FLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியா தன் முதல் தங்கத்தை வென்றது

>> 11 August 2008




துப்பாக்கி சுடுதல் - இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றார்.


இதன் மூலம் கடந்த 28 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக தங்கத்தை வென்றுள்ளது இந்தியா.இந்தப் போட்டியில் சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


ஒலிம்பிக் போட்டிகளில் 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமும் இது தான்.


மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் தனி நபர் வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும் இது தான்.


பதக்கம் வென்ற பின் பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்றார்.தங்கம் வென்ற பிந்த்ராவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


________________________________________________________________



ஆண்கள் துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்): இந்திய வீரர் தங்கம் வென்றார்பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ., துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்) பைனலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். தனி நபர் போட்டியில் இந்தியா தங்கம் பெறுவது இது‌வே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


அபினவ் பிந்த்ரா மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இதன்மூலம் பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தது.


சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

Source: http://www.thatstamil.com/, http://www.dinamalar.com/


112 கோடி மக்களின் பிரதிநியாக தங்கம் வென்ற ,

"தங்க இந்தியன் " அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துக்கள் !!


"PROUD TO BE A INDIAN !!!"
___________________________
மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் heartaz க்கு மிக்க நன்றி

18 கருத்துக்கள்:

லக்கிலுக் August 11, 2008 11:05 AM  

இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்!

VIKNESHWARAN August 11, 2008 11:05 AM  

மிக்க மகிழ்ச்சி

கோவி.கண்ணன் August 11, 2008 11:16 AM  

வெற்றிபெற்ற வீரத்திருமகனுக்கு வாழ்த்துகள்.

Komban,  August 11, 2008 11:45 AM  

உங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். தெரிய படுத்தியதற்கு மிகவும் நன்றி.

செய்தி கேள்வி பட்டவுடன், உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அதுதான் தேச பற்றோ?

Rajesh,  August 11, 2008 12:03 PM  

woooooooooooooooooooooooooooooow

Atlast we done it

chak de india

Anonymous,  August 11, 2008 12:21 PM  

Hey I am very happy today.yae hooo

Anonymous,  August 11, 2008 12:59 PM  

Chak De India

SK August 11, 2008 2:01 PM  

One more person to celebrate here. Thanks Athisha.

Check in my blog, i was posting 2 days before about olympics and we guys are not caring much about this games.

Atlast Abhiav made it for us.

Congrats Abhinav

முரளிகண்ணன் August 11, 2008 2:05 PM  

அசத்தல் அட்டகாசம்

B.KARUNANANDAM August 11, 2008 2:23 PM  

BE INDIAN AND EVER BE INDIAN HEARTY CONGRADULATIONS TO ABINAV BINDRA. KEEP INDIA KEEP.

B.KARUNANANDAM

ராஜ நடராஜன் August 11, 2008 3:30 PM  

பதிவர்களுக்கு வணக்கம்.குசேலனை மூட்டை கட்டுங்க.ஒலிம்பிக்ஸில் கொஞ்சம் ஆடலாம் வாங்க எல்லோரும்.1980 க்குப் பிறகு 28 வருசம் கழித்து கிடைத்த மகிழ்ச்சி இது.

ச்சின்னப் பையன் August 11, 2008 4:08 PM  

மகிழ்ச்சியான செய்தி....

NewBee August 11, 2008 4:17 PM  

உய்....உய்.....உய்...(விசில்) :P

அப்படிப் போடு! போடு! போடு!

ஆட்டாட்றா! ஆட்டாட்றா! ஆட்டாட்றா! :))))))

ஜூப்பர்.

அபினவுக்கும், நம்மளுக்கும் வாழ்த்துகள்.

NewBee August 11, 2008 4:19 PM  

அதிஷா,

இந்த மகிழ்ச்சியானப் பதிவின் லின்க்கை, என் 'சுதந்திர தின வாழ்த்துகள்' பதிவில் இட்டுக்கொள்ளவா?

நீங்க சரின்னுதான் சொல்லுவீங்கன்னு, நான் லின்க் கொடுக்கிறேன். சேரியா?

NewBee August 11, 2008 4:24 PM  

உரல் இட்ட என் பதிவு.

http://naanpudhuvandu.blogspot.com/2008/08/blog-post_10.html

முன்னமேயே நன்றி அதிஷா.

தங்ககத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் அவசரமாய் இட்டுவிட்டேன். ஒண்ணும் சொல்லாதீங்க ப்ளீஸ்ச்ச்ச்ச்ச்ச்ச் :))

அவனும் அவளும் August 11, 2008 7:13 PM  

மற்றும் பல மெடல்களை பெற நமது வாழ்த்துக்கள். அபிநவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும்(இந்தியர்கள்) கொண்டாடும் வேளை.

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP