12 August 2008

ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!! : A Letter from a Rajini fan


மதிப்பிற்குரிய

பெருமதிப்பு மிக்க அறிவாளிகளே சான்றோரே ரஜினியை விமர்சித்து பிரபலமடைய துடிக்கும் எழுத்தாளர்களே வணக்கம் எனக்கு உங்களை போல வார்த்தைகளால் வசீகரிக்க தெரியாது , உங்கள் எழுத்துக்கள் அளவுக்கு என் எழுத்து அழகானதல்ல , உங்களுடன் வாதாடி ஜெயிக்கும் திறமை பெறாத ஒரு சாதாரண, ரஜினியின் ரசிகன் நான் .

சமீபத்தில் உங்களின் பலரது விமர்சனங்களையும் சொல்லாடல்களையும் பார்த்து நொந்து போயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் , இது வெறும் வெற்று மனக்குமுறல் மட்டுமே.

உங்களில் பலருக்கும் உங்களின் எழுத்துக்களின் மூலமாய் நான் அறிவது ரஜினியின் இந்த அபார வளர்ச்சியின் மீதான பொறாமையும் அவரை போல நம்மால் ஆக முடியவில்லையே என்கிற காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே . அப்படி என்ன தவறு செய்து விட்டார் ரஜினி , தன்னை நம்பி படமெடுத்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் அதன் மூலம் அப்படத்திற்கு ஒரு தவறான அடையாளம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என எண்ணியதும் தவறா? , அதற்காக தன் தன்மானத்தையும் இழக்க தயாராக இருக்கும் என் ரஜினி எங்கே , தன் பிரபல்யத்திற்க்காக ரஜினியை சொறிந்து சுகம் தேடும் இந்த அற்பர்கள் எங்கே .

அவர் அரசியலுக்கு வர என்றுமே ஆசைப்படாதவர் , நம் மக்கள் தானே அவரது அரிய குணம் கண்டு அரியணைக்கு வா தலைவா என அழைத்தனர் . நம் மக்கள் என்ன அறிவிலிகளா , அவர்களுக்கு அறிவில்லையா , ஒட்டு மொத்த தமிழனும் முட்டாள்களா? .

அவர் அரசியல் வசனம் பேசித்தான் அவரது படங்களை ஓட வைக்க வேண்டும் என்ற நிலை எப்போதுமே இருந்ததில்லை , அது நீங்களாகவே உருவாக்க முயலும் ஒரு வகை மாயையே தவிர வேறொன்றுமில்லை . அவரது எத்தனை படங்களை அப்படி ஓட வைத்தார் என உங்களில் யாராவது கூற இயலுமா? விட்டால் அவர் சூப்பர்ஸ்டார் ஆனதே அரசியல் பேசித்தான் என நீங்கள் கூறினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை .

ஓகேனக்கல் பிரச்சனையில் எத்தனை தைரியமாக தனது பிறந்த மண்ணின் மைந்தர்களையே உதைக்க வேண்டும் என கூறியவர் அவர் , இன்றும் கூட தனது தமிழ்மக்களுக்கு அவரால் நாளைக்கு கர்நாடக இன வெறியர்களால் எந்த வித பாதிப்பும் உண்டாக கூடாது என்பதற்காகவே அவர் அப்படி ஒரு அறிக்கை விட நேர்ந்தது . உண்மையில் ரஜினி பாயும் புலிதான் . அவர் திரையில் மட்டுமல்ல இயல்பிலும் புலிதான் .

குசேலன் திரைப்படத்தின் தோல்விக்கு ஒட்டு மொத்தமாய் ரஜினியை குற்றம் சொல்லும் பலருக்கும் தெரியவில்லை அப்படத்தில் பலரது உழைப்பும் அடங்கியிருக்கிறது என்று , வெற்றி என்றால் மட்டும் அதை பங்கு போட வரும் குள்ளநரி கூட்டம் , தோல்வி என்றதும் விலகி ஓடுவது மிகக்கொடுமை , அதை ரஜினியால் மட்டுமே உணர முடியும் .

நம்மில் எத்தனை பேர் மற்ற படங்களுக்கு குடும்பத்துடன் செல்கிறோம் , ரஜினி படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பாருங்கள் புரியும் , ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தையும் குதூகலப்படுத்தும் படமாகத்தான் ரஜினியின் படங்கள் இருந்திருக்கிறது , ரஜினியின் படங்களில் ஆபாசம் என்றால் குடும்பத்துடன் எத்தனை பேர் வருவர் தியேட்டருக்கு . புரட்சிதலைவர் படங்களில் இல்லாத ஆபாசமா அப்போதெல்லாம் எங்கு போயிருந்தனர் இந்த அறிவுஜீவிகள் .

