03 August 2008

ஒரு பிட்டுபட விமர்சனமும் குசேலன் ஓப்பீடும்
சமீபத்தில் 2008ல் வெளியாகி சக்கை போடு போடும் ஒரு பிட்டு பட விமர்சனம் ;
ஹிரோ ஹீரோயின் இல்லாத படம் என விளம்பரப்படுத்த பட்ட பத்து பத்து படத்திற்கு சனிக்கிழமை செல்ல நேர்ந்தது , அரங்கு நிறைந்த காட்சிகளாக சென்னை தேவி தியேட்டரில் ஓடி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் தமிழக '' மல்லிகா செராவத்'' சோனா, போஸ் வெங்கட்,தலை வாசல் விஜய் , மற்றும் பல புதுமுகங்களும் நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருப்பவர் சத்யம் , தயாரிப்பு இந்தியன் ட்ரீம் மேக்கர்ஸ் எனப்படும் அமெரிக்க கம்பேனி .

கூவம் ஆற்றில் சூட்கேசில் பிணமாக கிடக்கும் பிரபல டைரக்டரான தலைவாசல் விஜயிடமிருந்து படம் துவங்குகிறது , அங்கேயிருந்து அவரது கொலை குறித்த விசாரணை துவங்குகிறது , படிபடியாக விசாரணை ஒவ்வோரு கட்டத்திற்கு செல்லும் போதும் ஒரு புது முடிச்சு அவிழ்க்கப்படுகிறது .

இதில் ஒரு முரட்டுத்தனமான வக்கீல் , தலைவாசல் விஜயின் மனைவி , அவரது கள்ளக்காதலன் , தெருசண்டையாளர் , போலிஸ் என படம் பல கதாபாத்திரங்களுடன் பயணிக்கிறது . இறுதியில் கொலைக்கு காரணமானவர் கண்டுபிடிக்கப்பட்டாரா என்பதே படத்தின் முடிவு .

10-10 அமெரிக்க அதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட நேரம் , வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நேரத்தையே படத்தின் முக்கிய கருவாக எடுத்துக்கொண்டு , அந்த குறிப்பிட்ட நேரத்தில் கொல்லப்படும் ஒரு கதாப்பாத்திரத்தையும் அவனை சுற்றி உள்ளவர்களை கொண்டு அவனது கொலைக்கான காரணத்தையும் அவனை கொன்ற கொலைகாரரையும் சென்றடையும் திரைக்கதையையும் எடுத்துக்கொண்ட இயக்குனருக்கு ஒரு '' ஷொட்டு '' , அதை மிக நேர்த்தியாக கொண்டு சென்று மிக புத்திசாலித்தனமாக படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை திரையில் வரும் அத்துனை பாத்திரங்களின் மீதும் ( நமக்கு அண்டா குண்டா மீதெல்லாம் ) சந்தேகம் வரவழைக்கும் காட்சி அமைப்புகள் . அதற்கேற்ற பிண்ணனி இசையும் திகிலடைய வைக்கும் கேமராவும் நம்மை அசத்துகின்றன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது போன்ற படங்கள் அத்தி பூத்தாற் போலவே வருகின்றன .


படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி என யாரும் இல்லை என்றாலும் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை நம்மை சீட்டை விட்டு அகலவிடாமல் சூட்டை கிளப்புகிறார் '' சோனா ''.

படத்தில் அவர் வரும் காட்சிகளில் தியேட்டரே மயான அமைதிக்கு சென்று விடுகிறது . கவர்ச்சியின் எல்லை எதுவென யாருமே அவருக்கு சொல்லிதரவில்லை போலும் ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் இடையே அவரது உடல் ஊசலாடுவது ரசிகர்களுக்கு நல்ல விருந்து . அவரும் அவரது கள்ள காதலனும் , அந்த கள்ளக்காதல சிறுவனை மயக்க சோனா எடுக்கும் முயற்சிகளும் தித்திக்கும் தீபாவளி . திரையுலக வரலாற்றில் சோனா நிச்சயம் ஒரு நாள் ஒர் உயரிய இடத்தை தக்க வைப்பார் . அவரது அபரிமித கவர்ச்சி படத்திற்கு மிகப்பெரிய ஊட்டச்சத்து .

