08 May 2012

வழக்கு எண் 18/9 - ஆசிட் அடிக்கலாம் வாங்க?


இந்தப்படம் சுமார்தான் என்று சொல்லக்கூட அச்சமாக இருக்கிறது. படம் பார்த்து மிரண்டுபோயிருக்கிற கல்யாண் ஜூவல்லர்ஸின் புரட்சிபோராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து என் முகத்தில் ஆசிட் அடித்தாலும் அடித்துவிடுவார்களோ என அஞ்சுகிறேன்.

வெள்ளிக்கிழமையே படம் ரிலீசாகிவிட்டாலும் சிலபல லௌகீக பொருளாதார காரணங்களால் நேற்றுதான் வழக்கு எண் 18/9 படத்தினை பார்க்க நேர்ந்தது. இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சகர்கள் தலையில் வைத்து கூத்தாடிய அளவுக்கு ஆகச்சிறந்த நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல உலக படமெல்லாம் இல்லை, தமிழ்சினிமாவின் எந்த கிலோமீட்டர் கல்லும் இல்லை. நல்ல செய்தியை நாசூக்காக சொல்லியிருக்கிற இன்னொரு படம் அவ்வளவுதான்.

படத்தில் நாற்பது சதவீதம் நிச்சயமாக உலக சிறப்பு.. அறுபது சதவீதம் காண்பவரை அழவைப்பதற்கான ஓவர் மெனக்கெடல். அழுகையே வரல பாஸ். ஒரே படத்தில் உலகின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் வேறு இயக்குனருக்கு அதிகமாகி குழந்தை தொழிலாளர் பிரச்சனையில் தொடங்கி மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவது வரை ஏகப்பட்ட சமூக அவலங்கள்!! நிச்சயம் பாலாஜி சக்திவேல் நல்லவர் என்பதை ஒப்புக்கொள்ளும் வரை விடாமல் பிரச்சனைகளை அடுக்குகிறார்!

கமர்ஷியல் கண்களை கழட்டிவைத்துவிட்டு மேம்பட்ட பல்கலைப்பார்வையோடு இந்த ஆகச்சிறந்த படத்தினை அணுகினாலும் கிடைப்பதென்னவோ காதலுக்கு கீழே கல்லூரிக்கு மேலே! மாபெரும் இலக்கிய சமூகங்களுக்கும் விளிம்பு நிலைமக்களை சந்தித்தேயிராத நல்லவர்களுக்கும் இப்படம் நல்ல வேட்டையாக அமையலாம்.

படம் சுமார்தான் என்றாலும் படம் சொல்லும் பாடம் பணக்கார பெற்றோரும்,பள்ளிக்குழந்தைகளும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியவை. விடுமுறை காலத்தில் படம் வெளியாகியிருப்பதால் பணக்கார மற்றும் உயர் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சத்யம் தியேட்டருக்கு அழைத்துசென்று இப்பாடத்தினை பார்த்து பள்ளியில் படிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் என்னமாதிரியான சூழலில் வளர்கிறார்கள் என்பதை தெரிந்துபுரிந்து பதவிசாக நடந்துகொள்ளலாம்.

அது நிச்சயமாக பெற்றோர்-குழந்தைகள் உறவில் மாபெரும் மாற்றத்தினை கொண்டுவரலாம், வராமலும் போகலாம். அல்லது பெற்றோர்கள் பிள்ளைகளின் ஃபோனை நோண்டி நோண்டி பிரச்சனைகள் வளரலாம். பள்ளிக்குழந்தைகளின் அடிப்படை சுதந்திரங்களும் பறிக்கப்படலாம்.
பாலாஜி சக்திவேல் தன் காதல் படத்தில் பள்ளிக்குழந்தையின் பப்பிலவ்வை தெய்வீகமான காதலாக காட்டி மிகத்தவறான தண்டிக்கத்தக்க கருத்தினை பரப்பிவிட்ட பாவத்தை இப்படத்தின் மூலமாக கழுவிக்கொள்ள முயற்சித்திருப்பார் போல!!

நாம் வாழும் தெரு முனையில் இத்தனை காலமும் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வாழுகிற ஏழைகளின் வாழ்க்கையை நன்றாக படம் பிடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அந்த ஏழைகளை பற்றியே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு அந்த ஏழைகள் படும் பாட்டை திரையில் பார்த்து பெருமூச்சுடன் கண்ணீர் வடிக்க இப்படம் நிச்சயம் உதவும். பாவம் ஏழைகள் என உச்சுக்கொட்ட அநேக காட்சிகள் படத்திலுண்டு. (பாப்கார்ன் சாப்பிடும் போது உச்சுக்கொட்ட வேண்டாம் புரை ஏறிவிடும்!)

