12 August 2008

சிகரட்,ரசிகட்,சிரகட்,கசிரட், கரSHIT

அவன் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது தனது 17 வயதில் , தன் நண்பர்களுடன் , ஜாலிக்காக ஆரம்பித்தான் , அது அப்போது அவனுக்கு பெருமையான ஒன்றாக , மற்ற நண்பர்களின் மத்தியில் ஒரு வீரத்தனமான செயலாக , உற்சாகம் அளிக்க கூடியதாக , இன்னும் சொல்லப் போனால் சக வயது பெண்கள் முன்னால் தன் வாலிபத்தின் வளர்ச்சியை காட்டுவதாக எண்ணி ஆரம்பித்த ஓன்றாகத்தான் இருந்திருக்கிறது .

கல்லூரியில் மற்றவரை ராகிங் செய்கையில் தன் வயதுக்கு குறைந்த வளர்ச்சியை மறைக்க சிகரட் உதவியது . அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 3 முதல் 4 நான்கு சிகரட் மட்டும்தான் . கையிடுக்கிலிருக்கும் சிகரட் உதடிடுக்கில் போவதற்குள் அவன் செய்யும் சேஷ்டைகள் ஆயிரம் , அவனது ஆதர்ஷன கதாநாயகன் கையில் எப்போதும் இருக்கும் சிகரட் ,அவனுக்கும் அந்த நடிகனின் அந்தஸ்த்தை தன் சக நண்பர்களிடம் தருவதாய் எண்ணிருந்திருக்கிறான் .

சிகரட் பிடித்து வீட்டிற்கு சென்று பல முறை அவ்வாசனையால் வீட்டில் மாட்டிக்கொண்டு அடி வாங்கி , அடுத்த முறை வீட்டிற்கு செல்கையில் பாக்கு , பாஸ்பாஸ் , ஹால்ஸ் , சுவிங்கம் , கொய்யா இலை என கண்டதையும் வாயில் போட்டு மறைக்க முயன்று தோற்று போய் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் சென்று சிகரட் பிடித்து வாசனை மறைந்ததா என நண்பர்களிடம் உறுதி செய்து வீட்டிற்கு எத்தனை முறை சென்றிருக்கிறான் அவன் .

கல்லூரியின் மூன்றாண்டுகளில் அவன் பிடித்த சிகரட்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டும் , கல்லூரி அருகில் இருக்கும் கட்டாய டீக்கடையில் சிகரட் பிடிக்கும் பலருக்கும் இருக்கும் அக்கவுண்ட் அவனுக்கும் இருந்தது . பல முறை கடனை அடைக்காமல் நாயர்கடையில் திட்டு வாங்கி அசிங்கப்பட்டிருக்கிறான் , அப்போதெல்லாம் சே இனிமே தம் அடிக்கக்கூடாதென எண்ணிக்கொள்வான் . கல்லூரி முடிந்ததுமே வாய் பறபறக்கும் சிகரட்டுக்காய் .

கல்லூரி முடிந்து வேலை தேடுகையில் , ஒவ்வோர் முறை தோற்கும் போதும் சிகரட் மட்டும்தான் ஆறுதல் அளித்தது சாத்தானை போல . இதோ வேலை கிடைத்து விட்டது வெளியூரில் , வீட்டை விட்டு வெளியூரில் தனி அறையில் சில நண்பர்களுடன் , அப்போதும் அங்கேயும் நூழைந்துவிட்டான் அந்த சிகரட் சாத்தான் அவனுக்கு துணை என்று சொல்லிக்கொண்டு .
சமயங்களில் அவனுக்கு சளி அல்லது சுவாசக் கோளாறு வரும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு ஞானோதயம் பிறக்கும் , சிகரெட்டை நிறுத்திவிட , நோய் முக்கால்வாசி குணமாகும் போதே கைகள் அடுத்த சிகரட்டை பற்ற வைக்கும் . அவனும் மறந்துவிடுவான் .
வருடாவருடம் புத்தாண்டு பிறக்கும் போதெல்லாம் அவனும் சுடுகாட்டு சபதம் போல சபதம் எடுப்பான் இனி அடிக்கமாட்டேன் சிகரட்டை இனி தொடமாட்டேன் தீப்பெட்டியை என , புத்தாண்டு அன்று மாலையே பல முறை அந்த சாத்தானின் பிடியில் மாட்டிகொண்டு விழி பிதுங்கி வேறு வழியின்றி பைத்தியம் போல சபதத்தை மறந்து கிறுக்குதனாமாய் பிடித்து விட்டான் தங்க வடிகட்டியின் முனையை தன் இதழால் .

