20 April 2015

8 Points - ஓ காதல் கண்மணி1 - மணிரத்னத்தின் ‘’தாலி’’ ட்ரையாலஜியில் இது கடைசி படம் போல! அவ்வரிசையில் முதல் படம் மௌனராகம், தாலிகட்டிக்கொண்டு ஒரே வீட்டில் பிரிந்து வாழ்பவர்களின் கதை. அடுத்து அலைபாயுதே தாலிகட்டிக்கொண்டு தனித்தனி வீட்டில் வாழ்பவர்களின் கதை. ஓகா கண்மணி தாலிகட்டிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்பவர்களின் கதை! மற்ற படங்களை போலவே இதிலும் கடைசியில் இருவரும் ஹேப்பி எவர் ஆப்டராக வாழவே செய்கிறார்கள். இப்படத்திலும் கடைசியில் தாலியே வெல்கிறது.

2 - படம் ஓடும் போது யாருமே கைத்தட்டவில்லை. ஆனால் திடீர் திடீர் என்று ஊ….. ஏ…. ஓ…. என்று விதவிதமாக கத்திக்கொண்டேயிருந்தார்கள். நமக்கோ அச்சத்தில் நெஞ்சை கவ்வுகிறது. இந்த கூச்சலுக்கான காரணங்களையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் படத்தில் அப்படி கத்தி கூப்பாடு போடுகிற அளவுக்கு காட்சிகளும் இல்லை. இத்தனைக்கும் முப்பான் முருகன் வழிவந்த தமிழர்கள் கத்தி ஆர்பரிக்கிற லிப்டூலிப் முத்தக்காட்சி கூட இல்லாத சுத்தமான மயிலாப்பூர் மாமிமெஸ் படம் இது. ஆனால் வெளியே இணையத்தில் இது கலச்சாரத்திற்கு எதிரானது, ஆபாசம் அது இது என்று ஏதோ செக்ஸு பட ரேஞ்சில் பில்டப் மட்டும் ஓவராக இருக்கிறது. நவநாகரீக இளைஞிகள் படத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் விடாமல் ‘’உற்சாகமாக’’ கத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

3 - படத்தில் பிரகாஷ்ராஜ் கதையை மட்டுமே தனியாக படமாக எடுத்து ஹாலிவுட்டுக்கு அனுப்பியிருந்தால் ஆஸ்கார் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆஸ்கருக்கும் அல்சைமர் மாதிரியான வினோத வியாதியஸ்தர்களின் காதல்,உறவு தொடர்பான படங்கள் என்றால் விருதை அப்படியே தூக்கி கொடுத்துவிடுகிற வழக்கமுண்டு. லீலாதாம்சனின் வசனங்களும் அவருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் இதுமாதிரியான ஒரு பாத்திரம் வரும் (நாயகி ஜமுனாவின் அம்மா) அது எந்நேரமும் இப்படி அடிக்கடி மறந்து மறந்து போய் எதேதோ நடுநடுவே பேசிக்கொண்டிருக்கும்.

4 - கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு கட்டிப்பிடித்த படி பேசுவது, பழைய பாணி கட்டடங்களில் மரகட்டிலில் மேற்படி சமாச்சாரங்கள் பண்ணுவது, பைக்கில் கூலர்ஸ் போட்டுக்கொண்டு காதலியோடு வளைந்து வளைந்து வண்டி ஓட்டுவது, கடற்கரையையொட்டி கத்திக்கொண்டே ஜீப்பில் செல்வது என மணிரத்னம் தன் முந்தைய படங்களிலிருந்தே நிறைய ரொமான்டிக் ஐடியாக்களை பிடித்திருக்கிறார். அட நாயகனும் நாயகியும் ஒரு லாட்ஜில் தங்கினாலும் அங்கேயும் மரக்கட்டில்தான் போட்டிருக்கிறார்கள் என்பதும், நாயகியின் ஹாஸ்டலிலும் மரகட்டில்தான் என்பதும் வாட் ஏ கோ இன்ஸிடன்ஸ்!! படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் பத்துநாட்கள் ஜாலியாக சந்தோஷமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள், அடுத்த பத்து நிமிடங்களுக்கு ய்யய்யா யிய்யய்யா உய்யயா கொய்யா என ரோடுகளில் கத்திக்கொண்டே அலைகிறார்கள். சந்தோஷமா இருக்காய்ங்களாம்!

