19 August 2014

கருவாட்டு நாற்றம்
கோயம்பேடு காய்கனி சந்தையில் விதவிதமான கருவாடுகள் மிக அதிக அளவில் விற்கப்படுவதாகவும் இதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அஷௌகர்யம் உண்டாவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தின பத்திரிகை குமட்டிக்கொண்டே செய்தி வெளியிட்டது.

1996ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஷட்டப்படி காய்கறி சந்தையில் காய்கறி மட்டும்தான் விற்கப்படவேண்டும் என்கிற சட்டத்தை மீறி இப்படி ஷைவ உணவு ஷாப்பிடுபவர்களுக்கு ஷங்கடம் வரும்படி கருவாடு விற்பது முறையா என்று அந்த செய்தி நீண்டிருந்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சியினர் கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து பல லட்சரூபாய்.. மன்னிக்கவும் ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள பல ஆயிரம் டன் கருவாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ஷைவ உணவு ஷாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வருங்காலத்தில் இங்கே கருவாடு விற்றால் கடை உரிமத்தையே ரத்து செய்துவிடுவோம் என்கிற மிரட்டலும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக கருவாடு விற்ற 18 கடைகளில் முதலாளிகளுக்கும் விடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இருப்பத்தெட்டு ஆண்டுகளாக நானும் என்னுடைய குடும்பத்தினரும் கருவாட்டினை விரும்பி உண்டு வருகிறோம். எனக்கெல்லாம் கருவாடு என்பது என்னோடே வளர்ந்து ஒரு தம்பி மாதிரி. தினமும் என்னோடு இருந்திருக்கிறான். ஒரு சட்டி பழைய சோற்றை கூட ஒரு துண்டு கருவாடிருந்தால் உற்சாகமாக சாப்பிட்டுவிட முடியும். காலை ப்ரேக்ஃபாஸ்ட் அப்படித்தான் நமக்கெல்லாம் இருந்திருக்கிறது. கறிசோறுதராத ருசியை கருவாட்டுக்குழம்பு தந்துவிடும்.

கோவையில் உக்கடம் பகுதியில் கருவாடுக்கென்றே பிரத்யேகமான சந்தை உண்டு. அங்கு போனால் உலகின் எவ்வகை கருவாடும் சல்லிசு ரேட்டில் கிடைக்கும். அம்மாவுக்கு நங்கு கருவாடு, எனக்கு நெத்திலி, தங்கைக்கு துண்டுகருவாடு , வவ்வா, கொடுவா அவா இவா என கருவாடுகளில் நிறைய வெரைட்டி உண்டு.

சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்ட பின் இந்த கருவாடு சந்தையை ரொம்பவே இழந்திருந்தோம். அண்ணாச்சி கடையில் கூட பாக்கெட் கருவாடு கிடைக்கும். தக்னியூண்டு துண்டு வெரி சுமால் கருவாடு இரண்டு பீஸ் ஐந்து ரூபாய் என்று அநியாய விலைக்கு விற்றார்கள். அதைவாங்கி குழம்பு வைக்கவும் முடியாது. சுட்டுதிங்கவும் முடியாது. நல்ல ஃப்ரஷ்ஷான நெத்திலி கருவாடு கிடைக்காது. நங்கு கருவாடு கிடைக்காது. அம்மாவுக்கு தினமும் சாப்பாட்டோடு ஒரு சின்ன துண்டு கருவாடு இல்லையென்றால் ஒருவாய் கூட உருப்படியாக இறங்காது. அம்மாவின் வருத்தம் அதிகமான ஒருநாளில் பக்கத்துவிட்டு ஆன்ட்டி ஒருவரது தகவலின்பேரில் கி.பி.2007 தொடங்கி கோயம்பேடு சந்தையில் கருவாடு வாங்கத்தொடங்கினோம். (வடசென்னையில் நிறைய கருவாட்டு சந்தைகள் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் முகப்பேரிலிருந்து அம்மாவை அழைத்துப்போய் போய்வருவதற்குள் தாவூ தாராந்துடும். வானகரம் மீன் சந்தையில் விற்கிற கருவாடுகளில் சுவை குறைவு விலை அதிகம். பேரம் பேசி மாளாது.)

கோயம்பேடு காய்கனி சந்தையில் இருக்கிற நூற்றுக்கணக்கான கடைகளில் வெறும் பத்து பதினைஞ்சு கடைகளில்தான் கருவாடு விற்கப்படும். மிக குறைந்த அளவிலேயே விற்கப்படும். அதுவும் மளிகை கடைகாரர்களுக்கு விற்க பாக்கெட்டில் அடைத்துவைத்த கருவாடுகளே கிடைக்கும். ஊரில் விற்பதுபோல நன்றாக குவித்து வைத்து பரப்பியெல்லாம் மணக்க மணக்க விற்கமாட்டார்கள். கருவாடுக்கென்று இருக்கிற கொஞ்ச நஞ்சமரியாதையையும் உறிஞ்சிவிட்டுத்தான் இங்கே விற்கிறார்கள். கருவாட்டின் மணம் பார்க்காமல் எப்படி வாங்கவது. இருந்தாலும் கோயம்பேடுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அங்குதான் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வது நம்முடைய வழக்கம்.

