29 September 2008

பாரு நிபேதிதாவும் சாராயக்கடை லகுட பாண்டிகளும் ஒரு கடிதமும்......


அண்ணாத்த பாரு நிபேதிதாவுக்கு வணக்கம் ,

சமீபத்தில் உங்க பார்ல சரக்கடிச்ச மப்போட எழுதும் மடால் , தடால் , படால் என்ன வேணா வச்சிக்கோபா ,...

மூணு நாளா உங்க கம்பேனி சுமால் பெக்கு(அதான்பா குட்டி பெக்கு) அடிச்சு ஒரே குஜாலாக்கீது... உங்க வூட்ல அல்லாரும் சௌக்கியமா.. எங்கூட்டுல அல்லாரும் சோக்காகீராங்கப்பா... இன்னாடா இந்த சோமாரி நமக்கு இன்னாத்துக்கு லெட்டரு உடறானுதான யோசிச்சிகினுக்கீரிங்கோ.. அது ஒன்னுமில்ல நைனா.... இப்பல்லாம் நம்ம பேட்டைல ஒங்க பேர சொன்னாத்தான் சரக்கு நல்லா போணியாவுது... அதுமில்லாம நீங்க பாட்டுக்கு பேட்டை பசங்கள கன்னாபின்னானு கவுத்து போட்டு கும்மிட்டீங்கோ அதான் ஒரு தாங்க்ஸ் சொல்லிக்காலம்னுதாம்பா...

சமீபத்தில் கிங்பிசர் கம்பேனி ரூப்டாப் பார்ல நடந்த குடிகாரர்கள் கூட்டத்தில , நீங்க பேசின பேச்சிருக்கே சூப்பர் தலைவா.. டக்கரு... நல்லா கேட்ட நாக்க புடுங்கிக்கறமாதிரி...

இந்த காலத்து புள்ளையாண்டானுங்களுக்கு இன்னா தெர்து , சாராயம் காச்சுங்கடானா சுடுதண்ணி காச்சுதுங்கோ..

நம்ம சாராயக்கடை லகுட பாண்டிங்க இருக்கிறானுங்களே அவனுங்களுக்கு விவஸ்தையே இல்லபா . உங்க ஃபாரின் பாருக்கு முன்னால இந்த லகுட பாண்டிகளெல்லாம் எம்மாத்திரம் . நீங்க சொன்னது எவ்வளவு சரி , ஒரு சாராயக்கடை வைச்சு நடத்துறது சாதாரண காரியமா... அதுக்கு எம்புட்டு கஷ்டப்படனும் , நாம குடுக்கற சரக்கு , குடிக்கறவங்களுக்கு புடிக்கனும் , அது அவங்க வவுத்துக்கு ஒன்னும் பண்ணக்கூடாதுனு நீங்க சொன்னது எவ்ளோ நெசம் . ஏன்னா இப்டித்தான் பாரேன் முந்தாநாளு ஒரு ஒரு டமாருவோட சேர்ந்து அட்ச்ச சாராயம் வாந்தி பேதி வரிக்கும் போயிட்ச்சுபா....

நீங்க அப்படி இன்னா சொல்லீட்டிங்கோ .. தம்பிங்களா நீங்கள்ல்லாம் சாராயம் எப்படி காய்ச்சறதுனே தெரியாம தொழிலுக்கு வந்துட்டிங்கோ .... முதல்ல நம்ம முன்னோர்கள் ராயப்போட்டை கபாலி , கொருக்குபேட்டை முத்து இப்படி பல ஆளுங்க கிட்ட நல்லா கத்துகிட்டு அப்புறமா சாராயம் காய்ச்சுங்கோனு சொன்னீங்கோ....

இதுல இந்த அரவேக்காட்டு பேமாணிங்க அவனுங்க காய்ச்சறதுதான் சாரயம்னு ஹெட் வெயிட் போட்டுகினு அலையுதுங்கோ.... நீ மட்டும் எதினா சொன்னா போதும் அவ்ளோதான் உட்டாபத்திரி ரெய்டு கமால் பத்திரி சீ னு கெளம்பிருதுங்கோ... இன்னா பண்ண்டடும்..

இந்த பிள்ளைங்கோ இத்தோட ஒன்ன வுட்டா பரவால்ல.. இதுங்க காய்ச்சற மொக்க சாராயத்தல்லாம் உனக்கு வேற குடுத்து டேஸ்ட்டு பாக்க சொன்னா உங்களுக்கு கோவம் வருமா வராதா ! ! தலீவா ..... நீங்க யாரு எப்பேர்பட்ட சரக்குலாம் அட்ச்சவரு.... உங்களப் போயி அதும் லோக்கல் சரக்க குட்த்து டெஸ்ட் பண்ண ஒங்களுக்கு காண்டாவாது ... நீங்க என்ன எலியா மந்து குத்து டெஸ்டு பண்ண...