மற்றபடி எம்ஜிஆர் காலத்திலிருந்தே பிலிம் ரோலில் காட்டிய அதே ஏழைகளின் கஷ்டத்தையும், பணக்காரர்களின் கொடூரத்தையும், அதிகாரத்தின் அழிச்சாட்டியத்தையும் 5டி காமிராவில் துகிலிரித்த இந்தப்படத்தை விமர்சகர்கள் கொண்டாடுவதில் பிழையில்லை. காலங்காலமாக அப்படித்தானே செய்துகொண்டிருக்கிறோம்.

ஊரே ஒரு படத்தினை தலையில் வைத்துக்கொண்டாடுகையில் எனக்கே எனக்கு மட்டும் (துணையாக ஓரிருவர் இருக்கலாம்) இப்படம் சுமாராக தெரிய என்ன காரணமாயிருக்கும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடைய ரசனை கமர்ஷியல் படங்களை தொடர்ந்து பார்த்துவருவதால் மங்கிப்போய்விட்டதா? கவர்ச்சி காட்களுக்காகவும் அதிரடி சண்டைகளுக்காவும் ரத்த வெறியோடு கண்கள் ஏங்குதோ? அல்லது ஹீரோயிசமும் தொடைதெரியும் ஹீரோயினும் இல்லாமல் படம் பார்க்க பிடிக்கலையோ? என என் மண்டையில் இல்லாத மயிரை பிய்த்துக்கொண்டு யோசித்தேன்! கடைசிவரை பிடிபடவேயில்லை.

இந்தப்படத்திலும் ஹீரோ உண்டு, ஹீரோயின் உண்டு. காதல் உண்டு, முக்கால் தொடையும், பிதுங்கும் மார்பும் தெரிகிற நாயகியுண்டு, அநேக வன்முறை முதல்காட்சியிலிருந்தே வலிக்க வலிக்க திணிக்கப்பட்டிருக்கிறது. தீயவர்களை கிளைமாக்ஸில் பழிவாங்குகிறார்கள். தர்மம் வெல்லுகிறது. தெய்வீகமான காதலன் தன் தெய்வீகமான காதலியின் முகம் சிதைந்தபோதும் அவளை தெய்வீகமாக ஏற்றுக்கொள்கிறான்! வில்லனான காதலன் நல்ல காதலியை நயவஞ்சகமாக ஏமாற்றி அவளை ஆபாசமாக படம் பிடிக்கிறான்.. இதுக்கு மேல ஒரு நல்லப்படத்துல வேற என்னதான்டா உனக்கு வேணும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். விடையே கிடைக்கல!


53 comments:

கார்க்கிபவா said...

சிம்பிள்..

ஒவ்வொருவ‌னுக்கும் ப‌ட‌ம் பார்க்கும் முன் இருக்கும் ம‌ன‌நிலை, ப‌ட‌ம் எங்கே பார்க்கிறான், யாருட‌ன் பார்க்கிறான் என்ப‌தெல்லாம் ப‌ட‌ம் அவ‌னுள் ஏற்ப‌டுத்தும் பாதிப்புக்கு முக்கிய‌ கார‌ண‌ங்க‌ள் ஆகின்ற‌ன‌. முன்பு பார்த்து வெறுத்த‌ ப‌ட‌ம் திடிரென‌ ச‌ன் டிவியில் ந‌ல்ல‌ ப‌ட‌மாக‌வும், அர‌ங்கில் முத‌ல் நாள் ஆர்ப‌ப்ரித்து பார்த்த‌ எந்திர‌ன் பின்னாளில் மொக்கையாக‌வும் தெரிகிற‌து இல்லையா!!

நான் அப‌ப்டித்தான் பார்க்கிறேன்.. ஒரு ப‌ட‌ம் ஒருவ‌னுக்கு பிடிக்காம‌ல் போக‌ ஆயிர‌ம் கார‌ண‌ம் இருந்தால் பிடிப்ப‌த‌ற்கு 1001 இருக்கும்

நீ ஆஹா ஓஹோன்னு சொன்ன‌ ஒரு க‌ல் ஒரு க‌ண்ணாடி இந்த‌ வ‌ருட‌த்தில் நான் பார்த்த‌ ஆக‌ மொக்கையான‌ ப‌ட‌ம்.. என்ன‌ செய்ய‌? :)))) இத்த‌னைக்கும் ச‌ந்தான‌ம்‍ ராஜேஷின் செம‌த்தையான‌ ஃபேன் நான்

பிழைத்திருத்தி said...

சொன்னதெல்லாம் சரிதான் தோழர் ஜனரஞ்சகத்துக்கும்ூஉமக்குமான ைடைவெளி அதிகமாகிகொண்டே இருக்கிறது.. கவனம் கொள்க அந்த பாப்கான் வரிகளுக்கு பல் சுளுக்கும்வரை சிரித்தோம்... கும்பலா படிச்சா கோடி இன்பம்

Rajnedran Nagaraj said...

அழுதிடுவன் ஆமா

ராகவ் said...

so much hype has been given to this movie.. thats why you may feel like that

ராகவ் said...

