01 February 2012

இளையராஜாவின் மகிமைகள்

நூறாவது நாள் திரைப்படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க சில த்ரில்லர்களில் முக்கியமான திரைப்படம். அப்படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்த கதையை இயக்குனர் மணிவண்ணன் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் பகிர்ந்துகொண்டார். ''நூறுவாது நாள் படத்தின் மொத்த ரீரிகார்டிங்கையும் வெறும் அரைநாளில் செய்துமுடித்தாராம் இளையராஜா!'' அன்றைய தினம் அதே ஸ்டுடியோவிற்கு டாகுமென்ட்ரி ஒன்றின் ரிகாரிடிங்குக்காக வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இதைகேள்விப்பட்டு அசந்துபோய் இளையராஜாவை பாராட்டிவிட்டு சென்றாராம்! அந்தப்படத்தின் பாடல்களைவிட பிண்னனி இசைதான் காலத்தை கடந்து இன்றளவும் பேசப்படுகிறது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. இப்படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டதாம்!

இதையெல்லாம் கேட்கும்போது இளையராஜா குறித்து ஒரு அமானுஷ்யமான பிரமை உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஏன் என்றால் சமகால இசையமைப்பாளர்கள் ஒரே ஒருபாடலுக்கு ட்யூன் போட பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதையும் , அதிலும் எனக்கு மிட்நைட்டில்தான் ட்யூன் போடவரும், அமெரிக்காவில்தான் பாடவரும் என சீன் போடுவதையும், பல லட்சம் செலவில் லண்டன்,ஆஸ்திரேலியா,சுவிட்ஸர்லாந்துக்கெல்லாம் போய் ரீரிகார்டிங் செய்வதையும் பார்க்கிற இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் இளையராஜா குறித்த இந்த தகவல்கள் ரொம்பவே ஆச்சர்யமுட்டுபவைதான்.

இந்த ஆச்சர்யங்களுக்கு மேலும் வலுசேர்ப்பதைப்போல அண்மையில் வெளியிடப்பட்ட தோனி திரைப்பட பாடல்வெளியீட்டுவிழாவில் நடிகர் நாசர் ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

நாசர் தயாரித்து இயக்கி நடித்த அவதாரம் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னனி இசை உருவான விதம் குறித்து கூறினார் நாசர். அவதாரம் திரைப்படத்தினை தொடங்குவதற்கு முன்பு ஒருநாள். இளையராஜாவிடம் ‘’சார் இதுமாதிரி கூத்துக்கலைஞர்கள் பத்தி ஒருபடம் பண்றேன்.. நீங்க இசையமைக்கணும்’’ என்றதும் .. ‘’பார்ப்போம்’’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் ராஜா. கிட்டத்தட்ட படத்தின் அத்தனை காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டு மீண்டும் இளையராஜாவை அணுகியபோது அவர் படத்தை பார்த்துவிட்டு ஓக்கேடா அருமையா இருக்கு நாளைக்கு ரெகார்டிங் என சொல்லியிருக்கிறார்.

கையில் பணமில்லாத நாசர் இப்படி திடீர்னு சொன்னா.. ஒருவாரம் கழிச்சி என மண்டையை சொரிய.. அவருடைய சிக்கலை புரிந்துகொண்டு தன் செலவிலேயே ரீரிகார்டிங்கிற்கும் பாடல் சேர்ப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு படத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்தினை சொல்லி இந்த இடத்தில் ஒரு பாட்டு வச்சா ரொம்ப நல்லாருக்கும்.. (படம் பார்த்த அரைமணிநேரத்தில்) ட்யூன் போட்டுட்டேன் கேக்கறீயா என சொல்லி.. தன்னுடைய ஹார்மோனியத்தில் ‘’தந்தனனா தான னான தான னான நா!’’ என கட்டைகுரலில் சுரத்தே இல்லாமல் பாட.. நாசருக்கு கிலியாகிவிட்டது.

பாட்டு ரொம்ப மொக்கையா இருக்கும்போலருக்கே.. என நினைத்தவர்.. இளையராஜாவிடம் எப்படி இதை சொல்வது என்பது புரியாமல் அப்படியே நின்றிருக்கிறார். சரி நாசர் நீ நாளைக்கு காலைல வா வேலைய தொடங்கிருவோம்.. என திருப்பி அனுப்பியுள்ளார்.

அடுத்த நாள் அந்த ட்யூன் ரொம்ப மொக்கையா இருக்கு.. வேற போட சொல்லணும் , இன்னைக்கு ட்யூன் டிஸ்கசன்ல அவரை ஒரு ஆட்டு ஆட்டிடணும் என்கிற வெறியோடு இளையராஜாவின் வீட்டுக்கு போகிறார் நாசர். இளையராஜா தன் வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்க நாசர் உள்ளே நுழைகிறார். உட்காருங்க என்று சொல்லிவிட்டு ஒரு சாக்லேட்டை அவருக்கு கொடுத்துவிட்டு மீண்டும் எதையோ எழுத ஆரம்பிக்கிறார் இளையராஜா.. ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல வேக வேகமாக இசைக்குறிப்புகளை எழுதி க்கொண்டேயிருக்க.. அரைமணிநேரம் ஒருமணிநேரமாகிவிட்டது. நாசர் பொறுமையிழந்து திட்டிவிடலாம் என்று நினைக்கும்போது.. சரிவாங்க ரெகார்டிங் போவோம்.. என்று சொல்ல நாசருக்கு ஒன்றுமே புரியல..

