31 January 2013

ஒரு முதல்வரும் ஒரு திரைப்படமும்!மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி.. மற்றும் பல பட்டங்கள் பெற்ற மேன்மைதங்கிய முதல்வர் அவர்களின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பினை தொலைகாட்சிகள் வாயிலாக லைவாக பார்க்க முடிந்தது.அடேங்கப்பா எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறார். அதுவும் கேட்கிற அனைவருக்கும் புரிகிற வண்ணம் எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் பேசியதை மிகவும் ரசிக்க முடிந்தது.

அதைவிட பேசவேண்டிய விஷயங்களை மட்டும் எந்த அளவுக்கு கன்வீன்சிங்காக முடியுமோ அந்த அளவுக்கு தேவையான புள்ளி விபரங்கள் கணக்குகள் மற்றும் அறிவியல் சமூகவியல் ஆதாரங்களுடன் பேசியதையும் ரசிக்கவே முடிந்தது. நமக்கு வாய்த்த முதல்வர் நல்ல திறமைசாலி.

குறிப்பாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கின் மீது அவருக்கு இருக்கிற அக்கறையை கண்டு என் தொலைகாட்சி பெட்டியே வியந்துவிட்டிருக்கும்.

ப்ரிவென்சன் ஈஸ் பெட்டர் தேன் க்யூர் என்றான் ஒரு மேல்நாட்டு இவன். அவனேதான். அதற்கேற்ப அம்மாவும் கூட விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்து அதனால் உண்டாகப்போகிற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கணக்கில் கொண்டு அதை மனதில்வைத்தே விஸ்வரூபம் படத்தை தடைசெய்திருப்பதாக சொன்னதை கேட்டபோது நிஜமாகவே காதுக்கு இனிமையாகவும் கண்களுக்கு குளுமையாகவும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு மாநிலத்தையே கட்டிக்காக்கிற முதல்வருக்கு இந்த அளவுக்கு சமயோஜிதமும் பிரச்சனைகளை வருவதற்கு முன்பே தடுக்கிற திட்டமிடலும் இருப்பது அபூர்வம். ஆச்சர்யம். அந்த விதத்தில் அம்மாவின் இந்த ஆற்றலை கண்டு இந்த சமூகம் வியக்கிறது.

போகட்டும். ஆனால் ஏதோ தமிழகத்தில் எந்த பிரச்சனையுமே இல்லாததுபோலவும், இந்த விஸ்வரூப பிரச்சனை மட்டும்தான் விஸ்வரூபமெடுத்து நிற்பதைப்போலவும் பேசியதுதான் கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம் கடுப்பேற்றியது. காவிரி டெல்டாவில் எத்தனை விவசாயிகள் இறந்துபோனார்கள் அப்போதெல்லாம் கூட இதுபோல டிவியில் தோன்றி எதையாவது பேசியிருக்கலாம்தான்.. போகட்டும்.

விஸ்வரூபம் என்கிற ஒரு திரைப்படத்தால் இச்சமூகத்திற்கு ஏதோ கேடு வந்துவிடும் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் என்று நினைத்து அப்படத்துக்கு தடைவிதித்துள்ள தமிழக அரசு.. விஸ்வரூபத்தை விட ஆபத்தானதும் ஏற்கனவே நம்முடைய சட்ட ஒழுங்கினை மோசமாக்கி வரும் மதுவுக்கும் கூட தடை விதிக்கலாம். யெஸ் ப்ரிவென்சன் ஈஸ் பெட்டர்தேன் அதுதான்.

அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை வரும் முன்பே தடுக்க இது நிச்சயமாக உதவும். அதோடு இன்று எந்த டாஸ்மாக் பார் வாசலிலும் குறைந்தது ஐம்பது இருசக்கர வாகனங்களாவது நின்றுகொண்டிருக்கின்றன. பெரிய பார்களில் அதே அளவுக்கு கார்கள் நிற்கின்றன.

குடித்துவிட்டு வாகனமோட்டி எத்தனை விபத்துகளுக்கு காரணமாயிருக்கிறார்கள் குடிவெறியர்கள். அதையெல்லாம் கூட தடுத்து நிறுத்தலாம். குடிவெறியால் அழிந்துபோகிற பல குடும்பங்களை காப்பாற்றலாம்.

விஸ்வரூபம் தடையால் என்ன கிடைக்குமோ அதைவிடவும் பலமடங்கு அதிகமான பலனை மதுவிலக்கால் நமக்கு கிடைக்கும். சட்ட ஒழங்கு பேணிக்காக்கப்படும்.

