Pages

07 August 2008

ஒலிம்பிக்ஸில் கலைஞரும் ரஜினியும்

படத்தின் மீது கிளிக் கி பெரிதாக்கி பார்க்கவும் .

( கொஞ்சம் சீரியஸான ஒரு ஒலிம்பிக் கார்ட்டூன் )



இந்த 2008 ஓலிம்பிக் இதோ தொடங்கிவிட்டது , எப்பவும்போல நம்மவர்கள் வாயில விரல் வைத்துக்கொண்டு வெறும் கையோடு வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள் , அதனால் இந்தியா தங்கம் வாங்க வேண்டுமென்றால் சரவணா செல்வரத்தினம் சுவல்லரியில்தான் வாங்க வேண்டும் .


அதனால நம்ம அரசியல்வாதிங்க அப்புறம் தமிழ் நடிகர்களை அனுப்பினா அவங்க என்ன போட்டில கலந்துகிட்டா நமக்கு தங்கம் நிச்சயமா கிடைக்கும்னு பார்க்கலாம்

முதலில் சில அரசியல் தலைவர்கள் :

கலைஞர் -

கதை வசனமெழுதி கழுத்தருக்கற போட்டி , உடன்பிறப்புகளுக்கு ஆப்படிக்கும் போட்டி , ( மத்த போட்டிக்கு டீம் செலக்ஷன்ல கட்சிலருந்து மூணு பேறதான் செலக்ட் பண்ணிருக்காராம் , அது அஞ்சநெஞ்சன், தளபதி, கனிமொழி மட்டும்தானாம் , மற்ற உடன்பிறப்புகளுக்கு தக்க தருணத்தில் வாய்ப்புகள் தரப்படும்னு பொதுக்குழு தீர்மானத்திருக்கிறதுனு முரசொலில சொல்லிட்டாரம் )



புரட்சித்தலைவி -

கலைஞரை திட்டற போட்டி ( ஞாநியும் கலந்துக்கறாருங்கோ ) , தனியா விளையாடற எல்லா போட்டியும் ( குழுவிளையாட்ட்னா அலர்ஜியாம் ) , கால்ல விழ வைக்கிற போட்டி , ( இவங்க கட்சில நோ டீம் செலக்ஸனாம் , அவங்களே எல்லா போட்டிலயும் கலந்துப்பாங்கணு ஜெயா டிவி இங்கிலீசு நீயுஸில செய்தி )


மருத்துவர் ராமதாஸ் -

இவரு பல வருஷமா விளையாடற கூடு விட்டு கூடு பாயற போட்டிதான் , அப்பறம் போரடிச்சா போராட்டம் நடத்தற போட்டி , பையனுக்கு மந்திரி சீட் வாங்கற போட்டி , ( நடிகர்கள் கலந்துக்கற போட்டில கலந்துக்க மாட்டேன்னு அவரு மட்டும் பாக்கற மக்கள் தொ.க வில அறிக்க விட்டுட்டாருங்க , முக்கியமா ஒலிம்பிக்ஸ் என்பது ஆங்கில வார்த்தை அத தமிழ்ல ஒலிம்பன்னிகள் என மாற்ற வேண்டுமென போரட்டத்தில் இறங்கியிருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல் )


விஜயகாந்த் -

தீர்ப்பு சொல்ற போட்டி , தீவிரவாதிகள் கேட்சிங் காம்படிசன் , வாய்விட்டு எஸ்கேப் ஆகும் போட்டி , ( இவரு போட்டில கலந்துக்கறத மக்கள் மைதானத்துக்கு வந்து பாக்க வேண்டாம் இவரே வீடு வீடா வந்து விளையாடி காட்ட போவதாக அவர் கூட படிக்காத பேர் தெரியாத அவரோட கட்சி பேப்பர்ல அறிக்கை விட்றுக்காருங்கோ )


வைகோ ,திருமாவளவன் ,போன்றோர் போட்டில கலந்துக்கறவங்களுக்கு பொட்டி தூக்கும் வேலையில் பிஸியாக இருப்பதால் நோ காம்படிஸன் .

தமிழக காங்கிரசு கட்சியில் போட்டியில் யார் கலந்து கொள்ள போவது என இன்னும் முடிவாக தெரியவில்லை, இன்னும் போட்டியாளர்கள் போட்டியில் சத்தியமூர்த்தி பவனில் ( அங்க இட்லி வடை கிடைக்குமா ) வேட்டிகள் மற்றும் டவுசர்களுடன் ஜட்டிகளும் கழட்டப்படுவதாக மெகா டிவி செய்திகள் கூறுகிறது .