ரெகார்டிங் ரூமில் எல்லாமே தயார். பாடகர்கள் வந்திருக்கின்றனர்.. இசைக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர். நாசர் அந்த ட்யூன் வேண்டாம் என்று சொல்ல நினைத்துக்கொண்டிருக்க.. ஒரு மேஜிக் நடக்கிறது.. இளையராஜா இசைக்கலைஞர்களை பார்த்து தன் கைகளை தூக்கி இறக்க.. தானத்தந்த தானத்தந்தா.. தானத்தந்த தானத்தந்தா.. அந்த இசை..... எங்கும் நிறைய நாசர் அப்படியே சிலிர்த்துப்போய் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றாராம்! அதே நாளில் மொத்தபடத்திற்குமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தையும் செய்துமுடித்து அசத்தினாராம் ராஜா! (பாடல்களை அவரே எழுதிவிட்டார் என்பது கூடுதல் தகவல்)


(அந்த மேஜிக்கை நீங்களும் உணருங்க!)

அதே தோனி பட இசைவெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் ஒரு புதுமையை செய்துகாட்டினார். ஒரு சீரியஸான காட்சி முதலில் போட்டுக்காட்டப்பட்டது.. பின்னணி இசை சேர்க்காமல். உடனடியாக இளையராஜாவின் பின்னணி இசையோடு போட்டுக்காட்டியபோதுதான் ஒன்று புரிந்தது.. ஏன் இந்த தமிழர்கள் அந்த மனிதரை கடவுளாக வழிபடுகின்றனர் என்பது! பிரமாதம் என்று சொல்லுவது சரியாக இருக்காது. அதை விவரிக்கும் வார்த்தைகள் என்னிடம் இல்லை!

விழாவில் பேசிய பலரும் ஒருகுறிப்பிட்ட பிரச்சனையை முன்வைத்து பேசினர். இன்றைக்கு திரையுலகம் சந்தித்துவரும் பெரிய சிக்கல்களில் ஒன்று புரொடக்சனுக்காக எடுத்துக்கொள்ளும் கால அளவு.. சமகால இசையமைப்பாளர்கள் அனைவருமே ஒரு பாடலுக்கு கம்போசிங் செய்யவே வருடக்கணக்கில் நாட்களை எடுத்துக்கொள்ளுவதை பெருமை பீத்தலாகவே செய்துகொண்டிருக்கின்றனர். பின்னணி இசை சேர்க்க லண்டனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வது இன்னும் மோசம். மணிவண்ணன் ஒருகூட்டத்தில் சொன்னதுதான்.. புதிய தொழில்நுட்பம் நம்முடைய உழைப்பு நேரத்தை செலவை குறைக்கவேண்டுமே தவிர அது இருக்கிற வேலையை நேரத்தை அதிகமாக்க கூடாது என்பதுதான்!

வெறும் ஐந்தே பேரை வைத்துக்கொண்டு உயிரை உலுக்கும் இசையை சிகப்பு ரோஜாக்களில் கொடுக்க முடிகிற இளையராஜா மாதிரியான உன்னதமான கலைஞர்கள்தான் இன்றைய சினிமாவுக்கு தேவையே தவிர ஆண்டுகணக்கில் யோசித்து மொக்கையான இசையை கொடுக்கிற பீட்டர்கள் அல்ல!

57 comments:

M.G.ரவிக்குமார்™..., said...

நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்!

sundar said...

தயாரிப்புச் செலவையும் கால அளவையும் குறைப்பதற்கு உதவாத தொழில் நுட்ப வளர்ச்சி வீண் தானே
ராஜா ராஜா தான் just unbeatable

Unknown said...

//தயாரிப்புச் செலவையும் கால அளவையும் குறைப்பதற்கு உதவாத தொழில் நுட்ப வளர்ச்சி வீண் தானே
ராஜா ராஜா தான் just unbeatable//


Well Said!

சின்னப்பயல் said...

ஒருபாடலுக்கு ட்யூன் போட பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதையும் , அதிலும் எனக்கு மிட்நைட்டில்தான் ட்யூன் போடவரும், அமெரிக்காவில்தான் பாடவரும் என சீன் போடுவதையும், பல லட்சம் செலவில் லண்டன்,ஆஸ்திரேலியா,சுவிட்ஸர்லாந்துக்கெல்லாம் போய் ரீரிகார்டிங் செய்வதையும் பார்க்கிற இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் இளையராஜா குறித்த இந்த தகவல்கள் ரொம்பவே ஆச்சர்யமுட்டுபவைதான்.