5 - திரையரங்கில் எங்கெங்கு காணினும் இளம்பெண்கள். கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக குவிந்திருந்தார்கள், எங்கு பார்த்தாலும் லட்டுலட்டாக குமரிகள் கூட்டம். எல்லோருமே பள்ளி-கல்லூரி மாணவிகள்தான். தாராளமாக படத்தின் போஸ்டர்களில் ‘’தாய்மார்களின் பேராதரவுடன்’’ என்று போட்டுக்கொள்ளலாம்! துல்கர் சல்மான் பெயர் போடும் போதும் அவரை காட்டும்போதும் பெண்கள் அலறி குலுங்கி துடியாய் துடிக்கிறார்கள். அவரும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் சட்டையில்லாமல் வருகிறார், பேண்ட் இல்லாமல் வருகிறார், ஜட்டியோடு வருகிறார்… அதையெல்லாம் காண சகிக்காமல் கண்ணை பொத்தின்ட்டேன்! ஆபாசம். அலைபாயுதே காலத்தில் மாதவனுக்குதான் கடைசியாக இப்படி பிள்ளைகள் துடித்தது. அதற்குபிறகு மீண்டும் துடிதுடிக்கவைக்க மணிசார்தான் இன்னொரு படமெடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் காலத்தின் கோலம். துல்கருக்கு அப்படியே மலையாள நடிகர் ப்ருதிவிராஜ் குரல்.

6 - ஒரு இளம் மங்கையோடு லிவிங்டுகெதரில் இருக்கப்போகிறேன் என்று ஹவுஸ் ஓனரிடம் வந்து சொல்கிறான் நாயகன். ஹவுஸ்ஓனர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள், கெடுபிடி பேர்வழி, ஆச்சாரமான அனுஷ்டாங்கமானவர். அப்படிப்பட்டவர் லிவிங்டுகெதர் என்றால் எப்படி ஒப்புக்கொள்வார்? ஹவுஸ்ஓனர் அதெல்லாம் முடியாது இடத்தை காலிபண்ணுங்கோ என்று திட்டுகிறார், அந்த நேரத்தில் நாயகி பாட ஆரம்பிக்கிறார், ஒரே கர்நாடிக் சங்கீதம்… சசரிரீகமபத நிஸ சரிக சரிக ரிகம ரிகம என்று அவர் பாட ஹவுஸ்ஓனர் அப்படியே மெர்சலாகி லிவிங்டூகெதருக்கு ஒப்புக்கொள்கிறார்! கர்நாடிக் சங்கீதம்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அக்காட்சி நமக்கு விளக்குகிறது. அந்த நொடியில் ''நீங்க வெறும் கணபதியா இல்ல, வடிவேலு அக்காவை பிக்கப் பண்ணின பேக்கரி ஓனர் கணபதி ஐயரா என்கிற கேள்வி படம் பார்க்கிற சராசரி ரசிகனின் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது.

7 - படத்தின் தொடக்கத்தில், பெயர் கூட சரியாக தெரியாத ஒருவனுடன் லாட்ஜில் ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு, தன்னந்தனியாக குடும்பத்தை விட்டு வாழ்கிற தைரியமான பெண்ணாக காட்டப்படுகிறார் நாயகி. ஆனால் படம் செல்ல செல்ல அப்படியே மொக்கையாகி க்ளைமாக்ஸ் நெருங்கும் போது காதலனின் காலில் விழுந்து ‘’ப்ராணநாதா என்னை கைவிடாதீரும்’’ என்று கலங்கி கண்ணீர் வடிக்கிறார். என்னை நல்லா பாத்துப்பீயா பாத்துப்பீயா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியில் நாயகனும் நாயகியும் ‘’வயசான காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்று கண்டுபிடிக்கிறார்கள். அந்த கருமத்தை ‘’ஏன் லிவிங் டூ கெதரிலேயே செய்ய முடியாதா’’ என்கிற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை!