சோனா தவிர தமிழகத்தை கலக்கிய பத்மா,லக்ஷா ,அபிநயாஸ்ரீ என பல குறைந்த பட்ச கவர்ச்சி காட்டும் நாட்டு வெடிகுண்டுகள் பல படத்திலிருந்தாலும் சோனாவின் கவர்ச்சிக்கு முன் இவர்கள் காணாமல் போகின்றனர் . சோனா எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் சலிப்பு தட்டவில்லை . படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவில்லை எனினும் அந்த குறைகளை இந்த கவர்ச்சி குண்டுகள் ஈடு செய்கின்றன .

படத்தின் ஹைலைட்டாக நான் கருதுவது சிறுவன் மேலே நின்று மின்விசிறியை ரிப்பேர் செய்ய அவனுக்கு கீழே நாற்காலியை பிடித்தபடி நிற்கும் சோனாவின் கவர்ச்சி இளசுகளுக்கு மட்டுமல்லாது பெருசுகளுக்கும் நல்ல தீனியாக அமையலாம் .

இசை L.V.கணேசன் , மிக அற்புதமாக இசையமைத்திருக்கிறார் , பிண்ணனி இசை பட்டையை கிளப்புகிறது , அவருக்கு ஒரு சபாஷ் . இவர் பல டி.வி சீரியல்கள் மற்றும் சன் டிவியில் வரும் அசத்த போவது யாரு க்கும் இசையமைப்பவர் . அவருக்கு நல்ல எதிர்காலமுண்டு .

கலை இயக்குனருக்கு அதிக வேலை இல்லாத போதும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார் .

கேமரா மிக அருமையான யாரும் எதிர்பாராத கோணங்களில் படமெடுக்கப்பட்டுள்ளது .

தியேட்டரில் பல பெண்களையும் பார்க்க முடிந்தது , அவர்களுக்காகவே '' மெட்டி ஒலி '' போஸ் மாமா என்று அன்போடு பெண்களால் அழைக்கபடும் போஸ் வெங்கட்டை நடிக்க வைத்துள்ளனர் போல அவர் மிக அழகாக இருக்கிறார் , நன்றாக நடிக்கவும் செய்கிறார் .

படத்தில் குறைகளாக பார்ப்பது , ஒலிப்பதிவு வாயசைவுக்கும் பேச்சுக்கும் நிறைய இடஙகளில் சொதப்புகிறது சமயத்தில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வு , சோனாவின் அதிகபட்ச கவர்ச்சி ( மிக அதிகபட்ச கவர்ச்சி முயற்சி ; )


சமயங்களில் குடும்பத்தோடு வந்தவர்களை நெளியவைக்கலாம் . இது இயக்குனரின் கன்னி முயற்சியாகையால் அவரது சிலபல குட்டி குட்டி தவறுகளை மன்னிக்கலாம் .

இப்படத்தை தனியாக பார்க்க முயற்சிக்கவும் , நன்றாக அகமகிழ்ந்து காண ஏதுவாக அமையும் . படத்திற்கு பல பெண்களும் வந்திருந்தது நம் நாட்டில் பெண்களின் ஆண்களுக்கிணையான முன்னேற்றத்தை காட்டுவதாக இருந்தது .

படத்திற்கு மதிபெண்ணும் பத்துக்கு பத்து , அருமையான கதைக்கும் பெண்களும் ரசிக்கும்படியும் படத்தை இயக்கிய இயக்குனருக்கு 5 , கதை தொய்வடையும் போதெல்லாம் தன் சதையால் தூக்கி நிறுத்திய சோனாவிற்கு 5

மொத்தத்தில் பத்து பத்து , பத்துக்கு பத்து -

10/10


இனி குசேலன் படம் குறித்த எனது பார்வை :


ஆறு கோடி குசேல ஏழைகள் மற்றும் ஒரு கோடீஸ்வர குபேர ரஜினி , குறித்த படமாகவே இது படுகிறது ,

ரஜினியை வாழவைக்கும் ஆறுகோடி லூசு தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பசுபதி அவர் படம் முழுவதும் பிச்சை எடுக்காத குறையாக அலைகிறார் .

ஆறுகோடி குசேலர்களால் உயர்ந்த குபேர ரஜினி பட்டுமெத்தையில் படுத்துக்கொண்டு தன்னை குறித்து விமர்ச்சிப்பவரை பைத்தியமாக்குகிறார் . அந்த பைத்தியத்தின் கேள்விகளுக்கு கேவலமான பதில்களை அளிக்கிறார் .

