12 May 2009

சும்மா டைம் பாஸ் மச்சி!! ( 2 )


1.மழை பெய்யும் இரவில்

நாயகனும் நாயகியும் தனிமையில் அடாத மழை விடாது பெய்ய இருவரும் தொப்பலாய் நனைந்து ஒருவரை ஒருவர் ஏக்கமாய் பார்த்தனர். வாசகன் ஆர்வமாய் மேலும் வாசித்தான். பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.


2.இதழில் கதை எழுதும் நேரமிது

இதுதான் முதல்முறை. கைபடாத இதழை விரலால் தடவி , முகர்ந்து பார்த்து ஆசையோடு அதன் அருகில் போய் தன் பெயரை படித்தான் , அ...தி...ஷா அவன் எழுதிய கதையின் மேல் பெயர் வந்திருந்தது ஆனந்த விகடனில்.


3.அப்படினா நான்?

செல்லம் ஏன்டி நேத்து போன் பண்ணல! இல்லடா என் போன் ராஜ் வீட்டிலயே வச்சிட்டு வந்துட்டேன். அப்புறம் வசந்த் எடுத்துட்டு வந்து குடுத்தான். ஓஓ! ஆமா ராஜ் வசந்த்லாம் யாரு? . ராஜ் என்னோட புருஷன். அப்போ வசந்த் . அவன் என்னோட இன்னொரு புருஷன்.


4.எப்போதும் போல

எப்போதும் போல் பூத்துக்கு சென்றான் , பெயரை பதிந்தான், வாக்களித்தான் . வீட்டிற்கு வந்தான். எப்போதும் போல வீட்டில் இலவச டிவி இருந்தது. எப்போதும் போல கலைஞர்டிவியில் இன்றும் சிறப்புத்திரைப்படம். எப்போதும் போல கரண்ட் இல்லை.


5.காதுல பூ

காலை உணவு முடிந்ததும் உண்ணாவிரதம் துவங்கியது . மக்கள் கொந்தளித்தனர். கொழுத்தும் வெயிலில் கூச்சலிட்டனர். மதியம் 12.30க்கு முடிந்தது. மக்கள் கலைந்து சென்றனர்.

6.என் ஓட்டு

சார் ஓட்டுப்போடணும் .உங்க பேரு . வரதராஜன். எத்தன வாட்டி போடுவீங்க. என்னது என் ஓட்ட போட்டுட்டாங்களா! ஓகே அப்படினா என் பேரு சுந்தர்ராஜன்.


7.ரிசசன்

யோவ் வாட்ச்மேன் ! நான் இந்த கம்பெனி வைஸ் பிரசிடென்ட்யா என்னை உள்ள வுடுய்யா! எதா இருந்தாலும் முதலாளிகிட்ட போன்ல பேசிப்பீங்களாம்.


8.புதுசா புதுசா ஒரு சாட்டிங் ( CHATTING )

hi - hi - hw r u - fine u? - fine asl pls - wat asl - age sex location - 25 male chennai u asl? - same here - oh - ok bye - why bye - dei moodittu poda.. _________ . - thank u bye - seruppala adi the...payya - avvvv adhaan bye sollittenla payyana porandhadhu oru kuthama...


9.சுண்டல் தின்று!

சார் சுண்டல் சாப்பிட்டிட்டே கன்டிணியூ பண்ணுவோமா !

டே சின்னப்பையா இங்க வா எவ்ளோ !

மூணு குடு!..

நண்பர்களே குழந்தைதொழிலார்களை காப்பதற்காக கூடியிக்கக்கூடிய நாம ... என்று சுண்டலை கொறித்தபடிப் பேச துவங்கினார்.


10. காதல் கக்கூஸ்

மாமா காதல்ங்கறது கக்கூஸ் போற மாதிரிடா நாம என்ன திங்கறமோ அதுமாதிரிதான் நமக்கு ஆயும் போகும். அது மாதிரிதான் காதலியும் நாம எப்படி செலக்ட் பண்றமோ அப்படித்தான் வாழ்க்கையும் இருக்கும்!. மாமா அவளோட சேராதனு சொன்னேன் கேட்டியா இப்போ புரியுது ஏன் நீ பாத்ரூம் போன மட்டும் ஊரே நாறுதுனு.11.ஆமா இதெல்லாம் என்ன ஏன் இந்த கொலை வெறி!

சும்மா டைம்பாஸ் மச்சி!மக்களே நாளைக்கு எலெக்சன் அதனால அனைவரும் இரட்டைஇலை சின்னத்திலும் மாம்பழ சின்னத்திலும் இன்ன பிறச்சின்னங்களிலும் வாக்களித்து அஇஅதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிரபல திமுக பதிவர் அதிமுக வெற்றிப்பெற்றால் எனக்கு டிரீட் தருவதாக வாக்களித்துள்ளார் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.