8 - லிவிங் டூ கெதர் என்பது கமிட்மென்ட் இல்லாமல் நேரம்காலம் பார்க்காமல் காசு கொடுக்காமல் செய்யக்கூடிய கஜகஜா என்று ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறார் மணிசார். அதில் இருக்கிற எந்தவித உட்குழப்பங்களையும், பாசநேசங்களையும், உறவுச்சிக்கல்களையும் பற்றி ஒன்னாரூபா அளவுக்கும்கூட படத்தில் பேசவில்லை. கமிட்மென்ட் இல்லாமல் மேட்டர் பண்ணிக்கொண்டே இருக்கிற இருவருக்கும் எப்போது காதல் வந்தது எப்படி வந்தது என்பதுவும் அது எப்போது தங்களுடைய கொள்கைகளை கைவிட்டு கல்யாணம்வரைக்கும் சிந்திக்க வைத்தது என்பதையும் வலுவாக காட்டியிருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு க்ளைமாக்ஸில் ஞானதோயம் வந்து இந்துதர்மத்தையும் இந்திய பண்பாட்டையும் காக்கும் வகையில் எந்த கஜகஜாவாக இருந்தாலும் தாலி கட்டிட்டு பண்ணட்டும் என்று மேரேஜ் செய்வித்து நமக்கு நன்னெறியையும் போதிக்கிறார்!

15 comments:

மெக்னேஷ் திருமுருகன் said...

ஹா ஹா ஹா . மணிய என்னங்க்ணே மரண ஓட்டு ஓட்றிங்க.. இதுதான் நா படிச்சதிலேயே படத்தோட பெஸ்ட் ரிவியு

Nat Sriram said...

பட்டாசு !! அந்த தண்ணீர் கேரக்டர் ஜமுனாவின் அம்மா இல்லை. டீச்சரின் மாமியார் கேரக்டர் ஒன்று திண்ணையில் கரிச்சுக்கொட்டும். அதை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

காரிகன் said...

1.அவரும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் சட்டையில்லாமல் வருகிறார், பேண்ட் இல்லாமல் வருகிறார், ஜட்டியோடு வருகிறார்… அதையெல்லாம் காண சகிக்காமல் கண்ணை பொத்தின்ட்டேன்! ஆபாசம். ----- பாவம் ரொம்ப நல்ல பையனா வளர்ந்துட்டீங்க போல. சன்னி லியோனே பாலிவுட்டில நடிக்க வந்தாச்சு. நீங்க எந்த காலத்தில இருக்கீங்க?

2. படத்தில் பிரகாஷ்ராஜ் கதையை மட்டுமே தனியாக படமாக எடுத்து ஹாலிவுட்டுக்கு அனுப்பியிருந்தால் ஆஸ்கார் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ----அபத்தமான வரிகள். கொஞ்சம் ஆஸ்காரை விட்டுடுங்க.ப்ளீஸ்.

3.நவநாகரீக இளைஞிகள் படத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் விடாமல் ‘’உற்சாகமாக’’ கத்திக்கொண்டேயிருக்கிறார்கள். ---ஒன்றுமேயில்லை என்பது உங்களுக்கு. அவர்களுக்கு அப்படியில்லாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை தலைமுறை இடைவெளி?

4.அந்த நொடியில் ''நீங்க வெறும் கணபதியா இல்ல, வடிவேலு அக்காவை பிக்கப் பண்ணின பேக்கரி ஓனர் கணபதி ஐயரா என்கிற கேள்வி படம் பார்க்கிற சராசரி ரசிகனின் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது. ----நகைச்சுவை என்ற பெயரில் இருக்கும் நாலாந்தர காமெண்ட்.

