12 February 2013

நாய்குட்டிகள் வேண்டுமா?
வீட்டுக்கு அருகில் ஒரு தெருநாய் சிலநாட்களுக்கு முன் எட்டு குட்டிகளை ஈன்றது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். சரியான சுட்டிகள். ரொம்பவும் அழகு!

வீட்டுக்கு எதிரேயிருந்த ஒரு சாக்கடை ஓரம்தான் அவை வசித்தன. குட்டிநாய்கள் பத்துநாட்களிலேயே பயங்கர சுட்டியாக மாறிவிட்டன. இதனால் அவை சாலைக்கு வந்துவிடுவதும், அருகேயிருக்கிற வீடுகளுக்குள் நுழைந்துவிடுவதுமாக இருந்தன.

இதனால் கோபமடைந்த சில வீட்டுக்காரர்கள் அதனை அடித்தும் துன்புறுத்தியும் வந்தனர். அதோடு வாகன ஓட்டி ஒருவர் ஒரு குட்டியின் மேல் வண்டியை ஏற்றி கொன்றும் விட்டார். ப்ச்.

பார்க்க பாவமாக இருந்ததால் மீதியிருந்து ஏழு குட்டிகளையும் அதன் தாயையும் எடுத்துக்கொண்டு போய் எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கிற காலி நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களுக்கு நடுவில் வைத்தோம். அங்கே அவை பாதுகாப்பாகவே இருந்தன. அம்மா அவ்வப்போது அந்த குட்டிகளுக்கு பாலும் பிஸ்கட்டும் கொடுத்து வந்தாள். (எங்கள் வீட்டில் ஏற்கனவே மூன்று பூனைக்குட்டிகளும் அதன் தாயும் இருப்பதால் அதோடு இவற்றை வைக்க முடியாத நிலை)

ஆனால் எத்தனை நாளைக்குத்தான் அவைகளை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதால் நான் ப்ளுக்ராசுக்கு போன் செய்து குட்டிகளை எடுத்துச்செல்ல இயலுமா என்று விசாரித்தேன். 50 நாட்களுக்கு பிறகுதான் முடியும் என்றும் சொல்லிவிட்டனர். போனவாரத்தில் அந்த குட்டிகள் 48 நாட்களை கடந்துவிட்டதால் மீண்டும் அழைத்துச்சொன்னேன். ஒருவாரம் கழித்து எடுத்துக்கொள்வதாக வாக்களித்திருந்தனர். நான் அதுவரை இதை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள் அம்மா.

இன்று காலை புதர் மண்டிக்கிடந்த நிலத்தின் ஓனர் ஒரு பொக்லைன் இயந்திரத்தோடு வந்து அந்த இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அதோடு நிலத்தையும் சமன் செய்துகொண்டிருந்தார். ஓடிப்போய் அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் நானும் போய் குட்டிகளை தேடி எடுத்துவந்து மீண்டும் பழைய இடத்தில் சேர்த்தோம். நான்கு குட்டிகள்தான் கிடைத்தன.

மீதி இரண்டை காணவில்லை. எங்கெங்கோ தேடியும் அகப்படவில்லை. அங்கே எங்களை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர்.. ஏம்ப்பா அந்த இரண்டுகுட்டிகளும் மண்ணுலயே பொதஞ்சிடுச்சிப்பா என்று மிகமிக சாதாரணமாக கூறினார். நானும் அம்மாவும் பதறிப்போய் ஒவ்வொரு இடமாக தோண்டி தோண்டிய பார்க்க.. இரண்டுகுட்டிகளும் மண்ணுக்குள் கிடந்தன.

ஒரு குட்டியை வெளியே எடுத்ததும் கீக்கீ என கத்திக்கொண்டு துள்ளிக்குதித்து ஓடியது. இன்னொன்றோ உஸ்உஸ் என வாயிலிருந்து காற்றைவிட்டுக்கொண்டு போராடிக்கொண்டிருந்தது. மருத்துவமனைக்கு எடுத்து செல்லலாம் என்று அம்மாவும் நானும் முடிவெடுத்தோம். இதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த பெரியவர்

''ஏம்ப்பா இதை காப்பாத்தி என்ன பண்ணப்போறீங்க.. இதென்ன படிச்சி கலெக்ட்ரா ஆகப்போவுது'' என்றாரே பார்க்கணும். அம்மாவுக்கு செம கோபம் வந்துவிட்டது.

''ஏன்யா நீ மட்டும் இன்னும் உயிரோட இருக்க.. படிச்சி தாசில்தாரா ஆகப்போற சாகறதுதானே'' என்றதும் அந்த பெரியவருக்கு முகமேயில்லை. அப்படியே நகர்ந்துபோய்விட்டார்.

அதற்குபிறகு அம்மாவும் நானும் அருகில் இருக்கிற ஒரு கால்நடைமருத்துவரிடம் எடுத்துசென்றதும் அவர் சிகிச்சை செய்து நாய்க்குட்டியை சரிபண்ணினார். ஆறுகுட்டிகளில் ஒன்றை பக்கத்து தெரு நண்பர் ஒருவர் தன் வீட்டில் வளர்க்க எடுத்துச்சென்றுவிட்டார். மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.