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்க காசு தந்த _______ (உங்களுக்கு தெரிந்த மிக மோசமான கெட்டவார்த்தையால் நிரப்பிக்கொள்ளவும் )தமிழர்களுக்கு ரஜினி என்றுமே எட்டாகனிதான் என்பதே படம் நமக்கு உணர்த்தும் செய்தி , படம் முழுவதும் விரவி கிடக்கும் ரஜினியை புகழ்ந்து தள்ளும் வசனங்கள் , கேணத்தனமாக நடந்து கொள்ளும் அழுத்தமில்லாத சற்றும் மனதில் பதியாத பசுபதியின் பாத்திரம் ( பசுபதி வெயில் பட ஞாயபகத்திலேயே இருக்கிறாரா ) அவைகளால் அந்த கிளைமாக்ஸ் காட்சி அதனாலே தானோ என்னவோ இழவு மனதில் ஒட்டவில்லை .

கேமரா,பிண்ணனி இசை,பாடல்கள் , துணை நடிகர்கள்,கலை வடிவமைப்பு என பலரும் சொதப்பியுள்ளனர் .

பத்து பத்து படத்துடன் ஒப்பிடும் போது குசேலனே எனக்கு பிட்டுபடமாக படுகிறது , பத்து பத்து படத்தில் கவர்ச்சி எந்த இடத்திலும் திணிக்கப்படவில்லை , அது கதையின் ஓட்டத்தோடு வருவதால் நமக்கு உருத்தவில்லை , குசேலன் படத்தில் நயன்தாரா , சோனா முதலான பல நடிகைகளும் கதைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாது வந்து கவர்ச்சி காட்டுகின்றனர் . இது தவிர தேவையில்லாமல் இரட்டை அர்த்த வசனங்கள் வேறு .


குசேலன் படம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இதே கவிதாலாயாவால் எடுக்கப்பட்டிருந்தால் பசுபதி பாத்திரத்தில் ரஜினியும் , சூப்பர் நடிகராக சரத்பாபுவும் , எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் மிகைப்படுத்தப்படாத திரைக்கதையும் , கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களுடன் , இசை ஞானியின் இசையில் வந்திருக்கும் , நிச்சயம் வரலாற்றில் மிக முக்கிய திரைப்படமாகவும் இருந்திருக்கும் . இதை நினைத்தாலே இனிக்கிறது . ரஜினியால் அது போல இன்று நடிக்க முடியாத அளவுக்கு அவரை எது தடுக்கிறது எனத்தெரியவில்லை . ( ஒரு ரஜினி ரசிகனாக ரஜினியிடம் நான் எதிர்பார்ப்பது அந்த பழைய ரஜினியைத்தான் )

இதற்குமேலும் பத்து பத்து படத்தை குசேலனோடு ஒப்பிட்டு 10-10 படத்தை அசிங்கபடுத்த நான் விரும்பவில்லை .

குசேலனில் ,கத பறயும் போள் எனும் நல்ல ஒரு உணர்வு சார்ந்த கதையை நாறாடித்த குற்றத்துக்காக மதிப்பெண்கள் மைனஸில் .


மகா மட்டமாக படத்தை இயக்கிய பி.வாசு அவர்களுக்கு -5 ,


ஒரு நல்ல கதையை தனக்காக மாற்றியமைக்க துணை போன ரஜினிகாந்திற்கு -5-10 / 10நீ யார்ரா ரஜினிக்கு மார்க்கு போடணு நீங்க கேக்கறது எனக்கு புரியுது , ரஜினிய வளர்த்து விட்ட ஆறு கோடி குசேலன்கள்ள நானும் ஒருத்தன் அந்த உரிமைலதான் போட்டேன் .

பதிவை கடைசி வரை படித்த மற்றும் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கு நன்றி

49 comments:

அதிஷா said...

பின்னூட்ட டுபுரித்தனம்

முரளிகண்ணன் said...

ha ha ha ha ha ha
sona - mallika shereawat of TN

Anonymous said...

Two things would have happened for women turning up for Pathu pathu.

1. They didn't know about the story.
2. They know the story and okay to watch such movies without much inhibitions.

I wish it is second case.

I could also think of why women don't go to such movies. In Indian context, you don't have a choice of leaving kids at home and go for movies. First, there are no babysitting culture here and even if grand parents look after the kids, could the adults tell them that they are going for so and so movie?

I wish off-beat directors like these get the attention of blgger bharathi who wish to produce movies.

கோவி.கண்ணன் said...