Swami said...

ராஜாவின் இசை ஆத்மார்த்தமானது. சலிக்காம இன்னும் நாற்பது வருடம் கேட்கலாம். எங்க பதின்ம வயது
பாடல்கள் என்பதால், கேட்கும் போதே மனதுக்கு சுகம் ஏற்படுகிறது. ஆனா, காலம் மாறும்போது, இசையும், அதன் தன்மையும் விரிவடைகிறது. நாலே நாலு பாடகர்கள் இடத்தை பிடித்து கொண்டு ,இளையவர்களை வர விடாமல் தடுத்த காலம் போய் , இன்னைக்கு எக்கச்சக்க திறமை, நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு , நீங்களும், நானும் கூட திறமை இருந்தால் பாடலாம், எந்த பொலிடிக்ஸ்-உம் இல்லை.இது காலத்தின் கட்டாயம் தானே அதிஷா? மனசை தொட்டு சொல்லுங்க. கர்நாடக சங்கீதத்தை இந்த அளவு எளிமைப்படுத்தி ,
சினிமா பாடலாக ரசிக்க முடிவது ரகுமானால் தானே?

mdkannan said...

நிச்சயமாக swamy சார் சொல்வதும் முற்றிலும் ஏற்புடையதே ....

"ராஜா" said...

இன்னும் முப்பது வருடம் கழித்து உங்களின் வாரிசு ரகுமானின் இசையை பற்றி சிலாகித்து எழுதிக்கொண்டிருப்பான் , அப்பொழுது இருக்கும் இசையமைப்பாளர்களை குறைசொல்லி கொண்டே ... என்ன நீங்கள் விஸ்வநாதனை மறந்ததை போல அவன் இளையராஜாவை மறந்திருப்பான்...

raja said...

Ilayaraja was a legend, but does it mean others should only follow his route and they cannot have their own thought and own style.

Ilayaraja could not take tamil music to next level, but rahman took it to international level.

each one has a working style , my dad has a style and i preferred working in nights, which suited me.

u have mentioned about time taken, its again style .. why does Bala take 2yrs to make a movie..it is his style and producers are ready to accept it. so we cannot just say ilayaraja was rite... he is a legend but he could not take tamil music to next level.

now we have situations were hoolywoods directors and bollywood directors Queu=ing in kodambakkam.. waiting for Rahman...we shld be proud ... when all our jobs are from US and europe... for IT... something reverse is happening in terms of music ... enjoy it and be proud of it...

கூடல் பாலா said...

ராஜாவைப் போல இன்னொருவர் கிடைப்பது மிகக் கடினம் ...அவர் பாடல்கள் பல மன ஆறுதலைத் தருகின்றன ...எனவே அவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல மருத்துவரும் கூட !

நெல்லை கபே said...

அதே நூறாவது நாள் படத்தில் ஒரு பாட்டு உண்டு. 'விழியிலே விழியின் மௌனமொழி பேசும் பேசும்...' இது முதலில் கன்னடத்தில் வந்திருக்கிறது.தமிழில் பின்னர் இந்தியிலும்.ஆனாலும் கன்னடப்பாட்டு மிகப் பெரிய ஹிட். இன்றைக்கும் கன்னட நண்பனிடம் அதைப்பற்றி பேச ஆரம்பித்ததும் கண்ணீர் விடுவான். இந்தப்பாட்டு அவன் பிறக்கும் முன்பே ராஜா இசையமைத்தது.ஜோதேயள்ளி என்ற பாட்டு அது....(வழக்கம்போல கன்னட இதில் வரும் ஹீரோ ஹீரோயின்ககளின் முகத்தைப் பார்க்கவேண்டாம்)

http://www.youtube.com/watch?v=aJDEHrY94tM

Unknown said...

/--இளையராஜா "தன் வீட்டில்" தனிமையில் அமர்ந்திருக்க நாசர் உள்ளே நுழைகிறார். உட்காருங்க என்று சொல்லிவிட்டு--/

பிரசாத் ஸ்டூடியோவாகத் தான் இருக்க வேண்டும். நாசர் இதையே கேணியில் பேசக் கேட்டிருக்கிறேன்.

Unknown said...

/-- Ilayaraja could not take tamil music to next level, but rahman took it to international level. --/

என்ன சொல்கிறோம் என்று தெரிந்து தான் சொல்கிறீர்களா ராஜா? பிரியா படத்தின் பாடல்கள் எதனால் சிறந்தது? அந்த இசையின் சிறப்பம்சம் என்ன? அந்த காலகட்டத்தில் அந்தப் படத்தின் இசை செய்த புரட்சி என்ன? என்று ஆராயுங்கள்.

இளையராஜா உச்சத்தில் இருந்த நாட்களில் தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்ததா? இன்று பிரபலங்கள் மூச்சு விட்டால் கூட அடுத்த கனம் உலகெல்லாம் தெரிந்துவிடுகிறது.

