04 August 2008

சென்னை+பதிவர்கள்+கும்மி+மொக்கை = 10ம் தேதி சந்திப்புங்கோ

இதுனால சகல விதமான நல்ல,கெட்ட, கெட்டுபோன ,கெட்டுபோக போற, பதிவர்களுக்கும், புதுசா பதிவு எழுதப்போறவங்களுக்கும் , பதிவு மேயறவங்களுக்கும் சொல்லிகிறது என்னணா சென்னை பதிவருங்க பலரும் சந்திச்சு குசலம் விசாரிக்க ஆசப்படறதாவும் , நிறைய மொக்கை மேட்டருங்கள பத்தி கும்மி போடணும்னு வேண்டி விரும்பி கேட்டுகிட்டதாலயும் , சும்மா ஜிவ்வுனு ஒரு பதிவர் சந்திப்பு இந்த வாரம் ஏற்பாடு பண்ணலாம்ணு அண்ணன் பாலபாரதி கேட்டுகிட்டதாலயும் , இந்த வாரம் ஞாயித்துகிழமை நிகழும் ஆகஸ்ட்டு மாசம் 10ம் தேதி எப்பவும் போல காந்தி சிலைக்கு பின்னால இருக்கற தண்ணி இல்லாத குட்டைல பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணிருகமுங்கோ , சென்னைல இருக்கற எல்லா பதிவருங்களும் சந்திப்புல தவறாம கலந்துகிட்டு எத பத்தி வேணும்ணாலும் எவ்வளோ முடியுமோ அவ்ளோ மொக்கை போட தவறாம வந்துருங்க......இந்த சந்திப்பு ஒரு கும்மி மற்றும் மொக்கை சந்திப்பு , அதனால சீரியஸா பேசணும்னாலும் வந்து பேசறவங்க பேசலாம் , இல்ல கும்மி அடிச்சு கொண்டாடலாம்னு வரவங்க யார் வேணும்னாலும் வரலாம்ங்கோ ,குசேலன் குறித்து கும்மியடிக்க வருபவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும் . குசலேன் தவிர வேற எத பத்தி வேணும்னாலும் கும்மியாடிச்சு கொண்டாடலாம். கருணாநிதி , சேது சமுத்திரம் , பத்துபத்து,சுட்டபழம் , பிட்டுபடம் , காமக்கதைகள் , பதிவருங்க வளர்ச்சி ,சாருநிவேதிதானு நிறைய விசயமிருக்கு கண்ண மூடிட்டு கண்ணபின்னானு கும்மி அடிக்கலாமுங்க ,மறுபடியும் ஒரு தடவ சொல்லிக்கிறோம் :சந்திப்பு நாள் : 10.08.2008சந்திப்பு நேரம் : மாலை 5.30 மணிக்குஇடம் : மெரினா பீச் காந்தி சிலை பின்புறம்

புது பதிவருங்க பலருக்கும் இப்படிப்பட்ட சந்திப்புல கலந்துக்கறது சங்கோஜமா இருக்கும் , அத பத்திலாம் கவலப்படாம புதுப்பதிவர்கள் கலந்துக்கணும் , உங்களுக்கு தேவையான பாதுகாப்பு,பந்தோபஸ்து மற்றும் இன்னபிற வஸ்துக்களும் கட்டாயம் பதிவர் சந்திப்பில் கிடைக்கும்.

புதுப்பதிவருங்களுக்கு தேவையான உதவிகள் செஞ்சுதர தயாரா இருக்கமுங்கோ....

இதுக்கு மேல என்ன சந்தேகமிருந்தாலும் உடனே போன் பண்ணுங்கஅதிஷா - 9941611993இல்லைனா மின்னஞ்சல் பண்ணுங்க - dhoniv@gmail.comஅவ்ளோதானுங்க சந்திப்புல மீட் பண்றேன் , மேலதிக கும்மிகளை அங்கே வைத்துக்கொள்ளவும்உங்கள் வருகைய பின்னூட்டமாவோ இல்ல மின்னஞ்சலாவோ தெரிவிங்க...

சந்திப்புக்கு ஆர்கனைசருனு யாருமில்ல , சந்திப்புக்கு வரவங்கதான் ஆர்கனைசருங்க(ஒருங்கிணைப்பாளருங்க )மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள்

சந்திப்பு நாள் - 10-08-08

81 comments:

கோவி.கண்ணன் said...

//குசேலன் குறித்து கும்மியடிக்க வருபவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும் . குசலேன் தவிர வேற எத பத்தி வேணும்னாலும் கும்மியாடிச்சு கொண்டாடலாம். //

கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதுங்க, விருந்து கிடையாதுன்னு சொல்வது போல் இருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குசேலன் கும்மிக்கு வருகிறவர்கள் மனசொடிஞ்சிப் போக மாட்டாங்களா ?

n said...

உங்கள "நம்ம்ம்பி" வர்ரேன்....9ஆம் தேதி உள்ளேன் ஐயா..

நர்சிம்

வெண்பூ said...

நான் வர விரும்புகிறேன்.. உங்களை இந்த வாரத்தில் ஒருநாள் செல்லில் அழைக்கிறேன் அதிஷா..

அதிஷா said...

\\
குசேலன் கும்மிக்கு வருகிறவர்கள் மனசொடிஞ்சிப் போக மாட்டாங்களா ? \\

முதல் போணி பண்ணிய அண்ணன் கோவி .கண்ணன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்

குசேலன் குறித்து நம்மவர்கள் பொது இடத்தில் கும்மினால் என்ன நடக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் யோசித்து பார்க்கிறேன் (public reaction )

அதிஷா said...

n கட்டாயம் வாங்க

அதிஷா said...

வெண்பூ எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்..

கட்டாயம் வாங்க வந்து விலாவை சிரப்பித்து தருமாரு கேட்டு கொல்கிறேன்

விஜய் ஆனந்த் said...

// இந்த வாரம் ஞாயித்துகிழமை நிகழும் ஆகஸ்ட்டு மாசம் 9ம் தேதி //

ங்ங்ங்ஙேஙேஙே....ஞாயித்துகிழமையா இல்ல ஆகஸ்ட்டு மாசம் 9ம் தேதியா? ஏன்னா, ஞாயித்துகிழமை ஆகஸ்ட்டு 10.....

அதிஷா said...

மிக்க நன்றி விஜய் ஆனந்த்

தேதி மாற்றப்பட்டது

Anonymous said...

ok :-)

முரளிகண்ணன் said...

i need atleast one good lie to cheat my family and attend this kummi.
A suitable lie reward with pathu pathu DVD sponsered by athisha

Syam said...

அனானி அண்ணாஸ்க்கு அனுமதி உண்டா?

:-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முரளிகண்ணன்,

தமிழ்ப் பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அப்படின்னு சொல்லிப் பாருங்களேன் :)

அதிஷா said...

ஸ்யாம் அனானிகளுக்கும் சிறப்பு அனுமதி உண்டு

அதிஷா said...

முரளி அண்ணா உங்களுக்கு பாராட்டு கூட்டம்னு சொல்லிட்டு வாங்க போறப்ப மலர்மாலையும் பூச்செண்டும் சங்கத்து சார்பா அண்ணன் பாலபாரதிய ஸ்பான்ஸர் பண்ண சொல்றேன்

அதிஷா said...

\\ தமிழ்ப் பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் \\

சுந்தர் அண்ணா அப்ப பதிவர் சந்திப்பு அதுக்கில்லையா

முரளிகண்ணன் said...

சுந்தர், பொதுவாக பதிவுகளை படிக்கவே வீட்டில் அனுமதியில்லை. இதில் சந்திப்பு, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துதல் என்றால் எனக்கு வீட்டில் கட்டம் கட்டி விடுவார்கள்.

TBCD said...

அப்படியே 6ஆம் தேதி மாலையும் வந்துட்டுப் போறது...

http://tbcd-tbcd.blogspot.com/2008/08/6-2008-630-830.html

VIKNESHWARAN said...

அதிஷா தெரியாமல் போன் நம்பரை கொடுத்துவிட்டாராம். பொண்களின் தொல்லை தாங்கவில்லையாம். காலையில் இருந்து ஓயாமல் ஒலித்து 3 போன்கள் வெடித்துவிட்டனவாம்.

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா

இருப்பேன் ஐயா

பரிசல்காரன் said...

//வெண்பூ said...