பின்னுட்ட மொள்ள மாறித்தனம் !
:)

prabu said...

''''''''''''பதிவை கடைசி வரை படித்த மற்றும் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கு நன்றி'''''''''''''
சரியா கண்டுபுடுச்சிடீங்க
இந்த படத்துக்கு விமர்சணத்த படிச்சு நேரத்த வீணடிக்க விரும்பல

VIKNESHWARAN said...

பின்னூட்ட பொருக்கி தனம்...

prabu said...

///பதிவை கடைசி வரை படித்த மற்றும் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கு நன்றி/////
உங்களுக்கும் நன்றி

http://priyamudan-prabu.blogspot.com/

லக்கிலுக் said...

நீங்களும் பத்து பத்து பார்த்தீர்களா? சூப்பர் படமில்லே? :-)

Naga said...

அருமையான ஒப்பீடு

அதிஷா said...

முரளி அண்ணா வருகைக்கு நன்றி
நீங்கள் கட்டாயம் பார்க்கணும் அந்த படத்தை

றிசாந்தன் said...

குசேலன் முதல் நாள் முதல் காட்சி பாத்தேன் .
ஒரு நல்ல படத்த இப்பிடியெல்லாம் நாசமாக்க முடியுமா ?
இன்னொரு பாபா . பாபாவைக்கூடஇன்னொருதரம் பாக்கலாம் ஆனா
குசேலன் படத்த ஒருதரம் முழுசா பாத்ததே பெரிய விடயம் .

அதிஷா said...

anony sir

neenga ennamo solla vareenganu puriyudhu aana puriya
naan englishula neraya weaku

அதிஷா said...

வாங்க கோவி அண்ணா , வருகைக்கு நன்றி

அதிஷா said...

வாங்க பிரபு மிக்க நன்றி

அதிஷா said...

லக்கி நீங்களும் பார்த்துட்டீங்களா
வாட் ஏ கோ-இன்சிடன்ஸ்

படம் சூப்பரோ சூப்பரப்பு

Anonymous said...

//லக்கிலுக் said...
நீங்களும் பத்து பத்து பார்த்தீர்களா? சூப்பர் படமில்லே? :-)
//

// அதிஷா said...
லக்கி நீங்களும் பார்த்துட்டீங்களா
வாட் ஏ கோ-இன்சிடன்ஸ்

படம் சூப்பரோ சூப்பரப்பு
//

டேய் டேய் அடங்குங்கடா ஆடாதீங்கடா

மொள்ளமாறி, முடிச்சவிக்கி, கேப்மாரி எல்லாத்தையும் தனிதனியா பார்த்துருக்கோம். மொத்தமா உங்க ரெண்டு பேரையும் பாத்தா போதும். எல்லா பயலையும் பாத்த மாதிரி.

வந்தியத்தேவன் said...

என்னுடைய பின்னூட்டத்தை இடாத காரணம் என்ன அதிஷா அவர்களே.

அதிஷா said...

வந்தியத்தேவன் சார் உங்கள் பின்னூட்டம் ஒன்று மட்டுமே வந்துள்ளது

நான் வெளியிடாததாக சொல்லும் பின்னூட்டத்தை வேறு எங்காவது போட்டு வீட்டிருப்பீர்கள்
தயவு செய்து அதை மீண்டும் எனக்கே இடவும்

நான் கட்டாயம் வெளியிடுகிறேன்

கடப்பாரை said...

//மகா மட்டமாக படத்தை இயக்கிய பி.வாசு அவர்களுக்கு -5 ,


ஒரு நல்ல கதையை தனக்காக மாற்றியமைக்க துணை போன ரஜினிகாந்திற்கு -5-10 / 10//

வடிவேலுவின் கேணத்தனமான காமெடி -5

நயன்தாராவின் சொறித்தனம் -5

சாப்பாட்டுக்கே இல்லியாம் ஆனா மீனா மட்டும் பளபளப்பாம்! -5

கண்மாயில் துள்ளும் டால்ஃபின்கள்! நாமள்லாம் என்ன கேணய்ங்களா? கிராஃபிக்ஸ் சொளந்தர்யா -5

இன்னும் சொல்லிக்கிட்டே போலாம்....

சுருக்கமா சொன்னா....

மலையாளத்துல, கதைக்காக படம்!

தமிழ்ல யாருக்காக படம்னு நான் சொல்லனுமா என்ன?

ஜோ / Joe said...