அவனிடம் நான் பலமுறை கேட்டதுண்டு ஏன் பொது இடத்தில் சிகரட் பிடிக்க தடை இருந்தும் பிடிக்கிறாய் என அவனது பதில் என் வாய் என்ன பொது இடமா என்பதுதான் , அரசாங்கத்தையும் சாடுவான் அரசாங்கம் சிகரட் விறபனையை தடை செய்ய சொல்லுவான் , அவனுக்கு நன்றாக தெரிந்தது , அவனால் அந்த சாத்தானை விட முடியாதென்று . அவன் வாய்பேச்சில் வீரன் பேசும் போது சுற்றுசூழல் மாசு பற்றியெல்லாம் பேசுவான் கையில் நிக்கோட்டின் தொழிற்சாலையை வைத்துகொண்டு .

அவன் ஒரு கிரிக்கெட் வீரன் இப்போதெல்லாம் சரியாக ஒடி ஆடி விளையாட முடிவதில்லை , முதியவனை போல மூச்சு வாங்கும் , எனக்கு தெரிந்த வரை அவனுக்கு ஆண்மைகுறைவு கூட இருக்கலாம் , அடிக்கடி சளித்தொல்லை வேறு , நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது . தோலில் மினுமினுப்பு குறைந்து பார்க்க கொஞ்சம் வயோதிகனைப்போல் அகிவிட்டிருந்தான் , புகையிலை எதிர்ப்பு நாள் என்றால் அவனுக்கு இலுப்பைபூ சர்க்கரை .

திருமணமானது மனைவிக்காக சரியாக மூன்று மாதங்கள் மூன்றே மாதங்கள் நிறுத்தினான் , ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் முடிந்தது , மீண்டும் கிளம்பிவிட்டான் பெட்டிகடைக்கு சாத்தான் வாங்க ,
ஒரு குழந்தை அவனது வாழ்க்கையில் மாற்றத்தை நிகழ்த்தியது , தன் மகளுக்காக குறைத்து கொண்டான் , ஆனாலும் அந்த சாத்தானை விட முடியாமல் இப்போதெல்லாம் அவன் கவலை பட ஆரம்பித்து விட்டான் ,

முன்னெல்லாம் வருடத்திற்கு ஒரு முறைதான் சிகரட்டை விட முயற்சிப்பான், ஆனால் சமீப காலமாய் வாரம் ஒரு முறை முயற்சிக்கிறான் .
விளையாட்டாய் துவங்கிய இந்த சிகரட் விளையாட்டு இதோ இப்போது அவனை முழுங்கி நிற்கிறது , நான் இறைவனிடம் கேட்பதெல்லாம் அவன் சிகரட் பழக்கத்தை விட அவனுக்கு போதிய மனவீரம் தரவேண்டும் என்பதுதான் .
இதோ இந்த கதையை கூட அவன் கையில் ஒரு சிகரட்டை பிடித்த படிதான் எழுதிக்கொண்டிருக்கிறான் ,பல மாதங்களாய் இந்த வாரமாவது சிகரட்டை விட்டுவிட எண்ணி எண்ணி எண்ணி . ..........

__________________________________________________________________
சும்மா ஒரு குட்டி இன்பர்மேசன் .......

நாம அடிக்கிற சிகரட்டில என்னன்ன ஐட்டம் இருக்குனு ... என்சாய்... அப்புறம் இந்த வாரம் வெள்ளி கிழமைலருந்து சிகரட்ட விடலாம்னு இருக்கேன் . வலை நண்பர்களும் என்னோட சேர்ந்து விடறதுனாலும் விடலாம் . முக்கியமா ஒரு சமீபத்தில் கல்யாண அறிவிப்பு செஞ்ச ஒரு பால பதிவர் , அவரும் விட்டாருணா ரொம்ப சந்தோசம்.


31 comments:

லக்கிலுக் said...

பயமா இருக்குங்கண்ணா :-((((

sudarmani said...

we know everything, but

we can not....

VIKNESHWARAN said...

யோவ் இந்த பதிவ பார்த்தாதான் சிகரட் அடிக்க கை உதருது.... மறந்தாலும் ஞாபகம் படுத்துறிங்களே...

வால்பையன் said...

//இந்த வாரம் வெள்ளி கிழமைலருந்து சிகரட்ட விடலாம்னு இருக்கேன் .//

அன்னைக்கு ஏதாவது முகூர்த்தமா, விடணும்னு நினைச்சா அப்பவே விடனும்.
நானெல்லாம் எத்தனை தடவை விட்ருக்கேன் தெரியுமா!

வால்பையன்

அதிஷா said...

லக்கி

;-)))))

அதிஷா said...

சரியா சொன்னீங்க சுடர்மணி

Karthi said...

Nanum oru kalathula bayangaram dum adichuttu irunthen, But now i quit. For the past 10 months i never touched it. Oru padam pathen, "No Smoking" nu.. Mudinthal antha padam parunganna! appuram ungalukku manasu vanthu vittalum vidalam...

