19 February 2014

அம்மா பதிப்பகம்!
அம்மா மெஸ், அம்மா தண்ணீர், அம்மா காய்கறிகடை, அம்மா கேபிள், அம்மா மெடிக்கல்ஸை தொடர்ந்து அம்மா தியேட்டர் கூட வரப்போவதாக கிசுகிசுக்கிறார்கள்.

மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியில் இதுபோல வேறு என்னென்ன கொண்டுவரலாம்.


*அழகு மங்கையர் வாழ்வில் அல்லல்கள் நீக்கும் ''அம்மா ப்யூட்டி பார்லர்''

*வறுமையோடு மல்லுக்கட்டும் ஏழை எழுத்தாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ''அம்மா பதிப்பகம்''

*சரக்குக்கு சைட் டிஷ் வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைக்குடிமகன்கள் நலம் பெற ''அம்மா சுண்டல் மற்றும் மிச்சர் கடை''

*வெயில்காலமென்பதால் ஜில்லுனு குளிக்க ஆண்பெண் இருபாலருக்குமான ஜிலுஜிலு ''அம்மா நீச்சல் குளம்''

*நாளைய வாக்களர்களான இன்றைய குழந்தைகளை கவரும் வகையில் ''அம்மா ஐஸ்க்ரீம்ஸ்''

*அழகழகான கம்மல்கள், ஜோரான வளையல்கள் மினுமினுக்கும் மூக்குத்திகள் வாங்க ''அம்மா ஃபேன்ஸி ஸ்டோர்ஸ்''

*உடல் குண்டாகிவிட்டது தொப்பை பெரிதாகிவிட்டதென்கிற கவலை நீங்க உடல்மெலிது வனம்பெருக ''அம்மா உடற்பயிற்சி நிலையம்''

*முடி உதிர்கிறதென்கிற கவலை இன்றி வாழ இனி அமேசான் காடுகளின் அரியவகை மூலிகைகள் அடங்கிய ''அம்மா மேட்டின் மூலிகை தைலம் வழங்கும் நிலையம்''

*சமூகத்தின் குப்பைகளை அகற்றி குப்பைகளற்ற நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற ''அம்மா விளக்கமாறுகள் விற்பனையகம்''

*வாலிப வயோதிகர்களை கவரவும் கவ்வவும் விலையில்லா இன்கமிங் மலிவுவிலையில் அவுட்கோயிங் நாள் ஒன்றுக்கு 999 குறுஞ்செய்தி அன்லிமிடெட் ஃபேஸ்புக் ட்விட்டர் இணையசேவை இலவசமாக வழங்கும் ''அம்மா அலைபேசி சேவை ''

*சென்னைக்கு மிக மிக அருகில் செங்கல்பட்டு தாண்டி இருந்நூற்றம்பதாவது கிலோமீட்டரில் அனைவரும் நிலம் வாங்கி வீடுகட்டி உடனே குடியேற அழகழகான ''அம்மா வீட்டுமனைகள்''

*வறுமையில் வாடும் ஆண்கள் அழகாக மாற மலிவுவிலையில் கட்டிங் சேவிங் பெடிக்யூர் மெனிக்யூர் செய்துகொள்ள ''அம்மா சலூன்''

*பணமில்லை எனும் கவலை இனி இல்லை. கையில் தங்கம் இருந்தால் சிங்கம் போல் வாழலாம் இருக்கவே இருக்கிறது ''அம்மாபுரம் கோல்ட் லோன்ஸ்'' அடகுகடை


13 comments:

வடுவூர் குமார் said...

எவ்வளவு தொழிலதிபர்கள் உருவாகிறார்கள் என்று பாருங்க...கூடிய விரைவில் அம்மா பேப்பர் கூட வரலாம்!! :-)

Anonymous said...

அவசர காலத்துக்கு பயன்படும் அம்மா கழிவகம்

-பெரியஎலி டமணி குந்தையா

Desingh said...

பெத்த தாயை கூட இப்படி அம்மா அம்மா என்று சொல்ல தயங்கும் சில பக்கி ஒரு பெண்மணியை அம்மா என்று சொல்லி காலை கழுவி குடிகிரர்கல். மானங்கெட்ட சில மக்கள்...

சலுகைகள் தரலாம், ஆனால் அம்மா என்று பெயர் வைத்து மறைமுகமாக சந்தோசம் காண்பது முட்டாள் தனம்...

Karthik Nilagiri said...

//அம்மா பதிப்பகம்// :) :)

Desingh said...

அம்மா விலங்கியல் பூங்கா (ZOO) இப்படியும் வரலாம். அப்படி வந்தால் அதில் ஒட்டு மொத்த அரசியல்வாதிகள் தான் இருப்பார்கள்... ஹா ஹா ஹா

Anonymous said...

May ur dreams come true Athisha.........,

Anonymous said...

Ammakati Biriyani kadai...Opposite to Thalappakatti Biriyani

Anonymous said...

amma minmayanam,
amma railway station
amma beeda kadai
amma bank
amma cricket team
amma Puncture Kadai

Raman A v said...

Tamil padam - Oru Sooravali Kilambiyade!!! pattu than ninaivukku varudu. Antha ore pattile Siva ella industry / public services todangiduvaru!!! Pakkalam namakku innum rendu varusham irukke!!

Venkatesan said...

// amma Puncture Kadai

Ha ha ha! Good one!

Unknown said...

இதை நான் படிக்கும் போது தமிழ்படத்தில் சிவா ஒரே பாட்டில் முன்னேறுவதை போல இருக்கு

அதில் siva airport
siva hospital
siva mortuary னு வரும் அதேபோல் இருக்கு

k.rahman said...

amma beach, amma cremation ground, amma railway station, amma airport, amma mental hospital, amma condam vending machine...

idea courtesy: tamil padam

Raashid Ahamed said...

அம்மான்னு வச்சாலும் சரி அய்யான்னு வச்சாலும் சரி ! மக்களுக்கு பயனளிக்கிறதா ? ஏழைமக்கள் சாமானியமக்களுக்கு உபயோகமா அப்படீன்னு தான் பாக்கணும். பாக்கெட் கவர்ல நாய் படம் போட்டிருக்கு அதனால நான் கடலை மிட்டாயை திங்க மாட்டேன்னு சொல்றது தப்பு.