நாளைக்கோ நாளை மறுநாளோ அந்த ப்ளூக்ராஸ் காரர்கள் வந்து மீதி குட்டிகளையும் அதன் தாயையும் எடுத்துச்சென்றுவிட்டால் நன்றாக இருக்கும். அவர்களோ இன்று நாளை என ஏதாவது சாக்குசொல்லிக்கொண்டேயிருப்பது வருத்தமாக இருக்கிறது. இன்னும் ஐந்து குட்டிகள் உள்ளன.

இந்தகுட்டிகளை எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வளர்க்க நினைக்கிறவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம். dhoniv@gmail.com . என்னுடைய வீடு முகப்பேர் மேற்கில் இருக்கிறது.18 comments:

Anonymous said...

ப்ளூ க்ராஸ் நபர்கள் வரமாட்டார்கள் என்பதுதான் உண்மை. கவுன்சிலரிடம் லெட்டர் வாங்கணும் என்று அடுத்த காரணம் சொல்வார்கள். தட்டிக்கழிப்பார்கள். அவர்களுக்கு இந்தமாதிரி நிறைய்ய போன் கால்கள் வருகிறது. ஒன்று இல்லை இரண்டு என்றால் அதிகம் வற்புறுத்தினால் மட்டும்வருவார்கள்.சென்னை போன்ற நகரங்களில் நாய்களுக்கு கு.க. பண்ணுகிற திட்டங்கள் இருந்ததாக கேள்விப்படுகிறேன். இப்போது அதெல்லாம் இல்லை.நிறைய்ய நிறைய்ய குட்டிகள் அடிபட்டு இல்லை பசியில் செத்துப்போகும்

நானும் சென்னை வந்திருந்தபோது எங்கள் வீட்டு பக்கத்தில் இருந்த நாய்க்குட்டிகளை காப்பாற்ற போராடி தோற்றுவிட்டேன். வேறு ஏதாவதுதான் ஏற்பாடு பண்ணிக்கணும்... ;(((

Raashid Ahamed said...

நாய் குட்டிகளை பார்த்தாலே அவற்றை ஆசையோடு தூக்கிகொண்டு போகவேண்டும் என்பதற்காகவே அவற்றை கொள்ளை அழகோடு இறைவன் படைத்ததாக நினைக்கிறேன். அதென்னவோ குட்டியாக இருக்கும் போது அவற்றை யார் தூக்கினாலும் அவை விளையாடி கொஞ்சுவதை பார்க்க ஆசையாக இருக்கும். உங்க விலங்கு நேயம் ரொம்ப பிடிச்சிருக்கு. மனித நேயமே குறைஞ்சிகிட்டு வருது. இதுல நாய்க்குட்டிகள் பற்றி கவலைப்பட மக்களுக்கு ஏது நேரம்.

நாய் நக்ஸ் said...

Hats off athisha.....
For your mother
also a spl. HATS OFF.....

அஞ்சா சிங்கம் said...

நிச்சியமாக வரமாட்டார்கள் . மூன்று நாள் இடை விடாமல் போராடி பார்த்திருக்கிறேன் .
ஒரு நாயை காப்பாற்ற . ம்ம்ஹும்

Vetrivel Shanmugam said...

Athisa, Same to you ma
I have six puppies(same story like you ,one died already)
I have called blue cross so far more than 35 times and got complaint number 2 times but so far no response. Seriously clueless now what to do next ?

Vetrivel Shanmugam

ramachandranusha(உஷா) said...

அதிஷா, ஒரு அட்டை பெட்டியில் குட்டிகளை வைத்து, ஒரு ஆட்டோ பிடித்து ப்ளூகிராஸ்க்கு
கொண்டுப் போய் கொடுத்திருக்கிறோம். கூடவே உங்களால் இயன்ற ஒரு தொகையை ப்ளூகிராஸ்க்கு
கொடுங்கள். நீங்க கூப்பிட்டா எல்லாம் வர மாட்டார்கள்.

மதி said...

சின்ன வயதில் வீடிலிருன்ந்த எலி குட்டிகளை தோட்டத்தில் வைத்து பாது காத்து பின்பு ஏமாந்த நேரத்தில் நாய் தின்னறது ஞாபககம் வருகிறது.

Unknown said...