நான் வர விரும்புகிறேன்.. உங்களை இந்த வாரத்தில் ஒருநாள் செல்லில் அழைக்கிறேன் அதிஷா..
//


நானும் வரவா?

என் வரவு உங்களுக்கு நல்வரவா?

பரிசல்காரன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முரளிகண்ணன்,

தமிழ்ப் பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அப்படின்னு சொல்லிப் பாருங்களேன் :)//


வரலாம்ன்னு நெனைச்சேன். இதப் பார்த்தா, பயமா இருக்கு!

லக்கிலுக் said...

ஓக்கே நாளைக்கும், பத்தாம் தேதியும் மொத்தமா கும்மியடிச்சிடலாம்.

அதிஷா 'அந்த' மாதிரி படம் ஒண்ணு ரிலீஸ் ஆவுதாம். தெலுங்கு டப்பிங். டாக்டர் ராஜசேகர் ஹீரோ. சந்திப்பு முடிஞ்சி பதிவர்களை அப்படியே படத்துக்கு கடத்திக்கிட்டு போயிடலாமா? :-)

லக்கிலுக் said...

ஓக்கே நாளைக்கும், பத்தாம் தேதியும் மொத்தமா கும்மியடிச்சிடலாம்.

அதிஷா 'அந்த' மாதிரி படம் ஒண்ணு ரிலீஸ் ஆவுதாம். தெலுங்கு டப்பிங். டாக்டர் ராஜசேகர் ஹீரோ. சந்திப்பு முடிஞ்சி பதிவர்களை அப்படியே படத்துக்கு கடத்திக்கிட்டு போயிடலாமா? :-)

பரிசல்காரன் said...

//பதிவுகளை படிக்கவே வீட்டில் அனுமதியில்லை. //

என்ன முரளி இப்படிச் சொல்றீங்க?

சீரியஸாவா?

புருனோ Bruno said...

//i need atleast one good lie to cheat my family and attend this kummi.
A suitable lie reward with pathu pathu DVD sponsered by athisha//

தமிழ்99 விசைபலகை ஒட்டிகள் வாங்க வருவதாக சொல்லுங்கள்

அடுத்த சந்திப்பிற்கு (10-08-2008) என்ன காரணம் சொல்லலாம் என்று புதன் மாலை தேநீர் பருகியபடி யோசிப்போம்

புருனோ Bruno said...

sticker
1. ஒட்டுப் படம்
2. ஒட்டும் தாள்
3. ஒட்டி

புருனோ Bruno said...

//உங்கள "நம்ம்ம்பி" வர்ரேன்....9ஆம் தேதி உள்ளேன் ஐயா..

நர்சிம்//

அதிஷா அண்ணா, தேதி என்னது, 9ஆ, 10ஆ

அவனும் அவளும் said...

வந்துடலாம் ஆதிஷா. டிக்கெட் sponsor பண்ண ஆள் தேடிகிட்டு இருக்கேன்.

அதிஷா said...

\\ சுந்தர், பொதுவாக பதிவுகளை படிக்கவே வீட்டில் அனுமதியில்லை. இதில் சந்திப்பு, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துதல் என்றால் எனக்கு வீட்டில் கட்டம் கட்டி விடுவார்கள். \\

முரளி அண்ணா அதிஷாவுக்கு காதுகுத்துறாங்கனு சொல்லிருங்க

அதிஷா said...

\\
அப்படியே 6ஆம் தேதி மாலையும் வந்துட்டுப் போறது...

http://tbcd-tbcd.blogspot.com/2008/08/6-2008-630-830.html

August 5, 2008 1:34 AM
\\

நீங்க என்ன கூப்படறது டிபிசிடி அண்ணா

அதிஷா said...

\\ அதிஷா தெரியாமல் போன் நம்பரை கொடுத்துவிட்டாராம். பொண்களின் தொல்லை தாங்கவில்லையாம். காலையில் இருந்து ஓயாமல் ஒலித்து 3 போன்கள் வெடித்துவிட்டனவாம். \\

விக்கி ஏனிந்த கொலைவெறி என்மீது

அதிஷா said...

புருனோ சார் கட்டாயம் வந்திடுங்கோ

அதிஷா said...

\\ நானும் வரவா?