அறிவுஜீவிகளின் கண்களில் ரஜினி செய்யும் நல்லது என்றைக்குமே தெரிவதில்லை ,அவரது வீழ்ச்சிக்காக காத்துக்கொண்டிருக்கும் இந்த கண்கொத்தி பாம்புகளின் கண்கள் ரஜினியின் வெற்றியை ஒரு நாளும் பார்பதில்லை .

மக்கள் மெகா சீரியல் மயக்கத்தில் தியேட்டருக்கே வராது , பல சிறிய தியேட்டர்களும் மூடும் நிலையில் இருந்த போதுதானே எங்கள் ரஜினியின் சந்திரமுகி வந்தது , மக்கள் குடும்பத்தோடு திருவிழா போல தியேட்டருக்கு படையெடுத்தது அப்போதுதான் , வீழந்து கிடந்த திரையுலகத்திற்கு குளுக்கோஸ் போல அல்லவா அந்த படம் திரையுலகத்தினருக்கு அமைந்தது . அப்போது எங்கு போயிருந்தனர் இந்த சான்றோர்கள் .

உங்களை போன்றோர் செய்யும் விசமங்களுக்கு பயந்துதானே அவர் அடிக்கடி நிம்மதி தேடி இமயமலைக்கு செல்கிறார் , அவரை அங்கேயே அனுப்பி வைக்கு முயலும் உங்கள் முயற்சி நிச்சயம் பலிக்காது .

தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை என் தலைவன் இத்தனை வருட உழைப்பில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் , அவரை சீண்டுபவர்களுக்கு ரசிகர்களாகிய நாங்கள் சொல்லிக்கொள்வதெல்லாம் , என் தலைவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பதென்று , அவர் ஒரு குதிரை , விழுந்தாலும் உடனே எழுவார் . ஒடி ஒளிந்து கொள்ளுங்கள் அறிவுஜீவிகளே எங்கள் தலைவனின் அன்பால் திரண்ட ரசிகர் கூட்டம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் , பிழைத்து போங்கள் ரஜினியை ஏசிபிழைக்கும் எழுத்து வியாபாரிகளே உங்களது எழுத்து தொழிலை மட்டும் பார்த்து கொண்டு . இனி உங்களுக்கான பதிலை எங்கள் தலைவர் தன் அடுத்த படத்தில் தருவார் , அதற்கு முன் அவர்தரும் முன்னோட்ட படங்களை உங்கள் பத்திரிக்கைகளில் இட்டு கொஞ்சம் சம்பாதித்து கொள்ளுங்கள் .


இப்படிக்கு

உழைப்பால் உயர்ந்த ரஜினியின் பல கோடி ரசிகர்களில் ஒருவன்


____________________________________________________________________

ஒரு அரிய புகைப்படம் உங்கள் பார்வைக்கு......படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி பார்க்கலாம்.
_________________________________________________________________


மக்களே சாரு,ஜெயமோகன்,லக்கிலுக் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் வாசகர் கடிதம் வருகிறது என்று யாரும் எண்ண வேண்டாம் என்னை போன்ற சிறிய டுபுரி பதிவர்களுக்கும் வருகிறது , அதில் ஒன்றுதான் இது ,

மின்னஞ்சலில் வந்த இக்கடிதத்தை இங்கே பதிய மட்டுமே செய்திருக்கிறேன் , இது என் சொந்த கருத்துக்கள் அல்ல . மேலதிக விபரங்களுக்கு chennai6383@gmail.com என்கிற முகவரிக்கு மடலனுப்பி தெரிந்து கொள்ளவும் . மிக்க நன்றி . எனக்கும் இந்த மடலை அனுப்பிய புண்ணியவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் .

____________________________________________________________________

குசேலன் குறித்த ஒரு வாக்கெடுப்பை கடந்த வாரம் நம் வலைப்பூவில் நடத்தினோம் அதன் முடிவு விபரம் வருமாறு


குசேலன் எப்படி????

காவியம் 69 (23%)

ஒருமுறை பார்க்கலாம் 52 (17%)

மோசம் 27 (9%)

தூ................ 144 (49%)

Votes so far: 292 Poll closed


அதிகமான நேயர்கள் (144 பேர் ) தூவென துப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது .

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் .

___________________________________________________________________

28 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//அவர் திரையில் மட்டுமல்ல இயல்பிலும் புலிதான் .//

புலி மனுசன் மாறி இருக்குமா தலைவா....

இரவு கவி said...

வழி மொழிகிறேன்

VIKNESHWARAN ADAKKALAM said...

//என்னை போன்ற சிறிய டுபுரி பதிவர்களுக்கும் வருகிறது , //

எனக்கு கூடதான் நிமிடத்திற்கு லட்சக்கணக்கில் வருகிறது. இதை எல்லாம் வெளிய சொல்லிகிட்டு...

VIKNESHWARAN ADAKKALAM said...

//நம்மில் எத்தனை பேர் மற்ற படங்களுக்கு குடும்பத்துடன் செல்கிறோம்//

எஸ்.ஜே.சூரியா

VIKNESHWARAN ADAKKALAM said...

//தூ................ 144 (49%)//

இத வெளிச்சம் போட்டு காட்ட வில்லையென யார் அழுதார்கள்...

முரளிகண்ணன் said...

இனி நீங்கள் அதிரடி பதிவர் அதிஷா என அழைக்கப்படுவீர் (டுபிரி அல்ல)

MGR போட்டோ சூப்பர்

முரளிகண்ணன் said...

\\மக்களே சாரு,ஜெயமோகன்,லக்கிலுக் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் வாசகர் கடிதம் வருகிறது \\
ithi ethum ulkuthu irukka?

Unknown said...

கொஞ்சமா சொன்னாலு நறுக்கு சொன்னீர்கள்
லூசுபசங்க என்ன வேணுமாலும் சொல்லுவாங்க
ஒருத்தன் மேல இருந்தலே இவர்களுக்கு பிடிகாது

கோவி.கண்ணன் said...

சீரியஸ் பதிவு போல இருக்கே. சரியாச் சொல்லுங்க இலைக்காரன் சாயல் புகழ்ச்சியாக தெரியுது !
:)

துரை said...

"ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!!
இந்த தலைப்பை இவ்வாறும் எழுதலாம்
"ரஜினியை புகலும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!!
கண்ணா அதிஷா காரணம் இல்லாம ஒருத்தனை புகழ்வதும் தப்பு, விமர்சிப்பதும் தப்பு, நானும் இரஜினியோட விசிறிதான் ஆனால் முட்டாள் அல்ல, அன்று இரஜினி சொல்லியது "குடிக்க தண்ணிர் தரமாட்டோம்னு சொன்னவங்களை உதைக்க வேண்டாமா"
இன்று இரஜினி கருநாடகத்திடம் மண்ணிப்பு கேட்ட பின் சொல்லியது "தமிழர்கள் குடிக்க தண்ணிர் கேட்கிறான்களா உதைக்க வேண்டாமா" இப்படியாக இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு எதற்கு இந்த வேஷம் என்றுதான் கேட்கிறேன்? , நமக்கும் இரஜினிக்கும் பிரச்சனைகள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் அது தமிழ்நாட்டுக்குள்ளதான் இருக்க வேண்டும் அதை விட்டு வேறு மாநிலத்தில் சென்று நம் தன்மானத்தை ஏலம் விடுவது எந்த விதத்தில் நியாயம்? அட நம்ம தமிழ் மக்கள் பெருசா அப்படி என்ன கேட்டுடான் குடிக்க தண்ணிர் கேட்டான் இது ஒரு பெரிய குத்தம்னா இந்தியானு சொல்றதுல என்னடா அர்த்தம் இருக்கு
போங்கடாடேய், அன்று ஆங்கிலேயன் ஆண்டான் இன்று வடநாட்டான் ஆழ்கிறான், இதையெல்லாம் பார்கும்போது வெள்ளையனே தேவலாம் போல
தமிழனே ஆகஸட் 15 சுதந்திர தினம் உனக்கு அல்ல, நீ இன்றும் அடிமைதான்

Anonymous said...

//அவர் திரையில் மட்டுமல்ல இயல்பிலும் புலிதான் .//

கொட்ட வாங்கின புளியா, இல்ல கொட்ட வாங்காத புளியா ?

Anonymous said...

//கொட்ட வாங்கின புளியா, இல்ல கொட்ட வாங்காத புளியா ?//

எம்.ஜி.ஆரே கொட்டை எடுத்த புளி :-)

manikandan said...