Hi Athisha, I am a volunteer at Blue Cross. First of all, I heartily congratulate you for saving lives of puppies & being feeding them. As far as the complaints, I would like to say that, as already some one had commented, there has been hundreds of calls coming each day to Blue Cross. They have limited infrastructure like 2-3 ambulances which go on rescues to areas decided upon early each day. And much preference is given to animals in dire need of help like an injured animal or mass killing of animals which have been happening every day at some place far of Chennai. So, these ambulances have to be redirected to those areas. The management have been trying to improve the situation, where by they are in a process of appointing area wise co-ordinators for animal rescue. While this might take some time as it has to implemented step by step, I am sure these conditions will improve very soon. Also, as another person commented here said, you can bring the puppies in an auto or with a friend's help to the shelter in Velachery & drop off the puppies there. The reason they don't take puppies before 50 days is that they need to get mother's milk & nutrition where as if separated earlier they might loose that opportunity. And also people should remember that Blue Cross is a hospital for animals and not just a shelter. Which means there will be much more infection with animals with all kind of injuries live there. So there is a more & more chance of the little ones catching up infection faster which leads to their death. In case you want to find the puppies home, there is an adoption drive happening this Sunday, 17th February 2013, conducted by Chennai Adoption Drive at 78/1, Mc Nochols Road, Chetpet, 10am-3pm. You can drop a mail to them at chennaiadoptiondrive@gmail.com asking for details or call 8939311148. Only thing is that you should have vaccinated the puppies before you bring them to the drive!! Regards - Karthik Dhandapani

நன்றி கார்த்திக். என்னால் ப்ளுக்ராசின் சிரமங்களை புரிந்துகொள்ள முடிகிறது. ப்ளூக்ராசுக்கு மட்டுமே கடமையிருப்பதாக நினைக்கவில்லை. நம் ஒவ்வொருவருக்கும் அந்த உயிரின் மீதான அக்கறைவரவேண்டும்.

உங்களுடைய தகவலுக்கு நன்றி

raja said...

வணக்கம்
எல்லா நேயங்களும் குறைந்து வரும் இந்த வேளையில் இந்த நாய்க்குட்டிகளின் மேல் இவ்வளவு பாசம் வைத்த உங்கள்மேல் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது (மனது உருகுகிறது) குறிப்பாக உங்கள் தாயார் அவரை நினைத்தால் கையெடுத்து கும்பிடவேண்டும்போல் இருக்கிறது உங்கள் பதிவை வாசித்தபின் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நினைக்க தோன்றுகிறது அதனால்தான் மனிதம் இன்னும் மண்ணில் நிலைத்து இருக்கிறது. எனக்கும் இந்த வீட்டு விலங்குகளின் மேல் கொள்ளை பிரியம் உண்டு குறிப்பாக நாய்க்குட்டி நான் மிகவும் தூரத்தில் இருக்கிறேன் (நாகர்கோவில்) அதனால் உங்கள் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். அந்த ஜீவன்களை நல்லபடியாக சேர்க்க என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன் புகாரி said...

நெகிழ்வான இடுகை- இந்த அதிசா என்ற மனுசனுடையது

venkatesan said...

எனக்கு நாய்களை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. சிறு வயதில் இரண்டு முறை தெரு நாயிடம் கடி வாங்கி வயிற்றில் ஏழு முறை ஊசி போட்டுக் கொண்டது காரணமாக இருக்கலாம். தவிர இரவில் ரோடில் போகும் பொது திடீரென்று குறைத்து பயமுறுத்துகின்றன. என் வீட்டருகில் எட்டு பத்து தெரு நாய்கள் உள்ளன. என் குழந்தை தனியாக கேட்டுக்கு வெளியே போய் கடி படுமோ என்று எப்போதும் பயமாக உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டால் நாய்களிடம் எனக்கு எந்த பகையும் இருக்காது.

Rathnavel Natarajan said...

உங்கள் நல்ல மனசுக்கு, முயற்சிக்கு வாழ்த்துகள்.
அருமையான பதிவு. நன்றி.

perumal karur said...

வெங்கடேசன் சாரை வழிமொழிகிறேன்..

அதிஷா உங்க செயல் நெகிழ்ச்சியடைய வைக்கிறது

Anonymous said...

Hats off to you Athisha, Your really great man.

Abuaadil

www.rasanai.blogspot.com said...

Dear Athisha
Hats off to you and your mother. manitha neyam unnathamaanathu enbathai unara mudikirathu. "LOVE IS GOD".
appreciating your laudable efforts to save the puppies and willing to give them a better future. great. simply great.
Santhosham endral enna endru theriyathavargal naaikuttigalai patri arinthirukkavillai -- famous quote in S. Ra's article.
2 years back my wife and i did a similar rescue operation and i fully agree with what D. Karthik from blue cross said. after 2 days of repeated calls they came to us and did the wonderful thing.
"Blue Cross is like a hospital / rescue places for animals and not a Shelter" yes thats what we had been told that time too. we should understand their services also.
he has given you an idea which you can do it on sunday. let all of us pray for the better future of the puppies and their mother too.
thanks for sharing a good thing athisha.
anbudan
sundar g rasanai chennai

Anonymous said...

Great post.Well done friend!

//நான்கு குட்டிகள்தான் கிடைத்தன.மீதி இரண்டை காணவில்லை//

-you mentioned the no of puppies as 7.What happened to the other one?

anyhow, I hope they are doing fine now. Hats off to your amma!