“இலக்கியத்தில் ஒப்பீடு” – என்பது மேற்கத்திய நாடுகளில் வளர்ந்துவிட்ட துறை. ஒரே தன்மையில் அமைந்த படைப்புகளை ஒப்பிட்டு படைப்பின் சிறப்புகளை ஆராய்வார்கள். இசையிலும் அதை செய்யலாம். ஆனால் அப்படிச் செய்வதில்லை. துருதுஷ்டவசமாக இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்கிறார்கள். யார் ஹாலிவுட் சென்றார்கள்? யார் சிம்பொனி அமைப்பதில் சிறந்தவர்? யார் எந்த நேரத்தில் வேலை செய்கிறார் என்று ஒப்பீடு செய்கிறார்கள்.

மேலும் ராஜா, “ஹாலிவுட் மற்றும் பாலிவுட் வீட்டு வாசலில் வந்து நிற்பதுதான் திறமையின் அடையாளமா என்ன?”

அதிஷா சொல்ல வருவது....வருந்துவது.... பணம் போடும் தயாரிப்பாளர்களைப் பற்றி...

மு.பாரிவேள் said...

Good to know that Athisha....

@Swami...நீங்கள் சொல்வது போல் கர்னாடக இசையை எளிமைப்படுத்தியது ரகுமான் அல்ல. அவருக்கு முன்பே அதை செய்தவர் ராஜாதான்.நீங்கள் இதுவரை படிக்கவில்லை எனில்

http://meedpu.blogspot.in/2009/12/blog-post_08.html

Unknown said...

இந்த வீடியோவில் முதல் இரண்டு நிமிடம் கழித்து எஸ்பிபி ராஜாவைப் பற்றி பேசுகிறார். வீடியோவின் கடைசி நிமிடங்கள் ரொம்ப முக்கியம்.

http://www.tubechop.com/watch/270447

குடந்தை அன்புமணி said...

ராஜா கைய வைச்சா அது ராங்கா போனதில்லை... ராஜா ராஜாதான்...

காத்தவராயன் said...

////(பாடல்களை அவரே எழுதிவிட்டார் என்பது கூடுதல் தகவல்)////

அதிஷா தவறான தகவல். அவதாரம் படத்தில் இளையராஜா பாடல் எழுதவேயில்லை.

அந்த படத்திற்கு பாடல்கள் எழுதியது கவிஞர் வாலியும், கவிஞர் முத்துலிங்கமும் (தொன்று தொட்டு என்ற ஒரு பாடல் மட்டும்)

நீங்கள் குறிப்பிட்ட "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலை எழுதியவர்; கவிஞர் வாலி. பாடல் வரிகளை நன்றாக கவனித்தால் கண்டுகொள்ளலாம் வாலிக்குள் இருக்கும் பழைய ஓவியனை.

++++++++++++

//நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்!//

டாக்டர் புருனோ இப்போ வருவார் பாருங்கள் "சிம்பொணி-ஆரட்டோரியா" என்று புலம்பிக்கொண்டு.

அவர் வராவிட்டாலும் யாராவது அழைத்து வாருங்கள்.

கலகம் கணஜோராக இருக்கும்.:)

Unknown said...

”இளையராஜா சாரினைக் கண்டால் நேரிட்டு கண்டால்.. நமக்கு எந்து செய்யான் சாதிக்கும்...வேறு ஒண்ணும் செய்யாம்பட்டில்லா..காலில் கொண்டு விழும்”

மலையாள கம்போசர் ஜெயசந்திரன் - காற்றில் எந்தன் கீதம்-(ஜானி) பாட்டைப் பற்றி-அம்ரிதா டிவி 0.20-0.46

http://www.youtube.com/watch?v=8pTqnsD3UeU&feature=fvsr

rajeshsubbiah said...

music should express the culture and taste of the people who belongs,actually rehmans music doesnot represent tamils culture,it is illayaraja who done that magic

Bhupathi said...

என் கடன் இசை செய்து கிடப்பதே என்று இருக்கும் ராஜா எங்கே , எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லிக்கொண்டு புகழைத் தேடி அலையும் இன்றைய இசை அமைப்பாளர்கள் எங்கே? எத்தனை பாடகர் வந்தாலும் SPB,JANAKI,CHITRA போல் எவரும் ஆக முடியாது.தமிழ் திரை உலகத்திற்கு ஒரு முக்கிய தூண், இல்லை இல்லை, அடித்தளம் இட்டவர் ராஜா.அவரை ஓரம் கட்ட எத்தனையோ பேர் முயற்சித்து கொண்டிருக்கும் வேளையில் சந்திலே சிந்து பாடுவார்கள் என்பார்களே அதைப்போல் சிற்றீசல்களாய் கிளம்பியவர்கள் குளிர் காயத்தொடங்கினார்கள் என்பதே உண்மை.குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் தரமான இசையை வழங்கியவர் வழங்கி வருபவர் ராஜா மட்டும்தான்.அவரால் பயன் அடைந்தோர் அனைவரும் அறிவர் இந்த உண்மையை. தமிழ் இசைக்குப் பெருமை சேர்த்தவர் சேர்ப்பவர் அவர்.மற்றவர் போல் பொருள் சேர்த்து விருதுகள் வாங்க முயற்சி செய்பவர் அல்ல.செய்தவரும் அல்ல. இசை வித்தகர் அவர்.இசைக்கு அவரால் பெருமை.அவ்வளவுதான்.

