19 June 2008

அலிபாபாவும் அபத்த சினிமாக்களும்.................1சினிமா என்றாலே எல்லோருக்கும் ஒரு அபரிமிதமான ஆர்வம் எப்போதும் உண்டு , சின்னக்குழந்தை முதல் பல்லில்லா பாட்டி வரை அனைவரையும் கவரும் சினிமா நம் அலிபாபாவை மட்டும் ஏனோ கவருவதில்லை , அவன் இது வரை மசாலா முதல் மங்கலான வெளிச்சத்தில் வருகின்ற உலகசினிமா வரை பார்த்திருக்கிறான் , ஆனால் அவனுக்கு மட்டும் எதுவுமே பிடிப்பதில்லை. எந்த சினிமா பார்த்தாலும் ஆயிரம் குறைகள் சொல்வான் . அது சுவாரசியமாகவும் , ரசிக்கும் படியும் , கலகலப்பாகவும் , சமயங்களில் ஆபாசமாகவும் எரிச்சலூட்டக்கூடியதாகவும் இருக்கும் . அவனுக்காகத்தான் இப்போது காத்திருக்கிறேன் .வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்தால் அலிபாபா '' வாடா அலிபாபா '' , '' ஹாய் மச்சி , என்னடா ரொம்ப நேரமா வெயிட்டிங்கா!! மன்னிச்சுரு மச்சி , தசாவதாரம் போய்ட்டு இப்பதான் வரேன் '' என்றபடியே சோபாவில் அமர்ந்தான் . '' என்னடா விட்டுட்டு போயிட்ட? '' , என்று ப்ரிட்ஜை திறந்து ஒரு பாட்டில் தண்ணீரை கொடுத்தேன் .


''எப்படிடா படம் '' என்றேன் , தண்ணீரை குடித்த படி '' டேய் ___ வேற எதுனா பேசுடா ____ '' என்றான் . எனக்கு அவன் வாயிலிருந்து வந்த கெட்ட வார்த்தைகளிலேயே புரிந்தது .


அவனாகவே பேசட்டும் என நான் காத்திருக்க அவனாகவே ஆரம்பித்தான் ,''மச்சி இன்னும் எத்தினி படத்துலதான் இந்த டாக்டர்கள கோமாளி ஆக்குவாங்கனு தெரியலடா''ஆஹா ஆரம்பிச்சுட்டான் என எண்ணிக்கொண்டு அவனை கவனிக்க தொடங்கினேன் .'' மச்சி இந்த தசாவதாரத்துல '' என அவன் ஆரம்பிக்க, நான் '' மச்சி வேணான்டா ஏற்கனவே பல பேரு அந்த படத்த பத்தி போதும் போதுங்கற அளவுக்கு விளக்கிட்டாங்க வேணான்டா , என்ன விட்று'' என நான் எழுந்து ஓட '' மச்சி நான் அந்த படத்தப் பத்தி சொல்ல வரலடா , அந்த படம் பார்த்த உடனே வேற ஒன்னு தோணிச்சுடா நாயே அதுக்குள்ள , எதோ ராமுவ பார்த்த கலைஞராட்டமா ஓட்ற..'' என்று என்னை பிடித்து உட்கார வைத்தான் .ஸ்ஸ்ஸப்பா அப்ப இது அதில்லையா என பெருமூச்சு விட்டபடி '' அப்படி என்னடா மேட்டரு '' என்றேன் .'' மச்சி , நீ நிறைய தமிழ் படங்கள்ல கவனிச்சிருக்கியா , இந்த டாகடருங்க இது மெடிக்கல் மிராக்கிள்னு சொல்றத , ஒரு நோயாளி பிழைச்சிட்டான்னா முதல்ல பேசண்டயே எழுப்பி விட்டு சார் நீங்க எப்படி பிழைச்சிங்கன்னே தெரியல , இட்ஸ மெடிக்கல் மிராக்கிள்ம்பாரு , அதுல பாரு நம்ம படங்கள்ள ஹிரோவோ இல்ல அவன சார்ந்தவங்களுக்கோ கேன்சர், மூளைல கட்டி , கிட்னில கல்லு, வயித்துல மண்ணுனு எது இருந்தாலும் வில்லன் கரீட்டா அத்ததான் சுடுவான் , சுடும் போது அதும் பிச்சுகிட்டு போயிடுமாம் , அந்த சீனுக்கு முன்னாடி சீன்லதான் டாக்டர் சொல்லுவாரு அந்த ஆபரேசனுக்கு 10 லட்சம் செலவாகும்னு , கடைசில பார்த்தா சிம்பிளா வில்லன் ஆபரேசன ஃப்ரீயாவே முடிச்சு குடுத்துருவாரு . அத விட கொடுமை இந்த 5 நிமிஷம் லேட் மேட்டரு , '' என சொல்லி முடித்து பாட்டில் தண்ணீரை குடிக்க ஆரம்பித்தான்.'' அது என்னடா 5 நிமிஷ மேட்டரு , எதுனா கிளுகிளு விஷயமா , சொல்லுடா என் பிளாக்ல போட்டுக்கறேன் , இப்பலாம் அதுக்குதான் மவுசு '' என்று ஆர்வமாக கேட்க ,'' தூ.... அதில்லடா , நம்ம டாக்டருங்க விசயம்தான் , நானும் பார்த்த வரைக்கும் எல்லா சினிமாலயும் அதென்னவோ ஹீரோ யாரையாவது காப்பாத்தி ஆஸ்பத்திரிக்கு கூட்டினு போனா , எல்லா டாக்டரும் சொல்லி வச்சமாதிரி சொல்ர வசனம் , சார் 5 மினிட்ஸ் லேட் ஆகிருந்தா கூட பேஸன்ட உயிரோட பார்த்திருக்க முடியாதுன்னு , அப்பறம் அந்த பேஸன்ட் கிட்டயும் அவரே ஹீரோவ அறிமுகப்படுத்துவார் , இவருதாங்க உங்கள காப்பாத்தினாரு , நீங்க நன்றி சொல்றதுனா கூட இவருக்கே சொல்லுங்கனு , இவரு சரிநான நேரத்துக்கு உங்கள இங்க கொண்டு வரலனா உங்கள உயிரோட பர்த்திருக்க முடியாதுனு பேஸன்ட பயமுருத்துவாரு , நம்ம டைரக்டருங்கல்லாம் டாக்டருங்கள ஏன் இப்படி கோமாளி மாதிரியே காட்றாங்கனு புரியல , அட டாக்டருங்கள இதோட விட்டா பராவால்ல இன்னும் நிறைய காமெடிலாம் இருக்கு , அதும் அந்த உண்மைனு ஒரு விசயமிருக்கே...'' என சொல்லி கொண்டிருக்கும் போது அவன் அலைப்பேசி மணி அடித்தது , எல்லோரும் இசையாக அழைப்பு மணி வைத்திருந்தால் இவன் ஏதோ வசனம் ( நல்லத நாலு பேருக்கு சொல்லனும்னு ..... என வி.எஸ்.ராகவன் பேசுகிறார் ) வைத்திருக்கிறான் . அலைபேசியில் பேசிவிட்டு அடுத்து என்ன சொல்ல போகிறானோ என ஆர்வமாக இருந்த என்னிடம் '' ஸாரி மச்சி , அவ பீஸாஹட்ல வெயிட்டிங்கடா , அர்ஜென்டா போகனும்டா , இந்த வீக் ஃபுல்லா டே சிப்டுடா , அடுத்த வீக் மீட் பண்ணுவோம்'' என கண்ணிமைக்கும் நேரத்தில் சொல்லிவிட்டு பல்சரை நோக்கி ஒடினான் .


அது என்ன உண்மை விசயம் , சரி அடுத்த வாரம் அலிபாபா வரட்டும் கேட்போம் என எண்ணிய படி டிவியை போட கலைஞரும் , ராமுவும் பிரிந்துவிட்டார்கள் என சன் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது , அப்படியே அதில் மூழ்க ஆரம்பித்தேன்.......


__________________________________________________________________________________________


அடுத்த வாரம் வருவான்............................

21 comments:

Unknown said...

நமக்கு நாமே.....

;-)

வால்பையன் said...

இதெல்லாம் தமிழ் சினிமாவின் தேசிய காட்சிகள்.
இதற்கு மாற்று வசனம் யாரும் எழுத கூடாதென்று உரிமை வாங்கப்பட்டு உள்ளது.
சொல்லி வையுங்கள் உங்கள் நண்பரிடம்

வால்பையன்

துளசி கோபால் said...

டாக்குட்டர்களை ஏன் இப்படிக் காமிக்கிறீங்கன்னு நம்ம டாக்குட்டர் விஜய்கிட்டேதான் கேக்கணுமோ என்னவோ?

rapp said...

நெம்ப சரியா சொன்னீங்க.

