20 February 2017

ஆதி யோகியின் ஆக்கிரமிப்புகள்

ஆன்மிக வணிகர்... தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். அவருடைய அக்கிரம செயல்களுக்காக ஏராளமான வழக்குகளை போடுகின்றன பூவுலகின் நண்பர்கள் மாதிரியான சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள். பலரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காட்டை அழிக்கும் வேலைகளில் குற்றவுணர்ச்சியே இல்லாமல் ஈடுபடுகிறார். 1993ல் 37ஆயிரம் சதுர மீட்டர் இருந்த ஆஸிரம அளவு... இப்போது 55ஆயிரம் சதுரமீட்டராக உயர்ந்து நிற்கிறது. அத்தனைக்கும் ஆசைப்படுகிற அந்த மன அமைதி வியாபாரியின் பெயர் ஜக்கிவாசுதேவ் அவருடைய வணிக நிறுவனத்திற்கு பெயர் ஈஷா.

''நாங்கள் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளோம்... நாங்கள் செய்த பசுமை புரட்சிக்காக மத்திய மாநில அரசுகள் விருது கொடுத்துள்ளன... '' என்று இந்த காட்டுயிர் அழிப்பான்கள் எப்போதும் மறுப்புத்தெரிவிக்கின்றன.

# ஆனால் காட்டில் இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு நாட்டுக்குள் மரக்கன்றுகளை நடுவது ஏன்?

# காடுகளை அழித்துவிட்டு நாட்டை பசுமையாக்குவதுதான் பசுமைபுரட்சியா?

# காட்டில் இருக்கிற மரங்கள் என்பது வீணாக வளர்ந்து நிற்கிறதா... அந்த மரங்களை அழித்துவிட்டால் அதை நம்பி வாழ்கிற காட்டுயிர்கள் என்ன செய்யும்?

# வனச்சூழல் பாழானால் நம் வாழ்வுச்சுழலும் பாழாகாதா?

# ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா?

# காட்டுக்குள் பல ஆயிரம் பேரைக்கூட்டி வைத்து சிவராத்திரி விழா நடத்துவதால் சூழல் சிதைவு உண்டாகும்தானே?

# காட்டுயிர்களின் இடங்களை ஆக்கிரமிப்பதால் அவை ஊருக்குள் வரநேரும். இதனால் MAN ANIMAL CONFLICT வராதா?

என்கிற எளிய கேள்விகளுக்கும் கூட ஈஷா பதில் சொல்லத்தயாராயில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம் வாடா என தொடைதட்டி அழைக்கும். அரசிடமிருந்து பெற்ற விருதுகளையே சாட்சிக்கு நிறுத்திவைக்கும். அதனால்தான் உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட போதும் விளக்கம் கேட்டபோதும்கூட... ''போடா அங்கிட்டு... அந்த அரசாங்கமே எங்க பக்கம்'' என்று ஈஷாவால் சீன்போட முடிகிறது. எத்தனை தடைகள் விதித்தாலும் கட்டிடங்கட்டுவதை நிறுத்தமாட்டோம் என கொக்கரிக்கிறது.

அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மிகத்துக்கும் என்னமோ அப்படி ஒரு ஃபெவிகால் நெருக்கம். ஈஷா மட்டும் என்ன விதிவிலக்காக... ஏற்கனவே பெண்களை மயக்கி மொட்டை அடித்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் உண்டு.

முதலில் லிங்கம் வைத்திருந்தாலும்... எங்களுக்கு மதமில்லை என்றனர். ஆனால் விபூதி கொடுத்தனர். பிறகு லிங்கத்திற்கு பின்னாலேயே சக்தி பீடமோ என்னமோ ஒன்றை வைத்து குங்குமம் கொடுக்க ஆரம்பித்தனர். மலைச்சுனையிலிருந்து இயற்கையாக வருகிற நீரை உறிஞ்சி குளம்வெட்டி உள்ளேயே புனிதக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இது எதுவுமே இந்துமதத்திற்கு தொடர்புடையது இல்லையாம்... எல்லாமே ஓர் இறை கொள்கைதானாம்... இப்போது ஆதியோகி என மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றை நட்டுவைக்க போகிறது ஈஷா. இதுவும் கூட இந்துமதம் தொடர்பானது இல்லையாம்...

போய்தொலையட்டும் அந்தக் கற்சிலை என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் சிலையை சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது ஜக்கி வாசுதேவ் சாமியாரின் ஆஸிரமம். இந்த கட்டுமானங்களுக்கு மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி வாங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை. சுற்றுசூழல் அனுமதியும் நொன்னைதான். இப்போது ஆக்கிரமித்திருப்பது நொய்யல்ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி.

