15 October 2008

பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!நண்பர் பரிசல்காரன் அவர்களைப்பற்றி அனைவருக்கும் தெரியும் .. அவர் ஒரு மிகச்சிறந்த பதிவர் ஆவார் . நம் பதிவுலகில் தவிர்க்க இயலாத சிலரில் அவரும் ஒருவராகவும் மிகக்குறைந்த நாட்களில் பதிவுலகில் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கியவரும் ஆவார் . இவையனைத்தையும் மீறி அவர் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர் .


இந்த வாரத்திலிருந்து ஜீனியர் விகடனில் இருந்து அவரது ஒரு குட்டித்தொடர் வருவதாக முன்பே என்னிடம் கூறியிருந்தார் . அப்போதே என் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டதை போலவும் , எனது படைப்பு விகடனில் வெளியானது போலவும் உணர்ந்தேன் .


இதோ இந்த வாரத்திலிருந்து அவரது படைப்புக்கள் வர துவங்கிவிட்டன . அதை பதிவர்களுக்கு அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சியுண்டு .


இன்றைய விகடனில் வெளியாகியுள்ள சிந்தனை சின்னசாமி என்கிற கட்டுரை அது ( அக்கட்டுரையில் அவரது பெயர் வெளியாக வில்லை அதனால் விகடனுக்கு பதிவர்கள் சார்பாக ஒரு குட்டு )


இது அவரைப் போன்ற ஒரு நல்ல எழுத்தாளருக்கு தாமதமாய் கிடைத்த வாய்ப்பாகவே நான் கருதுகிறேன் ,


திரு.பரிசல்க்காரன் அவர்களுக்கு தமிழ்வலையுல நண்பர்கள் சார்பாக என் வாழ்த்துக்கள் .


( இதை சிலர் இதெல்லாம் ஒரு விசயம் இதுக்கு ஒரு பதிவு என எண்ணக்கூடும் என்னைப் போன்ற வெகுஜன ஊடகங்களில் நம் பெயர் மட்டுமாவது வராத என காத்திருக்கும் பதிவர்களுக்கு இது நிச்சயம் பெரிய விடயம்தான் அதனாலேயே இந்த பதிவு )


அந்த படைப்பை இங்கே தர இயலவில்லை.. கிடைக்கும் போது அதையும் இணைக்க விழைகிறேன் .


( பரிசல் ட்ரீட் எப்போ ? )


18 comments:

Ramesh said...

பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!

நையாண்டி நைனா said...

Good... I too appreciate him....(I am appreciating in English, So it is explicit that I am a Tamilian)

Anonymous said...

Vaazthukkal parisalare.
Raghavan, Nigeria

அக்னி பார்வை said...

he Deserve it!!!!


thanks to atisha for expressing and appreciating

narsim said...

நல்லா அழுதியிருக்கீங்க தல..

காலங்காத்தாலா அவர் காதுல தேன ஊத்துனது நான் தான்.. ஏனெனில் படிக்கும் பொழுது மிக மகிழ்ச்சியாக இருந்தது..

பேரே போடலியே எப்படி அவருக்கு கூப்புட்டு வாழ்த்து சொன்னனு கேட்க்கறீங்களா.. பரிசல் எழுத்து நட தெரியாதா??

வாழ்த்துக்கள் பரிசல்..அடுத்து அதிஷாவோடதும் வரணும்.. வரும்..

நர்சிம்

வெண்பூ said...

பரிசலுக்கு இது முதல்படிதான் என்பது அவரை படிக்கும், அவருடன் பழகும் அனைவருக்கும் தெரியும்.. மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்கள் பரிசல் & பதிவிற்கு பாராட்டுக்கள் அதிஷா..

வெண்பூ said...

//
narsim said...
நல்லா அழுதியிருக்கீங்க தல..
//

பதிவுலக நுண்ணரசியல்...

ஹா..ஹா..ஹா.. ச்சும்மா ஜோக்குக்கு.. :)))

சரவணகுமரன் said...

பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!

சரவணகுமரன் said...

பேனர் பயமுறுத்துக்கிறது :-)

முரளிகண்ணன் said...

Wishes for Many more

Anonymous said...

here is link in tamilish about that article

Anonymous said...

சிந்தனை சின்னசாமி

இப்போதெல்லாம் சில கார்களில் வண்டி பின்னோக்கி வரும்போது போடப்படும் மியூசிக்காக 'சாரே ஜஹான் ஸே அச்சா'வையோ, 'வந்தே மாதர'த்தையோ பயன்படுத்துகிறார்கள். போயும் போயும் பின்னோக்கிச் செல்லத்தானா இந்தப் பாடல்களைப் பயன்படுத்துவது? அதுவும் தவிர, இதுபோன்ற தேசபக்திப் பாடல்களைக் கேட்டால் இருந்த இடத் திலேயே அட்டென்ஷனில் நிற்கவேண்டுமென்று காருக்குப் பின்னால் இருப்பவர் நின்றுவிட்டால் என்னாவது? மாத்தி யோசிங்கப்பா!

ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய தலை வரைப் பற்றிப் புகழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.

''உனக்கு ஏண்டா அவரைப் பிடிக்கும்?'' என்று கேட்டேன்.

''அவர் ஒரு தடவை சொன்னாரு... அடிமைத் தளைகளை உடைத்தெறிவோம்னு. அதிலிருந்து அவரோட கொள்கைக்கு நான் அடிமையாய்ட்டேன்!''

''அதுசரி!''

துணிக்கடையில் பேன்ட் கேட்டால் இப்பொதெல்லாம் குறைந்தது ஆறு பாக்கெட்டுக்குக் கம்மியாக இருக்கும் பேன்ட்களே இல்லை போல! Ôகார்கோ... பூர்கோÕ என்று மிரட்டியெடுக்கிறார்கள்.

''ஏம்பா... எல்லா பேன்ட்லயும் இவ்வளவு பாக்கெட் இருக்கே... பாக்கெட் கம்மியா...''

முடிக்கும் முன் கடைப் பையன் கேட்டான்... ''பாக்கெட் கம்மியா இருக்கறது வேணுமா, பாக்கெட்டே இல்லாதது வேணுமா?''

''பாக்கெட்டே இல்லாததா..?''

''ஆமா. வேஷ்டி. அதான் பாக்கெட் இல்லாம இருக்கும்.''

எங்கப்பா, முப்பது வருஷத்துக்கு முன்னாடி சொன்னதுதான் ஞாபகத் துக்கு வந்தது. 'வர வர இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்களை மதிக்கறதே கிடையாதுப்பா!'

பீர் மட்டுமே குடிக்கும் பழக்கமுடையவர்கள் 'ஹாட் அடிக்க மாட் டேன்'

என்று சொல்வதுண்டு. அது ஹாட் (HOT) ட்ரிங்க்ஸ் அல்ல. ஹா(ர்)டு (HARD) ட்ரிங்க்ஸ்.

பெப்சி, கோக் சாஃப்ட் ட்ரிங்க்ஸ்.

காபி, டீ ஹாட் (HOT) ட்ரிங்க்ஸ்.

மது வகைகள் ஹா(ர்)ட் ட்ரிங்க்ஸ்.

இனி சியர்ஸ§க்குப் போகும்போது கரெக்டா சொல்லுங்கப்பூ!

கேரளாவில் புதிய கல்வித்திட்டத்தின்படி, இந்த ஆண்டு முதல், காலாண்டுத் தேர்வு இல்லையாம்! அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள்தானாம்! இதைச் சொல்லி, ''நீ கேரளாவுல படிச்சிருக்கலாம்னு தோணுதா?'' என்று ஒரு சிறுவனிடம் கேட்டபோது.. ''இல்லை...'' என்றான். புரியாமல், 'ஏன்டா அப்படி சொல்றே?'னு கேட்டேன். ''எக்ஸாம் இல்லைன்னா, லீவும் இருக்காதுல்ல?'' என்றான் அவன்!

'சாப்பிடும்போது பேசக்கூடாதுடா. உடம்புல ஒட்டாது'-ன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. ஆனா, சாப்பிட ஹோட்டலுக்குப் போனப்ப ஒருத்தர் பாக்கியில்லாம ஆளாளுக்குப் பேசிக்கிட்டே சாப்பிட்டுட்டு இருந்தாங்க. 'என்ன கொடுமையான இரைச்சல்டா இது'ன்னு வெளில வந்துதான் செல்போன் பேச வேண்டியதா போச்சு!

Enjoy Thangamani

narsim said...

யோவ் வெண்பூ.. எ க்கு பதில் அ னு பிழையாகிப்போனது ஒரு குத்தமாய்யா.. இந்த நுண்ணரசியல்ன்ற வார்த்தையை முதல்ல ஒழிக்கணும்யா..

ஹ ஹா.. டமாசுக்குத்தான்..

நர்சிம்

பரிசல்காரன் said...

நன்றி தோழர்களே..

அதுக்குள்ள முழுசாப் போட்டுட்டீங்களா..

புக் விக்கட்டும்யா!

Vadielan R said...

வாழ்த்துக்கள் பரிசல்காரனுக்கு உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்

வால்பையன் said...

நமது நண்பர்களில் ஒருவர் வெகுஜன ஊடகத்தில் எழுவது சந்தோசமே!
எனது வாழ்த்துகளையும் இங்கே பதிக்கிறேன்

Anonymous said...

அப்படியா?

ஜீனியர் விகடன்ல வந்திருக்கா?

வாழ்த்துக்கள் பரிசல்கார்......

ராமலக்ஷ்மி said...

இன்னும் பல வெகுஜனப் பத்திரிகைகளில் படைப்புகள் சீக்கிரமே வெளிவரவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பரிசல்காரரே!

சின்னச்சாமியின் முதல் சிந்தனையும் கடைசியிதும் டாப் க்ளாஸ்:)!