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...
இதெல்லாம் தமிழ் சினிமாவின் தேசிய காட்சிகள்.
இதற்கு மாற்று வசனம் யாரும் எழுத கூடாதென்று உரிமை வாங்கப்பட்டு உள்ளது.
சொல்லி வையுங்கள் உங்கள் நண்பரிடம்

வால்பையன்
/

ரிப்பீட்டே

Unknown said...

வாங்க வால்பையா , மங்களூர் சிவா

எங்கேங்க சொன்னா கேட்டாதான.....

எவ்ளோ சொன்னாலும் சினிமாவ மட்டும் விட மாட்டேன்றான்

அகரம் அமுதா said...

கட்டுரை ரசிக்கும் படியாக இருந்தது. குறிப்பாக இவ்வரிகள்.

////ராமுவ பார்த்த கலைஞராட்டமா ஓட்ற..'' என்று என்னை பிடித்து உட்கார வைத்தான் ////

வாழ்த்துக்கள்.

கோவை விஜய் said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

Unknown said...

வாங்க துளசி மேடம்

ஐயோ விஜய்கிட்டயா... நீங்க வேற அவரு ஓரு படத்துல அவங்கள அடிச்சு கையலாம் கிழிச்சிருப்பாரு

___________________________________

வாங்க ராப். நன்றி

Anonymous said...

I like you

புருனோ Bruno said...

//டாக்குட்டர்களை ஏன் இப்படிக் காமிக்கிறீங்கன்னு நம்ம டாக்குட்டர் விஜய்கிட்டேதான் கேக்கணுமோ என்னவோ?//

:) :) :)

சின்னப் பையன் said...

//மங்கலான வெளிச்சத்தில் வருகின்ற உலகசினிமா வரை //

அப்போ மணிரத்னம் சார் எடுக்கறதெல்லாம் உலகசினிமான்றீங்களா!!!

சின்னப் பையன் said...

// டேய் ___ வேற எதுனா பேசுடா ____ '' என்றான் . //

தமிழ்மணத்திலே இருக்கேன்றீங்க... இந்த ___ வார்த்தைகளைப் போட வெட்கப்பட்டா எப்படி???

சின்னப் பையன் said...

//எதுனா கிளுகிளு விஷயமா , சொல்லுடா என் பிளாக்ல போட்டுக்கறேன் , இப்பலாம் அதுக்குதான் மவுசு //

ம்ம்... இது மேட்டரு.... இதுதான் நல்ல புள்ளக்கு அழகு!!!

Unknown said...

வாங்க புருனோ சார்...

____________________________

Unknown said...

\\அப்போ மணிரத்னம் சார் எடுக்கறதெல்லாம் உலகசினிமான்றீங்களா!!!
\\

நானு அப்படி சொல்லல

பாலுமகேந்திரா படம் மாதிரினு வச்சுக்கலாம்

Unknown said...

\\தமிழ்மணத்திலே இருக்கேன்றீங்க... இந்த ___ வார்த்தைகளைப் போட வெட்கப்பட்டா எப்படி???
\\

ச்சின்னபையன் அப்ப நீங்களே சொல்லிருங்க

Anonymous said...

தொடருங்கள்.

Unknown said...

வாங்க விஜய் நிச்சயம் தொடருகிறேன்

வெண்பூ said...

// வாங்க வெண்பூ...முதல் வருகைனு நினைக்கிறேன் என்னோட மத்த பதிவுகளையும் பார்த்து உங்க கருத்த சொல்லுங்க //

ரொம்ப நல்லா எழுதுறீங்க அதிஷா... இதோ புக்மார்க் பண்ணியாச்சு... கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேன் டைம் கிடைக்குறப்ப...

Anonymous said...

Hi Atheeshsa,
Athe maida maavai neenga oru 10 mani neram mugathila appi ukkanthu irunga then you will come to know the effort they had put in the movie. Ivanga inga ukkanthu meen suduvangalam. Vaayila ellarume vadai sudalam, aana avanga position la irunthu work panni paarunga madam Athisha.. Does anybody knows Butterfly effect or Chaos theory?
This story is fully based on the theory and its not based on T-Sunami or Biowar.. Those are incorporated to bring up the effect of the theory. Kamal is trying to make people think more, so please come out of Box.
Inagalukku ellam sethu konja neram kalichu polaikkara mathiri padama edutha silevr jublee pannuvanga.
Makkala think panna vecha ellarukkum somberithanama irukkum. Athan India innum ippadiye irukku..