கடிதம் பெற்ற ஆதிஷா வாழ்க. நான் கூட இனிமே உங்களுக்கு கடிதம் எழுதலாம்ன்னு இருக்கேன்.

குசேலன் காவியம்ன்னு சொன்ன 23% நானே 15% இருப்பேன். மிச்சம் எல்லாம் அந்த அறிவுஜீவிங்க வந்து வாக்கு போட்டு இருப்பாங்களோ ?

Anonymous said...

தம்பீபீபீபீபீ அதிஷா

ரஜினி ஒரு பைத்தியம் என்பதால் எம்.ஜி.ஆர் முன்பு வைத்தியம் செய்து கொஞ்சம் திருத்தினார்.
இப்போது முத்திவிட்டது

லக்கிலுக் said...

அதிஷா சார்!

நீங்க தான் இப்போ சூடான இடுகைகளில் முதலிடத்தில் இருக்கீங்க. நடத்துங்க சார்.. நடத்துங்க!!

Anonymous said...

//ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!!
இந்த தலைப்பை இவ்வாறும் எழுதலாம்
"ரஜினியை புகலும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!!
கண்ணா அதிஷா காரணம் இல்லாம ஒருத்தனை புகழ்வதும் தப்பு, விமர்சிப்பதும் தப்பு, நானும் இரஜினியோட விசிறிதான் ஆனால் முட்டாள் அல்ல, அன்று இரஜினி சொல்லியது "குடிக்க தண்ணிர் தரமாட்டோம்னு சொன்னவங்களை உதைக்க வேண்டாமா"
இன்று இரஜினி கருநாடகத்திடம் மண்ணிப்பு கேட்ட பின் சொல்லியது "தமிழர்கள் குடிக்க தண்ணிர் கேட்கிறான்களா உதைக்க வேண்டாமா" இப்படியாக இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு எதற்கு இந்த வேஷம் என்றுதான் கேட்கிறேன்? , நமக்கும் இரஜினிக்கும் பிரச்சனைகள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் அது தமிழ்நாட்டுக்குள்ளதான் இருக்க வேண்டும் அதை விட்டு வேறு மாநிலத்தில் சென்று நம் தன்மானத்தை ஏலம் விடுவது எந்த விதத்தில் நியாயம்? அட நம்ம தமிழ் மக்கள் பெருசா அப்படி என்ன கேட்டுடான் குடிக்க தண்ணிர் கேட்டான் இது ஒரு பெரிய குத்தம்னா இந்தியானு சொல்றதுல என்னடா அர்த்தம் இருக்கு
போங்கடாடேய், அன்று ஆங்கிலேயன் ஆண்டான் இன்று வடநாட்டான் ஆழ்கிறான், இதையெல்லாம் பார்கும்போது வெள்ளையனே தேவலாம் போல
தமிழனே ஆகஸட் 15 சுதந்திர தினம் உனக்கு அல்ல, நீ இன்றும் அடிமைதான்//


தமிழனின் மானம் ஒரு நடிகனின் கையில் இருப்பதாக நினைப்பவர்களைப் பார்த்து உண்மையில் எவ்வளவு பலவீனமானவர்கள் என்றே பரிதாபப்படவேண்டி இருக்கிறது. கலைஞர் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இதுவிசயத்தில் வாய்திறக்கமல் இருப்பதற்கு அது ரஜினியின் தனிப்பட்ட முடிவு என்று தெளிவாக அறிந்து இருக்கிறார்கள்.தமிழ்நாட்டு மக்களை வைத்து சம்பாதித்ததால் அவர் கருத்து தெரிக்க வேண்டுமென்றால், ரிலையனஸும், டாடாவும் கூடத்தான் தமிழர்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏன் நீங்கள் கேட்கவில்லை. எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற......

ஆரம்பத்தில் 2 கோடி ரூபாய்க்கு ரஜினிகாந்த் இந்த முடிவெடுத்துவிட்டாரோ என்று நானும் தவறாகவே நினைத்தேன். ரஜினிகாந்த் ஹிட்டான ஒரு நடிகர், அவரது படம் மக்களுக்கு பிடித்து இருக்கிறது. அவரை ஒட்டுமொத்த தமிழரின் பிரதிநிதியாக நான் நினைக்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்டது தமிழன் ஒவ்வொருவருக்கும் அவமானம் என்றெல்லாம் நான் கருதவில்லை. அவர் அரசியல்வாதியோ, பொதுமக்களால் முன்மொழியப்படுபவரோ அல்ல. தீவிர ரசிகர்களும், செய்தித்தாள்களும் தாங்கிப்பிடிக்கின்றன அவ்வளவு தான். பின்பு ஏன் அவருடைய தனிப்பட்ட முடிவை தமிழர்களின் மானப்பிரச்சனையாக்க வேண்டும் ?