என் வரவு உங்களுக்கு நல்வரவா? \\

நீங்க வந்தா எனக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் ஹேப்பியா இருக்கும்

அவனும் அவளும் said...

முரளிகண்ணன்,

முதல வந்துடனும். அதுக்கு அப்புறம் யோசிக்கணும். அப்பதான் நம்ப மூளை நல்லா வேல பாக்கும். முன்னாடி யோசிச்சு என்ன சொன்னாலும் ஒத்துக்கமாட்டாங்க.

செல்வம் said...

எல்லோரையும் அண்ணா என்று கூப்பிட்டு தன் வயதைக் குறைத்துக் கொள்ளும் அதிஷாவின் நுணரசியலைக் கண்டிப்பதற்காகவும், அதை விட முக்கியமாக லக்கிலுக் தன் உறுதிமொழியைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடனும் நானும் வர்றேனுங்கோ...................

ஜோசப் பால்ராஜ் said...

நான் அடுத்த தபா மெட்ராஸ்க்கு வரப்ப ஒரு கூட்டம் கூட்டல, உன்னிய கீசிடுவேன் நைனா.

இந்த தபா வர முடியல கண்டுகாத நைனா.

அதிஷா said...

\\அதிஷா 'அந்த' மாதிரி படம் ஒண்ணு ரிலீஸ் ஆவுதாம். தெலுங்கு டப்பிங். டாக்டர் ராஜசேகர் ஹீரோ. சந்திப்பு முடிஞ்சி பதிவர்களை அப்படியே படத்துக்கு கடத்திக்கிட்டு போயிடலாமா? :-) \\

லாரிக்கு அட்வான்ஸ் குடுத்தாச்சு
மொத்தமா அள்ளி போட்டு கூட்டிட்டு போயிடலாமுங்கோ தோழர் லக்கி

அதிஷா said...

//என்ன முரளி இப்படிச் சொல்றீங்க?

சீரியஸாவா?//
எல்லாரும் உமா அண்ணியாட்டம் நல்லவங்களா இருப்பாங்களா பரிசல் அண்ணா

அதிஷா said...

\\
தமிழ்99 விசைபலகை ஒட்டிகள் வாங்க வருவதாக சொல்லுங்கள்
\\

செம ஐடியாங்க புருனோ சார் ,,,, உங்களுக்கு ஒரு சுட்டபழம் டிவிடி தர சங்கத்திற்கு சிபாரிசு செய்கிறேன்

அதிஷா said...

\\ அடுத்த சந்திப்பிற்கு (10-08-2008) என்ன காரணம் சொல்லலாம் என்று புதன் மாலை தேநீர் பருகியபடி யோசிப்போம் \\

புருனோ சார் அது புதன் கிழமை இல்ல செவ்வாய் கிழமை

அதிஷா said...

அவனும் அவளும் டிக்கெட்க்கு ஸ்பாண்ஸர் கிடைச்சதும் சொல்லி அனுப்புங்க ஏர்போர்ட்டுக்கு ஆள் அனுப்புறோம்

அதிஷா said...

\\ லக்கிலுக் தன் உறுதிமொழியைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடனும் நானும் வர்றேனுங்கோ................... \\

கடலையூர் செல்வம் அண்ணாச்சியை வாங்க பழகலாம் என வரவேற்கிறோம்

அதிஷா said...

\\ நான் அடுத்த தபா மெட்ராஸ்க்கு வரப்ப ஒரு கூட்டம் கூட்டல, உன்னிய கீசிடுவேன் நைனா.

இந்த தபா வர முடியல கண்டுகாத நைனா. \\

இன்னா தலீவா உங்களுகோசரம் சங்கத்த கூட்டாட்டி இன்னா சங்கம் நீங்க வரத மட்டும் சொல்லுங்கோ பதிவருங்கள அள்ளி போட்டுகினி வந்துரலாம்

ஜிங்காரோ ஜமீன் said...

அதிஷா அண்ணாச்சி என்னை ஞாபகம் இருக்குங்களா? இப்போதைக்கு வாசகன் மட்டும்தான்.
பதிவர் சந்திப்புக்கு நானும் வரலாங்களா?:)

அதிஷா said...

