26 September 2008

மோசமான படமா ராமன் தேடிய சீதை ??

பெண் பார்க்கும் படலம் திருமணமான அனைவரும் கட்டாயம் கடந்து சென்ற ஒரு மறக்க இயலாத விடயம் . அது பலருக்கும் பல வித அனுபவங்களை தந்திருக்கும் , சிலருக்கு மறக்கமுடியாத ஒரு சம்பவமாகவும் பலருக்கு மறக்க வேண்டிய சம்பவமாகவும் அது இருந்து விடுகிறது , சினிமாத்தனமாக இப்போதெல்லாம் யாரும் பெண் பார்ப்பதில்லை , இருவீட்டாரும் முன்னமே தொலைப்பேசி அலைப்பேசி இணையம் என்று தொழில்நுட்பம் அவர்களை எளிதில் இணைக்கிறது , அது மட்டுமின்றி மணமக்கள் இருவரும் நேரில் பார்க்கும் முன்னமே அலைப்பேசியிலே மின்அரட்டையிலோ பேசி தங்களை புரிந்து கொண்டு ஒத்துவராத பட்சத்தில் பிரிந்து விடும் சூழலே இன்றைய நமது சமூகத்தில் நிலவுகிறது .

இந்த பெண் பார்க்கும் சடங்கும், பஜ்ஜி சொஜ்ஜி மொக்கைகளும் , பெண்ணை பாட சொல்லி கேட்பதும் , ஆடத்தெரியுமா , சமைக்கத்தெரியுமா என்பது போன்ற ஆணாதிக்க மனோபாவத்துடன் கூடிய மற்றும் சினிமாத்தனமான சடங்குகள் இப்போதெல்லாம் வழக்கொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது .

பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இயக்குனர் விசு படங்களில் நிச்சயம் ஒரு காட்சியாவது பெண் பார்க்கும் காட்சி இருக்கும் , அதிலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மூன்று விதமான பெண்பார்க்கும் காட்சிகள் வைத்திருப்பார் , ஒவ்வொன்றும் ஒரு விதம் , இது போன்ற தளத்தில் படம் எடுக்க அவரைத்தவிர யாராலும் அவ்விடயத்தை சினிமாவில் மிக அழகாக கையாண்டிருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்தது . அதன் பிறகு மௌன ராகம்,ரோஜா, படங்களில் வரும் பெண் பார்க்கும் காட்சியை சொல்லலாம் . ஒரு முழுத்திரைகதையையும் பெண்பார்க்கும் நிகழ்ச்சியை மட்டுமே கொண்டு பின்னப்பட்ட படித்தால் மட்டும் போதுமா படத்தின் திரைக்கதையை விட அது போன்ற கதைக்களத்தில் இது வரை எந்த திரைப்படமும் வரவில்லை .

கடந்த பத்து வருடங்களாக நம் வீட்டிற்குள் புகுந்து விட்ட மெகா சீரியல்கள் செய்ய முயன்றதை திரையில் இரண்டரை மணி நேரத்தில் செய்ய முயற்ச்சிக்கிறார் ராமன் தேடிய சீதை படத்தின் இயக்குனர் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் படம் முடிகையில் 500 எபிசோட்களை ஒரே மூச்சில் பார்த்த விரக்தி .ஒரு பெண்பார்க்கும் காட்சியில் தொடங்கும் படம் , நம்மை ,அட ஒரு நல்ல படத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்கிற ஒரு உணர்வை எழுப்பினாலும் , அந்த பெண் சேரனின் திக்கி பேசும் முறையையும் அவருக்கு சிற்வயதில் மனசிதைவு இருந்ததையும் கேள்விப்பட்டு சேரனை மணம் முடிக்க மறுக்கிறார் ( அந்த காட்சி மட்டுமல்ல எல்லா காட்சியிலும் திக்கி பேசுவாதக எண்ணி சேரன் முகத்தை அஷ்ட கோணலாக காட்டுவதை பார்த்து படத்தில் வரும் பெண்கள் மட்டுமல்ல குழந்தைகள் கூட அம்மா பூச்சாண்டி என்று அலறியதை கேட்க முடிந்தது , சேரன் இயக்கம் மட்டும் செய்யலாம் . ). அதை தொடர்ந்து சேரன் படம் முழுதும் அழுகிறார் , திக்கி திக்கி பேசுகிறார் , பல பெண்களை திருமணம் செய்து கொள்ள தெரு தெருவாய் அலைகிறார் , இப்படி அவர் வாழ்க்கையில் கடவுள் அவருக்கு கல்யாணம் செய்து வைக்காமல் கபடி விளையாட , அவர் மனம் நொந்து பசுபதியை சந்தித்து , பார்வையற்ற பசுபதி தரும் உற்சாகத்தில் மீண்டும் பெண் பார்க்க தொடங்கி , கடைசியில் ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு , அவளின் காதலன் நிதின் சத்யா என்று தெரிந்து எப்போதும் போல தியாகி ஆகி கடைசியில் தன்னை வேண்டாமென்று மறுத்த ஒரு பழைய டிக்கட் மீண்டும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அந்த பெண்ணையும் சிலபல சிக்கல்கள்கள் ( அது ஒரு 4 ரீல் ஓடுகிறது ) நடுவே கஷ்டப்பட்டு திருமணம் செய்யும் போது நம் கண்களில் ஆனந்த கண்ணீர் , ( சேரனுக்கு திருமணாமனதற்கல்ல அப்பாடா படம் முடிஞ்சிருச்சேனு ) .