Abbas said...

remba mukkiyam

Anonymous said...

He reverted back in his stand for releasing his movie in Karnataka- he is THAMIZINA THROGI- HE SHD BE SENT OUT OF TAMILNADU- OK- well said. Still he is not in politics- he is not a ruler- Whatever he says has no value.

There is another person- Saviour of tamils. he threw the whole plan for his and his family welfare- to be a ruling party.If he thinks he can give a go ahead to the plan and do it and there is no one to prevent- So what can be told of him- He is not coward- as even his son is anja nenjan- he is not selfish- he lives for the upliftment of tamils- So he is THAMIZINA THALIVAR-

Thats good

ராஜ நடராஜன் said...

பதிவுகளுக்கு வருவதில் ஒரு உபயோகம் என்னவென்றால் டுபுரி,சுகுரா போன்ற ஒரிய மொழி வார்த்தைகளும் அதற்கு அர்த்தம் என்னவென்று தெரியாமலேயே பதிவைப் படிக்கும் வாய்ப்பும்:)

Muthu said...

"பிரபலத்தை விமர்சிப்பதன் மூலமாக பிரபலமாக முயற்சித்தல்" என்ற அழுகி நாறும் முட்டை/தக்காளி போன்ற வாக்கியங்களையெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பிரயோகிக்கப்போகிறீர்களோ தெரியவில்லை.

இதில் தெறி(வி)ப்பது இவைதான் :

அ. வீங்கிப்போயிருக்கும் மண்டைகளுக்குள் இருப்பது ஆணவமும் கர்வமும் முட்டாள்தனமுமே ;

ஆ. சுய பரிசோதனைக்கு தயாராக இல்லாத அரசியல்வா(ந்)தித்தனம் ;

இ. மாற்றுத்தரப்பிலும் உண்மை இருக்கும் என்பதோ அதுவும் சுடும் என்பதோ உறைக்காத அளவு போதையும் தோல் தடித்துப்போயிருப்பதும்.

இதில் ஒரு புகைப்படம் வேறு. அந்த செய்திக்குப்பின் தொக்கி நிற்கும் சமூக அ(கே)வலத்தை புரிந்துகொள்ள இயலுமா என்று பார்க்கவும் !

அன்பரே, உங்களுக்காக (மற்றும் உங்களைப்போன்றவர்களுக்காக) ஓஷோவின் வாக்கியங்களை சொல்லிவைக்கிறேன்.

"காலம் கடந்துவிடவில்லை. இன்னமும் நேரம் இருக்கிறது, விழித்துக்கொள்ள ! நீ விழித்துக்கொள்ளும் நொடியில் இருள் விலகிவிடும், ஒளி பிறந்துவிடும்"

விழித்துக்கொள்ள தயாரா இல்லை இருளிலேயே தொடர்ந்து சுகித்துக்கொண்டிருக்க எண்ணமா ?

அன்புடன்
முத்துக்குமார்

Anonymous said...

சூப்பரு
இங்கேயும் ஒரு தடவ பாருங்க

http://vinojasan.blogspot.com/2008/08/blog-post_11.html

Anonymous said...

//கண்ணா அதிஷா காரணம் இல்லாம ஒருத்தனை புகழ்வதும் தப்பு.......
-Durai//
சுப்பர் Durai சுப்பர்.

ஜெகதீசன் said...

பதிவு டெம்ப்ளேட் நல்லா இருக்கு...
:))

துரை said...