May be because of so much hype given by the reviewers..

Unknown said...

//காதலுக்கு கீழே கல்லூரிக்கு மேலே!// 100% true.

:-)

இதுகுறித்த என் கருத்து/அலசல் கீழே:

படத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பாதி - ”இந்தப் படத்திற்கா
மக்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றார்கள்?” என்று நினைக்க வைக்கும் அளவுக்கு
சாதாரணம் - unimpressive first half. முதல் பாதியில் விட்டதற்கு சரிகட்டும்
விதமாக 2-ம் பாதி. ஏனெனில், படத்தின் கதை இடைவேளைக்குப் பின்
தான் ஆரம்பிக்கின்றது. கிளைமாக்ஸ் சூப்பர். முதல் பாதி திரைக்கதையினாலேயே இயக்குனருக்கு
தயாரிப்பாளர் கிடைக்க சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றுகின்றது.

இயக்குனரிடம் ”மேட்டருக்கு வாங்க” என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு
முதல் பாதி பொறுமையை சோதிக்கின்றது. இயக்குனர் பாலாஜி
சக்திவேல் இன்னும் “காதல்” hangover-ல் இருப்பது போல் எனக்குத் தோன்றியது.
சுவாரசியமில்லாத Cliched முதல் பாதி. சில பாத்திரங்கள் தவிர,
உதாரணம் - சின்னச்சாமி. அறிமுகங்கள் என்பதால் பல கதாபாத்திரங்கள்
வசனத்தை ஒப்பிக்கின்றனர். உடல் மொழியும், முகபாவனைகளும் மிஸ்ஸிங்.
கே.வி.ஆனந்த்திற்கு சுபா போல இவருக்கு
(பல தமிழ் பட இயக்குனர்களுக்கும்) ஒரு திரைக்கதை ஆள் அவசியம் தேவை.
“ஆய்த எழுத்து” படம் போல் non-linear முறையில் கதை சொல்ல
முனைந்திருக்கின்றார், என்றாலும் பாத்திரப் படைப்பு, சம்பவங்கள் எல்லாம்
முதல் பாதியில் இன்னும் சிறப்பாகச் செய்திருந்தால் “காதல்” போல் மிகப்
பெரும் வெற்றி பெற்றிருக்கும். திரைக்கதை அமைக்கும் போது இப்போதைய
மல்டிபிளக்ஸ் கலாசாரத்தையும் மனதில் கொண்டு திரைக்கதை
அமைத்திருக்க வேண்டும். (”எத்தனை தடவை தான் சர்ஃப் வாங்குவே?” என்று
ஆடியன்ஸ் கமெண்ட் கேட்கின்றது) முதல் அரைமணி நேரம் படம் பார்த்து
மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸ் (elite audience, who will spend more for a movie)
எழுந்து போகும் அபாயமிருக்கின்றது. இரண்டு கதைகளையும் முதலில்
இருந்தே parallel ஆக கொண்டு போகும் உத்தியை இயக்குனர் தவிர்த்தது
படத்தின் பலவீனம். முதல் பாதி முழுவதும் இரண்டாம் பாதி படத்தின்
set up போல் ஆகிவிட்டது. இந்தப் படத்தை உருவாக்கத் தூண்டுதலாக
இருந்த செய்தியையும் கடைசியில் பேப்பர் செய்தியாகவே காட்டியிருக்கின்றார்
இயக்குனர். ”இந்தக் கதையை இதைவிட சிறப்பாக வேறு யாராலும் சொல்ல
முடியாது” என்று பார்ப்பவர்களை நினைக்க வைக்கும் திரைப்படங்கள் தான்
மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. உதாரணம் - ஷங்கர் தன் படத்தில்
இருக்கும் லாஜிக் ஓட்டைகளை படம் பார்க்கும் போது நம்மை யோசிக்கவே
விடமாட்டார் மிகவும் கச்சிதமான திரைக்கதை!

இசை - பாடல்கள் குறித்துப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. காதல்
படங்களில் soul-searching music அவசியம், இதில் அது மிஸ்ஸிங். It seems budgetary
constraints have tied screenwriter's hands while writing screenplay.

சில இடங்களில் நடுங்கும் காமிரா கவனத்தைக் கலைக்கின்றது. முதலில்
போலீஸ் விசாரணையை ஜன்னல் கம்பிகளுக்கு வெளியிலிருந்து
(3rd person's POV) காட்டுவது ஏன்? யார் ஆசிட் ஊற்றியது என்பதை
சஸ்பென்சாக வைக்கும் எண்ணத்தில் தான் இயக்குனர் ஜோதி - ஸ்ரீ
கதையுடன் முதல் பாதியிலேயே மனீஷா யாதவ்வின் கதையைச்
சொல்லவில்லையோ? அப்படி காட்டியிருந்தால் நமக்கு முதல் பாதியில்
ஏற்படும் அலுப்பு வந்திருக்காது. பொழுதுபோக்கு அம்சங்கள் தானாக
கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும்.

