10 July 2013

டூ மினிட்ஸ்!



வரவர எந்த மரணமும் நான்கு மணிநேரத்துக்கு மேல் பாதிப்பதில்லை. மேகி பண்ணுகிற நேரத்துக்குள் வெகு எளிதாக மீண்டுவிட முடிகிறது
செய்திகளில் வருகிற மரணங்கள் அரைமணிநேரம் கூட தாக்குபிடிப்பதில்லை இயற்கை பேரழிவு, விபத்து, குண்டுவெடிப்பு , தற்கொலை, கொலை எதுவுமே.

இறந்துபோனவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் செய்தியை கடந்து செல்ல வேண்டியதாகிவிடுகிறது. நிறைய பேர் இறந்துபோனால் ஒரு நீண்ட அய்யயோ.. குறைவான எண்ணிக்கையெனில் ஒரு மினி அடச்சே.. மிக மிக குறைவென்றால் அய்யோ பாவம்..
ஒருவர்தான் என்றால் தாமாகவே தர்ம கணக்கில் சேர்த்துக்கொள்கிற மனது

பெற்றோர்,காதலி,நண்பர்,அண்டைவீட்டுக்காரர்,நாட்டுக்காரர்,தலைவர்கள்,தலைவிகள்,எழுத்தாளர்,நடிகர் என எல்லா மரணங்களுமே அதிகாலைச்செய்தித்தாளைப்போல அடுத்தநாள்
எங்காவது மூலைக்குள் முடங்கிவிடுகிறது.

''இறந்துபோனவர் எவ்வளவுதான் நெருக்கமென்றாலும்
அடுத்தவேளை பசித்துத்தொலைக்கிறது
தின்ன தின்ன மரணமும் துரத்துகிறது''

8 comments:

King Viswa said...

2 Minutes?

துளசி கோபால் said...

எல்லாம் அவசர யுகம்.

பிறப்பது, போவது இடையில் வாழ்வதுன்னு எல்லாம் அவசர கதியில் நடக்கும்போது நின்னு துக்கம் கொண்டாட யாருக்கும் நேரமில்லை:(

Anonymous said...

நச் நறுக் சூப்பர். நிஜம்

Muraleedharan U said...

thulasi
Dukham kondada ille

Muraleedharan U said...

thulasi
Dukham kondada ille

நிரஞ்சன் தம்பி said...

உண்மை தான், பழக பழக மரணமும் எளிதாகிவிடுகின்றன. வாழ்ந்தாக வேண்டுமே.

Raashid Ahamed said...

இப்போ நாடு இருக்குற நிலையில் மரணமெல்லாம் ஒரு பெரிய விஷயமா இருக்காது போல தெரியுது. இனிமே நாளைக்கு என்ன நடக்குமோ ? பெட்ரோல் கிடைக்குமா, கரண்ட் இருக்குமா, குழாயில தண்ணி வருமா இது தான் பெரிய விஷயமா இருக்கும். மக்கள் மனசு அந்த அளவுக்கு பக்குவ பட்டுடிச்சி.

T.N.MURALIDHARAN said...

அறிவும் சிந்தனையும் மனிதாபிமானத்தை மூட்டை கட்டுவதற்கே பயன்படுகிறது

There was an error in this gadget