Pages

02 July 2008

என் வாழ்க்கை விற்பனைக்கு......EBAY.COM ல்



நம்மில் பலருக்கும் நாம் வாழும் இந்த வாழ்க்கையும் , வாழ்க்கை முறையின் மீதும் அலுப்பும் வெறுப்பும் , விரக்தியும் பல தருணங்களிலும் ஏற்படுவதுண்டு , அது போன்ற சமயங்களில் நாம் என்ன செய்து விடுவோம் ? அதை நினைத்து வருந்துவோம் , அட ஆண்டவன் நமக்கு என்ன எழுதியுள்ளானோ அதுதான் நடக்கும் என நம்மை நாமே தேற்றி கொள்வோம் . அதை தவிர நம்மால் என்ன செய்து விட முடியும் , இந்த வாழ்க்கையை சிறிது மாற்றி வேறு பல நமக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபட்டு இந்த நிலையை மாற்ற முயலுவோம் .இதற்கும் மேல் நம்மால் என்ன செய்து விட இயலும் . அதைத்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் செய்திருக்கிறார் . தன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் இ-பே (ebay) என்கிற நம் பொருட்களை இணையத்தில் விற்கும் இணையத்தளத்தில் விற்றுள்ளார் . என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா , எனக்கும் அப்படித்தான் இருந்தது முதன்முதலில் இந்த செய்தி குறித்து கேள்வி பட்டதும் .




அந்த மனிதரின் பெயர் இயான் உஷர் (உஷார் அல்ல !!) , 44 வயதான இவர் இங்கிலாந்தின் டர்ஹமில் வாழ்ந்து வந்தவர் 2001ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதிக்கு குடியேறினார் . அவர் அங்குள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் சரக்குந்து ஒட்டுனராக பணிபுரிபவர் . இவர் கடந்த வாரம் இ-பே இணைய தளத்தில் தன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் விற்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பலருக்கும் அவ்வறிவிப்பில் அதிர்ச்சி , அது குறித்து அவர் தனது இந்த இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் , அவர் தனது மனைவியை சில நாட்களுக்கு முன் பிரிந்துவிட்டதாகவும் , அதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் இருப்பினும் சூழ்நிலை காரணமாக அவரது மனைவியை பிரிய நேரிட்டதாகவும் , இப்போது அவர் வாழுகின்ற அவரது வீடும் , வீட்டில் உள்ள பொருட்களும் அவரது வாழ்க்கை முறையும் அவரது மனைவியை ஞாயபக படுத்துவதாகவும் , அதனால் தான் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானதாகவும் அதனாலேயே தான் தன் வாழ்க்கையையும் வாழ்க்கை முறை, தன் வீடு, அங்குள்ள பொருட்கள் , தனது கார் , தனது இரு சக்கர வாகனம் , தனது ஜெட் ஸ்கீ , தனது நண்பர்கள் , தன் வேலை , தன் பிற அனைத்து வித சொத்துக்கள் என அவருக்கும் அவரது வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையுமே சேர்த்து ஏலத்தில் விட 1 ஆஸ்திரேலிய டாலர்களில் தொடங்கிய ஏலம் 100 ஆயிரம் இங்கிலாந்து பவுண்ட்ற்றிகு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது . அவர் இந்த பணத்தை வைத்து தான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார் . அவரது இணையத்தளத்தில் இன்னும்ம் அதிக விபரங்களும் இருப்பதால் இது குறித்த செய்தி அவ்வளவே .












இந்த செய்தி பல பெரிய ஊடகங்களில் வெளிவராததற்கு என்ன காரணம் என புரியவில்லை , இது ஒரு வேளை இணையங்களில் உலா வரும் பல ஸ்பேம் களில் ஒன்றா எனவும் கூற இயலவில்லை . எது எப்படி இருப்பினும் தன் வாழ்க்கையை விற்பது என்பது ஒரு நூதன வகை விற்பனை வழியாகவே எனக்கு படுகிறது . தன் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு புலம் பெயரும் பலரையும் நாம் பார்த்திருப்போம் அவர்கள் தன் வீட்டையும் அதன் பொருட்களையும் ஒரு நல்ல விலைக்கு மொத்தமாக விற்று விட்டு செல்வதை கொஞ்சம் மெருகேற்றி அதற்கு பரபரப்பு ஏற்படுத்தி நல்ல விலைக்கு விற்கும் சிறந்த வழியாகவே இது தோன்றுகிறது . அவர் விற்ற மொத்த பொருட்களிள் மதிப்பைவிட அதிக விலைக்கே அவை விற்கப்பட்டுள்ளதே இதற்கு சாட்சி. அவரது இந்த நூதன விளம்பரத்திற்கு அவரை கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும் . இது போல பரபரப்புக்கு அடிமையாகி எதை விற்றாலும் வாங்கும் நம் மக்களின் இந்த விளம்பர மோகத்தை என்ன சொல்லித்தான் திறுத்துவதோ!!!!!!!!!