5. லிவிங் டூ கெதர் என்பது கமிட்மென்ட் இல்லாமல் நேரம்காலம் பார்க்காமல் காசு கொடுக்காமல் செய்யக்கூடிய கஜகஜா என்று ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறார் மணிசார். ---கலவியலை இப்படி சொல்வது தரைடிக்கட் காமடி. அது அவர்கள் சுதந்திரம் என்று விட்டுவிடுங்களேன். உங்களுக்கு என்ன வந்தது?

6.ஆனால் இயக்குனருக்கு க்ளைமாக்ஸில் ஞானதோயம் வந்து இந்துதர்மத்தையும் இந்திய பண்பாட்டையும் காக்கும் வகையில் எந்த கஜகஜாவாக இருந்தாலும் தாலி கட்டிட்டு பண்ணட்டும் என்று மேரேஜ் செய்வித்து நமக்கு நன்னெறியையும் போதிக்கிறார்! --- இருவரும் பிரிந்துபோவது போல முடித்திருந்தால் எல்லாத்தையும் முடிச்சுட்டு ரெண்டும் போகுது பாரு. பாரத பண்பாட்டையே மணிரத்னம் சிதைசுட்டார் என்பீர்கள். இல்லையா?

7.கமிட்மென்ட் இல்லாமல் மேட்டர் பண்ணிக்கொண்டே இருக்கிற இருவருக்கும் எப்போது காதல் வந்தது எப்படி வந்தது --- காமம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் இயல்பான உணர்ச்சி. அதை சம்பந்தப்பட்ட இருவர் பகிர்ந்துகொள்வதில் யாருக்கு என்ன இழப்பு என்று புரியவில்லை. அதுவும் மேட்டர் என்று எழுதுவதெல்லாம் ஒரு தரமான எழுத்தாளரின் வார்த்தைப் பிரயோகம் இல்லை.

8.ஆனால் படம் செல்ல செல்ல அப்படியே மொக்கையாகி க்ளைமாக்ஸ் நெருங்கும் போது காதலனின் காலில் விழுந்து ‘’ப்ராணநாதா என்னை கைவிடாதீரும்’’ என்று கலங்கி கண்ணீர் வடிக்கிறார்.----காதல் ஒரு கமிட்மென்ட். அது வரும் வரை நாயகிக்கு அந்த எண்ணம் வராமல் இருந்திருக்கலாம். காதலோடு சுய பாதுகாப்பு பற்றிய சிந்தனை வருவது இயற்கையானது.

அதிஷா,

உங்களுக்கு என்ன ஆச்சு? இப்படி பிட்டுப் பட ரேஞ்சுக்கு விமர்சனம் உங்களிடமிருந்து வரும் என்றோ மேட்டர், கஜகஜா, அக்காவை பிக்கப் பண்ண போன்ற "இலக்கியத் தரமான" தமிழ் உங்களுக்கு சகட்டுமேனிக்கு வரும் என்றோ நான் இதுவரை எண்ணவேயில்லை. பாராட்டுக்கள்.

விமர்சனம் செய்வது உங்கள் உரிமை. ஆனால் உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ளாமல் அதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை செய்கிறேன் பார் என்று இத்தனை தூரம் கீழே இறங்கியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

மேலும் இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் கொண்டாடும் இந்தப் படத்தை நீங்கள் இப்படி வாருவது அவர்கள் பார்வை உங்களுக்கு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

Maybe it's not a great movie but a little good enough for a decently worded write-up.

I know my reply to your post is so absurd. So is your post.

Anonymous said...

For me it remained "Friends with Benefits" movie.
But that romantic comedy movie has more justification for climax.

Anonymous said...

// அந்த கருமத்தை ‘’ஏன் லிவிங் டூ கெதரிலேயே செய்ய முடியாதா’’ என்கிற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை!//


சிறப்பான விமர்சனம்!

Raashid Ahamed said...

மணியை ஓட்டுவதில் தப்பே இல்லை ! மனுஷன் திருந்துற மாதிரி தெரியலை. லிவிங் டுகதர் என்ற கேவலாமான நம் பண்பாடு கலாச்சாரத்தை பாழ்படுத்தகூடிய ஒரு கருமத்தை படமா எடுத்ததை என்னன்னு சொல்றது. அதை பாக்குற இளைஞர்களும் இளைஞிகளும் எதிர்காலத்தில் என்ன நினைப்பாங்க ?