திங்கட்கிழமை மாலைக் காட்சியில் கூட்டமில்லாத படத்தின் பாக்ஸ்
ஆபீஸ் நிலைமை என்ன? முதல் பாதியில் கொஞ்சம் கூடுதல் கவனம்
செலுத்தியிருந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். இந்தக் கதையும்,
இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இன்னும் பெரிய வெற்றிக்குத்
தகுதியானவர்கள் என்பதால் இதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் அடுத்த படத்தை repeat audience-ஐ கருத்தில்
கொண்டு இளமையாக, இனிமையாக, கலர்ஃபுல்லாக எடுக்க வாழ்த்துக்கள்!

கொசுறு: “நீதானே என் பொன்வசந்தம்” டிரைய்லர் பார்த்தபோது அது VTV
அளவுக்கு இருக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Unknown said...

பலர் நல்ல படம் என்று பாராட்டி விடுவது அவர்களுக்கு நேர்ந்த கசப்பான முன்அனுபவங்களின் காரணமாகவா? அதனால் தான் நானும் பாதிக்கப்பட்டுவிட்டேனோ என்று தோன்றுகின்றது..!

Raj said...

10000% correct. This is a very worst movie. Theme is an ordinary sex movie theme. This man (Balagi) created all the negative side of t life (in the movie) for his fame and money. Tamil people pleeeeeease don't appreciate these type of movies.

கோவை நேரம் said...

விமர்சனம் தங்கள் பார்வையில் நன்றாய் இருக்கிறது.

Raj said...

10000% correct. This is very worst movie. Theme is taken from all sex movies. Tamil people pleeeeeease Don't appreciate this type of movies.

உலக சினிமா ரசிகன் said...

ஒகே..ஒகே மாதிரி படம் எடுக்கத்தெரியாத பாலாஜி சக்திவேல் ஒரு அறைகுறை...
உங்க லெவலுக்கெல்லாம் அவருக்கு படமெடுக்க முடியாது.
இந்த ஆளு சத்யஜித்ரே,ரித்விக் கதக் போன்ற வெற்று ஆசாமிகளை பார்த்து படமெடுக்க வந்த ஜந்து.
ப்ளீஸ்... விட்ருங்க...

மோகன் பன்னீர் செல்வம் said...

ஒரு படம் கமர்ஷியல் வெற்றியா தோல்வியா என்பதை பற்றி விமர்சகன் ஏன் கவலைப்பட வேண்டும்? அது தயாரிப்பாளரின் கவலை அல்லவா?
ஒரு சினிமா, விறுவிறுப்பாக, பரபரப்பாக செல்ல வேண்டும் என்பது என்ன கட்டாயம்?
அப்படியானால் ராம.நாராயணன் மற்றும் ஷங்கர் படங்களுக்கு மட்டும் விமர்சனம் பண்ண வேண்டியதுதானே ?

G.Ganapathi said...

போலீஸ் விசாரணையை ஜன்னல் கம்பிகளுக்கு வெளியிலிருந்து
(3rd person's POV) காட்டுவது ஏன்?

//

படம் சரியாக பார்க்காமலே இப்படி ஒரு அருமையான விமர்சனம் :) ...

வேலு விசாரணை முடிந்த உடன் ஆர்த்தி வருகிறாள் அப்போது ஆர்த்தி இந்த பையனை விசாரிச்சா மாறி இன்னொரு பையனையும் நீங்க விசாரிக்கணும்னு சொல்லற .....

அப்ப அதுக்கு என்ன அர்த்தம் Sridhar Srinivasan சார்

G.Ganapathi said...

போலீஸ் விசாரணையை ஜன்னல் கம்பிகளுக்கு வெளியிலிருந்து
(3rd person's POV) காட்டுவது ஏன்?

//

படம் சரியாக பார்க்காமலே இப்படி ஒரு அருமையான விமர்சனம் :) ...

வேலு விசாரணை முடிந்த உடன் ஆர்த்தி வருகிறாள் அப்போது ஆர்த்தி இந்த பையனை விசாரிச்சா மாறி இன்னொரு பையனையும் நீங்க விசாரிக்கணும்னு சொல்லற .....

அப்ப அதுக்கு என்ன அர்த்தம் Sridhar Srinivasan சார்

Unknown said...

//மாபெரும் இலக்கிய சமூகங்களுக்கும் விளிம்பு நிலைமக்களை சந்தித்தேயிராத நல்லவர்களுக்கும் இப்படம் நல்ல வேட்டையாக அமையலாம்//

:)

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்

Raashid Ahamed said...

ஒண்ணுமட்டும் தெரியுது! எப்படி படம் எடுத்தாலும் உங்கள மாதிரி ஆளுங்களை திருப்தி படுத்தவே முடியாது. ஒரு படம் எடுத்து பாருங்க அதில் உள்ள கஷ்டம் தெரியும். விமர்சனங்கிற பேரில எங்க தல முடிய பிச்சுக்க வக்கிறதிலெ உங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம். மொத்தத்துல இது ஒரு மொக்கை படம் என்பது தெரியுது. சரிதானே ?