*************

17 comments:

Ramesh said...

Very very super..."சும்மா டைம் பாஸ் மச்சி!! ( 2 )"

Read this please...

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை

வால்பையன் said...

// ராஜ் என்னோட புருஷன். அப்போ வசந்த் . அவன் என்னோட இன்னொரு புருஷன்.//

நட்பு நம்ம பேரும் லிஸ்டுல இருக்கான்னு செக் பண்ணி சொல்லுங்கப்பு!

வால்பையன் said...

//எப்போதும் போல வீட்டில் இலவச டிவி இருந்தது. எப்போதும் போல கலைஞர்டிவியில் இன்றும் சிறப்புத்திரைப்படம். எப்போதும் போல கரண்ட் இல்லை.//

மறுநாள் ரேடியோ செய்தி வாசித்தது!
தி.மு.க மண்ணை கவ்வியது என்று!

வால்பையன் said...

//avvvv adhaan bye sollittenla payyana porandhadhu oru kuthama...//

ஹா ஹா ஹா

அது குத்தமுல்ல!

யாஹூ சாட்ல புதுசா போய் அதிஷான்னு பேர் சொல்றது தான் குத்தம்!

(எத்தனை பேரு மண்டை காஞ்சியிருப்பானுங்க)

ILA said...

அருமையான பதிவு..

அக்னி பார்வை said...

///பிரபல திமுக பதிவர் அதிமுக வெற்றிப்பெற்றால் எனக்கு டிரீட் தருவதாக வாக்களித்துள்ளார் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
////

நான் ஒரு ஓட்டு ஆதிமுகவுக்கு போட்றேன், என்னையும் ஆட்டயில சேத்துங்கப்பு

முரளிகண்ணன் said...

கலக்கல் அதிஷா.

BEST FUNDS ARUN said...

athisa
dmk will get only 2-3 seats
congress totalla oil tadavama aappu vanga pornga.

admk alliance will win more than 30-35

naan varumbathu tirunelveli halwa vangi varen

luckylook and his companyikku tamilnadu makkal sarbaga kodukka

லெனின் - கத்தார் said...

சபாஷ் அருமையான பதிவு. கண்டிப்பா டிரீட் கிடைக்கும். இந்த பதிவிற்கும் சேர்த்து.

Chill-Peer said...

அப்ப எங்களுக்கெல்லாம் டிரீட் இல்லையா?

2 போலவே மற்ற அனைத்தும் அனுபவமா?

டைம் பாஸ் மச்சி...சும்மா.

pappu said...

6.என் ஓட்டு

சார் ஓட்டுப்போடணும் .உங்க பேரு . வரதராஜன். எத்தன வாட்டி போடுவீங்க. என்னது என் ஓட்ட போட்டுட்டாங்களா! ஓகே அப்படினா என் பேரு சுந்தர்ராஜன்.////////

இப்படியெல்லாம் நடக்கக் கூடாதுன்னா என்னைய மாதிரி 7 மணிக்கே பல்லு கூட வெளக்காம ஒட்டு போட ஓடிரனும்.

தமிழ் பிரியன் said...

ஒரு ட்ரீட்டுக்காக ஓட்டை மாத்திக் குத்த சொல்றீங்களே.. இது நியாயமா?.. ;-))

அறிவிலி said...

4 ஜூப்பர்...

Anonymous said...

//8.புதுசா புதுசா ஒரு சாட்டிங் ( CHATTING )

hi - hi - hw r u - fine u? - fine asl pls - wat asl - age sex location - 25 male chennai u asl? - same here - oh - ok bye - why bye - dei moodittu poda.. _________ . - thank u bye - seruppala adi the...payya - avvvv adhaan bye sollittenla payyana porandhadhu oru kuthama...//

I like the above peice very much athisha. nicely catch you :)

" உழவன் " " Uzhavan " said...

அத்தனையுமே "சிலவரிக் கதைகள்" நல்ல டைம்பாஸ்..

அறிவே தெய்வம் said...

\\11.ஆமா இதெல்லாம் என்ன ஏன் இந்த கொலை வெறி!

சும்மா டைம்பாஸ் மச்சி!\\

எல்லாமே நல்லாயிருக்கு...

வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

போடா ஒனக்கு பார்ட்டி கெடைக்காது..

அப்பறம் அது கொழுத்தும் வெயில் அல்ல, கொளுத்தும் வெயில்.!