வருண் said...

Karigan Sir: You are over-reacting. I agree this review is one-sided. But it is a FACTS_FILLED review. Your affection and love and respect for MR does not allow you to see the facts. That's all.

Here is something for you..

***அந்த கருமத்தை ‘’ஏன் லிவிங் டூ கெதரிலேயே செய்ய முடியாதா’’ என்கிற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை!***

This is a VERY valid point. The couple can do the same, when living together too. How does "marriage" makes a difference in "love" and "affection" a couple have for each other.

I can interpret what Mani is doing here for selling his "product" just like a businessman. You would not like it for sure!

Everyone has weakness. I see yours now because you love and respect MR so much. You conveniently overlook his "mistress's" outrageous criticism as well. She is a critic for making filthy money. The reviewers in net are NOT MAKING MONEY and they are more HONEST than what she has been doing in TV reviews" for filthy money.

காரிகன் said...

வருண்,

மணிரத்னத்தை நான் உயரே தூக்கிப் பிடிப்பது இல்லை. மணிரத்னம் அலைகளை உருவாக்கிக்கொண்டிருந்த 80களில் நான் அவரை என் நண்பர்கள் வட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். சொல்லப்போனால் எல்லோரும் சிலாகிக்கும் அவரின் மவுன ராகம் படத்தின் அபத்தங்கள் எனக்கு அப்போதே தெரிந்திருந்தது. எனக்கு அந்தப் படம் அவ்வளவாக பிடிக்காத ஒன்று. நாயகன் பிடித்தது. ரோஜா வைத்தாண்டி இருவர் படத்தில்தான் நான் மணியின் ஆளுமையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். உயிரே தோல்வி அடைந்தாலும் என்னகுப் பிடித்தே இருந்தது. அதன் பிறகு அலைபாயுதே முதல் அவரின் எந்தப் படமும் எந்த ஈர்ப்பும் ஏற்படுத்தவில்லை. தற்போது காதல் கண்மணி மணியின் தொடுகை இன்னும் உயிரோடு இருப்பதை உறுதி செய்திருக்கிறது. அவ்வளவே. எல்லோரும் ஜிகர்தாண்டா, ஆரண்ய காண்டம் போன்ற படங்களை குறிப்பிட்டு மணி அதுபோல ஏன் படங்கள் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். அவை என்னைப் பொருத்தவரை cult வகையைச் சேர்ந்தவை. mainstream சினிமாவுக்குள் அவை கண்டிப்பாக வராது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழில் பாசமலர், எங்க வீட்டுப்பிள்ளை, அன்பே வா, 16 வயதினிலே, உதிரிப்பூக்கள், நாயகன் போன்ற படங்கள்தான் பேசப்படும். இன்றைக்கு சலனங்கள் உண்டாக்கும் மாற்று சினிமாக்கள் நீண்ட நாட்கள் தாங்காது. இது என் பார்வை. ஹாலிவுடில் கூட இதுபோன்ற படங்களை b movies என்றுதான் அழைக்கிறார்கள்.

மணிரத்னம் பாடம் எடுக்கவில்லை. எது சரி எது தவறு என்பது குறித்த தெளிவு அவரவர் பார்வையில்தான் உள்ளது. அதை ஒரு வணிக நோக்கங்கள் கொண்ட சினிமா இயக்குனர் முடிவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு பலவீனமான சிந்தனை. படத்தில் என்ன இருக்கிறது. அதை மட்டும் விமர்சனம் செய்யலாம். மணிரத்னத்தை வரி வரியாக விமர்சிக்கும் அதே அளவுகோல் கொண்டு இன்றைய மாற்று சினிமாவையும் நம்மால் விமர்சிக்க முடியும். ஆனால் ஏனோ செய்வதில்லை. அப்படிப் பார்த்தால் நீங்கள் சிலாகிக்கும் ரஜினிகாந்தின் படங்கள் எவ்வளவு அடிமட்டத்தில் இருக்கின்றன என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. கேட்டால் அதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்று ஒரு லாஜிக் பேசுகிறார்கள். விந்தைதான்.