Anonymous said...

// இதுக்கு மேல ஒரு நல்லப்படத்துல வேற என்னதான்டா உனக்கு வேணும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். விடையே கிடைக்கல! //

நல்ல குழப்ப நிலையில் படம் பார்த்துவிட்டு ஏன் இப்படி பிதற்றுகிறீர்????
உங்கள் ரசனைக்கு வந்துகொண்டிருகிறது "துப்பாக்கி".

குரங்குபெடல் said...

/" /மாபெரும் இலக்கிய சமூகங்களுக்கும் விளிம்பு நிலைமக்களை சந்தித்தேயிராத நல்லவர்களுக்கும் இப்படம் நல்ல வேட்டையாக அமையலாம்// "


விருது வாங்கியும் நேர்மையை

பண்றியே தம்பி


நல்ல பகிர்வு

நன்றி

சுந்தரராஜன் said...

மற்ற அனைத்துப்படங்களையும் போல இந்த படத்திலும் அபத்தமான நீதிமன்றக் காட்சிகள்... நீதிபதியாக உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒரு உண்மையான வழக்கறிஞரே நடித்திருந்தபோதிலும்...

vallathaan said...

unarssi vasappadum kumpalidam unmaiya sonnal edupadathu. unmaiya sonna enakku vasavu than kidaiththathu.

ungal vimarasanam arumai..
thanks....

http://duraigowtham.blogspot.com/2012/05/189.html

perumal karur said...

எனக்கு மிகவும் படம் பிடித்துள்ளது. ஆரம்பக்காட்ச்ச்யில் காதல் படம் போல் இருக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுத்துள்ளார் என்று நினைத்தேன். நல்லவேளை இயக்குனர் அப்படி நினைக்கவில்லை என்பதை அடுத்தடுத்து வரும் காட்ச்சியில் சொல்லிவிட்டார்.

ஆம் எல்லா அவலங்களையும் ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாலும் கடைசியில் படம் முடியும் தருவாயில் இன்றையசூல்நிலையை பார்க்க அது ஒரு கழுகு பார்வையாக அமைந்து விடுகிறது.

....

ஹி ஹி ! அப்புறம் பொண்ணுங்கள கரெக்ட் பண்றதுக்கு எல்லாக்காலங்களிலும் அதே டெக்னிக் தான் கைகொடுக்கும் போலிருக்கு. நான் சொல்றது மோகன் நடித்த ''விதி'' பட காட்ச்சிகளை! ;-)

ராம்கண்ணன் said...

உங்களுக்கு ஒரு ப்ளாக் இருக்குன்னு எதையும் எழுத கூடாது ...
புரிந்து கொள்ளுங்கள்.

ஆர்.தியாகு said...

இவன் யாரோ பெண்ணிடம் இப்படி சில்மிஷ்ம் செய்து செருப்படி பட்டிருக்க வேண்டும் அல்லது அடுத்த வீட்டு பெண்ணை எடுத்து ரசிக்கும் ஒரு ஜந்துவாக இருக்க வேண்டும். இவனை இநத படம் மிக விரக்தியில் அழுத்திவிட்டது.

இதுவெல்லாம் விமர்சனமா..?

ஆர்.தியாகு said...

இவன் யாரோ பெண்ணிடம் இப்படி சில்மிஷ்ம் செய்து செருப்படி பட்டிருக்க வேண்டும் அல்லது அடுத்த வீட்டு பெண்ணை எடுத்து ரசிக்கும் ஒரு ஜந்துவாக இருக்க வேண்டும். இவனை இநத படம் மிக விரக்தியில் அழுத்திவிட்டது.

இதுவெல்லாம் விமர்சனமா..?

Anonymous said...

என்ன ஒரு அறிவார்ந்த ஆய்வு. என்ன ஒரு IQ. arivu kozhunthu ....

Iniyan Elango said...

