07 February 2013

கூடையில் என்ன பூ?


நாளுக்கு நாள் குஷ்பு மீதான மரியாதை அதிகரித்தவண்ணமிருக்கிறது. அது நமக்கே அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்துவருகிறது. குஷ்புவின் சமகால பேட்டிகள் எல்லாமே ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் லாவகத்தோடு, ஏடாகூடமான கேள்விகளுக்கும் கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பிச்செல்லும் அபார ஆற்றலையும் கொண்டதாக இருக்கிறது. அரசியல் தந்திரம்தான் என்றாலும் அது நாள்பட ரசிக்கும்படி மாறிக்கொண்டிருப்பதே நம் அச்சத்துக்கு காரணம்.

ஆங்கில ஊடகங்களுக்கு திராவிட இயக்கத்தின் முகமாக குஷ்பூ ஏற்கனவே மாறிவிட்டார். இதை உடன்பிறப்புகள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவர்களாலே கூட இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. குஷ்பூவின் ஆங்கிலப்புலமையும் திமுகவின் கொள்கைகளை செயல்பாடுகளை சாதனைகளை கலைஞர்பாணியில் எடுத்துரைக்கிற பாங்கும் அவருடைய தோற்றமும் கூட ஆங்கில ஊடகங்களுக்கு அல்வாவை போல அமைந்திருப்பதாக அவதானிக்கலாம். உண்மையோ பொய்யோ! திமுகவின் மற்ற யாரையும் விட அக்கட்சியின் மேல் அதன் தலைவரின் மேல் அளவில்லா அன்பும் பற்றும் ஈடுபாடும் கொண்டவராக தன்னை வெளிபடுத்திக்கொள்கிறார் குஷ்பூ.

எத்தனையோ நடிகர் நடிகையர்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் தலைகாட்டி துட்டை வாங்கிக்கொண்டு ஓட்டு கேட்டு தெருத்தெருவாக அலைந்து நடித்து ஒய்ந்து தேர்தலுக்கு பின் தன் வேலையை பார்க்க போய்விடுவதே வாடிக்கை. ஆனால் குஷ்பூ மட்டும்தான் அவர் சார்ந்த கட்சி ஒரு மகத்தான தேர்தல் தோல்வியை சந்தித்த பின்னும் கூட அதே இடத்தில் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. (வடிவேலுவைப்பற்றி இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும்) அதோடு குஷ்பு தன்னை முழுமையான திராவிட இயக்க தொண்டனாக (வேறு வார்த்தைகள் இருக்கிறதா?) திமுகவின் மிகமுக்கிய அங்கமாக மாற்றிக்கொண்டிருப்பது ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இந்த வார விகடனில் வெளியாகியிருக்கிற குஷ்புவின் பேட்டியே இதற்கு நல்ல உதாரணம். அழகிரியா ஸ்டாலினா நீங்கள் யார்பக்கம் என்று நிருபர் திரும்ப திரும்ப வெவ்வேறு விதமாக கொக்கிபோடுகிறார். ஆனால் எதற்கும் அஞ்சாத குஷ்புவோ தலைவர் எவ்வழியோ நானும் அவ்வழியே என்று ஜோராக நழுவுகிறார். அதோடு அழகிரியை அண்ணன் என்று அன்போடு அழைத்து எப்பக்கமும் சேதாரமின்றி அரசியல் காய்களை அஞ்சாமல் நகர்த்துகிறார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என்கிற கேள்விக்கு அவர் கொடுத்திருக்கிற பதிலே அலாதியானது (விகடன் வாங்கி படித்துப்பாருங்கள்). எனக்கு பயமென்றால் என்னவென்றே தெரியாது என்று நம் முதல்வர் பாணியில் பஞ்ச் டயலாக் கூட உண்டு.

திமுகவில் நடக்கிற வாரிசு அதிகாரப்போட்டியில் குஷ்பு ஒரு டார்க் ஹார்ஸாக இருப்பாரோ என்று கூட தோன்றுகிறது. திமுகவில் சகலரோடும் நட்பு பாராட்டுபவராகவும் யாரையும் பகைத்துக்கொள்ளாமலும் எதிர்ப்புகளில்லாமல் உயருகிறார். அவருடைய அபரிமிதமான வளர்ச்சி உடன்பிறப்புகள் சிலருக்கு எரிச்சலூட்டினாலும் ஒருகட்டத்துக்கு மேல் குஷ்பூவையும் சக உபியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டதாகவே தோன்றுகிறது. இணையமெங்கும் குஷ்புவை முன்வைத்து அதிமுகவினர் தொடுக்கிற விமர்சனங்களை புறங்கையால் தகர்த்து செல்கின்றனர் உடன்பிறப்புகள்.