சேரன் படம் முழுக்க கொடுத்த சம்பளத்திற்கு பல ஆயிரம் மடங்கு அதிகமாய் நடித்து கலக்குகிறார் , பசுபதி படத்தில் தேவையில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது , நிதின் சத்யாவை பாராட்டலாம் நல்ல தேர்வு அந்த பாத்திரத்தில் கனகச்சிதமாய் பொருந்துகிறார் , படத்தின் ஒரே மகிழ்ச்சி அவர் மட்டுமே . பல நாயகிகள் நிறைய மேக்கப்போடு கண்ணை உறுத்துமளவுக்கு வந்து வந்து போகின்றனர் , வெறுப்புதான் மிஞ்சுகிறது , மணிவண்ணன் எப்போதும் போல அதே சேம் ஒல்டு மாப்ளே மாப்ளே என்று ஹீரோ பின்னால் அலைகிறார் , சில காட்சிகளில் மிக அருமையாய் நடித்திருக்கிறார் .

இசை வித்யாசாகர் - அருமையான பிண்ணனி மற்றும் பாடல்கள் , கேமரா யாரென்று தெரியவில்லை நிறைவாய் செய்திருக்கிறார் , எடிட்டிங்கும் நிறைவாய் இருந்தது . மற்றபடி படத்தில் பெரிதாய் சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

படத்தின் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் ஒரு சிறுகதை போல் சொல்ல முயன்று அந்த சிறுகதையின் முடிவில் சொத்தப்புகிறார் . அதனால் அடுத்த காட்சியின் மீது வெறுப்புதான் மிஞ்சுகிறது . ஒரு அருமையான கதையை எடுத்துக்கொண்டு அதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்திருந்தால் மிக நன்றாக வந்திருக்கும் . படம் நெடுக நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் வேண்டுமென்றே அந்த நகைச்சுவையை குறைத்திருப்பதாக தெரிகிறது . அதுவே படத்தின் பெரிய மைனஸாகிறது .

ஆனால் படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு 60 வயது மாமா மற்றும் மாமி படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர் ,( படம் முடிந்து எழுத்துக்கள் வருவதைக்கூட ) . இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம் , இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

படத்தின் பிளஸ் - இசை , பசுபதி , நிதினசத்யா

படத்தின் மைனஸ் - சேரன் , நாயகிகள் , ஸ்டீரியோ டைப் திரைக்கதை ,

இனி தலைப்புக்கு வருவோம் - அதென்ன மோசமான படமா ராமன் தேடிய சீதை - நிச்சயம் இல்லை , மிக மிக மோசமான படம்... ( இந்த படம் நல்ல படம்னு சொன்னா அப்புறம் நல்லபடம்லாம் என்னனு சொல்றது மக்களே )இந்த லூசுத்தனமான படத்தை பார்த்து காண்டானதற்கு , புரட்சிதலைவரோடு புரட்சி தலைவி கலக்கிய அக்கால ராமன் தேடிய சீதையை இன்னொரு முறை பார்த்து குஷியோடு குஜாலகியிருப்பேன்....... டாமிட் ....... அதுவும் மோசமான படமாக இருந்தாலும் இதைவிட அது பல ஆயிரம் மடங்கு மேல்.......____________________________________________________________________________________

அவ்ளோதான்பா......... :-)
____________________________________________________________________________________

35 comments:

Anonymous said...

லக்கிலுக்

நேற்று நானும் இந்த படத்தை பார்த்தேன். நீங்களுமா நண்பரே ? வாட் எ coincidence ?

முரளிகண்ணன் said...

அதிஷா, நீங்கள் பெண் பார்க்கும் படலம் நெருங்கிவிட்டதே?