சாதியால் - சமூகத்தால் ஒடுக்கப் பட்ட மக்களின் வறுமை, அம்மக்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக கொத்தடிமைகளாக அல்லல் படுவது, கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் மண் சரிந்து இறப்பது போன்ற உயிருக்கு உலை வைக்கும் அபாயங்களை சகித்துக் கொண்டு பணியாற்றும் உழைப்பாளிகளின் உழைப்புச் சுரண்டல், கந்து வட்டி வாங்கி துன்பப்படும் ஏழை மக்கள், வறுமைக்காக சிறு நீரகத்தை விற்கும் அடித்தட்டு மக்களின் அவலம், சென்னையில் சேரியில் வாழும் விடலைச் சிறுமி படிக்க முடியாமல் குறைந்த ஊதியத்திற்கு - அவள் வயதே உள்ள பிளஸ் டூ படிக்கும் வசதியான பெண் வாழும் வீட்டில் வேலை செய்யும் அவலம், பாலியல் தொழில் செய்யும் உதவும் உள்ளம் கொண்ட ஏழைப் பெண்கள், அப்பாவியான விளிம்பு நிலைத் தொழிலாளியை காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து -அத்தொழிலாளி மீது பொய் வழக்கு போட்டு - சிறைக்கு அனுப்பி தன் சாதியைச் சேர்ந்த உண்மையான குற்றவாளியை சாதி வெறி பிடித்த அமைச்சருடன் சேர்ந்து கொண்டு தப்பிக்க வைக்கும் காவல் துறை அதிகாரியின் சாதி வெறி - மற்றும் குற்றச் செயல்கள், அழுகிப் போன - சாதி வெறி கொண்ட - காக்கிச் சட்டை போட்ட கிரிமினலை கதா நாயாகியே வெகுண்டெழுந்து தண்டிக்கும் வர்க்கப் போர்ச் செயல், என்று பல வித்தியாசமான - சமூக அக்கறை கொண்ட - முற்போக்கான - ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தை - அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் சில முகங்களைக் காட்டும் "வழக்கு எண் 18 / 9 என்ற எப்போதோ பூக்கும் குறிஞ்சி மலர் போன்ற அருமையான திரைப்படத்தைக் குறை கூறி - அத்திரைப்படம் சரியில்லை என்று விமர்சனம் செய்திருக்கும் உம் மீது காவல் துறை பொய் வழக்கு போட்டு - காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து - பத்து வருடம் சிறையில் தள்ளினால்தான், வழக்கு எண் 18 / 9 படத்தின் தேவையும் சிறப்பும் உமக்குப் புரியும். காவல் துறை போட்ட பொய் வழக்கால் சிறைக்குச் சென்று எனது வேலையையும் - வருமானத்தையும் - திருமண வாழ்வையும் - சமூக அந்தஸ்தையும் இழந்து கந்தலாகிப் போன என்னைப் போன்றவர்கள் ஆளும் வர்க்கத்தின் சாதி ஆதிக்கம், ஊழல், குற்றச் செயல்கள் ஆகியவற்றின் போல் கொண்டுள்ள கோபத்தை பிரதிபலிக்கும் வழக்கு எண் 18 / 9 போன்ற படங்களைக் கொண்டாடுவது இயல்பே. உம் மீதும் ஒரு முறை காவல் துறை பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் உதைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் பிறகாவது, வழக்கு எண் 18 / 9 போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களின் அருமை உமக்கு புரியும்.

Iniyan Elango said...

"காதல்" படத்தில் பள்ளிக் "குழந்தையின்" "பப்பி லவ்வை" காதலாகக் காட்டி தண்டிக்கத்தக்க கருத்தினை இயக்குனர் பரப்பினார் என்று நீங்கள் கூறியிருக்கும் கருத்து தவறானது. பதினாறில் இருந்து பதினெட்டு வரையிலான வயதுடைய பிளஸ் டூ படிக்கும் டீனேஜ் இளைஞர்கள் தம்முள் கொள்ளும் காதலை "குழந்தையின்" பப்பி லவ் என்று கூறுவது தவறானது - அத்தகைய காதலை கதையில் சொல்வது தண்டிக்கத்தக்க கருத்து என்றும் நீங்கள் கூறுவது அறியாமையானது. வளர்ந்து விட்ட மேலை நாடுகளில் பதினாறு முதல் பதினெட்டு வரையிலான டீனேஜ் இளைஞர்கள் பள்ளியிலேயே காதல் கொள்ளுவதும் - அவ்வாறு காதல் கொள்வோர் திருமணம் செய்து கொள்வதும் அல்லது சேர்ந்து வாழ்வதும் இயல்பான ஒன்று. ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் காதலும் பதினைந்து வயது டீனேஜ் பெண்ணை ஒத்த வயதுடைய டீனேஜ் இளைஞன் காதலிப்பதுதான்.அக நானூறு -குறுந்தொகை போன்ற சாதியத்துக்கு முந்தைய சங்க கால தமிழ்ச் சமுதாயத்தின் காதலும் டீனேஜ் பெண்களின் - டீனேஜ் ஆண்களின் காதல்தான். அண்மையில் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினும் பள்ளியில் தம்முடன் படித்த ப்ரீத்தியை- பள்ளியில் படித்த காலத்திலேயே காதலிக்கத் துவங்கி - பிறகு திருமணம் செய்து கொண்டார்.சாதி ஒடுக்கு முறையால் ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் சுதந்திரம் மறுக்கப்படும் நமது நாட்டில் இருபது வயது ;பெண் கூட சாதியை மீறி மதத்தை மீறி காதல் கொள்வதை - பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதை - சாதியம், பண்பாட்டு அடிப்படைவாதம், மதவாதம் அடிப்படையில் ஒடுக்குவதையும் அவ்வாறு பாலியல் உறவில் - காதலில் ஈடுபடும் பெண்களை கொலை செய்யும் காட்டு மிராண்டித்தனத்தையும் பண்பாடு - மதம் - சாதியம் என்று கொண்டாடும் காட்டு மிராண்டிகள் நிறைந்துள்ள நமது நாட்டில் திரைப் படத்தில் டீனேஜ் இளைஞர்களின் காதலைக் கண்டு வெறுப்படையும் உம்மைப் போன்ற பிற்போக்காளர்களுக்கு பஞ்சமில்லை. டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு. சாதியத்தாலும் - மதத்தாலும் டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் மற்றும் ஆரோக்கியமான பாலுணர்வை ஒடுக்கும் கற்கால குகை மனிதர்களாகத்தான் இன்றைய இந்திய சமுதாயம் இருக்கிறது. பிற்போக்குச் சிந்தனைகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களுக்கு ஆளும் வர்க்கத்து ஊடகங்கள் ஏன் "அவார்டு" கொடுக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது. (நான் இங்கிலாந்தில் பயிற்சி பெற்று - சென்னையில் பணியாற்றும் உளவியல் சிகிச்சையாளன் -பாலியல் மருத்துவன்). வழக்கு எண் 18/9 படத்திலும் வீட்டில் வேலை செய்யும் டீனேஜ் பெண் மீது காதல் கொள்ளும் விளிம்பு நிலைத் தொழிலாளியான விடலை இளைஞனின் காதலே இறுதியில் வெல்லுவதாக காட்டப் பட்டு இருக்கிறது.