அதிஷா கேட்டிருக்கும் கேள்வி valid என்று நீங்கள் சொல்வது வேடிக்கைதான். சேர்ந்து வாழ்வது ஒரு பந்தங்கள் இல்லாத சுயநல பிணைப்பு. ஒரு டீல். அதில் நீண்ட தூரப் பாதையைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்? திருமணம் (அதாவது அப்படியான சம்பிராதயமான நோக்கம்) அப்படியல்ல. தனிப்பட்ட விதத்தில் எனக்கும் உங்களுக்கும் ஏன் கமலஹாசனுக்குமே திருமணம் என்ற சங்கதியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதற்காக அதில் நம்பிக்கை கொண்டவர்களை நாம் முட்டாள்கள் என்று சொல்வது சரியல்ல. மணிரத்னம் சில வணிக நோக்கங்களுக்காக இந்த இடத்தில் சமரசம் செய்துகொண்டார் என்று சொல்லலாம். இல்லாவிட்டால் படமும் ஓடாது. அவரது கொடும்பாவிகளை வீதிக்கு வீதி எரிதுக்கொண்டிருப்பார்கள் நம் கலாச்சார காவலர்கள். இது ஒன்றும் கலைப் படம் அல்லவே.

இறுதியாக சுஹாசினியின் கருத்து குறித்து மணிரத்னத்தை ஏன் தேவையில்லாமல் சீண்ட வேண்டும்? ரஜினிகாந்தின் மனைவியும் அவரது மகள்களும் ரஜினி என்ற பெயரை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. அது உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி வசதியாக மறந்துவிடுவீர்கள். Because you love and respect Rajinikanth. Don't you? மணிரத்தினத்தால் சுஹாசினிக்கு வேண்டுமானால் பெருமை இருக்கலாம். கண்டிப்பாக சுஹாசினி பெயரை வைத்துக்கொண்டு மணிரத்னம் வண்டி ஓட்ட வேண்டியதில்லை. அவர் இவரை திருமணம் செய்யும் முன்பே தன்னை நிரூபித்தவர். மணியே தன்னை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்று சொல்லிவிட்ட பிறகு whatever she said is a dead snake. Why worry about that?

நான் நடிகர்களை வைத்தல்ல இயக்குனர்களை மனதில் கொண்டே ஒரு படத்தை தீர்மானிப்பவன். மணி ரத்னம் என்றல்ல இரண்டே படம் கொடுத்த ருத்ரையா கூட என் அபிமான இயக்குனர்தான். சொல்லப் போனால் மணிரத்னம் கூட அவள் அப்படித்தான் போன்ற ஒரு படம் எடுக்கவில்லை என்றே கருதுகிறேன். அந்த நாள் படம் எடுத்த எஸ் பாலச்சந்தர், ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, ருத்ரையா, மகேந்திரன்,மணிரத்னம்... என்பதே என் வரிசை.

O kadhal kanmani is not a mile stone film of Tamil cinema. And it's not a carpet movie that anyone can walk on it with dirty shoes either. You can tear it apart no doubt, , but do it in a way that your image is not torn apart. Is it too much to ask for?

Anonymous said...

@Karigan, You need to use certain words to express the severity of MR's absurdness. I have not seen the movie. I can see that movie follows the same pattern for any romantic movie. 1. Have some strong reason for not fall in love/marriage 2. Due to circumstances you end up knowing each other and fall in love 3. Overcome the reluctance and express love or marry. The problem here is the "living together" concept which is not different from having concubine. For west, it is common practice and divorce too. It is not about having sex, it is about the way you find to have sex - "living together".

வருண் said...

****அதிஷா,

உங்களுக்கு என்ன ஆச்சு? இப்படி பிட்டுப் பட ரேஞ்சுக்கு விமர்சனம் உங்களிடமிருந்து வரும் என்றோ மேட்டர், கஜகஜா, அக்காவை பிக்கப் பண்ண போன்ற "இலக்கியத் தரமான" தமிழ் உங்களுக்கு சகட்டுமேனிக்கு வரும் என்றோ நான் இதுவரை எண்ணவேயில்லை. பாராட்டுக்கள்.