ILA (a) இளா said...

//நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்!//

:)) உங்க பங்குக்குமா?

Anonymous said...

சாமி
//அதிஷா? மனசை தொட்டு சொல்லுங்க. கர்நாடக சங்கீதத்தை இந்த அளவு எளிமைப்படுத்தி ,
சினிமா பாடலாக ரசிக்க முடிவது ரகுமானால் தானே?//

நான் கோமாவுக்கு போவதுக்கு மின்னாடி ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டுபோய் டிரிப்ஸ் ஏத்து அதிசா.

நவின் குமார் said...

மிட்நைட்டில்தான் ட்யூன் போடவரும், அமெரிக்காவில்தான் பாடவரும் என சீன் போடுவதையும், // புரியல் பாஸ் ....ஹாலிவுட்ல காஸ்டிங் அப்டின்னு தனி டிபார்ட்மெண்ட் இருக்கு ஆனா இந்தியாவில் அது கிடையாது நீங்க சொல்றத பார்த்தா ஹாலிவுட்டை கம்பேர் பண்ணும போது இந்தியாவில் செலவை குறைத்து நல்ல படம் பண்றாங்க அப்டின்னு சொல்ற மாதிரி இருக்கு என்ன லாஜிக்னே புரியல ....மெயின் மேட்டர் இன்னானா ஒப்பிட்டு அளவில் ஒருவரை தாழ்த்தி ஒருவரை உயர்த்தி சொல்லுதல் அழகல்ல அப்படின்னு நீங்களே எனக்கு ஒரு முறை சொன்னதா நியாபகம் .......

நடராஜன் said...

அதெல்லாம் சரி! ராஜாவுக்கு லாங் ஹேர் இல்லை! இதை எப்படி மறுத்து பேசுவீர்கள்?? ;)

Blogeswari said...

I wonder if anyone can write a nice article about illayaraja without kuttikaatufying Rahman and his music.

Wonder why IR fans are so bitter..just like he is

Blogeswari said...
This comment has been removed by the author.
Anonymous said...

blogeswari maami:

What a sweeping generalization comment?. How do you know IR is bitter and how do you we fans are bitter?

Blogeswari said...

To the guy i blocked on twitter coming back as anonymous

Check the article and some of the comments and the second half of the question is answered.

The first half - he is, isn't he?

Muthukumara Rajan said...

Raja is unique. Rehman is not.
whether you people are accepting it or not . that is fact.

we can compose millon songs with some software or using some electronic instrument. but the spul of teh song will be their only with Raja.

we cant compare him with Rehman as just got the Oscar.

did Mr. rehman composed music for any low bugjet movies.

did Mr. rehman composed music for non commmercail movies

did Mr.rehman composed music with other music directors.

did Mr. rehman composed music for any new comer moives(exception Mr.Sankar ) he selected that movie becuase of its budget.

MR. Rehman is good composer. but he is not worth to compare with Raja.

Muthukumara Rajan said...

அதிஷா? மனசை தொட்டு சொல்லுங்க. கர்நாடக சங்கீதத்தை இந்த அளவு எளிமைப்படுத்தி ,
சினிமா பாடலாக ரசிக்க முடிவது ரகுமானால் தானே?


it was started my Raja only. i can state hundrads of songs. Rehamn we can say did more with western influence. as we are always washing the shoes of wetern people we washed the western music also.

valli said...

To all the op-posers of illayaraja music. please realize that music what you feel not what you hear.

Anonymous said...

Looks like the blogger is itching for a fight and hence this blogpost. Sad!

Ps - chked your tweet where u had mentioned this

காரிகன் said...

தமிழ் திரை இசையே எதோ இளையராஜாவிடம் இருந்துதான் ஆரம்பித்தது போல எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.இந்த இளையராஜா வருவதற்கு முன்பே பல மேதைகள் தமிழ் திரை இசையை வேறு தளத்திற்கு எடுத்து சென்றவர்கள்தான். கே வி மகாதேவன் எம் எஸ் வி டி ஆர் பாப்பா எ எம் ராஜா வி குமார் போன்ற பலரின் இசை திரையால் வளர்ந்த தமிழ் திரை இசையை இப்படி ஒரே ஒருத்தருக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுவது இளையராஜாவின் விசிறிகளின் வேலை.பதிவு எழுதும் முன் கொஞ்சம் நியாயம் கலந்து எழுதுங்கள். இப்படி ஒரேடியாக இளையராஜாவுக்கு குடை பிடிக்க வேண்டாம்.மேலும் இங்கே தமிழகத்தில் இளையராஜாவை யாரும் கடவுள் அளவுக்கு வைத்து வணங்குவதில்லை.அவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர்.அதில் மாற்று கருத்து கிடையாது.உண்மைகளை அப்படியே பேசுவோம் மிகை படுத்தாமல். அதுவே சிறந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

அவரைப் பற்றி பல தகவல்கள் வியக்க வைத்தன. நன்றி ! எத்தனை வருடம் கழித்து அவரது பாட்டை கேட்டாலும், மனதில் அவரது இசை ஓடிக் கொண்டிருக்கும் ! நன்றி நண்பரே!

karthik said...