கலைஞரும் கூட குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே அவருடைய மேடை நடவடிக்கைகள் காட்டுகின்றன. திமுகவின் எல்லா மேடைகளிலும் குஷ்புவுக்கு ஒரு நாற்காலி ஒதுக்கப்படுகிறது. அது தலைமைக்கு மிக நெருக்கமான நாற்காலியாகவே எப்போதும் அமைந்துவிடுகிறது. HISTORY REPEATS ITSELF என்று யாரோ சொன்னதற்கிணங்க.. எதுவும் நடக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. நமக்கும் திமுகவுக்கும் இது புதுசில்ல.. பழகினதுதான்.

11 comments:

Anonymous said...

இயக்கத்தின் வாரிசாக ?...  ஸ்தோத்திரம் FATHER.

Anonymous said...

தோழர் லக்கியிடமிருந்து, இரண்டொரு விஷயங்களிலாவது வேருபடவேண்டுமென்ற காரனத்திலாலேயே, (று' ண') நீங்கள் சும்மானாச்சுக்கும் திமுக எதிர்ப்புநிலையையும், அவர் ந்ருசிம்ஹரையும், பார்த்தசாரதியையும் பார்க்கப்போவதால், வெள்ளியங்கரி தனது பாதையை பரிசுத்த ஆவியின் பாலும், ஆகமத்தின் பாலும், வலுக்கட்டாயமாய் த்திணித்துக்கொண்டதென சம்ஷயமேனக்கு. (மெ). இப்படியே சென்றால், மேனன், ஹாசன், காமினி, போல் என்றேனுமொரு நாள், உண்மையாகவே, Gladstone அதிஷ் ஆகவோ இல்லை அதிஷா அருளப்பர் ஆகவோ உருபெறுவது திண்ணம். விரைவில்.

manjoorraja said...

குடும்ப உறுப்பினர்களை தாண்டி வெளியிலிருந்து ஒருவர் வந்து வெற்றியடைந்தால் மகிழ்ச்சியே.

ஆங்கில ஹிந்தி ஊடகங்களுடன் பேச திமுக சார்பில் ஒரு சரியான ஆள் கிடைத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. இது திமுகவுக்கு லாபமே.

"உழவன்" "Uzhavan" said...

ஸ்டாலின் ஆதரவாளர்கள் முற்றுகை-நடிகை குஷ்பு வீடு மீது தாக்குதல்! கார் உடைப்பு.

Anonymous said...

Next j in the making? Don't we have any other choice?

Unknown said...

பொறுத்திருந்து பார்ப்போம் , அவருக்கு எதுவும் நடவாமல் இருந்தால் சரிதான்

DiaryAtoZ.com said...

அதிமுகவில் குஷ்பு?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//திருச்சி: தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு வின் வீடு மற்றும் கார் தாக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்காக திருச்சி வந்திருந்த குஷ்பு மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குஷ்பு , வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு புகுந்த தி.மு.க.,வினர் குஷ்பு மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இன்று மாலை தி.மு.க., கட்சிக்கூட்டம் திருச்சியில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க குஷ்பு வரும்பட்சத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.//

அப்போ குஷ்பு அதிமுக...போக வாய்ப்பிருக்கும்போல!

perumal karur said...

தலைப்பு இந்த மர்மத்துக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு.....

Raashid Ahamed said...

ஆடுபோபியா(addphobia) இந்த வியாதியை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா ? சில பேரு தன்னை பத்தி செய்தி வரணுங்கிறத்துக்காக டவர்ல ஏறி குதிச்சிடுவேன்னு மிரட்டுறது, மிரட்டல் ஈமெயில் அனுப்புறது, புரளியை கெளப்புறது இப்படி சில வேலையை செய்வாங்க. அப்படி தான்...சரி நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்.

Raashid Ahamed said...

ஆடுபோபியா(addphobia) இந்த வியாதியை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா ? சில பேரு தன்னை பத்தி செய்தி வரணுங்கிறத்துக்காக டவர்ல ஏறி குதிச்சிடுவேன்னு மிரட்டுறது, மிரட்டல் ஈமெயில் அனுப்புறது, புரளியை கெளப்புறது இப்படி சில வேலையை செய்வாங்க. அப்படி தான்...சரி நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்.