30 September 2008

சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008

சென்னைவாழ் வலை பதிவர்களுக்கு ஒரு அறிவிப்பு .

இந்த வார இறுதியில் பழம் பெரும் பதிவர் ( வரும் போது பழம் கொண்டு வரவும் ) ஆஸ்திரேலியாவாழ் பதிவரான பொட்டிகடையார் சென்னை வருகிறார்.

அவரை சந்திக்கவும் , மேலும் சென்னையில் மிகச்சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு எதுவும் நடத்தாத காரணத்தால் , பல புதிய பதிவர்கள் உருவாகி வரும் சூழலில் அவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து பயன் பெறவும்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கடை(எந்த கடை என்று நான் சொல்லவும் வேண்டுமா) விடுமுறையாதலால் , அதனால் பாதிக்கப்பட்ட சென்னைவாழ் பெருங்குடி மக்களின் சிரமத்திற்கு இன்றைய ஆளும் அரசின் அராஜக போக்கை கண்டித்தும் ஒரு சிறிய அளவிலான அறப்போர் புரியவும் உத்தேசித்துள்ளோம் .

இந்த சந்திப்பில் ஏற்கனவே அடியேன் ,தல பாலபாரதி , மருத்துவர்.புருனோ , நர்சிம் ,ஜ்யோவ்ராம் சுந்தர் , லக்கிலுக் , முரளிக்கண்ணன் , புதுகை அப்துல்லா , தாமிரா ( வருவார் என்ற நம்பிக்கையில் போடுகிறேன் ) , பதிவர் செல்வம் , சென் , ஆகியோர் வருவதாக உருதியாகத்தெரிகிறது . இச்சந்திப்பில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் , மெரினா பீச்சில் இடப்பற்றாகுறை இருந்தால் மட்டுமே பிரச்சனை .

புதிய பதிவர்கள் கட்டாயம் கலந்துகொண்டு பதிவுகள் மற்றும் பதிவர்கள் குறித்த உங்கள் சந்தேகங்களை அங்கே வரும் பல மூத்த பதிவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் . நானும் கேட்டு தெரிந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன் .

அதனால் சென்னை பதிவர்களே அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்


சந்திப்பு நாள் - 04-10-2008

நேரம் - மாலை 6.00 லிருந்து

இடம் - சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை பின்புறம்

வாங்க பாஸு... கலக்குவோம்.....

மேலதிக விபரங்களுக்கு..

எனது மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com
எனது அலைபேசி எண் - 9941611993

_____________________________________________________________________________________

14 comments:

கார்க்கி said...

அய்யோ எனக்கு 5 மணிக்கு ட்ரெய்ன்.. அடுத்த முறையாவது சனிக்கிழமை வைக்க பாருங்கப்பு :((((((((((((((((

கார்க்கி said...

//ஆகியோர் வருவதாக உருதியாகத்தெரிகிறது //

உறுதி????

கார்க்கி said...

//புதுகை அப்துல்லா /

படகு வீட்டில இருந்து ஞாயிற்றுக்கிழமை வந்துடுவாரா?

லக்கிலுக் said...

கார்க்கி!

//கார்க்கி said...
அய்யோ எனக்கு 5 மணிக்கு ட்ரெய்ன்.. அடுத்த முறையாவது சனிக்கிழமை வைக்க பாருங்கப்பு :((((((((((((((((
//

சந்திப்பு சனிக்கிழமை தான் :-)

நானும் கண்டிப்பாக வருகிறேன் அதிஷா.

வெண்பூ said...

பிரசன்ட் சார்

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா

Anonymous said...

சத்யாவா?
பார்த்து, அவர் பாட்டுக்கு யோஸ்யம் பார்க்கும் பெண்ணுக்கு டொலரில் தட்சணை கொடுத்து,உங்கள் அனைவருக்கும் தர்ம அடி வாங்கு தந்திட போறார்...

சுபாஷ் said...

புதிய டொமைனுக்கு வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

தமிழ்மணத்தில் வரும் சின்னம் (லோகோ) ஷகிலா படத்தை குறிப்பது போலிருக்கிறது :(

வால்பையன் said...

சந்திப்பு சிறப்பே நடந்தேற வாழ்த்துக்கள்

narsim said...

ஆஜர் தல..
நர்சிம்

தாமிரா said...

பாருங்களேன்.. இந்த அதிஷாவோட குறும்ப., என் பேரோட சேத்து அத்தனை பெரியாளுங்க பேரையும் போட்டு அவங்களை நக்கல் பண்ணியிருக்காரு.. அவரை யாராவது கவனிக்கவும்.!

தாமிரா said...

அழைப்பிதழில் பேர் போட்டப்புறம் வரலைன்னா எப்பிடி? கண்டிப்பா வந்திடுவேன். கலாய்க்காம இருந்தா சரிதான்..

தாமிரா said...

அப்துல் வரலை. இந்த கார்க்கி வேற பிகு பண்றாரே..?