He is born Genius! No body cant do what he does! All the maths teachers cannot became Great Ramanujam! That is the secret of creation!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள் அதிஷா.

பிரபல பதிவர் said...

அதிஷா

ஒரு தடவ திருவாரூர்லேர்ந்து தஞ்சாவூர் பிரைவேட் பஸ்ல ட்ராவல் பண்ணீ பாருங்க... சும்மா இளையராஜா பாட்டா போட்டு கதற கதற அழ வப்பானுங்க.... இறங்கினதும் டாஸ்மாக் தேடாட்டி நீங்க ஒரு பெரிய ஆள்னு ஒத்துக்கலாம்....

ஒரே தடவ... ஒரே ஒரு தடவ டிரை பண்ணி பாருங்க... இளையராஜான்னாலே காத தூரம் ஓடுவீங்க...

Anonymous said...

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு முன்னாள், இளையராஜா அவரின் கால் தூசும் பெற மாட்டார்.

அவர் நொடிக்கு நொடி புது டியூன்களை சொல்லி அசத்தி விடுவார்.

kailash said...

Raja fans r also behaving like him , he never appreciates others . If you want to write about Raja no one has concerns but dont try to downplay other artists talents .

kailash said...

@ bupathi and others

Wake up Guys , he is appearing in Malabar Gold advt. , dont try to portray him as saint and rest as evils .

Venkatramanan said...

Blogeswari (& others!)

//I wonder if anyone can write a nice article about illayaraja without kuttikaatufying Rahman and his music.//

Here it is !

Enjoy

Regards
Venkatramanan

Dhanasekar S said...

கடைசி முடிவுரை இல்லாமல் ...இளையாராஜாவை பற்றி *மட்டும்* பெருமை பாடியிருந்தால்... இது ராஜா போன்ற ஒரு இசை மேதைக்கு ஒரு சிறந்த பதிவாக அமைதிருக்கும்.
நன்றி
தனசேகர்.

Anonymous said...

ராஜா, ரகுமான் இருவரும் இரு சிகரங்கள் என்பதே சரி! அதேசமயம் ராஜாவும் தனக்கு முன்னால் ஜி.ராமனாதன், எம்.எஸ்.வி., போன்றவர்கள் தொட்ட உயரங்களைத் தொடவில்லை என்பதே நிஜம்.

இசைப்பிரியன் said...

Some doubts ....

Irrespective of the comparison with IR

I have a few doubts about Rahman

From the early days
Why he is doing films with a tick for "any two" of the three

* High Budget (which can cause a good advertisement).
* Directors with Big Exposure / Atleast to more states in India
* Ability of the Cameraman to make the visuals a success

1. Whether Rahman is having any insecured feeling about own identity that He cannot be a one who can be sole contributor/Promotor of a film's success?

2. He had international aims in his mind from the day 1 and so wanted to go with higher ladders to get the taste of it easily?

3. He doesn't want to do the same mistake of his yesteryear music directors to contribute only to cinema music?

4. Is he really that modest to accept everybody as they are ? Because many a times "False modesty" irritates more than a "Boast of own talents".

5. Now Tamilians can understand the meaning of "Kaasuketha dosai" with his music, When considering how he works for Tamil films (Or infact - According to What time he spends for Hindi / English works),

6. Considering a lot of Producers, Heroes, Directors came to star status because of IR's music. Why lot of ignorance by Rahman towards us.?

I want "Real working" of Rahman Back in Tamil, Atleast to Indian Films (Considering even 'Rockstar' is no big magic by him).

Being an Ardent fan of him i want the paisa vasool for both the money i spend for the CD - AS WELL AS, A quality music which can indirectly say that he is not deceiving us.

இசைப்பிரியன் said...

//எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு முன்னாள், இளையராஜா அவரின் கால் தூசும் பெற மாட்டார்.//

Pala vagaiyil, Rahmnai polave, Thozilnutpam illai endraalum, Isaiyil tamizh cinimavin asaikka mudiya maamannar MSV ... Oppukkollathavargal... Nutpamaaga avar paadalai kelaadhavargalaaka irukkalaam. KV Mahadevan , Matrumoru Genius.

AM Raja, All Melodies King :). Ivargal ellorin isaiyaiyum aaraadhippathaaga koorum IR yenge - Kaetaal influence vanthuvidum yendru "Naushad" perai mattum silaagikkum Rahman yenge (Nausha- Madan mohan comparison patri "Shaji" yezhudhiya Blog ondru nyaabagam varugirathu)

The Chennai Pages said...

http://faceofchennai.blogspot.in/2012/02/chennai-traffic-police-spot-fine-system.html

Raashid Ahamed said...