மதுவிலக்கினை அமல்படுத்திவிட்டு தொடர்ந்து எப்போதோ செத்துப்போன தலைவர்களுக்கு அந்த பூஜை இந்த பூஜை என சாதிக்கட்சிகள் பண்ணுகிற அலப்பறைகள், ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கும், மேடைகளில் கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுவேன் குத்துவேன் என்று பேசுவதற்கும் கூட தடைவிதித்தால் பல கலவரங்களையும் இழப்புகளையும் கூட வருமுன் தடுக்கலாமே.

அதைப்பற்றியும் நம்முடைய மாண்புமிகு.. புரட்சி.. இதய... தியாகத்தின்.. அன்புக்குரிய அம்மா அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அவ்ளோதான்.

(படம் உதவி - http://dbsjeyaraj.com)

16 comments:

அமுதா கிருஷ்ணா said...

தான் பேசுகிற இங்கிலிஷ் பற்றி ஒரு பெருமிதம் குரலில்,என்ன ஒரு நிதானமான பேச்சு,போலீஸ் எண்ணிக்கை,தியேட்டர் பற்றிய புள்ளிவிபர கணக்குகள் கொன்னுட்டாங்க.

குரங்குபெடல் said...

அருமையான பதிவு தம்பிடாஸ்மாக் மூடு போராட்டம் என்றால் மட்டும்

இவருக்கு 7000 கடைகளுக்கும்


காவலர்கள் கிடைத்துவிடுவது நல்ல முரண்

மருதநாயகம் said...

பதிவில் இடம் பெற்றிருக்கும் படம் மிக அரியது

மட்டை ஊறுகாய் said...

ம்ம்ம்ம்ம் அடிச்சு ஆடுங்க....

தருமி said...

//அடேங்கப்பா எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறார். அதுவும் கேட்கிற அனைவருக்கும் புரிகிற வண்ணம் எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் பேசியதை மிகவும் ரசிக்க முடிந்தது.//

அடப்பாவமே ... இதுபோன்ற ‘ரசிகக் கூட்டத்தைப்’ பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும். இதைவிட ஆங்கிலத்தை அழகாகப் பேசும் மாணவர்கள் பலரை எனக்குக் கூட தெரியுமே!

ஒரு பத்திரிகையாளனாக ஏன் அவர் தமிழில் பேசவில்லை என்று கேட்டிருந்தால் பெருமைப்பட்டிருப்பேன். அங்கு வந்த பத்திரிகையாளர்களும் உங்களைப் போன்றவர்கள் தான் போலும். எந்த உருப்படியான கேள்விகளும் கேட்கவில்லை.

Jayadev Das said...

Good......

Kumar said...

//காவிரி டெல்டாவில் எத்தனை விவசாயிகள் இறந்துபோனார்கள் அப்போதெல்லாம் கூட இதுபோல டிவியில் தோன்றி எதையாவது பேசியிருக்கலாம்தான்//

ஹல்லோ... ஹல்லோ.... ஹல்லோ... இங்க சிக்னல் சரியா கிடைகல...

Kumar said...

//காவிரி டெல்டாவில் எத்தனை விவசாயிகள் இறந்துபோனார்கள் அப்போதெல்லாம் கூட இதுபோல டிவியில் தோன்றி எதையாவது பேசியிருக்கலாம்தான்//

ஹல்லோ... ஹல்லோ.... ஹல்லோ... இங்க சிக்னல் சரியா கிடைகல...

Anonymous said...

"விஸ்வரூபம்"
படமும், அதன் அதிர்வலைகளும் - ஒரு சாதாரண ரசிகனின் பார்வையில்!!!!!!!!!
ஒரு திரைப்படம், பார்ப்பவர்களை, அதன் பாதிப்பிற்க்குள் சிறிது நேரம் ஆட்க்கொள்ளும்.
இப்படம் என்னுள், இலங்கையில் நாம் அனுபவித்த சிறுபான்மை இன்னல்களை மீட்டுப்பார்க்க வைத்தது.
முஸ்லிம் மக்களிற்க்கு எதிரானது அல்ல என்று கூறிக்கொண்டு இப்படத்தை வெளியிடப் பல எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும், அதனால் பலரது அனுதாபத்திற்க்கும் உள்ளாகியிருக்கும் உலக நாயகன் கமல்காசன், இப்படத்தில் என்ன சொல்ல வருகிறார்?
தாலிபான்கள் மிகவும் கொடூரமானவர்கள், தமக்கும், தம்மக்களிற்க்கும்கூட, மிகக் கடுமையான சட்டதிட்டங்களுடன், அமெரிக்கர்களிற்க்கு எதிராக, (உலகமக்களிற்க்கு எதிராக) ஈவிரக்கமற்ற யுத்தத்தை நடாத்துகின்றனர். இந்த யுத்தத்தில, இந்திய முஸ்லிம் உளவாளியான, கமல்கசன், அமெரிக்கர்களுடன் சேர்ந்து அவர்களை ஒடுக்குகின்றார்.

