்தாளரா...!!! முற்றிலும் அறியாத
புதிய தகவல் வாழ்த்துக்கள் இதனைச் சேகரித்து பகிர்ந்துகொண்டமைக்கு .....

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 2

சிவாஜி said...

உண்மையில் சுவாரஸ்யம் தான்.

நாஞ்சில் ஜெபா said...

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எழுத்தாளராக இருந்தார் என்பது ஒரு மகிழ்ச்சியான விசயம். ஆனால் அவர் கருணாநிதியைப் போல் புகழ் பெற்ற எழுத்தாளராகவில்லை என்பது அதை விட மகிழ்சியான விசயம். அப்படி இருந்திருந்தால் “அழகான தமிழாலேயே தமிழக மக்களை ஏமாற்றுபவரை” (இது கலைஞரைப் பற்றி தமிழருவி மணியன் அவர்கள் கூறிய கருத்து) போல் தமிழர்கள் இன்னொரு போலி தலைவரிடம் மாட்டி சின்னா பின்னமாகியிருப்பார்கள்.

இங்கு சில தி.மு.க அனுதாபிகள் முதல்வரைப் பற்றி மிகவும் அவதூறாக கருத்து இட்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது . கருணாநிதியைப் பற்றி வனவாசத்தில் கண்ணதாசன் எழுதியிருக்கிறதையும், ஸ்டாலினைப் பற்றி அறிய 10 வருடம் முன்னால் வந்த பத்திரிகைச் செய்திகலையும் படித்தாலே போதும்.

Santhose said...

I read all the stories when it was published in Kumudham, Kalki etc... She tried to focus Sivaji & MGR in Kisu Kisu style.

She don't care abt this guys and try to dominate them when she was in her peak.

Anonymous said...

your article is copied in srilankan thinakaran newspaper
please visit the following link

http://thinakaran.lk/2011/10/11/?fn=y1110112

Anonymous said...

your blog article is copied and published in thinakaran newspaper from srilanka

http://thinakaran.lk/2011/10/11/?fn=y1110112

கானகம் said...

தினகரன் ஆசிரியருக்கு எழுதிப் போட்டிருக்கிறேன்.. இந்தத் தகவல் திருட்டு குறித்து

Anonymous said...

AMMA ALWAYS PERFORMS HER BEST IN ALL THE FIELDS. I READ HER STORY IN KUMUDHAM IN 80'S AND THE PICTURES WERE DRAWN RESEMBLING HER FACE. THAT STORY WAS REVOLVING AROUND A GIRL WITH MANY DIFFICULTIES IN DIFFERENT PHASES OF HER LIFE.SHE IS VERY INTELLIGENT AND VORACIOUS READER. I HAVE GREAT ADMIRATION OF HER PERSONALITY IN TERMS OF APPEARANCE, GUT FEELING, LANGUAGE SPECIALISATION SKILLS, GOOD DRESS SENSE,AND ON. HATS OFF TO THIS GREAT WOMAN ACHIEVER IN POLITICS