இந்த லகுட பாண்டி பசங்களுக்குலாம் தெரியாது சாராயம்னா இன்னா போதைனா இன்னா கவுச்சைனா இன்னா ஊறுகானா இன்னானு, அதுக்குள்ள சாராயக்கடை போட்டு பெரியாளாக பாக்குதுங்கோ.... நீங்கதான் தானே தலைவன் ஆச்சே கோச்சிகினீங்கோ... அது இந்த டாமாகோலி பசங்களுக்கு புரியுமா....

இந்த லகுடபாண்டி பசங்களுக்கு இன்னா தெரியும் தலிவா உங்களாட்டம் அதுங்க இன்னா பாரின் சரக்கு அடிச்சிருக்குங்களா , அட லோக்கல் சரக்காவது அடிச்சிருக்குங்களா...நீங்க பல நாட்டு சரக்கும் பாத்தவரு.... இந்த பிச்சாத்து பசங்களுக்கு ஓன்னியும் கெடியாது , அப்புறம் இன்னா , அதுங்க குட்ச்சதுலாம் புட்டிபாலும் டாஸ்மாக்கு பீரும் கொழாத்தண்ணியும் தான்...

இத மாதிரி என்னாட்டம் குட்டி சால்னா கடை அதிபருங்களுக்கு அப்பப்போ எதுனா அட்வைஸு குடுத்துக்கினு இருந்தீங்கன்னா நாங்களும் குஜாலா நெறிய பதிவு போடுவோம்...

அதினால நான் இன்னா சொல்லிகீரேன்னா , மக்களே நீங்க சாராயக்கடை வைக்கணும்னா மொதல்ல நாலு கடைல சரக்கு வாங்கி குடிங்கோ அதில இன்னா கலந்திருக்கு , எதில போதை ஜாஸ்தினு கத்துக்கோங்கோ , அப்பால என்னிக்காவது ஒரு நா சாராயம் காச்சலாம் , அது வரிக்கும் மூடிகினு புச்சு புச்சா தின்ச்சு தின்ச்சா நெறிய குடிங்கோ...

அப்பால நீங்க காய்ச்சற மட்டமான சாராயத்தல்லாம் தலிவருக்கு அனுப்பி டார்ச்சர் பண்ணாதீங்கோ, அப்பால தலிவரு கபாலி சரக்கு குடிச்சியானு கேட்டா பேந்த பேந்த முழுச்சிகினுக்கறது , அட்லீஸ்டு டூமில் குப்பம் குமாரு சரக்காவது அட்ச்சு உங்க போதைய வளத்துக்கோங்கோ..

அப்பால நல்லா ஆராய்ச்சி கீராய்ச்சி பண்ணிகினு பொறுமயா சால்னாகடை வைக்கலாம் , அதுக்கப்பால சாராயகடை வச்சக்கினு பொய்ப்பு நட்த்து ஒன்ன யாரு வேணாண்ணது , அத வுட்டுகினு ஃபிரீயா ஒரு இடம் கெட்ச்சிதுனு நீங்க பாட்டுக்கு கடை விரிச்சிகினுருந்தா... மக்கள் சாரயத்த பத்தியும் சரக்கபத்தியும் இன்னா நெனைப்பாங்கோ.... ஆல்ரெடி மக்கள்லாம் சாராயம்னா குமட்டிகினுக்கீதுங்கோ இதுல நீங்க வேற...

இன்னா தலீவா நான் சொல்றது ... இந்த பசங்களுக்குலாம் இப்படிச்சொன்னாத்தான் புரியும் .. அல்லாங்காட்டி அவுத்து போட்டு ஆடிகினே சொல்லனும் அப்பதான் புரியும்..

அப்பால நானும் எங்கடையில செம மொக்க சாராயம் தான் காச்சினுக்கீறேன்... ஓன் அட்வைஸ கேட்டுகினு இனிமே நம்ம கடைல நல்ல சாராயம்தான் காச்சிவேனு பாடிகாட்டு முனீஸ்வரர் மேல சத்தியம்பா... ( அல்லாம் ஒரு சேப்டிக்குதாம்பா ... அல்லாங்காட்டி என்ன உட்டு நீங்க கலாய்ச்சா நான் இன்னா பண்ண)

அவ்ளோதான் தல , வேற ஒன்னுமில்ல

கயண்டுகிறேன்பா...

இப்படிக்கு ..