:))

அதிஷா said...

வாங்க விக்கி அவர்களே
உங்கள் பொருக்கித்தனத்திற்கு
மிக்க நன்றி
அடிக்கடி இது போல பின்னூட்டங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

அதிஷா said...

வாங்க நாகா
மிக்க நன்றி

அதிஷா said...

வாங்க றிசாந்தன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

அவனும் அவளும் said...

யாரைப்பத்தி என்ன வேணும்னாலும் சொல்லுங்க கடப்பாரை. ஆனா நயன்தாராவ "சொறின்னு" சொல்ல உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
இந்த அளவு தமிழன நமீதா வெறி ஆட்டி படைக்கத நினைச்சா வருத்தமா இருக்கு.

அதிஷா said...

\\டேய் டேய் அடங்குங்கடா ஆடாதீங்கடா

மொள்ளமாறி, முடிச்சவிக்கி, கேப்மாரி எல்லாத்தையும் தனிதனியா பார்த்துருக்கோம். மொத்தமா உங்க ரெண்டு பேரையும் பாத்தா போதும். எல்லா பயலையும் பாத்த மாதிரி.
\\

மிக்க நன்றி அனானி அண்ணா
எல்லா உங்க ஆசிர்வாதம் தான்

அதிஷா said...

வாங்க கடப்பாரை
நீங்க என்ன மம்முட்டி தம்பியா?
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி

அவனும் அவளும் said...

இந்த அனானிக்கும்/அதிஷாவுக்கும் உள்ள உறவு ஆத்மாவுக்கும்/சரீரத்துக்கும் உள்ள உறவு மாதிரியா ?

அதிஷா said...

வாங்க ஜோ வருகைக்கு மிக்க நன்றி

றிசாந்தன் said...

அடப்பாவிகளா
இலங்கை தமிழில் குசேலன் படம் நல்லா
இல்லை என்று சொன்னேன் .

றிசாந்தன் said...

அடப்பாவிகளா
இலங்கை தமிழில் குசேலன் படம் நல்லா
இல்லை என்று சொன்னேன் .

Anonymous said...

/////படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை நம்மை சீட்டை விட்டு அகலவிடாமல் சூட்டை கிளப்புகிறார் '' சோனா ''.

படத்தில் அவர் வரும் காட்சிகளில் தியேட்டரே மயான அமைதிக்கு சென்று விடுகிறது . ////////

உங்க எண்ண அலைகளின் அலை நீளம் ரொம்ம்ம்ம்ப பெரிசுங்கண்ணா.
வழமையாக உங்கள் பதிவுகளை படித்தாலும் இன்றுதான் ஓபின் ஐடில முதல் பின்னுட்டம். நல்ல நடை.வாழ்துக்கள்

கானா பிரபா said...

;-))))

கானா பிரபா said...

;-))))

பரிசல்காரன் said...

எல்லாத்தையும் வழிமொழிகிறேன்!

பத்துக்கு பத்து பாத்துட்டு வர்றேன்!

ஜெகதீசன் said...

:)))

PPattian : புபட்டியன் said...

//கதை தொய்வடையும் போதெல்லாம் தன் சதையால் தூக்கி நிறுத்திய சோனாவிற்கு //

:))))))))))))))))))))))))))

வீரசுந்தர் said...

பத்துக்கு பத்து மாதிரியான கலைப்படங்கள் எல்லாம் இங்க வெளியாக மாட்டேங்குது. :(

லேகா said...

அதிஷா நல்ல சாட்டை அடி விமர்சனம்...
ரஜினி ரசிகனா இருந்த நீங்க சோனா ரசிகரா மாறிடிங்க போல!!
பத்துக்கு பத்து விமர்சனம் போல இனி ஜெ.கே.ரிதேஷ்,சாம் ஆண்டர்சன் பட விமர்சனங்களையும் எதிர்பாக்கிறேன்!!குசேலன்,தசாவதாரம்,குருவி போன்ற சீரியஸ் காமெடிகளுக்கு ஒரிஜினல் காமடி படங்களான இவை தேவலை.....

மதுவதனன் மௌ. said...

பத்து பத்து குடும்பமா இருந்து பாத்து ரசிக்கவேண்டிய படமப்பா....அதாவது புதுசா கட்டிக்கிட்ட குடும்பம்.....:-)))

தமிழ்ப்பறவை said...