இந்த கருவாட்டு கடைகளில் வாசனை சுத்தமாக இருக்காது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இருந்து நான் கண்டதில்லை. அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக்கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் என்னமோ இந்த நாலுபாக்கெட் கருவாட்டினால்தான் நாட்டுக்கு தீங்கு விளைந்துவிட்டது போல… அதைதான் இப்போது துப்பறிந்து கண்டறிந்து செய்தி வெளியிட்டு ஷூத்தப்படுத்தியிருக்கிறார்கள். கருவாட்டை விற்று விதிமுறைகளை மீறிவிட்டார்களாம்?

என்னிடம் இப்போது தொக்கி நிற்கிற முதற்கேள்வி ‘இனி நானும் என் தாயும் கருவாட்டுக்கு என்ன செய்வோம்? எங்க போவோம்...?’ என்பதுதான். நாளை முதல் மீண்டும் அந்த அண்ணாச்சி கருவாடு விற்றால் (அவரும் கோயம்பேட்டில் கொள்முதல் பண்றவர்தான்) வாங்கி ஒரு துண்டோ இரண்டுதுண்டோ வாங்கி நக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

ஒருவேளை இனி ஷூத்த பத்தமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி சாப்பிடப்போகிற ஷைவ பட்சிணிகள் ஒன்று சேர்ந்து முகப்பேர் பக்கம் என்னை போன்ற ஏழை கருவாட்டு ப்ரியர்களுக்காக ப்ரத்யேக சந்தை கட்டிக்கொடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது.

20 comments:

Muthuram Srinivasan said...

இவாள் தொல்லை எங்க போனாலும் தாங்க முடியலை ஓய்...நயமான கருவாட்லேர்ந்து வர அந்த வாஷநையோட அரும இவாளுக்கு எப்போ தான் தெரியுமோ அந்த பகவானுக்கே வெளிச்சம். ப்ரும்மஹத்திகள்...மீனுக்கு மோட்ஷம் குடுக்குற கடமைலேர்ந்து தப்புனதுக்காக பகவான் நம்மைத்தான் கும்பிபாஹம் பன்னுவானாக்கும். இதுகளுக்கு என்ன வந்தது.தானும்*******தள்ளியும் *******...ஈஷ்வரா கருவாடில்லாமல் நான் இனி என்ன கஷ்டப்பட விதிச்சிருக்கோடா யப்பா....

Anonymous said...

கே.கே. Nagar எம்.ஜி.ஆர் நகர் Market ல kedaikkum, இல்லைன்னா Forum Mall Auchan ல kedaikuthu

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா, ஆசையாய் சாப்பிடுகிற கருவாட்டிற்கும் பிரச்சினையா

Victor Suresh said...

Flipkart போன்று Fishkart ஒன்று தொடங்கி ஆன்லைன் கருவாடு வியாபாரம் செய்தால் நம்மைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ஹலால் உணவு உண்கிற முஸ்லீம்கள் தேவலாம் போலிருக்கு.. நீ ஒரு பக்கம் பன்றி இறைச்சியினை விற்றுக்கொள் என்று மார்கெட்டில் ஒரு வரிசையை அவர்களுக்கென ஒதுக்கிவிட்டு, மற்ற எல்லா இடங்களிலும் எல்லாப்பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் விற்பனை செய்து எல்லோரும் வாழ்வார்கள். பல இனங்கள் வாழும் எங்கள் நாட்டில் (மலேசியா) அதுவும் முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாட்டில், இப்படி ஒரேடியாக சாக்குபோக்குகள் சொல்லி யாருடைய வயிற்றிலும் அடிக்கமாட்டார்கள். ஒரே மொழி ஒரே இனமாக ஒரே தேசியமாக வாழுபவர்கள் என்னவெல்லாம் சாக்குக்குள் சொல்லி வியாபாரிகளில் வயிற்றில் அடிக்கின்றார்கள் பாருங்கள்... நகைச்சுவையாக சொல்லியிருப்பினும், வாசிப்போரை கோபமூட்டுகிற கட்டுரை இது..

Anandhazhwan said...

There is one big party in TN that
thinks they are talking smart by
ridiculing Hindus and in specific,
a caste, but ended up only to get
neglected and disrespected by
everyone. Your post reminds me of
them and no wonder that no one is
posting replies on your posts
these days.

chandrasekharan said...