இவன் said...

சிகரட் குடிப்பதை நிறுத்துவது மிகவும் இலகுவான காரியம்.... நான் 1000 அல்ல அல்ல 10000 தடைவைக்கு மேல் நிறுத்தியிருக்கிறேன்....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீபீபீபீ..

இப்பவும் முடியலைன்னா அப்படியே கிளம்பி அடையாறு கேன்ஸர் மருத்துவமனைக்கு போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வா.. திரும்பவும் சிகரெட் கேக்குதான்னு பார்ப்போம்..

Pitchu said...

அதிஷா அவர்களே முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்... ஒரு பழக்கத்தை விட வேண்டும் என்றால் வேறு ஒரு பழக்கத்துக்கு அடிமையாக வேண்டும்... ஆகையால் சிகரெட் பற்றி நினைக்கும் போதெல்லாம் வேறொரு மாற்று வழி உண்டாக்கி கொள்ளுங்கள்... உதாரணத்துக்கு சாக்லேட் அல்லது சுவிங்கம்... சில நாட்கள் கழித்து அதையும் விட்டு விடுங்கள்...இது நான் பின்பற்றிய வழி....

இப்படிக்கு இதை பின்பற்றுவீர்கள் என நம்பும்
வினோத்

அவனும் அவளும் said...

என்னோட வாழ்த்துக்கள் ஆதிஷா.

உங்கள் தமிழன் said...

உத சார்!

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீபீபீபீ..

இப்பவும் முடியலைன்னா அப்படியே கிளம்பி அடையாறு கேன்ஸர் மருத்துவமனைக்கு போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வா.. திரும்பவும் சிகரெட் கேக்குதான்னு பார்ப்போம்..
//

அண்ணானானான....

மேட்டர் பண்ணுறதை விடணும்னா சோனாகஞ்சில ஒரு சுத்து சுத்திட்டு வரணும்னு சொல்வீங்களா

வால்பையன் said...

//என்னோட வாழ்த்துக்கள் ஆதிஷா.//

சோனாகாஞ் போறதுக்கா

வால்பையன்

முரளிகண்ணன் said...

very nice post keep it up

திண்டுக்கல் தமிழன் said...

//வால்பையன் said...
//என்னோட வாழ்த்துக்கள் ஆதிஷா.//

சோனாகாஞ் போறதுக்கா

வால்பையன்
//

வால்பையன் சார்!

உங்கள் தமிழன் என்ற பெயரில் நீங்கள் போட்ட பின்னூட்டம் அபாரம். பாராட்டுக்கள்!

உள்ளூர் தமிழன் said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீபீபீபீ..

இப்பவும் முடியலைன்னா அப்படியே கிளம்பி அடையாறு கேன்ஸர் மருத்துவமனைக்கு போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வா.. திரும்பவும் சிகரெட் கேக்குதான்னு பார்ப்போம்..
//

உண்மைதமிழன் அண்ணாச்சி

கேன்சர் பற்றியும் சிகரெட் பற்றியும் தனித்தனியா தலா 500 பக்கத்துக்கு பதிவு போடலாமே? தம்மு பழக்கம் இல்லாதவன் கூட தலையை பிச்சிக்கிட்டு தம்மு அடிக்க போயிடுவான் இல்லையா?

உருப்புடாதது said...

இருங்க கை காலு எல்லாம் உதறுதது..
ஒரு தம் போட்டுட்டு வந்து அப்புறமா விட்டு விடுகிறேன்

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்கள்.

அதிஷா said...

\\ யோவ் இந்த பதிவ பார்த்தாதான் சிகரட் அடிக்க கை உதருது.... மறந்தாலும் ஞாபகம் படுத்துறிங்களே... \\

விக்கி,

உங்கள மாதிரி ஆளுக்குதான் இந்த பதிவே .

உங்களுக்கு கை உதறல் வரைக்கும் போயிடுச்சா அவ்வ்வ்வ்

அதிஷா said...

\\ அன்னைக்கு ஏதாவது முகூர்த்தமா, விடணும்னு நினைச்சா அப்பவே விடனும். \\

அன்னைக்குதான்ங்க சுதந்திரதினம்

அதிஷா said...

மிக்க நன்றி கார்த்தி , நான் அந்த படம் பார்த்திருக்கிறேன் ஜான் ஆபிரகாமின் படம் , செம மொக்கை , அந்த படம் பார்த்து வெறுத்து போயி 2 கிங்ஸை ஒண்ணா அடித்தது பழைய கதை.

அதிஷா said...