புச்சா சாராயக்கடை தொறந்திக்கீற ஒரு லகுடபாண்டி..

(ஆண்டவா இன்னிக்கு நம்ம தலிவர் பேர சொல்லி வியாபாரம் தொட்ங்கிக்கீறேன் .. நீதான்பா காப்பத்தனும் )


பி.கு. - இப்பதிவு எந்த ஒரு நபரையும் குறிப்பிடுபவை அல்ல.... பிளாகு எழுதும் அனைவரையும் குறிப்பிடுவது மற்றும் பெருமாளையும்.... பெருமாளே

_____________________________________________________________________________________

ஒரு உலகசாதனை படைத்த வைன் பாட்டில் குறித்த செய்தி :படத்தில் இருப்பது கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான வைன் பாட்டில் ஆகும் , இது ஆஸ்திரேலியாவை சேர்ந்த , கிம் புல்லக் எனபவரால் 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது , இதன் உயரம் 6'5'' (6அடி 5 அங்குலம் ) , இந்த பாட்டிலினுள் 63.79 கேலன்கள் வைன் இருக்கிறது , அது சுமாராக 387 முழு வைன் பாட்டில்களுக்கு சமம் ஆகும்.

_____________________________________________________________________________________

அவ்ளோதான்பா.....

____________________________________________________________________

36 comments:

Cable சங்கர் said...

நான் தான் பர்ஸ்டா? சூப்பரகீது மாமே.. இத்தகண்டி பாரு நிபேதிதா பட்சாருன்னு வச்சுக்க..கண்ணு சும்மா டகுலு, பிகுலு ஊதிக்கும்..அ..ஆங்.. அது சரி எந்த கடைல நீயும் டமாரும், ஊத்திகினீங்க.. ?

Robin said...

:)

narsim said...

ஆகா.. அதிஷா.. வணக்கம் தல.. நடத்துங்க..

நர்சிம்

மோகன் said...

இன்னாப்பா இது...இப்டி சொல்ட்ட..இத பட்ச்சது ஒரு புல் பாட்ல,ஊர்க்காவோட சேத்து அச்ச மாதிரி கீதுப்பா...மப்பு தெளிச்ச அப்பால உன்க்கு விவரமா எழ்த்ரேன்பா.....

ஜெகதீசன் said...

:))))))))

Unknown said...

வாங்க கேபிள் அண்ணா
நீங்கதான் மொத போணி

டமாருவே நான்தான்

Unknown said...

மிக்க நன்றி ராபின்

Unknown said...

நன்றி ராபின்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

387 பாட்டில் சரக்கு ஒரு பாட்டிலிலா !! ஜாலியா எவ்வளவு நாள் குடிச்சுகிட்டிருக்கலாம்!

எனக்குக் கிடைக்குமா அந்த பாட்டில்?

வால்பையன் said...

பதிவு நல்ல நகைச்சுவை,
சென்னை வட்டார மொழி உங்களுக்கு சுலபமாக வருகிறது,

விஜய் ஆனந்த் said...

:-)))...

பேஜாரா எழுதியிருக்கீங்க!!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பரு...

லக்கிலுக் said...

சவேரா பாருலே சல்பேட்டா அடிச்ச மாதிரி கீதுப்பா :-)

நித்யன் said...

கலக்கலாக எழுதப்பட்டிருக்கும் படா நக்கல் பதிவு...

நமீதாவை கலாய்த்தவர்களையெல்லாம் சும்மாங்காட்டி விட்டுற முடியுமா...

மணிகண்டன் said...

சும்மா டகிலு கிளப்பி இருக்கீங்க.

வெண்பூ said...

கலக்கல் அதிஷா... வட்டார நடை அற்புதமாக வருகிறது உங்களுக்கு.. பாரு மட்டும் இதை படிச்சாரு.. அவ்ளோதான்.. :)))

பரிசல்காரன் said...

பதிவு அருமை! சொல்லவந்த விஷயத்தை தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் தெரியும் வண்ணம் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்!

வாழ்க நீங்கள்!

வளர்க உங்கள் எழுத்துப் பணி!

பரிசல்காரன் said...

பதிவை நீ பேசறாப்லயே படிச்சேன் அதிஷா! சூப்பரா இருந்துச்சு!

மணிகண்டன் said...

உங்களோட A for Athisha சூப்பர்.

Raj said...