அப்படிப்பட்ட ஒரு சிலையை திறக்கிற விழாவுக்கு தன்னுடைய இடைவிடாத பணிகளை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் பாய்ந்தடித்துக்கொண்டு ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதா... இப்படி ஒரு முட்டாளைப்போல கிளம்பிவந்து அந்த சாமியாரோடு இழித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால்... அவனுடைய குற்றங்களுக்கு துணைபோவதாக ஆகிவிடாதா?

ஊரில் ஒரு திருடன்... அல்லது திருடன் என குற்றஞ்சாட்டப்பட்டவன். ஒரு காதுகுத்து கல்யாணம் வைக்கிறான். அதில் கலந்துகொள்ள திருடன் தன்னுடைய திருட்டில் பங்குகொடுத்து கவுன்சிலரை அழைத்து வருகிறான் என்றால்... அதற்கான காரணம் என்னவாக இருக்கும். 'இங்க பார் கவுன்சிலரே என் பிரண்டுதான்... பிராது குடுத்தா வகுந்துடுவேன்' என்பதாகத்தானே இருக்கும். ஈஷா செய்ய நினைப்பது இதைத்தான்.

நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியான ஒரு பிரதமர் இதை உணரவேண்டாமா? மலைகிராமத்து மக்களெல்லாம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்... அதுவெல்லாம் பிரதமருக்கு தெரிந்திருக்குமா? அல்லது தெரியாதது போல இருந்துவிடுவாரா? அந்தச் சாமியாரின் மீதும் இப்போது திறந்து வைக்கிற சிலைக்கு பின்னாலும் இத்தனை அத்துமீறல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அந்த சிலையை தன்னுடைய திருக்கரங்களால் திறந்துவைப்பது என்பது ஒரு குற்றவாளியின் குற்றத்திற்கு துணைபோவது என்பதைக்கூட அறியாதவரா நம் பாரதப் பிரதமர்.

காவிரி டெல்டாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வந்திருக்கலாம்... மெரீனாவில் தமிழகமே திரண்டு போராடியபோதாவது வந்திருக்கலாம்... காவிரி பிரச்சனை வெடித்தபோதாவது எட்டிப்பார்த்திருக்கலாம்... அப்போதெல்லாம் வராத ஒரு பிரதமர்... ஒருசாமியாரின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்காக வருகிறார் என்றால் அவர் யாருக்கான பிரதமர்?

48 comments:

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் நம் பிரதமர் இல்லை.

Anonymous said...

Also include resorts like i planet

sriram said...

well said brother..

k.p.panchangam said...

பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

k.p.panchangam said...

பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

krishna said...

Sariyana sattaiyadi kelvi, aanaal pathil solla oruvanukkum thrani illai

nagoor meeran said...

கள்ளக்காதலை எவன்தான் வெளிப்படையாக சொல்வான்..??

Anonymous said...

He is not fit even to live as ordinary citizen in india

YOGI SP said...

Makkal pogum varaithan avarkal aattam....
Makkal 24th poga vendam

DeeRaj said...

These are very much biased and fake informations. There are lot of resorts getting built inside forest.. Big companies has swallowed lot of lands in the name of unearthing resources especially in north east side . This amounts to be thousands of acres. If Eesha is violating the law , anyone can file a case. If courts finds it allegations are true , then let them punish as per the law. Some organized system behind this attack on this ashram and create hate among people. His contribution towards planting trees and helping organic farming is huge. These people don't talk about those facts and simply creating rumors about Eesha among people.

gowsalya priya said...

Nice everything is valuable point. We ll do something

mohan86mba said...

நல்ல பதிவு அப்படியே பக்கத்துல இருக்கின்ற இதை விட 10 மடங்கு பெரிய காருண்யா யூனிவர்சிட்டி பற்றியும் கொஞ்சம் சொல்லவும்

Anonymous said...

Exactly

arasaivadivel said...

காருண்யா ட்ரஸ்ட்,கிருத்துவ மிஷினரி,தர்க்காக்கள்,கோயிலை ஆக்ரமித்து மசூதிக் கட்டியது ஆகியவற்றை பேச முடியுமா? அல்லது அங்க கிடைத்த கமிசன் தடுக்கிறதா?
தி.க,திமுக. பல இடங்களை ஆக்ரமித்ததை பேச இயலுமா?

Ravi said...

ஈஷா மையம் காடு கிடையாது .தனிப்பட்ட பட்டா இடம்.யானைகளின் வழித்தடமும் கிடையாது.தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.குற்றச்சாட்டு உண்ணமையெனில் காங்கிரஸ் ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் மிஷினரிகளும் என் ஜி வோக்களும் இன்று வரை விட்டு வைத்து இருப்பார்களா. ஈஷா யோகா சிவனை கடவுள் என்ற நிலையை தாண்டி ஆதிகுருவாக யோக வாகவே அறிமுகம் செய்கிறது.இன்று உலக யோகா தினம் அறிவிக்கப்பட்டதன் பிண்ணணியில் ஈஷா மையத்தின் உழைப்பு அதிகம்

Anonymous said...

காடுகளை காத்திட ஆதியோகி பிரம்மாண்ட சிலை பிரதிஷ்டையை வரவேற்கிறோம். தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டது கிருத்தவ காருண்யா!!

மலைவாழ் மக்கள் மதம் மாற்றப்பட்டார்கள் மதம் மாறாதவர்கள் விரட்டப்பட்டார்கள். சிறுபான்மை என்ற போர்வையில் அரசின் உதவியோடு வனத்திற்குள் சட்டத்திற்கு விரோதமாக காருண்யா கட்டிடங்கள் வழிநெடுகிலும் கட்டப்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் சிலுவைகளையும் சர்ச்யையும் தான் பார்க்க முடிகிறது

மொத்த வனத்தையும் வளைக்க துடித்த காருண்யாவிற்கு சிம்ம சொப்பனமாய் ஈஷா உருவெடுத்துள்ளது. பிரம்மாண்ட ஆதியோகி சிலை நமது பாரம்பரிய அடையாளத்தை நிலை நாட்டும் வனத்தை வளைக்க காருண்யா போட்டுள்ள நீண்ட நாள் திட்டம் முறியடிக்கப்படும்.

ஈஷா வேறூன்றியதால் காருண்யாவின் கனவு கலையத்துவங்கிவிட்டது இதனால் தான் ஈஷாவை எதிர்த்து வனக்காவலர்கள் என்ற பெயரில் இத்தனை வேலைகள் நடக்கிறது.

Abaranji Pasupathy said...

Its a country where there dont live with no morals for no politicians,saints,business peoples. Only the common man has all the morals and laws in this country

K R JEGADEESH said...

It seems that you are unable to digest the success of others

Vignesh Jaganathan said...

Already the man animal conflict was started in hill stations. Ppl keep on building bangalows over there. If any wild cats crosses over there. The foresters are unable to catch and they kill it. Really bad.

saravanan karuna said...

Blind people can't appreciate the beauty of moon. Same way the cocept of yoga can't be understood by ordinary citizens..hence as yogi PM knows its good for human society,ie why he s coming and attending.

Anonymous said...

காருன்யா இதை செய்யும் ாேது பேசாதவர்கள் இப்பகுறைப்பது ஏன். .?

Unknown said...

Mother fuckers

Ppandian theRebel said...

மரங்கள் காட்டில் இருந்தால்தான் மழை பெய்யும் என்றில்லை. மரங்களை எங்கு நட்டாலும் மழை பெய்யும்.அதுவும் 1 கோடி மரங்களை நட்டிருக்கிறார் சத்குரு.

55000 சதுர மீட்டர் என்பது வெறும் 13.61 ஏக்கர் நிலம் மட்டுமே.

அந்த இடத்தில் அதிக பட்சம் இருந்திருந்தாலும் 1300 - 1400 மரங்கள்தான் இருந்திருக்கும்.

மோடி தனிப்பட்ட பயணமாகத்தான் கோவை வருகிறார். பிரதமருக்கு மத நம்பிக்கைகள் இருக்கக் கூடாதென இந்திய அரசிலமைப்புச் சட்டம் சொல்லவேயில்லை.

PANDIYAN V said...

இவரின் ஆன்மீக வளர்ச்சியில் ஆனந்தவிகடனுக்கும் விஜய் டிவிக்கும் முக்கியபங்குண்டு

PANDIYAN V said...

இவரின் ஆன்மீக வளர்ச்சியில் ஆனந்தவிகடனுக்கும் விஜய் டிவிக்கும் முக்கியபங்குண்டு

Unknown said...

KutravaaligaLai ,Kutram izaitha, izaippavargaLai ellaam aatchiyil amaethi azagu paarthu avargaL podum pitchai (vilaiyilla arisi, gas,TV,grinder elkavatraiyum ) vaangikondu pazakkappattavargal thaane naam ? Eg: erikkarau housing board scheme, valluvar kottam lake area, etc.. to start with.. ippidhu engirundu vandadhu Inda rosham ? Seerthirutham adippadaiyilirundu aarambikka vendum.. aanmiga vezhadhaarigaL thaane kalaindhu povargaL

the drunken monk said...