தமிழக பாரதிய ஜனதாவை யாருமே மதித்து விளையாட கூப்பிடததால் அதன் தலைவர் இல.கணேசன் யாருக்கும் தெரியாமல் ரூம் போட்டு தலைகீழாக நின்று அழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .



சில நடிக நடிகைகள் :


ரஜினிகாந்த் -

பல்டி அடிக்கிற போட்டி , அடி வாங்கற போட்டியிலும் கலந்து கொள்ளலாம் ,வடிவேலுவிற்கு எதிராக ( கடைசியாக இவரடித்த பல்டியில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் அதிர்ந்து போய் இருப்பதாக தகவல் ) , ஏத்திவிட்டா எகத்தாளமா பேசற போட்டிலயும் கலந்துக்கறாருங்க .


கமல் -

மாறுவேடப்போட்டி , தயாரிப்பாளருக்கு மொட்டை அடிக்கும் போட்டி ( லேட்டஸ்டாக ஹாலிவுட்டிலிருந்து ஒரு நல்லவர் அவரிடம் மொட்டையடிக்க வந்துள்ளாராம் ) ,


விஜயகாந்த் -

வாய் சவடால் போட்டி ( தீவிரவாதிங்கள புடிக்கிற போட்டி மற்றும் தீர்ப்பு சொல்லுற போட்டியும் ) ,


கார்த்திக் -

HIDE AND SEEK or ஒளிஞ்சு விளையாட்டு , வெத்தலைபாக்கு சாப்பிடற போட்டியும் ( இவரைபற்றி இதுவரை தகவல் இல்லை )


சரத்குமார் -

அவருமட்டும் தனியா விளையாடற மாதிரி எதும் போட்டி இருக்காப்பா?? ( நமக்கு நாமே போட்டி மாதிரி ) ,


விஜய் -

நடிச்சி நடிச்சி மக்கள சிரிக்க வச்சு சாவடிக்கற போட்டி (தன் அற்புதமான படங்களால் தமிழக மக்கள் தொகையை பெருமளவில் குறைத்த பெருமை பெற்ற இவர் தனது அடுத்த படத்தில் மொத்தமாக ஒரே வசனத்தில் இந்தியாவையே அழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்)


அஜித் -

போட்டியில கலந்துக்க மறுத்துட்டாரு ( பல வருஷமா ஒரு படத்துல நடிக்கிறாராம் ) ( பேட்டி வேணா குடுக்கறேன் போட்டிலலாம் கலந்துக்க முடியாதுனு சொல்லிட்டாராம் )


சிம்பு -

ஓவரா சீன் போடற போட்டி , ஆ உ னா அழற போட்டி ( அவங்கப்பாதான் கோச்சாம் ) ,

தனுஷ் -

சிம்புவுக்கு ஆப்படிக்கும் போட்டி ( லைட் வெயிட் )


ஜே.கே.ரித்திஷ் குமார் -

( இவரில்லாம தமிழ் திரையுலகமா ) அவரோட அகில உலக ரசிகர்கள் , மற்ற நடிகர்களின் நலன் கருதி எந்த போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டாமென கூறியதால் , நோ காம்படீசன் ,


நமிதா -

குஸ்தி, குண்டெறிதல் , கோழி புடிக்கறது , குறி பார்த்து சுடற போட்டி

நயன்தாரா -

சிம்புவுக்கு ஆப்படிக்கும் போட்டி ( ஹெவி வெயிட் )

திரிஷா -

கோர்த்து விட்டு கும்மி அடிக்கும் போட்டி

இளைஞர் தலைவி பத்து பத்து புகழ் சோனா -

டென்னிஸ் , ஹாக்கி , வாலி பால், பேஸ்கட் பால் , சுனோ பால் , ஐஸ்பால் , அந்த பால் , இந்த பால் , என எல்லா பால் விளையாட்டுக்களும் .

____________________________________________________________________
டிஸ்கி : இப்பதிவு யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதபட்டதல்ல , உங்கள் சிரிப்பு மட்டுமே ஒரே நோக்கம் . மீறி உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்


வந்தது வந்துட்டீங்க குசேலன் படத்த பார்த்திருந்தீங்கன்னா படம் குறித்த உங்கள் கருத்த வலது புறம் உள்ள வாக்கு பதிவுல் குத்திவிட்டு செல்லவும் .

_____________________________________________________________________