இதில் அமெரிக்கப்படைகள் தாக்குவது தீவிரவாதிகளையும், அவர்கள் குடும்பத்தையும் மட்டுமேயன்றி, ஒருசில பொதுமக்களே பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே இது முற்றிலும் தீவிரவாதத்திற்க்கு எதிரான போர். இங்கே இந்தத் தீவிரவாதிகளின் தொழுகை முறையும், அவர்களது கலாச்சாரமும், அவர்களது தண்டனைகளின் குரூரமும், பார்ப்பவர்கள் முகம்சுழிக்கும் வண்ணம் படமாக்கப்பட்ட உண்மைகள்.

இது உண்மைகளாகவே இருக்கட்டும்!
இப்படி ஒரு குளு குரூரப்போர் நடத்த வேண்டிய தேவை என்ன? இவர்கள் பிறந்ததே ஜிகாத்திகளாகவா? இல்லை முஸ்லிம் மக்களின் மதப்புனித நூலாம் குரானின் பெயரால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனரா? இருப்பின் இவர்களிற்க்கும் முஸ்லிம்களிற்க்குமான வேறுபாடு என்ன? சாதாரண முஸ்லிம் குடிமகனிற்க்கு, இப்படத்தில் வரும், முஸ்லிம் இந்திய உளவாளி என்ன பெருமை சேர்த்துவிட முடியும்.

இதுபற்றிச் சிந்திக்த் தமிழர்களிற்க்கு முடியாவிட்டாலும், சிறுபான்மை இலங்கைத் தமிழனாக, எனக்குள் சிறு ஏக்கம்!!!!!
நானும் ஒரு தீவிரவாதிதான் இலங்கை அரசாங்கத்தின் கண்களிற்க்கு, எனது சகோதரனின் இன்னுயிர் நீத்த, ( அரச படைகளை மட்டும் தாக்கியளித்த ) கரும்புலித்தாக்குதலும் தீவிரவாதம்தான் இவ்வுலகிற்க்கு.
உலகில் எங்கு வாழ்ந்தாலும் சிறுபான்மை இலங்கைத் தமிழன் தீவிரவாதிதான், அவன் போராட்டத்தின் காரணம் திரிபுபடுத்தப்பட்டது.
உலக நாடுகளின் முன் அவன் தனது சொந்தங்கிற்க்காகவும், இனஅழிப்பிற்க்கு எதிராகவும் போட்ட கூச்சல்கள் எல்லாம், செவிடன் காதுச் சங்கல்லவோ?

என்னை இந்த உலகம் பார்த்த அந்தப் பார்வை, என்னருகில் இருக்கும் பிறநாட்டு சகதொழிலாளி, என் பிறநாட்டு முதலாளி, பிற நாட்டுப் பள்ளித்தோளன்.........
பரிதாபம். அந்தொ பரிதாபம்......

இப்படி ஓர் நிலமையை இந்திய முஸ்லிம்களிற்க்கு, தாம் பிறந்த நாட்டிலேயே, தம்மொழி பேசுவோராலேயே எற்ப்பட்டுவிடும் அவலம் இப்படத்தினால் வரும், அல்லது வித்திடப்படும்.
ஏனெனில் சாதாரண முஸ்லிம் பொதுமகனைப் பிரித்தறிய இந்த உலகம் தம் நேரத்தை செலவிடாது.

தொழுகை செய்பவன், குரான் படுப்பவன், முட்டாக்குப் போடுபவன், குல்லா போடுவன் எல்லாம் தீவிரவாதியாகப் பார்க்கப் படப் போகிறான்.

இதற்க்குப் பதிலாக, முஸ்லிம் தீவிரவாதத்தை எதிர்த்து, முஸ்லிம்களிற்க்காக, தலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்ட முஸ்லிம் தமிழனாக, உலக நாயகன் கமல்கசன் நடித்திருந்தாலோ? அவர்கது திட்டம் இந்தியாவில் அரங்கேறப்போவதையறிந்து இத்திட்டம் இந்திய முஸ்லிம்களிற்க்கோ, உலகமுஸ்லிம்களிற்க்குப் பெரும் அவப் பெயர் என்று, தடுக்கும் பணியில், இந்திய அரசாலும் தீவிரவாதியாப்பார்க்கப்படும் நபராக கமல் நடுத்திருந்தால்.........
இப்படம் முஸ்லிம்கிற்க்கெதிரானது அல்ல என்று அவர் மார்தட்டுக்கொள்ளலாம்.