# ஆனால் காட்டில் இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு நாட்டுக்குள் மரக்கன்றுகளை நடுவது ஏன்?

# காடுகளை அழித்துவிட்டு நாட்டை பசுமையாக்குவதுதான் பசுமைபுரட்சியா?

# காட்டில் இருக்கிற மரங்கள் என்பது வீணாக வளர்ந்து நிற்கிறதா... அந்த மரங்களை அழித்துவிட்டால் அதை நம்பி வாழ்கிற காட்டுயிர்கள் என்ன செய்யும்?

# வனச்சூழல் பாழானால் நம் வாழ்வுச்சுழலும் பாழாகாதா?

# ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா?

# காட்டுக்குள் பல ஆயிரம் பேரைக்கூட்டி வைத்து சிவராத்திரி விழா நடத்துவதால் சூழல் சிதைவு உண்டாகும்தானே?

# காட்டுயிர்களின் இடங்களை ஆக்கிரமிப்பதால் அவை ஊருக்குள் வரநேரும். இதனால் MAN ANIMAL CONFLICT வராதா?

none of the above questions have any evidence. simply creating sensation ?

Ranjith Kumar said...

தமிழர்கள் என்றாலே ஒரு ஏளனம்தான்...
மோடியின் பப்பு இனி தமிழ்நாட்டில் வேகாது.

Ranjith Kumar said...

தமிழ்நாடு என்றாலே ஒரு ஏளனம் தான்..
இனி மோடியின் பருப்பு இங்கு வேகாது..

Ranjith Kumar said...

தமிழர்கள் என்றாலே ஒரு ஏளனம்தான்...
மோடியின் பப்பு இனி தமிழ்நாட்டில் வேகாது.

Anonymous said...

காடுகளை காத்திட ஆதியோகி பிரம்மாண்ட சிலை பிரதிஷ்டையை வரவேற்கிறோம். தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டது கிருத்தவ காருண்யா!!

மலைவாழ் மக்கள் மதம் மாற்றப்பட்டார்கள் மதம் மாறாதவர்கள் விரட்டப்பட்டார்கள். சிறுபான்மை என்ற போர்வையில் அரசின் உதவியோடு வனத்திற்குள் சட்டத்திற்கு விரோதமாக காருண்யா கட்டிடங்கள் வழிநெடுகிலும் கட்டப்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் சிலுவைகளையும் சர்ச்யையும் தான் பார்க்க முடிகிறது

மொத்த வனத்தையும் வளைக்க துடித்த காருண்யாவிற்கு சிம்ம சொப்பனமாய் ஈஷா உருவெடுத்துள்ளது. பிரம்மாண்ட ஆதியோகி சிலை நமது பாரம்பரிய அடையாளத்தை நிலை நாட்டும் வனத்தை வளைக்க காருண்யா போட்டுள்ள நீண்ட நாள் திட்டம் முறியடிக்கப்படும்.

ஈஷா வேறூன்றியதால் காருண்யாவின் கனவு கலையத்துவங்கிவிட்டது இதனால் தான் ஈஷாவை எதிர்த்து வனக்காவலர்கள் என்ற பெயரில் இத்தனை வேலைகள் நடக்கிறது.

karthi keyan said...

Kazhuthaikku theriyuma karpoora vasanai

karthi keyan said...

Kazhuthaikku theriyuma karpoora vasanai

karthi keyan said...

Kazhuthaikku theriyuma karpoora vasanai

Unknown said...

All r keeping banana inside mouth on Christian missionaries encroachment of forest and lakes all over Tamilnadu . All Dravida Political parties engaged in sand and natural resources smuggling to other states .Not constructing check dams in TN last 60 years for taking sand ,leaving the agriculturalists starving now for drinking water and cleaning their buttocks begging before Andra.This is the development Dravida parties given to Tamilnadu keeping silent on all encroachments by education mafia and their mouth piece maphia .These are the desperate barking of Pro ISIS pro Naxal Pro Christian Anti Hindu and Anti National voice only.

ananda balakrishnan said...

Avaru kooda ninuthan nama prime minister photo ku pose kodukiraru pa ...tv lam pakurathu illaya

Kadamban said...

இந்து மதம் தான். இந்து மதமேதான். இந்து மதம் இந்த நாட்டில் செய்யாவிட்டால் வேறு எங்கு செய்வதாம்? அரேபியாவிலா இல்லை ரோமிலா?

Suriya said...

What did the Forest department doing for last 5 years? If this was stopped at the small stage by them, this would have not taken this big now.

Sivaraman Ramaswamy said...