Raj said...

டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு.


O! Avanaa NEEYI?

Raj said...

டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு.

O! Avanaa Neeyi?

Raj said...

டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு.


O! Avanaa NEEYI?

Raj said...

// டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு///

O! Avanaa Neeyi?

Anonymous said...

உங்க ஸ்டைல்ல சொன்னா... உங்களுக்கு விமர்சனமா தெரியிறது மத்தவங்களுக்கு விசர்மனமா தெரியுது..

Anonymous said...

கண்டிப்பாக கில்மா பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காது. உங்களுக்கு இந்த படம் பிடிக்காததில் ஆச்சர்யம் இல்லை. வாழ்க உன் ரசனை.

Anonymous said...

//
இந்தப்படத்திலும் ஹீரோ உண்டு, ஹீரோயின் உண்டு. காதல் உண்டு, முக்கால் தொடையும், பிதுங்கும் மார்பும் தெரிகிற நாயகியுண்டு
//

உங்கள் கண்னுக்கு அது தானே முதலில் தெரியும். கதை , திரைகதை எல்லாம் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.
இன்றிலிருந்து முடிவு செய்து விட்டேன் இனி உங்கள் பதிவுகள் படிக்க கூடாது என்று.

யாஸிர் அசனப்பா. said...

நான் கண்ட சினிமாத்தனம் இல்லாத முதல் தமிழ் திரைப்படம்.
ஏழைகள் கஷ்டம், பணக்காரர்களின் கொடுமை எல்லாம் எம்.ஜி.ஆர் படங்களில் இருந்து இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் ஏழைகளின் நிலை என்னவோ அதே நிலைமையில் இருக்க, இந்த காலத்து படங்களில் ஒரு தள்ளுவண்டி கடையில் வேலைசெய்யும் இளைஞன் பென்ஸ் காரில் வந்து இரங்குவது போல காட்டவேண்டுமா என்ன?

Anonymous said...

I expect something better than this....waste of time reading it...Mokkai pathivu

Anonymous said...

நீங்கள் உங்கள் பேஸ்புக்கில் திறமை தவறை மறைக்கும் கவசமாக இருக்கக் கூடாது என எழுதி அதை விகடன் வெளியிட்டுள்ளது. நீங்கள் உங்கள் தவறை மறைக்காதவரா? மாரில் கை வைத்து சத்தியம் செய்யுங்கள்...

சதீஷ் செல்லதுரை said...

ஐய்யோ பாஸ் சரியா சொன்னிங்க..உண்மையிலேயே முதல் பாதியில் எப்போடா கதை அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று யோசிக்க வைத்து விட்டார் பாலாஜி.பாலாஜியின் இயக்கம் திறமைதான் தெரிந்ததே தவிர படம் தெரியவில்லை.ஒருவர் மனநிலை வேண்டுமானால் விமர்சனம் எழுதுவதை பாதிக்கலாம் நாங்க நாலு பேர் போனோம் நாலு பேருக்கும் உங்க மாதிரியேதான் தோனுச்சு.என் பதிவுக்கு பவர் ஸ்டார் படத்துக்கு பதிவு எழுதுங்கன்னு ஓட்றாங்க.நீங்கள் எழுதிய இந்த பதிவு சத்தியமானது.பயபுள்ளைங்க எல்லாரும் மவுந்துட்டாங்க நாமதான் கரெக்ட்.நம்ம ரசனைக்கு இன்னும் நிறைய எதிர்பார்ப்போம்.உடனே துப்பாக்கி ,பவர் ஸ்டார்னு பேசுவாங்க.கண்டுக்காதிங்க.உங்க நெற்றி கண் திறந்தே இருக்கட்டும்.