விஜய் ஆனந்த் said...

:-)))...

லக்கிலுக் said...

நேற்று நானும் இந்த படத்தை பார்த்தேன். நீங்களுமா நண்பரே ? வாட் எ கோ இன்சிடென்ஸ்?

நான் தேவி தியேட்டரில் உடைஞ்சிப்போன ஒரு சீட்டில் உட்கார்ந்து பார்த்தேன். பல பேர் கைத்தட்டுகிறார்களே என்று பார்த்தால் எல்லோரும் கொசு அடிக்கிறார்கள்.

ரமேஷ் வைத்யா said...

ஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.

Vidhya Chandrasekaran said...

\\சேரன் படம் முழுக்க கொடுத்த சம்பளத்திற்கு பல ஆயிரம் மடங்கு அதிகமாய் நடித்து கலக்குகிறார்\\\

100% உண்மை. நல்லவேளை அவர் ஹீரோயின் யாரையும் "என்னடா" "வாடா" அப்படின்னு கொஞ்சலை.

பரிசல்காரன் said...

:-)

Cable சங்கர் said...

வழக்கப்படி நீங்களும், லக்கிலுக்கும் சேர்ந்தே படத்துக்கு போயிட்டீங்களோ..?

லக்கிலுக் said...

//cable sankar said...
வழக்கப்படி நீங்களும், லக்கிலுக்கும் சேர்ந்தே படத்துக்கு போயிட்டீங்களோ..?
//

என்ன கொடுமை அண்ணாச்சி இது?

அதிஷா என்ற மொக்கைச்சாமியை ஓரிரு பதிவர் சந்திப்புகளில் சந்தித்ததோடு சரி. கூட சேர்ந்து படம் பார்க்குறதா? நெனைக்கவே பயமாயிருக்கு.

Anonymous said...

//
விடமாட்டேன் said..
ஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா.//

கலக்கோ கலக்கென கலக்குறீங்க...

//இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம//

எவ்ளோ அடிபட்டவுங்களுக்கு சொல்லவேல்ல....

//இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.//

யாரு வாரயிறுதில பப்புக்கு(pub) ப்ஓரவுகளுக்ஆஆஆஆ....

Dr.-BGL

Unknown said...

\\
அதிஷா என்ற மொக்கைச்சாமியை ஓரிரு பதிவர் சந்திப்புகளில் சந்தித்ததோடு சரி. கூட சேர்ந்து படம் பார்க்குறதா? நெனைக்கவே பயமாயிருக்கு.
\\

:-(((

அவ்வ்வ்வ்

Unknown said...

அனானி நண்பரே நீங்கதான் பஸ்ட்டு

;-)))

Unknown said...

முரளி அண்ணா பெண் பார்க்கறதுதான் தினமும் நடக்குதே

Unknown said...

@விஜய் ஆனந்த்

;-((

Unknown said...

லக்கி நீங்களும் பார்த்தீர்களா உங்களை நான் பார்க்கவில்லையே

அந்த உடைந்த சீட்டில் இருந்தது நீங்கள்தானா !!

Unknown said...

\\
ஒரு ரெண்டு மணி நேர சுகத்துக்காக சரக்கடித்து ஆயுசுக்கும் ஈரலைக் கெடுத்து அவதிப்படுவதற்கும், ஒரு பதிவு எழுதும் சுகத்துக்காக வாராவாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஆறு... அல்ல ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் அதிஷா. \\

வாங்க விடமாட்டேன்

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுமே தப்பில்ல.... அவ்வ்வ்

Unknown said...

\\ஹீரோயின் யாரையும் "என்னடா" "வாடா" அப்படின்னு கொஞ்சலை. \\

வாங்க வித்யா நீங்களும் அந்த படத்தை பார்த்தீங்களா

அப்படிலாம் பேசிருந்தா நான் பாதி படத்தில எழுந்து ஓடி வந்திருப்பேன்

உண்மைத்தமிழன் said...

இந்தப் படமும் நல்லப் படம் இல்லைன்னா.. தம்பி.. நீ பேசாமல் சினிமா பார்ப்பதை விட்டுவிடேன்.. உனக்குக் காசாவது மிச்சமாகும்..

Unknown said...

வாங்க கேபிள் அண்ணாச்சி

நானும் லக்கியும் சேர்ந்து படத்துக்குலாம் போக மாட்டோம் லக்கி போன்ற குடிகாரரோடு ஒன்லி பாருக்குதான்

Unknown said...

வாங்க அனானி டாக்டர்

நீங்களுமா...

Unknown said...