Was it necessary to tinge the write up with a anti brahmin slant?

Anonymous said...

சூப்பரு பதிவு வினோ....

"பாப்ஸ்" தொல்லை பெரும் தொல்லையாய் போச்சு. நாட்டுல எல்லாம் விதி (rule) படி நடப்பது போலவும், கருவாடு விற்பது தான் பெருங்குற்றம் போல பேசுவானுக பாப்பாண்டிகள். கூடிய விரைவில் அசைவம் சாப்பிட தடை கேட்டாலும் கேப்பாணுக.

தங்கராசு.

Anonymous said...

Skywalk pooninga na star bazaar la kedaikkum...

செல்வமுத்து குமரன் said...

நகைச்சுவை என்று எண்ணிக்கொண்டு வேண்டுமென்றே 'ஷ' உபயோகம் செய்திருக்கும் உங்களுக்கு மத்த
மதத்தினரின் வழக்கத்தையும், விதி மீறலையும், தவறுகளையும் சுட்டிக் காட்ட பந்துகள் உள்ளதா? இதெல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கு பொழுது போக்கு இல்லையா? secular, neutrality என்று எண்ணிக் கொண்டு அறியாமையால் செய்யும் உங்களைப் போன்றோரைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது

வேலுச்சாமி பிள்ளை said...

vijayalakshmi, we know the sorry state of affairs of Hindus in Malaysia. In india, a christian or muslim or person from any religion can become prime minister or president. With that number of Hindus living there, did malaysia have a person other muslim as prime minister??? It is only because of psedo seculars like you and athisha, people are provoked to fight. India is a great country that encompasses people of all religion through love.

murugan said...

I'm just thinking, if a brahmin writes such a 2nd rate nakkal blog about the non-veggie behaviour of other community. whenever I come to you blog, I'm getting bombarded by your 3rd rate sarcasm.

வாசல் said...

http://vaasalmagazine.blogspot.in/2014/07/blog-post_23.html

Muthuram Srinivasan said...

முருகன் அவர்களே! வேறு பிரிவைச்சேர்ந்தவர்கள் இந்த மாதிரியான தொல்லைகளை தந்தால் அவர்களும் சுட்டிக்காட்டப் படுவார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதிலெல்லாம் அவாளின் கைங்கர்யம் தான் எப்போவும் தூக்கல். அதனால்தான் இப்படி நடந்துவிட நேர்ந்து விடுகிறது... மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.கருவாட்டுக்கு தடையாம்ல,..தடை...யாருகிட்டே... உடல் மண்ணுக்கு, உயிர் கருவாட்டுக்கு...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக்கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ள முடியும். //
சத்தியமான வார்த்தை.
ஆகஸ்ட் 2013 ல், தமிழகம் வந்தபோது, ஆசைப்பட்டு பார்க்கச் சென்றேன். போதும் இப்போதும் அந்த
மணத்தையும்,அழுகிய காய்கறிச் சகதி, அங்கு அலையும் இலையானையும் மறக்கமுடியவில்லை.
கோவிலுக்கு பூக்கூட அங்கு வாங்கிச் செல்லுவார்களாம். நம் தெய்வங்கள் பொறுமை மிக்கது.
அங்கு கருவாட்டால் தூய்மை கெடுவதென்பது சற்று அதிகம். கூறுவோர் கோயம்பேடு சந்தைப் பக்கம்
செல்லாதோராக இருக்கலாம்.
நம்ம அம்மா கோழி விரும்பி உண்பார் என வாசித்துள்ளேன். அவர் கருவாடும் உண்ணப் பழகவேண்டுமென ஆண்டனைப் பிராத்திக்கிறேன்.
சுட்ட கட்டாக்கருவாட்டில் யாழ்பாண முறையில் ஒரு சம்பல் செய்து கொடுக்க உண்பாராயில், கருவாட்டுக்கு எதிரான அதிகாரிகள் அனைவரையும் தண்ணியில்லாக் காட்டுக்கு அனுப்பிவிடுவார்.
தமிழகத்தில் எது விதி முறையுடன் நடக்கிறது.

Anonymous said...


இதே கதைதான் இங்கயும்....

http://vimarisanam.wordpress.com/2014/08/18/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/

Anonymous said...

தேஷ் துரோஹி. கருவாடு சாப்பிடுவது அவ்வளவு முக்கியம்னா பாகிஸ்தானுக்கு ஓடிப் போய்டு அப்படின்னு கூடிய சீக்கிரம் சொல்லிடுவாங்களோ?

Rathnavel Natarajan said...

அருமை.

Muraleedharan U said...

Karuvaadu sudum vaasathai solla vittome !!!!

Anonymous said...

http://www.vinavu.com/2014/08/21/cyber-world-in-support-of-karuvadu/

Karuvadu - parti - linkage