தமிழன் said...

chumma pesanumnu pesathinga boss! worth eh illama pesringa..mokka review! short n sweet ah sollanumna "ungaluku rasanaiye illa boss"

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் அதிஷா.

Balasuntharam said...

இவன் ஓர் மொடா குடிகாரன், கல்வி அறிவும் மிகவும் குறைவு இந்த சொட்ட தலையனிடம் இருந்து இப்படி தான் விமர்சனம் வரும்,
இவனிடம் நீங்கள் இதைவிட எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என பதிவுலக நண்பர்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

Anonymous said...

தம்பி! அடுத்த விருது 'எப்ப வாங்குற?'. நாங்க தர்றதுக்கு ரெடி, 'நீ' ரெடியா?

Anonymous said...

எப்பவும் குறை தான் pls try 2 do some good thing

@Ganshere said...

//சதீஷ் செல்லதுரை said...

ஐய்யோ பாஸ் சரியா சொன்னிங்க.......கண்டுக்காதிங்க.உங்க நெற்றி கண் திறந்தே இருக்கட்டும்.//


இவர சதீஷ் செல்லதுரை பாராட்டுறாரா இல்ல ஆசிட் அடிக்கிறாரா?

Anonymous said...

தம்பி, நீ okok ரசிகன். இந்த மாதிரி யதார்த்த படங்கள் எப்படி unakku பிடிக்கும்?

ILAIGNAR MUZHAKKAM said...

உங்களுக்கு இந்த அளவுக்காவது சிந்திக்கத் தெரிந்ததற்கு நன்றி ஏ,சி அறையில் அமர்ந்து கொண்டு இந்த படத்தைப்பற்றி சிந்தித்தால் எப்பொழுதும் வலியுடன் இருக்கிறவன் வாழ்வு புரியாது,

ILAIGNAR MUZHAKKAM said...

உங்களுக்கு இந்த அளவுக்காவது சிந்திக்கத் தெரிந்ததற்கு நன்றி ஏ,சி அறையில் அமர்ந்து கொண்டு இந்த படத்தைப்பற்றி சிந்தித்தால் எப்பொழுதும் வலியுடன் இருக்கிறவன் வாழ்வு புரியாது,

Anonymous said...

உன் மூஞ்சிக்கு ஆசிட் எல்லாம் டூ மச். நீயே போய் நல்ல மன நல மருத்துவரை பார்த்துக்கோ

Anonymous said...

unga thiramikum azhagukkum neenga hollywoodla cinema virsanam try pannunga boss. etho unga bad time tamilnattu la porathutinga. aiyo paavam. padamaa edukuraanunga.............. mutta pasanga.

Thamira said...

வழக்கமா எப்படிப் பாத்தாலும் உன்னோட சினிமா பார்வை என்னோடதோட ஒத்துப்போயிடும். ஆனா இதுல இல்லை.

ரொம்பவும் இரு மனசோட எழுதியிருக்கேன்னு நல்லாப் புரியுது. ஒரு பாராவுக்கும் இன்னொரு பாராவுக்கும் இடையே குழப்பம். பாராட்டோ, திட்டோ சீரா மனசுல இருக்கிறது வெளிய வரும் உன்னோட விமர்சனம் இல்லை இது.

எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. வர்க்கப் பாகுபாடெல்லாம் யோசித்தாலும் கூட எல்லோருக்கும் அவசியமான விஷயமாகவும், அதே நேரம் ஒரு சுவாரசியம் குறையாத படமாகவும் இது அமைந்திருந்தது.

//ஒரே படத்தில் உலகின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் வேறு இயக்குனருக்கு அதிகமாகி குழந்தை தொழிலாளர் பிரச்சனையில் தொடங்கி மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவது //

நிச்சயம் இல்லை. படத்தில் சொல்லப்படும் பிரச்சினைகள் திணிக்கப்படவில்லை, இயல்பான கதையோட்டத்தோடு தேவையான அழுத்தங்களோடு மட்டுமே உள்ளன என்று நான் நினைக்கிறேன்.

பி.கு: எதுக்கும் வெயில்ல படம் பார்க்கப்போறப்போ தொப்பி போட்டுக்கோ.. :-))

அன்புசிவம்(Anbusivam) said...

பொதுவா இந்த படம் உங்களுக்கு புரியலைன்னு புரியுது. அது உங்க பிரச்சனை. எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. கவிதை மாதிரி.

urhits said...

You should limit yourself into commercial movies. For these type of movies, I don't think that u have enough knowledge....:)