\\ சிகரட் குடிப்பதை நிறுத்துவது மிகவும் இலகுவான காரியம்.... நான் 1000 அல்ல அல்ல 10000 தடைவைக்கு மேல் நிறுத்தியிருக்கிறேன்.... \\

இவன் ஏன் இப்படி , நான் எத சீரியஸா சொன்னாலும் இந்த சமுதாயம் காமெடியாக்கிருதே ஆண்டவா .... அவ்வ்வ்வ்

அதிஷா said...

\\
இப்பவும் முடியலைன்னா அப்படியே கிளம்பி அடையாறு கேன்ஸர் மருத்துவமனைக்கு போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வா.. திரும்பவும் சிகரெட் கேக்குதான்னு பார்ப்போம்.. \\\

அங்கல்லாம் போனாக்கூட விட முடியல நான் அதகூட டிரை பண்ணிருக்கேன்

அதிஷா said...

மிக்க நன்றி வினோத் நிச்சயம் நீங்கள் சொல்வது போல் முயல்கிறேன்

அதிஷா said...

\\ என்னோட வாழ்த்துக்கள் ஆதிஷா. \\

அவனும் அவளும் மிக்க நன்றி

ஐயோ என் பேரு ஆதிஷா இல்ல அதிஷா ...

வால்பையன் said...

//திண்டுக்கல் தமிழன் said...
வால்பையன் சார்!
உங்கள் தமிழன் என்ற பெயரில் நீங்கள் போட்ட பின்னூட்டம் அபாரம். பாராட்டுக்கள்!//

இதுவரை எங்கேயும் அனானி பெயரிலோ, மற்றவர்கள் பெயரிலோ பின்னூட்டம் இடம் பழக்கம் எனக்கில்லை. அது நானில்லை, சொல்வதை நேரடியாக சொல்லும் பழக்கம் என்னுடையது

வால்பையன்

Abbas said...

onnu aadichchittu vanthu itha paththi eluthuren bye :))

தமிழன்... said...

வாழ்த்துக்கள் வெற்றிக்கு...

நானும் முயற்சி பண்றேன்...

ஸ்ரீதர் நாராயணன் said...

பொதுவாக சிகரெட் பிடித்தல் சிறுவர், இளைஞரிடையே ஒரு ஸ்டைலாகத்தான் பரவி இருக்கிறது.

சில பெண்களுக்கு லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வது தன்னம்பிக்கை கொடுக்கும். அது மாதிரிதான் ஆண்களுக்கு சிகரெட். நெருப்பைப் பரிமாறிக் கொள்வதின் மூலம் சட்டென ஒரு நட்பை உருவாக்கிக் கொடுக்கும். பிரேக்கிங் த ஐஸ் என்பார்களே - அந்த மாதிரி.

ஆனால் - இது எல்லாம் சிகரெட் பிடிக்காமலும் செய்ய முடியும் என்பதை மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் (கொஞ்சம் தாமதமாகத்தான்) உணர்ந்து கொண்டேன்.

சிகரெட் பிடிப்பதும், அதனால் ஏற்படும் போதை மற்றும் மூளை தூண்டப்படுதல் எல்லாம் வெறும் மூடநம்பிக்கையே :-). நாமாக கற்பனை செய்து கொள்வதுதான். அது ஒரு உளவியல் ரீதியான 'தைரியம் தேடும்' முயற்சி. அவ்வளவே.

சிகரெட் பிடிப்பதினால் நமது நுரையீரல் மட்டுமல்ல நமது சுற்றுப் புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதுதான் நிதர்சனம்.

மங்களூர் சிவா said...

சிகரெட் பிடிச்சாதான் ட்டூ பாத்ரூம் வருதுன்னு என் நண்பன் ஒருவன் பாத்ரூமை நாறடிச்சிகிட்டிருக்கானே என்ன செய்ய

:((((

இப்ப இல்ல சில காலம் முன்பு.

ARUVAI BASKAR said...

சிகரட் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட உண்மைஎலேயே மனதார விட்டுவிட நினைக்க வேண்டும்.
நான் சிகரட் குடிப்பதால் எனக்கு ஏற்படும் பாதிப்பை ஒரு பத்து அம்ச பாய்ண்ட் ஆக எழுதி அதை பாக்கட்டில் வைத்து சிகரட் அடிக்க தோநும் போதெல்லாம் அதை பார்த்து எனது பதினெட்டு வருட சிகரட் குடிக்கும் பழக்கத்தை விட்டேன்.
நான் அதை விட்டு ஏறத்தாள நான்கு வருடங்கள் ஆன போதிலும் இன்றும் அதை குடிப்பது போல் கனவு வரும் . அவ்வளவு பாதிப்பு கொண்ட பழக்கத்தை விட ஏற்க்கனவே நான் சொன்னது போல் மனதார நினைக்க வேண்டும் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர் .