இதில் இந்த சாமியாருக்கு பத்ம விபூஷன் விருது வேறு. தன்னை ஞானி என்று சொல்லும் இவர் என் விருதுக்கும் பணத்திற்கும் அலைய வேண்டும்?

rajan ganesh said...

Thalaiva itha sonna nammala panpattukku ethiranavannu solranga, anga ponaa sivanoda karanchuruvangalam, appadiye mothama karanchu tholachuttanganna nimmathiya irukkum

pgnanam said...

இது ஈஷாவுக்கு எதிரான குரல் அல்ல இந்து மதத்திற்க்கு எதிரானது, நாம் தொலைத்து விட்ட உயர்ந்த நெரிகளையும,இயரகையோடு இயந்த வாழ்கை முறையை மீட்டெடுத்து தந்தவர்.ஆதியோகி சிலையை இந்தியாவில் வைக்காமல் வெறு எங்கு வைப்பது,அமெரிக்காவின் லிபர்ட்டி (சுதந்திரதேவி)சிலையையும் ,ஈபல் கோபரத்தை ஆஊ ன்னு புகழ்கிறீகள் ----இந்துமதம் என்றால் எதிர்பதா.நாம் வாழ்கின்ற காலத்தில் இந்த மாதிரி ஒரு பெரிய சாதனை படைக்க ஜக்கி போன்ற மாமனிதர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரிய விஷயம்,வாய்ப்பு உள்ளவர் ஆதியோகியை தரிசனம் செய்ய பாருங்கள்

Manohar Salem said...

காருண்யா தேவடியா பசங்கன்னா?
ஈசாவும் தேவடியா பசங்களா?
ஒருத்தம் மேல ஒருத்தன் ஸ்கூல் புள்ளங்க மாதிரி சேத்தவாரி அடிச்சி இருக்கறவனுங்கள கே பு***யாக்கறிங்க,
காட்ட அழிக்கறவனெல்லாம் பெறிய மேதாவிங்களாடா. அவன் கருண்யாவா இருந்தா என்ன?
ஈஷாவா இருந்தா என்ன?
பொருப்பில்லாத புல்டாக் நாய்ங்களா!

jaya kumar said...

அதிஷா நீ அம்பளையா பொம்பளையா னு தெரியல

ஆதியோகி சிலைய அமைச்ச இடம் காடு தானா இல்ல பட்டா நிலமானு , உங்க வீட்டு அடுப்பாங்கறை ல நின்னு பார்த்தா தெரியாதுடி , ஈஷா வில் காடுகளை வளர்கவே செய்கிறார்கள், நான் நேர்ல போயி பாத்துருக்கேன்,
வேனும்னா அடுபாங்கறைய விட்டு வெளில வந்து பார்த்துக்கொ....,

என்னானே தெரியாம செய்தி போட ஒரு திருடி, அத ஷேர் பண்ண நாலு கிறுக்கனுக...... அருமை...

நேர்ல எதையும் பார்த்து முடிவு பன்னாம , வீட்டு அடுப்பாங்கறை உட்கார்ந்து குரை சொல்ர போட்டைங்கடா நீங்களாம்

டேய் அதிஷா நீ எவன் கால நக்கிட்டு இந்த செய்தி பொடுர, வேற மதத்துகாரன் கால நக்குனியாடி

இல்ல அவன் உன்ன நக்கிடானா?

Homeomurugan said...

U r working in isha or Coimbatore government offices hw u know they r nt getting permission destroy forests

சாணக்கியன் said...

ரொம்ப சிம்பிளா கூகுள் மேப் பாத்தாலே தெரியுது. ஈஷா மையம் சுமார் 200 மீட்டர் அளவுக்கு காட்டை ஒட்டி இருக்கு. மத்த 3 பக்கமும் விவசாய நிலம். இந்த 200 மீட்டர் எல்லையில ஒரு சுற்றுச்சுவரோ வேலியோ போட்டிருக்காங்கன்னு வெச்சுக்குவோம். அதனால யானைப்பாதை பாதிக்கப்பட்டிருக்குனு சொல்றது சுத்த ஹம்பக். இதுவே இப்படின்னா அப்புறம் அத விட பெரிய குற்றச்சாட்டுகளுக்குள்ள போகவே தேவையில்ல... https://www.google.co.in/maps/dir/Isha+Meeting+Hall,+Booluvampatti,+Tamil+Nadu/10.979615,76.7346042/@10.9804757,76.7330636,802m/data=!3m2!1e3!4b1!4m9!4m8!1m5!1m1!1s0x3ba8615ffebf9883:0xe855ebc90cd5de07!2m2!1d76.7339227!2d10.981329!1m0!3e2