\\
அதிஷா அண்ணாச்சி என்னை ஞாபகம் இருக்குங்களா? இப்போதைக்கு வாசகன் மட்டும்தான்.
பதிவர் சந்திப்புக்கு நானும் வரலாங்களா?:)

\\

ஜிங்கரோ எங்கய்யா போனீங்க இத்தன நாளா
தயவு செஞ்சு ஞாயித்து கிழமை வந்து சேருங்க... இல்லாட்டி வீட்டிற்கு ஆட்டோவில் ஆளும் ஆசிட் பாட்டில்களும் வரும்

Anonymous said...

ஜிங்காரோ வந்தால் நானும் வருவேன்.

TBCD said...

அதானே..நான் என்ன கூப்பிடுறது..

சென்னைப் பதிவர்களின் வழக்கமான இடத்தில் சந்திப்பு என்று வேற போட்டு இருக்கேன்..ஆள் ஆளுக்கு வந்து உள்ளேன் ஐயா என்று சொல்லி வரிசைக் கட்ட வேண்டியது தானே....போண்டா வாங்க... :P

ஃஃஃஃஃ

பதிவில்,முகப்பில் என்று சந்திப்பு விவரம் போட்டதற்கு நன்றிங்கோ....

//அதிஷா said...

\\
அப்படியே 6ஆம் தேதி மாலையும் வந்துட்டுப் போறது...

http://tbcd-tbcd.blogspot.com/2008/08/6-2008-630-830.html

August 5, 2008 1:34 AM
\\

நீங்க என்ன கூப்படறது டிபிசிடி அண்ணா//

லக்கிலுக் said...

//ஜிங்காரோ ஜமீன் said...
அதிஷா அண்ணாச்சி என்னை ஞாபகம் இருக்குங்களா? இப்போதைக்கு வாசகன் மட்டும்தான்.
பதிவர் சந்திப்புக்கு நானும் வரலாங்களா?:)

August 5, 2008 9:56 AM
அதிஷா said...
\\
அதிஷா அண்ணாச்சி என்னை ஞாபகம் இருக்குங்களா? இப்போதைக்கு வாசகன் மட்டும்தான்.
பதிவர் சந்திப்புக்கு நானும் வரலாங்களா?:)

\\

ஜிங்கரோ எங்கய்யா போனீங்க இத்தன நாளா
தயவு செஞ்சு ஞாயித்து கிழமை வந்து சேருங்க... இல்லாட்டி வீட்டிற்கு ஆட்டோவில் ஆளும் ஆசிட் பாட்டில்களும் வரும்
//தானே கேள்வி! தானே பதிலோ? :-)

அதிஷா said...

\\
தானே கேள்வி! தானே பதிலோ? :-) \\

நேர்ல வாங்க சொல்றேன்

லக்கிலுக் said...

அதிஷா அண்ணே!

இந்தப் பதிவை விளம்பரமா என்னோட வலையின் டெம்ப்ளேட்டில் போட்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணையோ, ஆத்திரமோ இருந்தால் சொல்லுங்கள் தூக்கிவிடுகிறேன்.

எல்லோரையும் என் அப்பன் முருகன் காப்பாத்தட்டும்!! :-)

அதிஷா said...

தோழர் லக்கி மிக்க மகிழ்ச்சி
என்னுடைய பதிவை உங்கள் வலைப்பூவில் சூடயமைக்கும்
உங்களது இந்த பதிவன் 50 வது பின்னூட்டத்திற்கும்

முருகப்பெருமான் said...

\\ எல்லோரையும் என் அப்பன் முருகன் காப்பாத்தட்டும்!! :-) \\\

நிச்சயம் காப்பாற்றுகிறேன் பக்தா

வெண்பூ said...

எத்தனைப் பேர் இதுவரை வருவதாக சொல்லியிருக்கிறார்கள் என்று போடலாமே? தான் சந்திக்க விரும்பும் பதிவர் வருகிறார் என்றால் மற்றவர்களும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால்தான்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

உள்ளேன் அய்யா...! :)

லக்கிலுக் said...

இதுவரை முப்பது பேர் வருவதாக வாக்களித்திருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியும் இந்த சந்திப்புக்கு வருவார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.

லக்கிலுக் said...

பின்னூட்ட கயமைத்தனம்!

அதிஷா said...

test test

அதிஷா said...