இசைஞானி, இன்னிசை சக்கரவர்த்தி, ராகதேவன், சிம்பொனி மேஸ்ட்ரோ இளையராஜா ஒரு பிறவி இசை மேதை. ஸ்டீரியோ என்ற ஒலிப்பதிவு முறையை தமிழிசைக்கு தந்த அறிவு ஜீவி. இவருடைய இசையில் உருவான “என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச்சொல்லடி “ இந்த பாடலை எனக்கு பிடிக்காது என்று சொல்ல எந்த ஒரு தமிழ் ரசிகராலும் முடியாது. இதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இது போல பல அழகான பாடல்களை தந்தது, தமிழ் இசையை அழகுபடுத்திய பெருமை இளையராஜாவை சேரும். இவருடைய இசைக்காகவே வெற்றியடைந்த படங்கள் பல. மலேசியா வாசுதேவன் போன்ற அற்புதமான பாடகர்களை நன்றாக பயன்படுத்தியவர் இளையராஜா!! இவர் இசையில் உருவான சில படங்களில் அனைத்து பாடல்களும் கேட்க சலிக்காது. உதாரணத்துக்கு.
முள்ளும் மலரும், பதினாறு வயதினிலே, நிறம் மாறாத பூக்கள், பகலில் ஒர் இரவு, காற்றினிலே வரும் கீதம், பொண்ணு ஊருக்கு புதுசு, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கன்னிப்பருவத்திலே, அன்னக்கிளி,கவிக்குயில், தர்மயுத்தம், இளமை ஊஞ்சலாடுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !!!

Rettaival's Blog said...

கிருஷ்ண பிரபு said...
/-- Ilayaraja could not take tamil music to next level, but rahman took it to international level. --/

என்ன சொல்கிறோம் என்று தெரிந்து தான் சொல்கிறீர்களா ராஜா? பிரியா படத்தின் பாடல்கள் எதனால் சிறந்தது? அந்த இசையின் சிறப்பம்சம் என்ன? அந்த காலகட்டத்தில் அந்தப் படத்தின் இசை செய்த புரட்சி என்ன? என்று ஆராயுங்கள்
*******************************

http://www.youtube.com/watch?v=-Yjj8jLS8XM

இளையராஜாவும் விதி விலக்கல்ல...! சிச்சுவேஷனுக்கு தகுந்தவாறு அவரும் அவ்வப்போது எடுத்துக் கொடுப்பவரே!

குறுக்காலபோவான் said...

இளையராஜாவின் இசையை பராட்ட வார்த்தை இல்லை.
ஆனால்,

Cliffnabird said...

This is the problem with So called IR fans... they always talk apples to potatoes.. I too admire IR but not just to tell all that composes at midnights are pathetic or all that goes abroad are dummies. When producers and directors are ready to spend and spare who else is bound to worry this much? There are too many songs of music directors that are done on the spot and became smash Hits and way too many the otherwise! Is anybody dare enough to ask IR to sit in a slaughter house and compose? Creative people have preferences and it’s their right!

Criticize their work! You have the right! Please don’t Criticise their way of working!

சுரேகா.. said...

நல்லா சொல்லியிருக்கீங்க தலைவரே!

சூப்பர்!

இளையராஜா ஒரு டைரக்டர்ஸ் டார்லிங்!
:))

TSRK said...

Blogeswari (& others!)

http://geniusraja.blogspot.com/

Janar said...

இளையராஜா...

வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வாத்தியக்காரன்

arul said...

thanks for sharing

Anonymous said...

1 .தமிழ நாட்டுற , மெல்லிசையால் இசையால் ஹிந்தி பாடல் மோகத்தை முறியடித்தது.இது விஸ்வநாதனோ வேறு எந்த ஜாம்பவானுக்கோ சாத்தியபடவில்லை.அதற்க்கு பின்னாலேயே ஓட்ட வேண்டி இருந்தது.இதுதான் மிகப்பெரிய சாதனை.இதை யாரும் தாண்ட முடியாது.இதனை யாரும் சிபார்சு செய்ததில்லை எனபதுதான் மிக முக்கியமானதாகும்.