அதைவிடுத்து இப்படி ஒரு படத்தை, அதுவும், உன்னால் முடியும் தம்பி,
மகாநதி, அன்பே சிவம், என்று பயனுள்ள படங்களைத்தந்த கமலிற்க்கு இது விஸ்வரூபம் அன்று, இது ஒரு மன்மதன் அம்பு -அமெரிக்காவை நோக்கி கமலிடமிருந்து.கமல் நேர்மையுடன் ஏற்க்க வேண்டும் என்றில்லை,
கமல் நேர்மையுடன் இருந்தால் ஏற்றுக்கொள்வார். ( கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை? கடவுளிருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் சொல்கிறேன்.)

Mathi said...

"எப்போதோ செத்துப்போன தலைவர்களுக்கு அந்த பூஜை இந்த பூஜை என சாதிக்கட்சிகள் பண்ணுகிற அலப்பறைகள், ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கும், மேடைகளில் கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுவேன் குத்துவேன் என்று பேசுவதற்கும் கூட தடைவிதித்தால் பல கலவரங்களையும் இழப்புகளையும் கூட வருமுன் தடுக்கலாமே."

ரிப்பிட்டு...

Rathnavel Natarajan said...

அருமை அதிஷா.

Vee said...

// மாண்புமிகு.. புரட்சி.. இதய... தியாகத்தின்.. அன்புக்குரிய அம்மா

அய்யே. இது எல்லாம் ஒரு தலைவி? நம்ம தலை விதி.

Nellai.S.S.Mani said...

ஒரு தலை கருத்து.முதல்வரும் கமலும் ஒன்றல்ல .விஸ்வரூபம் வியாபாரப்படம் .அதை விட ஒரு முஸ்லிம் குழு போராட்டம் அமைதி குலையும் என்பது உண்மை .விஸ்வரூபம் தள்ளி வெளியாவாதால் அதுவும் நடப்பில் நடைபெற்று வரும் ஒன்றே .எத்தனையோ படங்கள் உதாரணம் பழைய MGR ன் உலகம் சுற்றும் வாலிபன் உட்பட .அந்த காலத்தில் சிவாஜி ஜெமினி கமல்ஹாசன் உட்பட MGR படம் தடை செய்யப்பட சமயம் யாரும் குரல்கொடுக்கவில்லை .எனவே வரலாறு தெரியாமல் குழப்பாதீர்கள்

Nellai.S.S.Mani said...

ஒரு தலை கருத்து.முதல்வரும் கமலும் ஒன்றல்ல .விஸ்வரூபம் வியாபாரப்படம் .அதை விட ஒரு முஸ்லிம் குழு போராட்டம் அமைதி குலையும் என்பது உண்மை .விஸ்வரூபம் தள்ளி வெளியாவாதால் அதுவும் நடப்பில் நடைபெற்று வரும் ஒன்றே .எத்தனையோ படங்கள் உதாரணம் பழைய MGR ன் உலகம் சுற்றும் வாலிபன் உட்பட .அந்த காலத்தில் சிவாஜி ஜெமினி கமல்ஹாசன் உட்பட MGR படம் தடை செய்யப்பட சமயம் யாரும் குரல்கொடுக்கவில்லை .எனவே வரலாறு தெரியாமல் குழப்பாதீர்கள்

இராஜிசங்கர் said...

சிறப்பான கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள் அதிஷா! பாராட்டுகள்.

காவலர்கள் பற்றார்க்குறை என்பது இப்பொழுதுதான் வெளியே வருகிறது. இந்தப் பிரச்சனை முடிந்ததும் மீண்டும் அது அமுங்கி விடும். 'வாய்ச்சொல்லில் வீரரடா' என்று ஒரு பாடல் வருமே அது தான் நினைவுக்கு வருகிறது இந்த அரசியல்வாதிகள் அறிக்கையைப் பார்க்கும்போது!

Raashid Ahamed said...

அம்மான்னா சும்மாவா ! அம்மா சிங்கம்ல !! அதிரடிக்கு பெயர்போனவர் தான் அம்மா !! வீராணம் ! வீரப்பன் !! வீசிடி இந்த மூணு வார்த்தையே போதும் அம்மாவின் புகழ் சொல்ல !!