வெண்பூ இது வரைக்கும் உங்களையும் சேர்த்து 30 பேர் வருவாங்கனு எதிர்பாக்கறேன்

பார்க்கலாம்

அதிஷா said...

பாலாண்ணா நீங்க கட்டயாம் ரெண்டு சந்திப்புக்கும் வந்துடுங்கோ

அதிஷா said...

\\
துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியும் இந்த சந்திப்புக்கு வருவார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.
\\

அடடா .... சோனாவும் வராங்களாமே அப்படியா தோழர்

குரங்கு said...

அதிஷா,

நானும் வரலாமா?

அதிஷா said...

குரங்கு சார் கட்டாயம் வாங்க

உங்கள் வரவு நல் வரவாகட்டும்

வெண்பூ said...

//லக்கிலுக் said...
துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியும் இந்த சந்திப்புக்கு வருவார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.
//

வரட்டும்.. வரட்டும்.. அவரு இந்த பதிவை படிச்சாரான்னு கேக்குணும் :)))

Anonymous said...

நானும் வரலாமா?

புருனோ Bruno said...

http://payanangal.blogspot.com/2008/08/06062008.html

வெண்பூ said...

டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

உங்கள் தமிழன் said...
This comment has been removed by a blog administrator.
தாமிரா said...

இன்னாபா.. நா இல்லாத சமயமா பாத்து பிளான் பண்ணிக்கிறீங்கோ.. அதுக்காகோ சந்திப்பு சொதப்பக் கடவதாக..ன்னு சாவம்லாம் உடமாட்டேன் கண்ணு. நல்லா நடக்கட்டும்பா.. யாரோ நாங்கல்லாம் தப்பிச்சுக்கினோம்னு கூவுற சத்தம் கேக்குது. அடுத்த தபா மாட்டாமலா போபோறீங்கோ.. அப்போ வெச்சிக்கிறேன். (ஆ.:பீஸில் ஆணி புடிங்கியது போதும், சைட்டுக்கு போ, நீ போவாம ஒண்ணும் ஆவ மாட்டேங்குது நைனானு இங்கே அமிச்சிட்டானுங்கோ. திங்க, செவ்வா யில வருவேமின்னு நெனைக்கிறேன்)

அதிஷா said...

கடையம் ஆனந்த் கட்டாயம் வாங்க

யூ அர் மோஸ்டு வெல்கம்

அதிஷா said...

தாமிரா நீங்க வர்லியா இன்னா நைனா பொசுக்குனு இப்டி சொல்லிட்ட
ஒனகொசரம் இன்னா பிளான்லாம் போட்டு வச்சா

போ நைனா உன் பேச்சுக்கா

அதிஷா said...

உங்கள் தமிழன் நீங்களும் பதிவர் சந்திப்புக்கு வந்தால் உண்மைதமிழனுடனான உங்கள் பிரச்சனையை அங்கே வைத்துக்கொள்ளலாம்

Kannan.S said...

அடப்பாவிங்களா.. இன்விஷ்டேஷனுக்கு, இவ்ளோ பின்னூட்டமா..?

லக்கிலுக் said...

பின்னூட்ட டாபருத்தனம்!

நாயகன் ஜேகே ரித்திஷ் said...

நானும் சந்திப்புக்கு வரலாமா?

அதிஷா said...

இன்னைக்கு பதிவர் சந்திப்புங்கோ

அதிஷா said...

\\
அடப்பாவிங்களா.. இன்விஷ்டேஷனுக்கு, இவ்ளோ பின்னூட்டமா..?

August 9, 2008 1:03 AM
\\

கண்ணன் நீங்களும் வந்துடுங்க

அதிஷா said...

பின்னூட்ட அழைப்புத்தனம்

കെ.പി.സുകുമാരന്‍ അഞ്ചരക്കണ്ടി. said...

சென்னை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்க‌ள் .....!

K.P.Sukumaran,
Bangalore.

அதிஷா said...

நன்றி சுகுமாரேட்டா

புருனோ Bruno said...

10.08. 2008 நடந்த
சந்திப்பு குறித்த என் இடுகை இங்கு உள்ளது

புருனோ Bruno said...

10.08. 2008 நடந்த
சந்திப்பு குறித்த என் இடுகை இங்கு உள்ளது