2. மேலைத்தேய இசை நுணுக்கங்களை குறிப்பாக [ counterpoint ] மெட்டுக்குள் மெட்டு களை பயன் படுத்த்தியது.இந்த முறை J.S.BACH என்கிற இசை மேதையால் 17 ஆம் நுற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே யாரும் பயன் படுத்தியதில்லை.மேலும் ராஜாவின் இசை நுணுக்கங்களை நான் சொல்லி தெரிய வேண்டிய நிலையில் ரசிகர்க்களுமில்லை அவருடைய ஒவ்வொரு பாடலிலும் இடையிசையை கேட்பவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
3. ஒலிப்பதிவு தொழ்லில் நுட்பம் சாராரத வெற்றி.அன்னக்கிளி யில் அன்று சாதாரன் மோனோ ஒலிப்பதிவு தான் இருந்தது.1978 இல் பிரியா படத்தில் STEREO ஒலிப்பதிவு முறை பயன் படுத்தப்பட்டது.அவரது சிறப்பான இசைக்கு ஒலிப்பதிவு நுட்பம் உதவியது.அவ்வளவே.
அவரது இசைச் சாதனைகளை பட்டியல் போட்டால் அதுவே தனி பதிவாகி விடும்.இதில் நிறுத்தி தொடர்கிறேன்
ரகுமானின் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் .பாட்டு அவ்வளவு நல்ல இல்லைத்தான்.ஆனால் சவுண்டு நல்லயிருக்கு.அதுவும் காரில் கேட்க சூப்பராய் இருக்கு !
விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் என்றால் பெரும்பான்மையனவ்ர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த ப, பா வரிசைப்படப் பாட்லகளைத்தான் குறிப்பிட்டு பேசுவார்கள்.பேசும் போது ராமமூர்த்தியை கழட்டி விடுவார்கள்.இரட்டையர்களாக இருந்து இசையைமத்த பாடல்கள் மிக இனிமையானவையே.அவர் தனித்து இசையமைத்த இனிய பாடல்களும் உண்டு மறுப்பதற்கு இல்லை.

நாட்டுப்புற இசை , கர்னாடக இசை , மேலைத்தேய இசை . இந்த மூன்று இசையிலும் சிறந்து விளங்குபவர் இளையராஜா.இவரைப் போல இது வரை யாருமில்லை.இனிமேல் தான் பொருந்த்திருந்து பார்ப்போம்.இதற்காக விஸ்வநாதனையோ ,ராமனாதனையோ ,மகாதேவனையோ குறை கூறி பயனில்லை.அவர்கள் இவ்வளவு புகழ் பெறவே பெரும் பாடுபட்டார்கள்.அவர்கள் காலத்தில் எம்.ஜி,ஆர் , சிவாஜி தான் ஹீரோக்கள்.இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கவில்லை.அவர்கள் அடைய வேண்டிய புகழை எல்லாம் ஹீரோக்கள் வாங்கியது மிகக் கொடுமை.இசை பற்றிய விழிப்புணர்வு கிடையாது.அவர்கள் பல கஷ்டங்கள் பட்டு [ எம்.ஜி.ஆர். சிவாஜியின் தலையீடுகளை கடந்து ]வருவதே பெரும்பாடாக இருந்தது.

அந்த விழிப்புணர்வு இளையாராஜாவின் பன்முக இசை ஆற்றலின் விளைவாகவே ஏற்ப்படுகிறது.இசை இளையராஜாவை அறிமுகம் செய்தது. அதனால் இசை புது அங்கீகாரம் பெற்றது.இதை எந்த ஒரு நபரோ ,இயக்கமோ PROMOTE செய்யவில்லை.அவரது இசை என்ற பேராற்றல தான் அதை நிகழ்த்தியது அல்லவா.அவரது இசையால் தான் இசை ஹீரோ ஆனது இல்லையா ? இதை மனம் திறந்து ஒப்புகொண்டால் அவரின் விஸ்வரூஅப்ம் தெரிய வரும்.
வணக்கம்.

தாஸ்

chinnapiyan said...

எஸ்.எம் சுப்பையாநாயுடு,ஜிவி ராமநாதன்,மெல்லிசை மன்னர்கள்,கேவி மகாதேவன் போன்றே ராஜாவும் ரகுமானும் அந்தந்த காலக்கட்டத்தில் இருந்த தொழில் நுடபத்தொடும் கவிஞ்சர்களின் திறமையோடும் சிகரத்தை தொட்டவர்கள்தான். காலத்திற்கேற்ப ரசிப்புத்தன்மையும் மாறுகிறது. ஆனால் இளமையில் கேட்ட பாடல்கள்தான் ஒருவரின் போற்றுதலுக்குரியதாகி விளங்குகிறது என்பது ஒரு முக்கியமான பாயின்ட். மற்றவரை குறை கூறியோ தாழ்த்தியோதான் ராஜாவின் புகழ் ஒங்க வேண்டும் என்பது அவசியமே இல்லை தேவையும் இல்லை. நன்றி ஆதிசா.

Vaasi engira Sivakumar said...

We will not take ur words seriously ...We all know.Please show any music director who made
1.1000 movies is BGM
2.7200 songs
3.15 years average 50 movies per year
4.Non movie Albums 18(including his to name it ...nothing but wind)
5.More than 500 songs in malayalam and Telugu
6.Official person announced for Symphony made
7.Cine person who got Sangeet natak award too
8.a music director who sung 1000 songs?
9.His next era( who was working with him 300 movies and 100 movies.. ARR and yuvan)
....

kavikathir said...

I can say literally. You can't feel ilaya raja. Unless you are a castist or you have not a bit of music sense.