//படத்தின் ஹைலைட்டாக நான் கருதுவது சிறுவன் மேலே நின்று மின்விசிறியை ரிப்பேர் செய்ய அவனுக்கு கீழே நாற்காலியை பிடித்தபடி நிற்கும் சோனாவின் கவர்ச்சி இளசுகளுக்கு மட்டுமல்லாது பெருசுகளுக்கும் நல்ல தீனியாக அமையலாம் //
hi...hi.....vaerenna jolla...

Ram Ravishankar said...

அல்லோ, ரஜினிக்கு மார்க் போட யாரும் இன்னும் பொறக்கல .. இனிமே பொறக்க போரதும் இல்ல .. அத தெரிஞ்சிக்க

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அன்பின் அதிஷா..

பத்து-பத்து விமர்சனம் - வயசுக் கோளாறு ஜாஸ்தியா இருக்குன்னு நினைக்கிறேன்.

குசேலன்-விமர்சனம் - உங்களைத் திருப்திப்படுத்த தவறவிட்ட கோபம் கொப்பளிக்கிறது என்று நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்

அதிஷா said...

வாங்க அவனும் அவளும் , அந்த அனானிக்கிம் எனக்கும் பூர்வ ஜென்ம்பந்தம் இருக்குங்க

______________________________-

ஓகே றிசாந்தன்

_______________________________

மிக்க நன்றி ஹாய்சுபாஷ்

________________________________

வாங்க கானா பிரபா அண்ணா மிக்க நன்றி

அதிஷா said...

மிக்க நன்றி பரிசல் அண்ணன் ,

_____________________________

வாங்க ஜெகதீசன் வருகைக்கு நன்றி

____________________________

வாங்க புபட்டியன் ,
மிக்க நன்றி

_____________________________

வாங்க வீரசுந்தர் நாங்கள்ளாம் புண்ணியம் பண்ணவா அதான்
______________________________

வாங்க லேகா
உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேற்றப்படும்

______________________________


வாங்க மது சார்

;-))))))))))))))))

______________________________


ஆமாங்கோ தமிழ்பறவை வருகைக்கு நன்றி

______________________________

அதிஷா said...

\\ அல்லோ, ரஜினிக்கு மார்க் போட யாரும் இன்னும் பொறக்கல .. இனிமே பொறக்க போரதும் இல்ல .. அத தெரிஞ்சிக்க \\

ராம் ரவி சங்கரன் சார்

உங்களுக்கான பதில் பதிவின் கடைசியில் இருக்கிறது ,

அது தவிர ரஜினி நம்மை போன்ற மனிதன் தானே , கடவுள் இல்லையே,
என்ன நான் டிக்கெட் வாங்கி பாத்த காசுல இன்னைக்கு கோடிஸ்வரன் அவ்வளவே

அதிஷா said...

\\ அன்பின் அதிஷா..

பத்து-பத்து விமர்சனம் - வயசுக் கோளாறு ஜாஸ்தியா இருக்குன்னு நினைக்கிறேன்.

குசேலன்-விமர்சனம் - உங்களைத் திருப்திப்படுத்த தவறவிட்ட கோபம் கொப்பளிக்கிறது என்று நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் \\

என் மன உணர்வுகளை மிகச்சரியாக கணித்திருக்கிறீர்கள்

மிக்க நன்றி அண்ணா, உங்கள் பின்னூட்டம் எனக்கு பெரும்மகிழ்ச்சியை அளிக்கிறது .

sprity said...

kalakal vemarsanam...
vemarsanathai padithu makizhilthen....

tharu maru.........

Anonymous said...

HI Adhisha,

Don't think you are a genious to ridicule a good attempt by Rajini.

Its a shame that you make your living just critizing others.

Probably get your health checked. Over Poramai and Over erichhal will lead to disaster.

As for Kuselan, the movie is being enjoyed by family audiences world over (UK Top 12, US crossed 800k, AP - Still running packed and even in TN. THough you cannot compare with Sivaji, its a decent movie)

I pray to god to bring some sense in you all Rajini Haters!!!.

Kuttram solvathaiye vazhkaya kondu kollatheergal. "Kathatra Oosiyum Vaarathu Kadaivazhikke"

A Friend.

tg thulasiram said...

ஐயா,

குசேலனில் ஏதாவது குற்றமிருந்தால் அது மொத்தமும் அந்த பேராசைக்கார பாலசந்தரையே சாரும்
பாராட்டுக்கள்
போயிட்டானா !!!