\\ இந்தப் படமும் நல்லப் படம் இல்லைன்னா.. தம்பி.. நீ பேசாமல் சினிமா பார்ப்பதை விட்டுவிடேன்.. உனக்குக் காசாவது மிச்சமாகும்.. \\

அண்ணா வாங்கண்ணா

மூட்டைப்பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டை கொளுத்துவாங்களாண்ணா

இந்த படம் சரி இல்லைங்கறது என்னோட கருத்து அவ்ளோதான் அதுக்கான காரணத்தையும் சொல்லிருக்கேன்

உங்களுக்கு இருக்கற மாதிரி பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம்... அதற்காக எனக்கு பிடிக்காம படத்தபத்தி புகழ்ந்து எழுதறது சரியாவருமா....

Unknown said...

உ.த அண்ணா உங்கள் விமர்சனத்தை படித்துதான் அந்த படத்திற்கே நான் போனேன்..

Anonymous said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இந்தப் படமும் நல்லப் படம் இல்லைன்னா.. தம்பி.. நீ பேசாமல் சினிமா பார்ப்பதை விட்டுவிடேன்.. உனக்குக் காசாவது மிச்சமாகும்..//

அறிஞர் அண்ணா உங்களோட புனிதBORE இதைவிட நல்ல படம்ணா. அதை ஒரு பத்து வாட்டி அதிஷாவை பாக்க சொல்லுங்கள். அப்படியாவது திருந்துகிறாரா பார்ப்போம்.

Anonymous said...

//அதிஷா said...
உ.த அண்ணா உங்கள் விமர்சனத்தை படித்துதான் அந்த படத்திற்கே நான் போனேன்..//

அதை முழுசா படிச்சிருந்தா நீங்க தப்பிச்சிருக்கலாம் அதிஷா. எங்கள் அறிஞர் அண்ணா முழு ஸ்க்ரிப்டையும் எழுதியிருந்தார். அவரை தவிர ஒருவர் கூட அதை முழுமையாக படிக்கவில்லை என்பது கொடுமை.

Saminathan said...

ஏன் அதிஷா,

உங்களுக்கும் இந்த லக்கிலூக்கிற்கும் சினிமா பார்க்கறத தவிர வேற வேலையே இல்லையா..?

எந்த படம் ரிலீஸ் ஆனாலும் லக்கிலூக் தான் முதல் விமர்சனம் எழுதுகிறார்..

காசை தண்டச்செலவு செய்து குப்பைப் படங்களைப் பார்ப்பானேன்..?? பின் நேரத்தை தண்டச்செலவு செய்து அதற்கு பதிவு எழுதுவானேன்..?

Anonymous said...

unakku Arakuraiya dress pottathan pidikkuma?

adithadi na pidikkuma?

FOOL

Anonymous said...

REALLY ATHISHA I THOUGHT U R SOME ABOVE NORMAL MAN BUT YOU ARE ALSO BELOW AVERAGE,IF U DONT LIKE DONT SPOIL SOMEBODYS LIFE AND WORK,YOUR COMMENTS ABOUT THAT FILM IS LIKE A BLURRING WITH DRINK,FOR THAT SOME PEOPLES ALSO SUPPORT YOU WAT A SHAME..ONLY OUR PEOPLES ONLY WASTING THE BLOGS BENEFITS TO POST LIKE THIS STUPID COMMENTS ABOUT FILMS.....LOT OF THINGS ARE AVAILABLE TO SHARE ....PLS TAKE CARE

மு.வேலன் said...

வணக்கம்!

நானும் இந்த படத்தை என் நண்பர்களுடன் பார்த்தேன். எங்களுக்கு திருப்தியாக இருந்தது இந்த படம். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கின்ற ஒரு நல்ல தமிழ்படம். குடும்பத்தோடு முகம் சுழிக்காமல் பார்க்கலாம். உங்களுக்கு (தமிழ் நாட்டு தமிழர்களுக்கு) எந்த மாதிரியான படங்கள்தான் திருப்தியை கொடுக்கும்?

butterfly Surya said...

நல்ல மொக்க படம். ஆட்டோ காரனுக்கு ஒரு பாட்டு & fight. 20 நிமிட பிளாஷ் பேக் வேற..?? கண்றாவி... விழுந்து விழுந்து சிரித்து முடித்தோம்..

விளக்கெண்ணை மூஞ்சி சேரன் தொடர்ந்து நடித்தால் ஒரு கோடி கையெழுத்து பிரதி கொடுத்து அவர் காலில் வேண்டுமானலும் நான் விழ தயார்..

சூர்யா

Anonymous said...

nice movie from my point of view.