விமர்சனம் செய்வது உங்கள் உரிமை. ஆனால் உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ளாமல் அதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை செய்கிறேன் பார் என்று இத்தனை தூரம் கீழே இறங்கியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.***

காரிகன்: நீங்க விமர்சனத்தை விட்டுவிட்டு விமர்சகர்மேலே தாவிட்டீங்க. He is well-known for writing reviews like this. This is what people expect from him when they come here to read his reviews. Now, all of a sudden you realized what Athisha is all about! WE ALL KNOW HIM! You are the only one who discovered that "fact" after all these years! :)

அதிஷா ஒரு விமர்சகர், அவ்ர் பாணியில் அவர் "ரசித்த" ஒரு படத்தைத்தான் விமர்சிக்கிறார்.

ஆமா, உங்களுக்கு அதிஷாவின் மேலே அக்கறையா?

இல்லை மணிரத்னத்தின் மேலே அக்கறையா?

உங்களுக்கு பதில் தெரியுதோ இல்லையோ, எங்களுக்குப் புரியுது.

இதே படத்தை கெளதம் மேனன் எடுத்து விட்டு இருந்தால், இதே விமர்சனத்தை முழுக்க முழுக்க ரசிச்சு இருந்தாலும் இருப்பீங்க. You might even think, such a "taboo-language" is warranted.

Athisha is no different from you and me.

மணிரத்னம் படங்கள் உயர்வானதுனு வேணா சொல்லிக்கோங்க.. ஆனால் மணிரத்னம் படங்கள் எதார்த்தமானதோ, இயற்கையானதோ கெடையவே கிடையாது.

காதலா இருக்கட்டும், கல்யாணமா இருக்கட்டும், சேர்ந்து வாழ்வதா இருக்கட்டும், he can never ever touch you emotionally. He delivers something which is completely "artificial". Let it be love or affection or any human feelings. It has never been a "real one"!

தளபதியில் வரும் "ஏன்??" "தேவா" எல்லாம் எதார்த்தத்துக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. மணிரத்னம் சினிமா ஒரு வகை. அதை கடுமையாக விமர்சிப்பதும் எளிது. உங்களைப் போல் கொண்டாடுவதும் எளிது. அதிஷா ஒரு குறையுள்ள, எதார்த்தமில்லாத பக்கத்தை கவனிக்கிறார், கடுமையாக விமசிக்கிறார். நீங்க இன்னொரு பக்கத்தைக் கொண்டாடுறீங்க.

இவைகள் இரண்டு வகை விமர்சனங்களுக்கும் மணிரத்னம் படங்கள் தகுதி வாய்ந்தவையே!

Anonymous said...

Athisha you definitely did not lower standards because of this review..
really what is wrong in saying gajagaja as gajagaja as writer..
Just because he is a murporku Tamil ilaya ezhuthar, it doesn't mean that he shouldn't refer gajagaja as gajagaja..
And that ganapathy and karnatic song was so absurd that I read your ganpathy iyer joke wholeheartedly and smiled..
You are inproving dude..
Way to go..

காரிகன் said...

Varun,

Thanks. Point taken.

Unknown said...

தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டாம வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா

தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா

ரத்னம் டா...மணிரத்னம் டா....

ஷர்புதீன் said...

முப்பது வயது தாண்டிய நமக்கு இருபதில் பார்த்ததை திரும்பவும் பார்பதுபோல் இருக்கலாம், இது போன்ற படங்களால்...

அப்போ ....இப்போ இருபதில் இருக்கிறவர் என்ன செய்வாராம் ....அவருக்கு வேண்டாமா அலைபாயுதே...?

Anonymous said...

Guys,

I thoroughly enjoyed the review as well as the conversation between Kaarigan and Varun.. You guys made your points very well without any mud slinging or abusing. Appreciate the Healthy argument!! :)

And Athisha,
A funny but factual review i would say. :)