Anonymous said...
//தமிழனின் மானம் ஒரு நடிகனின் கையில் இருப்பதாக நினைப்பவர்களைப் பார்த்து உண்மையில் எவ்வளவு பலவீனமானவர்கள் என்றே பரிதாபப்படவேண்டி இருக்கிறது. கலைஞர் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இதுவிசயத்தில் வாய்திறக்கமல் இருப்பதற்கு அது ரஜினியின் தனிப்பட்ட முடிவு என்று தெளிவாக அறிந்து இருக்கிறார்கள்.//
உன் பெயரை கூட போட/சொல்ல தயங்கும் பலவீனமானே
கண்ணா Anonymous அது இரஜினியின் தனிப்பட்ட முடிவாயிருக்கட்டும்
இல்ல தண்ணிப்போட்ட முடிவாயிருக்கட்டும், நா ஒன்னும் இரஜினிய வெட்டனும் கொல்லனும் சொல்லலையே, அவன் படத்தை புறக்கணித்தேன் புறக்கணிக்க வேண்டும் என்றுதான் சொல்ல வருகிறேன், இரஜினி சினிமாகாரன் என்பதால் அவன் சினிமாவை புறக்கணிக்கிறேன், இதையே கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் சொல்லிருந்தால் அவர்களை மக்கள் தேர்தலில் புறக்கணித்திருப்பார்பள், so Every action has an equal and opposite reaction.
நான் உன்னை ஒன்று கேட்கிறேன் நீ எதற்காக எனக்கு பின்னுட்டம் எழுத வேண்டும், நான் இரஜினியை விமர்சிப்பது என் தனிப்பட்ட விஷயம், "குடிக்க தண்ணிர் தரமாட்டோம்னு சொன்னவங்களை உதைக்க வேண்டாமா"
என்று இரஜினி சொல்லியதை, கருநாடகா எதற்காக கருநாடகாவின் மானம் ஒரு நடிகனின் கையில் இருப்பதாக நினைக்கிறார்கள் என்று கருநாடகாத்திடம் போய் கேளுங்கள் Mr. Anonymous.

ayan said...

athisaa anne en kanna thoranthiddinga anne.lusu payale lusu payale oru nadigara pathi eppadi eluthina ungaluku ennangada,awan yaar ungaluku unga parentsa illa unga nalamvirumpiya.awan cinemaku vanthate than vaalurathukaga ungalai vaalavaika alla.unga amma sisters awangala tappa pesi iruntha kuda ippadi feel panni iruka madinga pola ewano oru cinemakarana sonnathum feel pannringa.awan payum pulija thodappa kaddai.awanoda padam kudumba padama ,shreya marbai iruki anaichathu awantane.ninga ellam veena ponaningada velangave madinga che acccccccccccccch thuuuuuu

ayan said...

athisaa anne en kanna thoranthiddinga anne.lusu payale lusu payale oru nadigara pathi eppadi eluthina ungaluku ennangada,awan yaar ungaluku unga parentsa illa unga nalamvirumpiya.awan cinemaku vanthate than vaalurathukaga ungalai vaalavaika alla.unga amma sisters awangala tappa pesi iruntha kuda ippadi feel panni iruka madinga pola ewano oru cinemakarana sonnathum feel pannringa.awan payum pulija thodappa kaddai.awanoda padam kudumba padama ,shreya marbai iruki anaichathu awantane.ninga ellam veena ponaningada velangave madinga che acccccccccccccch thuuuuuu

Anonymous said...

hello athisha,

neenga rajini fana irukkalaam, athukkaka rajini pakkam mattum pesa kudathu.oru nalla manusan appadina eppavum ore pechu than pesanum athuvum yasichu pesanum. rajini sir anga oru mathiri pesararu inga oru mathiri pesararu. politician than ippadi pesuvanga. appuram innoru visayam rajini film nalla oduchuna rajiniya mattum than solluvanga, athula kastapattu nadichavanga yaaraiyum solla maatanga. athu mathiri than odalaina mattum athula niraiya peru work pannanga avangalayum reasona solrathu. yan chandramukhi la jothika evalo nalla nadichanga ana rajini pathi thane pesinanga. kuse;an padam malayalathula evalo periya hit theriyuma. inga rajini sytle la edukka athu flop.

Anonymous said...

Rajni is very good person basically according to your point,but what i say his that all the property which he has is given by tamil poeple..by earned all his property from TN..he will say whatever thing we want to accept that is your point..i coming to your point itself..has rajni want to beg before kannada poeples for what he spoke for a single movie which he acted for 40 mins..what about TN peoples..go to Dharmapuri and Krishnagiri Dist and see the places are becoming deserts..don't speak like a selfish Rajni...okk..i know you ar after all a rajni fan..what u will speak...ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!! :
after giving all the property and super star position we became அறிவுஜீவி...your speaking about producer or somebody what about the poeple living in those districts..will your rajni give the answer or you will answer as a rajni fan...

Let ROBO movie releases, we will what is அறிவுஜீவி from our side...

அவர் திரையில் மட்டுமல்ல இயல்பிலும் புலிதான்
that is y he is killing all the poeples in those Districts...