இன்னாபா....நீ சரக்கு அடிச்சுட்டு...போதையில் பாரு டவுசரை உருவிட்டியே.......பாவம்ப்பா அவரு...அவருக்கு மட்டும்தான் சரக்கு அடிக்க தெரியும்.....அவருக்கு மட்டும்தான் சாராயம் காய்ச்ச தெரியும்ன்னு.....மிதப்புல கீறார்...அவரை இப்படி கலாய்ச்சுட்டியே நைனா....ந்யாயமா இது

நவநீதன் said...

மேட்டர் 1

நம்மூரு சரக்க (அதாவது அவரு சரக்க ) பாரினுக்கு இட்டாரதுக்கு ஆளே இல்லபா...
ஆனா பாரின் சரக்க நம்மூருக்கு இட்டாந்தா அவன் நமக்கு(அவுருக்குத்தான்) போட்டி..


மேட்டர் 2
மலையாலத்த பாத்தியா நைனா... சரக்கடிக்கிரவனுக்கு எம்பூட்டு மதிப்பு கொடுக்கிறாங்க...
கிவ் ரெஸ்பெக்ட்... டேக் ரெஸ்பெக்ட்...


இந்த மாதிரி அஜால் குஜால் மேட்டர்-ஐ எல்லாம் விட்டுடியே நைனா ...

CA Venkatesh Krishnan said...

இன்னா பா நீ.

தலிவரு பேர இப்பிடிகலாச்சிட்டியே.

நிபேதிதா

இன்னொரு தபா தலிவரு பேர நிர்த்தி நெதானமா பிர்ச்சி பட்ச்சி பாரு பா.

டரியலாவுல ?

bullet said...

மெய்யாலுமே ஷோக்கா கீதுப்பா.. நீ கான்டி அவர நேர்ல பார்த்தேனு வை, மெர்சில் ஆயிடுவாரு சாரு.. அட சாருன்னு மருவாதையா சொன்னேம்ப்பா.. நான் ஏன் பேர சொல்லப் போறேன்.. வுட்டாலக்கடி ஆயா வூந்து ஏந்து வாயானு சொல்றா மாறி கீது..

bullet said...

மெய்யாலுமே ஷோக்கா கீதுப்பா.. நீ கான்டி அவர நேர்ல பார்த்தேனு வை, மெர்சில் ஆயிடுவாரு சாரு.. அட சாருன்னு மருவாதையா சொன்னேம்ப்பா.. நான் ஏன் பேர சொல்லப் போறேன்.. வுட்டாலக்கடி ஆயா வூந்து ஏந்து வாயானு சொல்றா மாறி கீது..

தமிழ்நதி said...

சுந்தர் கேக்கிறார்ல... வாங்கியாந்து குட்த்தாதான் இன்னாவாம்:)

Ramesh said...

அதிஷா..

சூப்பரகீது மாமே..

enga oorle pub thaan famous!

Anonymous said...

நல்ல சென்னை மொழி, மிக அழகாக வந்துள்ளது, வாழ்த்துக்கள்

Anonymous said...

a very different way of writing,keep it up boss


sureshkumar

Thamira said...

வெண்பூ : கலக்கல் அதிஷா... வட்டார நடை அற்புதமாக வருகிறது உங்களுக்கு.. பாரு மட்டும் இதை படிச்சாரு.. அவ்ளோதான்.. :)))//

பாரு ப‌டித்துவிட்டு உங்க‌ள் த‌ள‌த்திற்கு இணைப்பும் த‌ந்திருக்கிறார். வாழ்த்துக‌ள். இது மாதிரி ப‌திவுக‌ளில் இது ஹாட். இது டாப்.!

நல்லதந்தி said...

சூப்பரப்பு!.அட மெய்யாலுமே சொல்றம்ப்பா! :)

ஊர்சுற்றி said...

அந்த எழுச்சி மிகுந்த உரைய ஓரு வாரத்துககு முன்னயே படிச்சேன். அது என்னா மாயமோ தெரியல - அத படிக்கும்போது "ஆஆங்ணே" சொல்லணும் போல இருந்துது. இப்போதான் ஒரு தெளிவு கெடச்சிருக்கு.

உங்க கடிதம் படிக்க சுவாரசியமாவும் இருந்துச்சுண்ணே!

விசயத்தோட பின்புலம் தெரியாதவங்கதான் பாவம், நிச்சயமா குழம்பிப் போயிடுவாங்க!!!

துளசி கோபால் said...

என்னாபா....கலக்கலாக் கீது.
அப்டியே கபால்னு புட்சு மெயிண்டெயின் பண்ணிக்கோ....

இஷ்டெய்லைச் சொன்னேம்ப்பா:-))))

SK said...

பிரமாதம்
ரொம்ப நல்ல எழுதி உள்ளீர்கள்

Anonymous said...

:)

Joe said...

superabbu!

Karthik said...

:))